Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாவை கைது செய்தால் புலம்பெயர்ந்தவர்களுக்கே மகிழ்ச்சி

Featured Replies

கோட்டாவை கைது செய்தால் புலம்பெயர்ந்தவர்களுக்கே மகிழ்ச்சி
 

image_e4c6e0503b.jpgமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்தால்  சந்தோசப்பபடும் ஒரே அணி புலம்பெயர் தமிழர்கள் மட்டுமேயென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று(27) கொழும்பில் இ டம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த அரசாங்கமானது புலம்பெயர் தமிழர்களின்  தேவைக்காக கோட்டாபயவை கைதுசெய்ய முயற்சிப்பதாகவும், இதுதொடர்பில் முடிவெடுக்கக் கூடிய முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் திருப்பதியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1

989-1990 ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட ஆர்.பாஸ்கரலிங்கம் இன்று பிரதமரின் நிதி ஆலோசகராக கடமையாற்றுகின்றார்.எனவே அவரைத்தான் முதலில் கைதுசெய்ய வேண்டும்” என்றும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டாவை-கைது-செய்தால்-புலம்பெயர்ந்தவர்களுக்கே-மகிழ்ச்சி/175-208021

  • தொடங்கியவர்

கோட்டாவை சிறையில் அடைப்பதே புலம்பெயரது நோக்கம்; அபேதிஸ்ஸ தேரர்

 

கோட்டாவை சிறையில் அடைப்பதே புலம்பெயரது நோக்கம்; அபேதிஸ்ஸ தேரர்

புலம்பெயர் சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஸ்ரீலங்கா அரசாங்கம் கைது செய்ய வகைதேடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் முன்வைத்துள்ளார்.

எதிர்காலத்திற்கான ஒளி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தென்னிலங்கையில் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கருத்து வெளியிட்டார்.

“தற்போதைய ஜனாதிபதி மட்டுமல்ல, முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர்கள், அப்பாவி குழந்தைகள் உட்பட இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களது நெற்றி மீது துப்பாக்கியை வைத்த சந்தர்ப்பங்களில் அதேபோன்று திகதியை மட்டும் குறிப்பிடும் அளவுக்கு மரணச் சான்றிதழை கையில் வைத்துக் கொண்டு நாட்டை இரத்த ஆறாக மாற்றியிருந்த நிலையில் நாட்டைக் காப்பாற்றிய கடமையில் இருந்தவர்தான் கோட்டாபய ராஜபக்ச.

அவரது அந்த நடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகள், புலம்பெயர் சமூகம், விடுதலைப் புலிகளை பலமடையச் செய்த சர்வதேச அமைப்புக்களுக்கும் பேரடியாக அமைந்தது. அதனால் கோட்டாபய ராஜபக்சவை ஒருநாளைக்காவது கைது செய்து, சிறை வைப்பதானது அவர்களது கனவும், எதிர்பார்ப்புமாகும்.

தற்போது இந்த நாட்டில் இராணுவத்தினரை வேட்டையாடுவதோடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி அங்கு விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்தனர். அதற்கு அவர்கள் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதாக கூறினாலும் அதனை மே 18ஆம் திகதியே செய்யவேண்டும். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்தநாளை அவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் கொண்டாடுகிறார்கள்” என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Government-misleading-by-diaspora-

  • கருத்துக்கள உறவுகள்

 தங்களின் அத்தனை அபத்தங்களையும் மூடி மறைப்பதற்கும், கொலை, கொள்ளையிலிருந்தும்  தம்மைக் காப்பாற்றுவதற்கும் சும்மா இருக்கிற புலம்பெயர்ந்தவைகளை வைத்தே பேய்க்காட்டுகிறார்கள். நம் தலைமையோ நாங்கள் கு .... விட்டாலும் சிங்களவன் கோபிப்பான் ஆகவே பொத்திக்கொண்டு விடுங்கோ என்கிறார்கள்.

On 11/28/2017 at 10:50 AM, நவீனன் said:

கோட்டாவை கைது செய்தால் புலம்பெயர்ந்தவர்களுக்கே மகிழ்ச்சி

 

கொள்ளைக்காரர்களை, கொலைகாரர்களை கைது செய்தால் நல்லவர்கள் மகிழ்வதும் அவர்களின் சகாக்களான தீயவர்கள் வருந்துவதும் இயற்கை தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.