Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Featured Replies

கோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

 

 
 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தான் கைது செய்யப்படுத்துவதை தடை செய்யக்கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

http://www.virakesari.lk/article/27614

  • தொடங்கியவர்

கோத்­தாவை கைது செய்ய அனு­ம­திப்­பதா? இல்­லையா? : இன்று தீர்­மா­னிக்கும் நீதி­மன்றம்

 

 
 

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யவோ அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா? இல்­லையா என மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இன்று தீர்­மா­னிக்­க­வுள்­ளது. 

டீ.ஏ. ராஜ­பக்ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை  தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ சந்­தேக நப­ராக கரு­தப்­படும் நிலையில், அவர் தாக்கல் செய்­துள்ள ரீட் மனுவை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொன்டே இன்று மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இதனை தீர்­மா­னிக்­க­வுள்­ளது.

 நேற்று முன்­தினம் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் சட்­டத்­த­ர­ணி­யான சனத் விஜே­வர்­த­ன­வினால் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் குறித்த ரீட் மனு தாக்கல்  செய்­யப்­பட்­டது. அந்த மனு­வா­னது நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி எல்.டி.பி. தெஹி­தெ­னிய, ஷிரான் குண­ரத்ன ஆகிய இருவர் கொன்ட நீதி­ப­திகள் குழாம் முன் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போதே இந்த ரீட் மனுவை தொடர்ந்து விசா­ரணை செய்­வதா, முன்னாள் பாது­கா­பபு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யவோ அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா இல்­லையா  என்­பது குறித்து இன்று தீர்­மா­னிப்­ப­தாக நீதி­ப­திகள் அறி­வித்­தனர்.

நேற்று இந்த ரீட் மனு விசா­ர­ணைக்கு வந்த போது, மனு­தா­ர­ரான கோத்­தா­பய நந்த சேன ராஜ­பக்ஷ சார்பில் மன்றில்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, மன்றில் ஆஜ­ரானார். 

இதன்­போது, அரச பணம் 90 மில்­லியன் ரூபாவை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் தனது சேவை பெறு­ந­ரான கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்ய நிதிக் குற்றப் புல­னா­யவுப் பிரிவு முயற்­சிப்­ப­தாக அவர் நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.  இது தொடர்பில் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை, உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் சான்­றி­தழ்­களும் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக  சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா,  கோத்­தா­வுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­படும் இந்த விவ­கா­ர­மா­னது முற்று முழு­தாக சிவில் கொடுக்கல் வாங்கல் ஒன்று மட்­டுமே என தெரி­வித்தார். 

 எனினும் சிவில் சட்­டங்­களின் கீழ் ஆரா­யப்­ப­ட­வேண்­டிய இந்த விடயம் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் புரி­யப்­பட்ட குற்­ற­மாக பார்க்­கப்­ப­டு­வது, கோத்­த­பா­யவை கைது செய்து பிணை இன்றி சிறையில் அடைக்கும் சதித்­திட்டம் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா மேன் முறை­யீட்டு மன்றில் வாதிட்டார்,.

 இந் நிலை­யி­லேயே முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யவோ அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா இல்­லையா என்­பதை இன்று அறி­விப்­ப­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தெரி­வித்­தது.

 முன்­ன­தாக நேற்று முன் தினம் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, தனது சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­தன ஊடாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரீட் மனு ஒன்­றினை தாக்கல் செய்தார். பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் தன்னை கைது செய்ய எத்­த­னிப்­பதை தடுத்து, நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழான அறிக்கை, உதவி பொலிஸ் அத்த்­யட்­சரின் சான்­றிதழ் என்­ப­ன­வற்றை  வலு­வி­ழக்கச் செய்­யு­மாறும்  அந்த ரீட் மனுவில் கோரப்­பட்­டுள்­ளது. 

13 பக்­கங்­களைக் கொண்ட குறித்த ரீட் மனுவில் மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, குற்றப் புல­னாய்வுப் பிரிவு பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­கர, நிதிக் குற்றப் புல­னா­யவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கார, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் சான்­றிதழ் வழங்­கிய நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கமல் பலிஸ்­கர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

அர­சி­ய­ல­மைப்பின் 140 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக தாககல்  செய்­யப்­பட்­டுள்ள மேற்­படி ரீட் மனுவில் 111 விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யுள்ள  மனு­தா­ர­ரான கோத்­த­பாய 7 நிவா­ர­ணங்­களை அத­னூ­டாக கோரி­யுள்ளார்.

பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்தல் அனுப்­பு­வது,  பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் , அதன் திருத்­தங்­களின் பிர­காரம் 8 (1) அத்­தி­யா­யத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள், உறுதிச் சான்­றி­தழை வலு இழக்கச் செய்­வது, மனு­தா­ர­ருக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் , அதன் திருத்­தங்­களின் பிர­காரம் 8 (1) அத்­தி­யா­யத்தின் கீழ் செயற்­பட பிர­தி­வா­தி­க­ளுக்கு எழுத்து மூல தடை உத்­தர்வு பிறப்­பிப்­பது, நீதிவான் நீதி­மன்றில் உள்ள 60485/4/15 எனும் வழக்கை, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 8(1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் தாக்கல்  செய்­யப்­பட்­டுள்ள ஆவ­ணங்கள் மற்றும் சான்­றி­தழை அடிப்­ப­டை­யாக கொண்டு முன்­னெ­டுப்­பதை தடுக்கும் வகையில் இடைக்­கால தடை உத்­த­ரவு,  இந்த மனு மீதான விசா­ரணை நிறை­வ­டையும் வரை ஏ 30 என குரிப்­பி­டப்­பட்­டுள்ள பொதுச் சொத்து என்­பதை உறுதி செய்யும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் சான்­றி­த­ழுக்கு இடைக்­கால தடை உத்­த­ரவைப் பிறப்­பிப்­பது,  வழக்கு செலவு மற்றும் நீதி­மன்றம் தீர்­மா­னிக்கும் ஏனைய சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்­வதை நிவா­ர­ணங்­க­ளாக கோரியே இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

முன்­ன­தாக வீர­கெட்­டி­யவில் நிர்மாணிக்கப்பட்ட டி.ஏ. ராஜபக்ஷ மன்றம் தொடர்பில் அரச பணம் 900 இலட்சம் ரூப பயன்படுத்தப்ப்ட்டமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடாத்தி கோவைகளை சட்ட மா அதிபருக்கு அனுப்பி ஆலோசனை கோரியது. இந் நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை  கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையிலேயே கைதை தடுக்கும் வண்ணம் ரீட் மனு தாககல்  செய்யப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.virakesari.lk/article/27643

  • தொடங்கியவர்
கோட்டாவின் மனுவுக்கு இடைக்கால தடை
 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவுக்கு, எதிர்வரும் 6 ஆம் திகதிவரையிலும் இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டாவின்-மனுவுக்கு-இடைக்கால-தடை/175-208102

சொறிலங்காவின் நீதித்துறையின் மூன்றாம்தர நிலையை இதுபோன்ற நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

  • தொடங்கியவர்

கோத்தாவை கைது செய்வதற்கு இடைக்கால தடை

3-62a989523aa6fc15d74aefe22bcf19fb5bffab01.jpg

 

பொது சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் எந்­த­வொரு சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டாம் என அறி­வித்து நிதிக் குற்றப்புல­னாய்வுப் பிரி­வுக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை நேற்று பிறப்­பித்­தது.  

டீ.ஏ.ராஜ­பக் ஷ ஞாப­கார்த்த அருங்­காட் சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பண  த்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர் பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ சந்­தேக  நப­ராக கரு­தப்­படும் நிலையில்,  அவர் தாக்கல் செய்­துள்ள ரீட் மனுவை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், எதிர்­வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை செல்­லு­ப­டி­யாகும் வண்ணம் இந்த தடை உத்­த­ரவை பிறப்­பித்­தது. 

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி எல்.டி.பி. தெஹி­தெ­னிய, ஷிரான் குண­ரத்ன ஆகிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாமே இந்த இடைக்­கால தடை உத்­த­ரவை பிறப்­பித்­தது.

 இந்த ரீட் மனுவை மீளவும் டிசம்பர் 6 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள நீதி­ப­திகள் தீர்­மா­னித்த நிலையில் அன்­றைய தினம் இது தொடர்பில் ஏதேனும் ஆட்­சே­ப­னங்கள் இருப்பின் அவற்றை மன்றில் முன்­வைக்க முடியும் என சட்ட மா அதி­ப­ருக்கு நீதி­மன்றம் அறி­வு­றுத்­தி­யது.

அத்­துடன் அன்­றைய தினம் வழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் உள்­ளிட்ட ஐந்து பிர­தி­வா­தி­க­ளையும் மன்றில் ஆஜ­ரா­கவும் அறி­வித்தல் அனுப்­பப்­பட்­டது.

