Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முத­ல­மைச்­சர் குறித்து தீர்க்­க­மான முடிவு எட்­டப்­பட வேண்­டும்

Featured Replies

 
வடக்கு முத­ல­மைச்­சர் குறித்து தீர்க்­க­மான முடிவு  எட்­டப்­பட வேண்­டும்
 
 

வடக்கு முத­ல­மைச்­சர் குறித்து தீர்க்­க­மான முடிவு எட்­டப்­பட வேண்­டும்

 

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­பில் செயற்­பட வேண்­டுமா? என்ற கேள்வி மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.அவர் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­றார்.

தமது கொள்­கை­களை அடிக்­கடி மாற்­றிக் கொள்­வ­தி­லும் ஈடு­பட்­டுள்­ளார். தனது தேர்­தல் அறிக்­கை­யில் இருந்து கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டாது இருந்­தி­ருக்­கு­மே­யா­னால், அதில் பிளவு ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்­காது என­வும், ஒற்­றை­யாட்சி நிலைப் பாட்டைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கைவிட்­டமை, மிகப்­பெ­ரிய தவறு என­வும் அவர் அண்­மை­யில் கருத்து வௌியிட்­டி­ருந்­தார்.ஆனால் கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்சி நடை­மு­றையை ஒரு­போ­துமே கொள்­கை­ய­ள­வில் ஏற்­றுக் கொண்­ட­தில்லை.

ஒற்­றை­யாட்சி என்ற பதம் 
ஏற்­ப­டுத்தி வைத்த குழப்­ப­நிலை

புதிய அர­ச­மைப்­புச் சபையை வழி­ந­டத்­தும் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி என்ற சொல் எந்த இடத்­தி­லும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஒரு­மித்த தேசம் என்ற சொல்லே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் விக்­னேஸ்­வ­ரன் தவ­றான தக­வல்­களை வழங்கி மக்­க­ளைக் குழப்ப முற்­ப­டு­ கின்­றார். ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்­ட­மைப்­பைப் பிள­வு­ப­டுத்­தும் வகை­யில் நடந்து கொள்­ளக் கூடா­தெ­னக் கூறிய முத­லமைச்­சர், தற்­போது கூட்­ட­மைப்­பையே குற்­றம் சாட்­டு­வது ஏற்­கத் தக்­க­தல்ல.

 

கொழும்­பி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்டு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்தி வைக்­கப்­பட்ட விக்­னேஸ் வ­ரன், தமி­ழர்­கள் எதிர்­கொண்ட துய­ரங்­களை அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்ந்­த­வ­ரல்ல. கொழும்­பில் வசதி வாய்ப்­புக்­க­ளு­டன் வாழ்ந்­த­வர்­தான் அவர். இவர் அவ்­வப்­போது தெரி­வித்து வரும் கருத்­துக்­கள் முத­ல­மைச்­சர் மீது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

அவர் இணைத் தலை­வ­ரா­கப் பதவி வகிக்­கும் தமிழ் மக்­கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது, அர­சி­யல் சார்ந்த விட­யங்­க­ளில் பேரவை தலை­யி­டா­தெ­னத் தெரி­விக்­கப்­பட்­டது. அர­சி­யல்­வா­தி­க­ளும், வெவ்­வேறு துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளும் பேர­வை­யில் பங்கு கொண்­டி­ருந்த போதி­லும், இவ்­வா­றா­ன­தொரு உறுதி மொழி அப்­போது வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தொடர்­பான அறி­விப்பு வௌியா­ன­தும், பேரவை அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­விட்­டது.

வேட்­பா­ளர் தெரிவு தொடர்­பாக ஆரா­யும்­பொ­ருட்டு கூட்­ட­மொன்­றுக்­கும் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இந்­தக் கூட்­டத்­தில் விக்­னேஸ்­வ­ர­ னும் கலந்து கொண்­டி­ருந்­தார். அது மட்­டு­மல்­லாது அங்கு உரை­யொன்­றை­யும் ஆற்­றி­யி­ருந்­தார்.

இவ­ரொரு நேர்­மை­யா­ன­வ­ராக இருந்­தி­ருந்­தால் பேரவை தனது கொள்­கை­யி­லி­ருந்து வில­கிச் சொல்­வதை அறிந்­த­தும் அதி­லி­ருந்து வில­கி­யி­ருக்க வேண்­டும். ஆனால் அவ்­வாறு செய்­யா­மல் தாம் சார்ந்­தி­ருக்­கும் கூட்­ட­மைப்பை விமர்­ச­னம் செய்­வதை எவ­ரா­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதே­வேளை தமிழ் ஊட­க­மொன்று விக்­னேஸ்­வ­ர­னைத் தமிழ் மக்­கள் தமது தலை­வ­ராக ஏற்­றுக் கொண்­டு­விட்­ட­னர் எனத் தெரி­வித்­துள்­ளது.

 

வடக்கு முத­ல­மைச்­சரை தமிழ் மக்­கள் தமது
தலை­வ­ராக ஏற்­றுள்­ள­னரா?

