Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

Featured Replies

இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

ஹேரி- செல்வி மார்கெலைபடத்தின் காப்புரிமைEPA Image captionஹேரி, செல்வி மார்கெலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த திங்களன்று அறிவித்தார்

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

இசை, பூக்கள், வரவேற்பறை உள்ளிட்ட அனைத்து சேவைகளின் செலவுகளையும் அரச குடும்பம் ஏற்கிறது. திருமண தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் .இங்கிலாந்து திருச்சபையில் செல்வி மார்கெலுக்கு திருமணத்துக்கு முன்பு ஞானஸ்நானம் செய்யப்படுகிறது.

திருமணத்தின் அனைத்து அம்சங்களுக்குமான செயல்முறை குறித்து முப்பத்து மூன்று வயதான இளவரசர் ஹேரியும், செல்வி மார்கெலும் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாகவும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்கள் உணரத் தேவையான திட்டங்கள் குறித்து தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் இளவரசர் ஹேரியின் செய்திதொடர்பாளர் ஜேசன் நாஃப் தெரிவித்துள்ளார்.

செயின்ட் ஜார்ஜ் சேப்பல்படத்தின் காப்புரிமைPA

இந்த திருமணமானது மற்ற எல்லா திருமணங்களைப் போலவே மணப்பெண் மற்றும் மணமகனின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டதாக இருக்கும் என ஜேசன் கூறியுள்ளார்.

வின்ட்ஸர் கோட்டை திருமணம் செய்துகொள்ளப் போகும் இருவருக்கும் மிகவும் விசேஷமான இடம். ஏனெனில், அங்கேதான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் சந்தித்ததில் இருந்து நேரத்தை செலவிட்டுள்ளனர் என ஜேசன் நாஃப் விவரித்துள்ளார்.

செயின்ட் ஜார்ஜ் சேப்பல்படத்தின் காப்புரிமைPA

அமெரிக்க நடிகையான மெகன் இங்கிலாந்து குடிமகனாக விருப்பம் கொண்டுள்ளதாகவும் வரும் வருடங்களில் அதற்கான வேலைகளில் ஈடுபடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு வின்ட்ஸரில் ஹேரியின் தந்தையான இளவரசர் சார்லஸ், கார்ன்வால் பார்க்கர் பவுல்ஸை திருமணம் செய்தபிறகு செயின்ட் ஜார்ஜ் சேப்பல் பிரார்த்தனை மற்றும் அர்ப்பணிப்புக்கான இடமாக இருந்தது.

அரியணை ஏறுவதற்கான வரிசையில் ஐந்தாவது ஆளாக நிற்கும் ஹேரி, செல்வி மார்கெலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த திங்களன்று அறிவித்தார். திருமண அறிவிப்பை வெளியிட்ட நாளானது இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருந்ததாகவும், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் அவர்களுக்கு மகத்தான ஆதரவு இருந்ததாகவும் ஜேசன் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42155669

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

ஹேரி- செல்வி மார்கெலைஹேரி, செல்வி மார்கெலை

ஒருநாளைக்கு ஒருத்தி எண்டு கூத்தடிச்ச காவாலிக்கு கலியாணம் ஒரு கேடு.....ஓசிச்சோத்துக்கூட்டங்கள். :grin:

  • தொடங்கியவர்
‘வெள்ளை’ அரச குடும்பத்தில் ‘புரட்சி’
 

ஒவ்வொரு நாட்டுக்குமென, வித்தியாசமான அடையாளங்கள் இருக்கின்றன. ஐக்கிய இராச்சியத்தின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக, அந்நாட்டின் அரச குடும்பம் காணப்படுகிறது. அது, விபத்தில் கொல்லப்பட்ட இளவரசி டயானாவாக இருக்கலாம், தற்போதைய அரசி 2ஆம் எலிஸபெத்தாக இருக்கலாம், அவரது மகன் இளவரசர் சார்ள்ஸாக இருக்கலாம், அவர்களுக்கான உலகளாவிய மரியாதையென்பது, இன்னமும் உயர்வாகக் காணப்படுகிறது.  