நேற்று இந்த ரீட் மனு விசா­ர­ணைக்கு வந்த போது, மனு­தா­ர­ரான கோத்­த­பாய நந்த சேன ராஜ­பக்ஷ சார்பில் மன்றில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, ஆஜ­ரானார். இதன்­போது சட்ட மா அதிபர் சார்­பாக மேல­திக சொலி­சிற்றர் ஜெனரால் டில்­ருக்ஷி டயஸ் விக்­ர­ம­சிங்க மன்றில் பிர­சன்­ன­மானார்.

'தான் பத்­தி­ரிகை ஊடா­கவே குறித்த ரீட் மனு தொடர்பில் அறிந்­து­கொண்­ட­தா­கவும், அதன்­படி அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு ஆட்­சே­பனம் வெளி­யிட சட்ட மா அதிபர் சார்பில் தான் பிர­சன்­ன­மா­வ­தா­கவும் அதற்­கான அவ­காசம் தனக்கு வேண்டும் எனவும் மேல­திக சொலி­சிற்றர் ஜெனரால் தில்­ருக்ஷி டயஸ் விக்­ர­ம­சிங்க மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

 எனினும் அதற்கு கோத்­த­பா­யவின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா கடும் எதிர்ப்பு வெளி­யிட்டார். பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்தல் பிறப்­பிக்­காத நிலையில், ஆட்­சே­பனம் முன்­வைக்க அனு­ம­திக்க முடி­யாது என அவர் தெரி­வித்தார்.

 இந் நிலை­யி­லேயே கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்க இடைக்­கால தடை விதித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வழக்கை மீள 6 ஆம் திக­திக்கு விசா­ரணை செய்ய தீர்­மா­னித்­தது. அதன்­படி அன்­றைய தினம் இதற்கு ஆட்­சே­ப­னைகள் இருப்பின் அதனை சமர்­பிக்­கவும் நீதி­மன்றம் கட்­ட­ளை­யிட்­டது.

முன்­ன­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, தனது சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­தன ஊடாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரீட் மனு ஒன்­றினை தாக்கல் செய்தார். பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் தன்னை கைது செய்ய எத்­த­னிப்­பதை தடுத்து, நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழான அறிக்கை, உதவி பொலிஸ் அத்த்­யட்­சரின் சான்­றி­தழை வலு­வி­ழக்கச் செய்­யு­மாறும் அந்த ரீட் மனுவில் கோரப்­பட்­டுள்­ளது.

13 பக்­கங்­களைக் கொண்ட குறித்த ரீட் மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, குற்றப் புல­னாய்வுப் பிரிவு பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­கர, நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கார, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் சான்­றிதழ் வழங்­கிய நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கமல் பலிஸ்­கர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

அர­சி­ய­ல­மைப்பின் 140 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக தாககல் செய்­யப்­பட்­டுள்ள மேற்­படி ரீட் மனுவில் 111 விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனு­தா­ர­ரான கோத்­த­பாய, 7 நிவா­ர­ணங்­களை அத­னூ­டாக கோரி­யுள்ளார்.

பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்தல் அனுப்­பு­வது, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் , அதன் திருத்­தங்­களின் பிர­காரம் 8 (1) அத்­தி­யா­யத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள், உறுதிச் சான்­றி­தழை வலு இழக்கச் செய்­வது, மனு­தா­ர­ருக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் , அதன் திருத்­தங்­களின் பிர­காரம் 8 (1) அத்­தி­யா­யத்தின் கீழ் செயற்­பட பிர­தி­வா­தி­க­ளுக்கு எழுத்து மூல தடை உத்­த­ரவு பிறப்­பிப்­பது, நீதிவான் நீதி­மன்றில் உள்ள 60485/4/15 எனும் வழக்கை, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 8(1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஆவ­ணங்கள் மற்றும் சான்றிதழை அடிப்படையாக கொண்டு முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு, இந்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை ஏ 30 என குறிப்பிடப்ப்ட்டுள்ள பொதுச் சொத்து என்பதை உறுதி செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சரின் சான்றிதழுக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிப்பது, வழக்கு செலவு மற்றும் நீதிமன்றம் தீர்மானிக்கும் ஏனைய சலுகைகளைப் பெற்றுக்கொள்வதை நிவாரணங்களாக கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.