ஆனால் எந்­தச் சந்­தர்ப்­பத்­தில் அவர் தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டார் என்­பது எவ­ருக்­குமே புரி­ய­வில்லை. விக்­னேஸ்­வ­ர­னும் இதை ஏற்­றுக்­கொள்­ப­வர் போன்று அமை­தி­யைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றார்.

எந்­த­வொரு மனி­த­னா­லும் இரண்டு தோணி
க­ளில் கால்­களை வைத்­துப் பய­ணிக்க முடி­யாது. இவ்­வாறு நடந்து கொண்­டால் நீரில் மூழ்க வேண்­டிய நிலை­தான் ஏற்­ப­டும். வடக்கு முத­ல­மைச்­ச­ரும் தற்­போது இவ்­வா­று­தான் நடந்து கொள்­கின்­றார். இது அவ­ருக்கே நல்­ல­தல்ல.

உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல் இடம் பெறும்­போது விக்­னேஸ்­வ­ர­னின் உண்­மை­யான முகம் தெரிந்து விடும். அவ­ரைப் போற்­றிக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் தூற்ற வேண்­டிய நிலை­யும் உரு­வா­கி­வி­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை இனி மேலா­வது இவ­ரது விட­யத்­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் இனி­யும் பொறுத்­துக்­கொண்டு இருக்க மாட்­டார்­கள் என்­பதை உணர்ந்து கொள்ள வேண்­டும்.

ஆரம்­பத்­தில் இருந்தே தன்­னிச்­சைப் போக்­கை 
கடைக்­கொண்டார் முத­ல­மைச்­சர்

வடக்கு மாகா­ண­ச­பை­யில் ஏற்­பட்ட குழப்­பங்­க­ ளுக்கு முத­ல­மைச்­சரே கார­ண­மாக இருந்­துள்­ளார். அவர் நடு நிலை தவ­றாது நடந்து கொண்­டி­ருந்­தால் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வர வேண்­டிய அவ­சி­ய­மும் எழுந்­தி­ருக்­காது. அதன் பின்­னர் அவர் நடந்து கொண்ட வித­மும், ஏற்­றுக் கொள்­ளத் தக்­க­தாக அமைந்­தி­ருக்­க­வில்லை. தம்­மைக் கூட்­ட­மைப்­பி ­லி­ருந்து வேறு­ப­டுத்­திக் காட்­டவே அவர் முனைந்­தார்

இத­னால் கூட்­ட­மைப்­புக்­கும், தமி­ழ­ர­சுக் கட்­சிக்­கும் எதி­ரா­ன­வர்­கள் உற்­சா­க­ம­டைந்­த­னர். விக்­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தன் மூல­மா­கத் தமது நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தில் ஈடு­பட்­ட­னர். ஆனால் மக்­கள் விரை­வி­லேயே உண்­மை­யைத் தெரிந்து கொண்­டு­விட்­ட­னர்.

அடுத்த ஆண்டு இடம்­பெ­றப்­போ­கும் வடக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்­த­லில் வடக்கு முத­ல­மைச்­சர் பத­விக்கு போட்­டி­யி­டத் தாம் தெரிவு செய்­யும் வேட்­பா­ளர் குறித்து கூட்­ட­மைப்பு கூடிய கவ­னம் செலுத்த வேண்­டும். தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு­வரை முத­ல­மைச்சர் பத­விக்­கான வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்பு தெரிவு செய்ய வேண்­டும்.

இறக்­கு­ம­தி­க­ளுக்கு எந்த வகை­யி­லும் இட­ம­ளிக்­கக் கூடாது. அதற்கு முன்­னர் விக்­னேஸ்­வ­ரன் தொடர்­பாக ஒரு தீர்க்­க­மான முடிவை கூட்­ட­மைப்­பின் தலைமை எட்ட வேண்­டும்.

http://newuthayan.com/story/49244.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரபாகரன், ஒரு அன்ரன் பாலசிங்கம்..ஒரு விக்னேஸ்வரன்...!! பிரபாகரனையும்  அன்ரன் பாலசிங்கத்தையும் சிங்களவன் கூட்டு சேர்ந்து அழித்தான்... விக்னேஸ்வரனை தமிழன் தனியே நின்று அழிப்பான்!  தமிழனுக்கு தமிழில் பிடிக்காத ஒரேயொரு வார்த்தை ....முதுகெலும்பு!

தமிழரசுக்கட்சியும் சம்பந்தன்-சுமந்திரன் கும்பலும்  தங்கள் களவானி வேலைகளுக்கு இடைஞ்சலாக விக்னேஸ்வரனை கருதுவது தெளிவாகிறது.

சுமந்திரன் 700 கோடி ரூபாவை சிங்கள அரசிடம் இலஞ்சமாக பெற்றதாக தமிழகத்தில் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமந்திரன் இதுபற்றி இன்னமும் வாயைத் திறக்கவே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.