அண்மைக்காலத்தில், அரச குடும்பத்துக்கான எதிர்ப்பென்பது கணிசமானளவு அதிகரித்திருக்கிறது என்ற போதிலும், கருத்துக்கணிப்புகளின்படி, சுமார் 68 சதவீதமான பிரித்தானிய மக்கள், அரச குடும்பமென்பது நாட்டுக்கு நல்லது என்று கருதுகிறார்கள். வெறுமனே 9 சதவீதத்தினர் தான், அது கெட்டது என்கின்றனர். தவிர, இன்னும் 100 ஆண்டுகளில் அரச குடும்பமென்பது காணப்படுமா என்ற கேள்விக்கு, ஆம் என 62 சதவீதத்தினர் பதிலளிக்கின்றனர்.  

தற்போதைய அரசியின் கீழ், 16 நாடுகள் காணப்படுகின்றன. நேரடியான அரசாட்சி, சம்பிரதாயபூர்வமான அரசாட்சி உள்ளிட்ட வகைக்குள் இவை உள்ளடங்குகின்றன. இந்நாடுகளின் தலைவியாக, அரசியே இருக்கிறார். அதேபோன்று, 52 நாடுகளைக் கொண்ட பொதுநலவாய அமைப்பு, இன்னமும் பலமிக்க அமைப்புகளுள் ஒன்றாக இருக்கிறது.  

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பிரித்தானிய அரச குடும்பமென்பது, தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது என்பதைக் காண முடிகிறது. அக்குடும்பத்துக்கான எதிர்ப்புகளைத் தாண்டி, உலகளாவிய இயங்கியலில், இன்னமும் தாக்கஞ்செலுத்துகின்ற குடும்பகமாக, இக்குடும்பம் இருக்கிறது.  

மிகவும் முன்னேற்றமடைந்த நாடுகளில் அல்லது மிகுந்த சுயாதீனத்தை விரும்பும் நாடுகளில் அல்லது சமூகங்களில், அரச குடும்பத்தை அதிகமாக முன்னிறுத்தும் நடவடிக்கைகள் எதிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, இளவரசர் வில்லியமுக்குக் குழந்தைகள் பிறந்தபோது, அச்சம்பவத்துக்கு ஏன் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டுமென எதிர்ப்புக் குரல்கள், சில பிரிவினரிடமிருந்து எழுந்திருந்தன.  

இவற்றையெல்லாம் தாண்டி, அரச குடும்பத்தின் இன்னொரு செய்தி, உலகளாவிய ஊடகங்களை எல்லாம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. அரச குடும்பத்துக்குத் தேவையற்ற முக்கியத்துவத்தை வழங்குவதை எதிர்ப்பவராக இப்பத்தியாளர் இருந்தாலும் கூட, தற்போதைய செய்திக்கு முக்கியத்துவம் வழங்குவதில் தவறில்லை என்பது தான், இப்பத்தியாளரின் வாதமாக இருக்கிறது.  

இளவரசர் சார்ள்ஸின் மகனான இளவரசர் ஹரி, திருமண நிச்சயதார்த்தத்தை மேற்கொண்டிருக்கும் செய்தி தான் அது. இளரவசர் ஹரியின் சகோதரர் வில்லியமுக்குக் குழந்தைகள் கிடைக்கும் போது, அதை ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கிச் செய்தி வெளியிட்டால் தவறு, ஆனால் இளவரசர் ஹரியின் திருமண நிச்சயதார்த்தம் மாத்திரம் முக்கியமானதா என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்வி. ஆனால், இளவரசர் ஹரி, யாரைத் திருமணம் முடிக்கப் போகிறார் என்பதில் தான், இது ஏன் முக்கியமானது என்பதே வெளிப்பட்டு நிற்கிறது.  

image_059dbd55d4.jpg

இளவரசர் ஹரியைத் திருமணம் முடிக்கப் போகும் பெண்ணின் பெயர், மேகன் மார்க்கில். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை இவர். பெயரில் ஒன்றும் புதுமை இல்லைத் தான், ஆனால் பெண்ணில் தான் இருக்கிறது.  

