Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் வடக்கில் முடக்கம்!

Featured Replies

 
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் வடக்கில் முடக்கம்!
 
 

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் வடக்கில் முடக்கம்!

 

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் அனைத்தும் இன்று காலை தொடக்கம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை ஆரம்பித்தனர்.

இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/51109.html

  • தொடங்கியவர்
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் குழப்பம்
 

image_bb9687d713.jpg-எம்.றொசாந்த்

 

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறி, பருத்தித்துறை சாலை பஸ் சேவை இடம்பெற்றதால், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில், சற்று முன்னர் குழப்பநிலை ஏற்பட்டது.

 

ஊழியர்களை இடமாற்றக் கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே, குறித்த வழித்தடத்துக்கான பஸ் சேவை இடம்பெற்றமைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், அரச பஸ் சேவைகள் அனைத்தும், இன்று (28) வடக்கில் முற்றாக முடங்கியுள்ளன.

இதனால் யாழ். மத்திய பஸ் நிலையம் வெறிச்சோடிக் கிடக்கின்றது. அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையில், பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் இடம்பெற்ற குழப்பநிலையைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

image_9221050780.jpg

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-மத்திய-பஸ்-நிலையத்தில்-குழப்பம்/71-208048

  • தொடங்கியவர்

அரச பேருந்து சேவைகள் வடக்கில் நாளையும் இல்லை
 

இ.போ.சவின் வடபிராந்திய பேருந்து சேவைகள் நாளை புதன்கிழமையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்புத் தலையகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பேச்சு வெற்றியளிக்காததால் இந்த அறிவிப்பை தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியது.

http://globaltamilnews.net/archives/52053

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு விடயத்திலும் ஒரு  தமிழன் தான் யார் என்பதை அப்பப்போ உடைத்துக் காட்டிக்கொண்டே இருப்பான்.

20 hours ago, நவீனன் said:

ஊழியர்களை இடமாற்றக் கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே, குறித்த வழித்தடத்துக்கான பஸ் சேவை இடம்பெற்றமைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.