முதலாவதாக, இவர் வெள்ளையினப் பெண் கிடையாது. வெள்ளையினத் தந்தைக்கும் கறுப்பினத் தாய்க்கும் பிறந்தவர் இவர். இவரைப் போன்றவர்களை, கலப்பினத்தவர்கள் என்று கூறுவார்கள். பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில், கலப்பினப் பெண்ணொருவரை, இளவரசர் ஒருவர் மணமுடிக்கப் போகும் சந்தர்ப்பம், இதுதான் முதலாவதாக இடம்பெறப் போகிறது.  

இரண்டாவதாக, மேகன் மார்க்கில், ஏற்கெனவே திருமணம் முடித்து, விவாகரத்துப் பெற்ற ஒருவர். இளவரசர் ஹரியை விட, 3 வயது மூத்தவர். இந்த இரண்டு விடயங்களும் தான், இத்திருமணத்தை முன்னேற்றகரமான ஒன்றாக மாற்றுகின்றன.  

இதுவரை அப்படியான திருமணங்களே நடந்ததில்லையா, இதை மாத்திரம் எதற்காகத் தூக்கிப் பிடிக்க வேண்டும்? அரச குடும்பம் செய்கிறது என்பதற்காக, சாதாரணமான விடயங்களுக்காகவும் பாராட்டுகளையும் அதிகரித்த கவனத்தையும் வழங்குவது, அவர்களுக்கு விசேடமான இடத்தை வழங்குவது போலாகும் என்ற விமர்சனம் முன்வைக்கப்படலாம்.  

அந்த விமர்சனத்துக்கான பதில், அந்த விமர்சனத்தில் தான் இருக்கிறது. இது, சாதாரணமாக ஆங்காங்கே நடக்கின்றது என்றாலும் கூட, அரச குடும்பத்தில் நடக்கும் விடயம் என்ற அடிப்படையில், உலகளாவிய கவனம், அதன் மீது காணப்படும், அதனால் இவ்விடயங்கள் மேலும் பொதுவானவையாக மாறும் என்பது தான், இத்திருமணத்தை வரவேற்க வேண்டிய தேவையாக இருக்கிறது.  

இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி, ஏராளமான தெற்காசிய நாடுகளிலும் சரி, “சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்” என்ற சொற்றொடர்களின் உருவாக்கத்தின் பின்னால், இதே பிரித்தானிய அரச குடும்பம் தான் இருக்கிறது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். பிரித்தானியாவின் கொலனித்துவத்தின்போது, எமது நாடுகளின் வளங்களைச் சுரண்டிய அவர்கள், தமது கலாசாரத்தையும் மதத்தையும் பழக்கவழக்கங்களையும் எங்களிடத்தில் விட்டுச் சென்றனர். அதில் மிக முக்கியமானதான ஒன்றாக, “வெள்ளைத் தோல் என்பது உயர்ந்தது. கறுப்புத் தோல் என்பது தாழ்ந்தது” என்பது முக்கியமானது.  

இன்றைக்கு வரைக்கும், இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும், தோலை வெள்ளையாக்கும் உற்பத்திப் பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதற்கு, கொலனித்துவ ஆட்சியில் விதைக்கப்பட்ட “வெள்ளைத் தோல் சிறந்தது” என்ற கருத்தோட்டம் தான் காரணம்.  

இந்நிலையில் தான், அதே “தூய வெள்ளை இனத்தில்”, கலப்பினப் பெண்ணொருவர் வாழ்வதென்பது, கொலனித்துவச் சிந்தனைகளை இன்னமும் விதைத்துக் கொண்டிருக்கும் நபர்களின் முயற்சிகளுக்கு, முக்கியமான எதிர்ப்பாக அமையும். 

இளவரசர் ஹரி, அடுத்த அரசராகுவதற்கு, தற்போது இருக்கும் அரசர் உட்பட 5 பேராவது இறக்க வேண்டிள்ள நிலையில், கலப்பின அரசியொருவர் உருவாகுவதற்கான வாய்ப்புக் கிடையாது என்றே கூறலாம். ஏனென்றால், 2ஆவது இடத்திலுள்ள இளவரசர் வில்லியம், 1984ஆம் ஆண்டில் பிறந்தவர். 3ஆவது இடத்திலுள்ள இளவரசர் ஜோர்ஜ், 2013ஆம் ஆண்டில் பிறந்தவர். 4ஆவது இடத்திலுள்ள இளவரசரி சார்லட், 2015ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர்களின் பின்னர் தான், 1984ஆம் ஆண்டில் பிறந்த இளவரசர் ஹரி இருக்கிறார். எனவே, அரசர் ஹரி என்பதற்கான வாய்ப்பு, மிக அரிதாகவே உள்ளது.  

ஆனால், இளவரசியாகக் கலப்பினத்தவர் ஒருவர் இருப்பது, நிச்சயமாகவே உதவும். அதுவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கான பிரசாரங்களிலும் அதன் பின்னரான கருத்துகளிலும், “உண்மையான பிரித்தானியாவுக்குச் சொந்தமானவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி, வெள்ளையினத்தவரே பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. உலகம் முழுவதிலும் அதிகரிக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சியின் ஓர் அங்கமாகவே இது உள்ளது.  

இந்நிலையில் தான், இளவரசியாகக் கலப்பினத்தவர் ஒருவர் வருவதென்பது, சிறுபான்மையினர் மீதான கவனத்தை அதிகரிப்பதற்கு உதவக்கூடும். அவர்களை வேண்டா விருந்தாளிகள் போன்று, ஓர் ஓரத்தில் தள்ளிவைப்பது, சிறிதளவுக்காவது தவறெனத் தோன்றக்கூடும்.  

அதேபோல், அவர் நடிப்புப் பின்புலத்தைக் கொண்டவர் என்பதால், ஹொலிவூட்டிலும் சரி, பிரித்தானியத் திரைப்படங்களிலும் சரி, கறுப்பினத்தவர்களுக்கும் கலப்பினத்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களுக்கும், சிறிதளவாவது முக்கியத்துவம் வழங்கப்படும் வாய்ப்பை, எதிர்காலத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கலாம். இதுவும், முக்கியமான ஒரு விடயமாகும்.  

அடுத்த விடயமாக, இவர் விவாகரத்துப் பெற்றவர் என்பதும், அதிகமாகக் கவனிக்கக்கூடியது. மேலைத்தேய நாடுகளில், விவாகரத்துப் பெற்றவர்கள் மீளவும் திருமணம் முடிப்பதென்பது வழக்கமென்றாலும், அரச குடும்பத்தில் அது பெருமளவுக்கு வழக்கமாக இருந்திருக்கவில்லை. அதுவும், முதலாவது திருமணமாக, விவாகரத்துப் பெற்ற ஒருவரை, இளவரசர் ஒருவர் திருமணம் முடிப்பதென்பது, அண்மைக்கால வரலாற்றில் அறிந்திராத ஒன்றாகும்.   இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில், விவாகரத்துப் பெற்ற பெண்கள், சமூகத்தால் ஒரு வகையில் ஒதுக்கப்படும் வரலாற்றைப் பார்த்துவந்திருக்கிறோம். சமூகத்தின் இந்த வகையான நடவடிக்கை காரணமாக, விவாகரத்துப் பெற வேண்டிய திருமணங்களிலிருந்து கூட வெளியேறாமல், ஏராளமான பெண்கள், தங்களது வாழ்க்கையைத் தொலைத்ததையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.  

ஆனால், மேகன் மார்க்கிலுக்குக் கிடைத்திருக்கும் அங்கிகாரமென்பது, தவறான அல்லது பொருந்தாத் திருமணத்தில் காணப்படும் பெண்கள், அதிலிருந்து வெளியேறுவதென்பது, எந்த வகையிலும் அவர்களைத் தவறானவர்களாக மாற்றப் போவதில்லை என்பதையும், விவாகரத்துக்குப் பின்னரான வாழ்க்கை என்பது, சுபீட்சமானதாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதையும் காட்டிநிற்கிறது.  

விவாகரத்து விடயத்தில், பெண்களை மதிப்பதற்கும், அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும், தமிழ்ச் சமூகம் போன்ற பழைமைவாதச் சமூகத்துக்கான உந்துதலாக, இவ்வாறான திருமணங்கள் அமைய வேண்டுமென்பது தான், முன்னேற்றத்தை விரும்புவோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  

எனவே, அரச குடும்பத்தை வெறுப்பவராக நீங்கள் இருந்தாலும், இளவரசர் ஹரிக்கும் மேகன் மார்க்கிலுக்கும் இடையில் இடம்பெறவுள்ள திருமணத்தை, இருகரம் கூப்பி வரவேற்பதிலும் அதைக் கொண்டாடுவதிலும் பின்னிற்கத் தேவையில்லை என்பது தான், இங்கு சொல்ல வேண்டிய விடயமாக இருக்கிறது.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெள்ளை-அரச-குடும்பத்தில்-புரட்சி/91-208166

  • தொடங்கியவர்

புதிய இளவரசியை சுற்றியிருக்கும் சர்ச்சைகள்: இளவரசர் கொடுத்த டயானாவின் டைமண்ட் #RoyalWedding #PrinceHarrywedsMeghan

 

ங்கிலாந்தின் இரண்டாவது இளவரசர் ஹேரியின் திருமண அறிவிப்புதான் இப்போதைய டாக் ஆஃப் தி குளோபல் டவுன்.

ஹேரியும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலும் ஒன்றரை வருடங்களாகக் காதலில் இருந்தார்கள். தற்போது, திருமண அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா உள்பட பலரிடமிருந்து வாழ்த்து மழை. அதேநேரம், சர்ச்சைகளும் றெக்கை கட்டியுள்ளது. புதிய இளவரசியைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ!

 

இளவரசர் ஹேரி - மேகன் மார்க்கல்

அமெரிக்க தந்தைக்கும் ஆப்பிரிக்க தாய்க்கும் பிறந்தவர் மேகன் மார்க்கல். ’சூட்ஸ்’ என்ற அமெரிக்க தொடர்மூலம் பிரபலம் ஆனவர். (இளவரசர் ஹேரி, அந்தத் தொடரை ஒருமுறைகூட பார்த்தது இல்லையாம்). 

இளவரசரும் மேகனும் தூரத்துச் சொந்தமாம். (சர்ச்சிலுக்கும் ஷேக்ஸ்பியருக்கும்கூட) 15 தலைமுறைகளுக்கு முன்பு, மேகனின் தந்தை வம்சம், ராஜ குடும்பத்துக்குச் சொந்தக்காரர்களாம்.

இவர்கள் இருவரையும் 2016-ம் ஆண்டு ஜூலையில், அடையாளம் வெளியிடாத தோழிதான் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்போது, மிஷா நானூ என்கிற ஃபேஷன் டிசைனருடன் மேகன் அதிக நாள்களைச் செலவழித்துள்ளார். மிஷாவின் கணவருக்கு இளவரசர் நெருக்கம். எனவே, இருவரையும் அறிமுகப்படுத்தியது மிஷாவாக இருக்கலாம் என்பது பலரின் கணிப்பு. ஆனால், இதற்குப் பதிலளிக்க மிஷா மறுத்துவிட்டார். 

2016 ஜூலையிலிருந்து அமெரிக்காவுக்கும் லண்டனுக்குமாக பறந்து பறந்து காதலித்துள்ளார்கள். 'திருமணம் செய்துகொள்ளலாமா?' என்று மண்டியிட்டு புரோபோஸ் செய்துள்ளார் இளவரசர் ஹாரி. கேள்வியை முடிக்கவிடாமலே ‘சரி' என்று மேகன் சொல்லிருக்கிறார். ஹவ் ரொமான்டிக்! 

மேகனுக்கு கொடுத்த மோதிரத்தில் இருக்கும் கல், டயானாவின் நகைகளிலிருந்து எடுக்கப்பட்டது. அந்த மோதிரத்தை ஹேரியே வடிவமைத்துள்ளார். மறைந்த தன் அம்மா டயானாவின் ஆசிர்வாதம் இருவருக்கும் வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இது. 

மேகன் மார்க்கல் கலப்பினத்தவர் என்பதால், பிரிட்டனைச் சேர்ந்த ஊடகங்கள் இனவாதக் கருத்துக்களுடன் செய்தி வெளியிட்டன. மீடியாக்கள் வரம்பு மீறிச் செயல்படுவதாகவும், இதுபோன்ற ஊடக வன்முறையைப் பார்த்ததில்லை என்றும் இளவரசர் சொன்னதாக, அரச குடும்ப பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. மேகன் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் இளவரசர் அச்சம் அடைந்துள்ளாராம். 

எலிசபெத் ராணி, இங்கிலாந்து அரசி மட்டுமல்ல; சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் தலைவர் என்ற பொறுப்பையும் வகிப்பவர். விவாகரத்து ஆனவர்களின் திருமணங்கள் ஊக்குவிக்கப்படமாட்டாது என்பதால், சொந்த மகன் சார்லஸின் இரண்டாவது திருமணத்துக்கே செல்லவில்லை. (மகன் திருமணம் செய்துகொண்டவரும் விவாகரத்தானவர்.) மேகன் மார்க்கல் விவாகரத்தானவர் என்பதால், இவர்களின் திருமணத்துக்கும் அரசி வருவது சந்தேகமே. 

மேகன் மார்க்கலுக்கு திருமணத்துக்கான விசா, மே மாதம் முடிவடைவதால், அதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும். முதல் இளவரசருக்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்க இருப்பதால், மே மாதம் திருமணம் என முடிவுசெய்துள்ளார்கள். கூடிய விரைவில் திருமண தேதி வெளியாகும். 

செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் திருமணம் நடைபெற இருப்பதால், திருமணந்துக்கு முன்பே மேகனுக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட வேண்டும். மேகனும் கிறித்துவர் என்றாலும், வேறு உட்பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வழிமுறையைப் பின்பற்றப்பட வேண்டுமாம். 

முதல் இளவரசரின் திருமணம் டிவிக்களில் ஒளிபரப்பப்பட்டதுபோல இந்தத் திருமணமும் ஒளிபரப்பாகுமா என்று இன்னும் சொல்லப்படவில்லை. 'அட்லிஸ்ட் ஃபேஸ்புக்ல லைவ் பண்ணுங்கப்பா' என குஷியாகச் சொல்கிறார்கள் ரசிகர்கள்.

அவர் நடித்து வந்த சூட்ஸ்’ தொடரின் ஏழாவது சீசன் முடிவடைந்துள்ளதை அடுத்து, 'திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன்' என்று அறிவித்துள்ளார் மேகன். 

 

மேகன் அரச குடும்பத்தைச் சேராதவர் என்பதால், இளவரசி என்று அழைக்கப்படமாட்டார். டயானாவும், முதல் இளவரசரின் மனைவி கேத் மிடில்டனும்கூட இன்றுவரை இளவரசி என்று முறையாக அழைக்கப்படவில்லை. மதிப்புமிகு மனிதரின் மனைவி என்ற பொருளில்தான் அழைக்கப்பட்டார்கள்.

https://www.vikatan.com/news/world/109593-all-you-need-to-know-about-princess-meghan-markle.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி!

இளவரசர் ஹெரி - மேகன் மார்க்கல் திருமணம் எதிர்வரும் மே மாதம் பத்தொன்பதாம் திகதி வின்சர் கோட்டையில் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10_Harry.JPG

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மேகன் மார்க்கலை இளவரசர் ஹெரி திருமணம் செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதானது, இங்கிலாந்து அரச குடும்பம் ஏற்றுக்கொண்டு வரும் மாற்றங்களில் முக்கியமானது எனக் கருதப்படுகிறது.

திருமணத்துக்கு முன் மேகன் மார்க்கலுக்கு ஞானஸ்நானம் பண்ணவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருமணத்தில், ஹெரியின் மாப்பிள்ளைத் தோழனாக அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எஃப்ஏ கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே தினத்தில் இந்தத் திருமணம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/28289

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதைய ராணி ஆன் போலின் மே மாதம் 19அம் திகதிதான் 1536இல் 
பொய்யான குற்றம் சுமத்தி தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மே 19 என்றதும் அது ஞாபகதத்துக்கு வருகிறது.
இவர்கள் ஏன் அந்த தேதியை குறித்து எடுத்தார்கள் ?

கலியாணம் கிடக்கட்டும் ..........

சின்ன சிறுசுகள் கனிமூனுக்கு திகதி இடம் எல்லாம் குறித்து விடடார்களா ?
இப்பவே வெளியில சொன்னால்தான் பாப்பரசிகள் வேலையில் இறங்கி 
எமக்கும் ஏதாவது பார்க்க கிடைக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.