Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிவழி பயணம் சூடு பிடிக்கும் அரசியல்

Featured Replies

தனிவழி பயணம் சூடு பிடிக்கும் அரசியல்

 

நாட்டின் அர­சியல் சூழ­லா­னது தீவி­ர­மான முறையில் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. எந்­தக் ­க­ணத்தில் அர­சியல் ரீதியில் எந்த நகர்வு முன்­னெ­டுக்­கப்­படும் என்­பதை யாராலும் கணிக்க முடி­யாத அள­வுக்கு கட்­சி­களின் காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் யாரும் எதிர்­பார்க்­காத அர­சியல் மாற்­றங்கள் ஏற்­பட்­ட­னவோ அதே­போன்று சில அர­சியல் நகர்­வுகள் தற்­போது இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இரண்டு துரு­வங்­களில் பிரிந்­தி­ருக்­கின்ற துரு­வங்கள் கூட ஒன்­றாக இணைந்து விடும் சாத்­தி­யங்கள் தென்­ப­டு­கின்­றன. அர­சி­யலில் இவை அனைத்தும் சாத்­தியம் என்­பது எண்­ணக்­க­ரு­வாக இருக்­கின்­ற­போ­திலும் அதற்­காக முன்­னெ­டுக்­கப்­படும் காய்­ந­கர்த்­தல்­களும் செயற்­பா­டு­க­ளுமே மக்­க­ளுக்கு ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றன.

அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பது தொடர்பில் மக்­களே மிகவும் ஆர்­வத்­துடன் இருக்­கின்­ற­ வ­கையில் நாட்டின் அர­சியல் களம் சூடு­பி­டித்­தி­ருக்­கின்­றது. அந்­த­வ­கையில் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மைத்­தி­ரி­பால சிறி­சேன தரப்பும் மஹிந்த ராஜ­ப­க் ஷவும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் போட்­டி­யி­டுமா என்­பதே இன்­றைய நிலையில் அர­சியல் களத்தில் காணப்­ப­டு­கின்ற மிகப்­பெ­ரிய ஆர்­வத்­துக்­கு­ரிய விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. ஆனால் அந்தக் கேள்­விக்கு இல்லை என்ற பதிலை மிகவும் திட்­ட­வட்­ட­மாக கூறி­வி­டக்­கூ­டிய சமிக்­ஞைகள் தென்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

தற்­போது ஸ்ரீ­லங்­கா ­சு­தந்­தி­ரக்­கட்­சியும் கூட்­டு ­எ­தி­ர­ணி­யும்­ இ­ணைந்­து­கொள்­வ­தற்­கான பாரி­ய­ மு­யற்­சிகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­ற ­நி­லையில் மஹிந்த தரப்­பா­னது பாரிய நிபந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக மஹிந்த தரப்­பா­னது பிர­தமர் பத­வி­யிலும் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யிலும் குறி­வைத்­துள்­ள­துடன் அடுத்த வரு­டத்­திற்­கான வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு சுதந்­திரக் கட்சி ஆத­ரவு வழங்கக் கூடாது என்ற நிபந்­த­னை­யையும் முன்­வைத்­தி­ருக்­கி­றது.

எனினும் இரண்டு தரப்­பிற்­கு­மி­டையில் மூவர் வீதம் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு நடத்­தப்­பட்ட மூன்று சுற்­றுப்­பேச்­சு­வார்த்­தை­களும் இது­வரை தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றன. அந்­த­வ­கையில் தொடர்ந்தும் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்ட போதிலும் பேச்­சு­வார்த்தை வெற்­றி­பெ­றாது என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஒன்­றி­ணைந்து கள­மி­றங்­கு­வ­தென்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் விரும்­பு­வார்­க­ளாயின் அதற்­கான முதற்­கட்ட சமிக்­ஞை­யாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தை தோற்­க­டித்து அவர்­களின் நேர்­மைத்­தன்­மையை நிரூ­பித்­துக்­காட்ட வேண்டும் என்று கூட்டு எதிர்க்­கட்சி பிர­தா­ன­மாக நிபந்­தனை விதித்­தி­ருக்­கின்­றது.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆளும் ­த­ரப்பு சார்பில், அவ்­வ­ணியின் பாரா­ளு­மன்றக் குழுத்­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் அனு­ர­ பி­ரி­ய­தர்­சன யாப்பா, பிரதி அமைச்சர் லசந்த அழ­கி­ய­வண்ண ஆகி­யோரும், கூட்டு எதிர்க்­கட்சி சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான, சி.பி.ரத்­நா­யக்க, மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன, பவித்­திரா வன்­னி­யா­ரச்சி ஆகி­யோரும் இந்தப் பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்று வரு­கின்­றனர். ( இனி பேச்­சு­வார்த்­தையும் நடை­பெறும் சாத்­தியம் தெரி­ய­வில்லை)

ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் இந்தப் பேச்­சு­வார்த்­தைகள் வெற்­றி­பெ­றாது என்ற நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக கூட்டு எதி­ரணி முன்­வைத்­துள்ள நிபந்­த­னை­களில் பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சி கோரிக்­கை­க­ளுக்கு அப்பால் மிக முக்­கிய ஏழு நிபந்­த­னை­களும் காணப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­மை­யி­லான நல்­லாட்­சி­யி­லி­ருந்து சுதந்­தி­ரக்­கட்சி வில­க­வேண்டும். அதி­க­ரித்து செல்லும் வாழ்க்கைச் செலவை குறைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும், தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு வழங்கும் செயற்­பாட்டில் சுதந்­தி­ரக்­கட்சி ஈடு­ப­டக்­கூ­டாது, சங்­கபீ­டத்தின் கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­க­வேண்டும், அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாட்­டி­லி­ருந்து சுதந்­தி­ரக்­கட்சி வில­க­வேண்டும், மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­க­வேண்டும் உள்­ளிட்ட நிபந்­த­னை­க­ளையே கூட்டு எதி­ரணி முன்­வைத்­தி­ருக்­கின்­றது.

ஆனால் ஸ்ரீ­லங்­கா சுதந்­தி­ரக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறும் எண்ணம் இல்லை என்று தெரி­ய­வ­ரு­கி­றது. அவ்­வாறு பார்க்­கும்­போது சுதந்­தி­ரக்­கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணை­வ­தற்­கான சாத்­தியம் இல்லை என்றே தெரி­ய­வ­ரு­கி­றது.

இரண்டு தரப்­புக்­களின் இணைவு தொடர்பில் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் கெஹெ­லிய ரம்­புக்­வெல எம்­மிடம் கருத்து தெரி­விக்கும் போது

ஸ்ரீ­லங்­கா சுதந்­தி­ரக்­கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணை­வ­தற்­கான சாத்­தியம் மிகவும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது என்று குறிப்­பிட்டார். அவர் மேலும் இவ்­வாறு விப­ரிக்­கின்றார்.

அதா­வது சரி­யாக கூறு­வ­தென்றால், சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணை­வதை நாம் விரும்­ப­வில்லை. கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்­கின்ற அதி­க­மா­ன­வர்கள் இவ்­வாறு சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணை­வதை விரும்­ப­வில்லை. எனினும் சுதந்­தி­ரக்­கட்சி எம்­முடன் இணைந்­து­கொள்­வ­தற்­காக அழைப்பு விடுத்­துள்­ளதன் கார­ண­மாக நாங்கள் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்­டி­ருக்­கின்றோம். மாறாக இணைந்­து­கொள்­வ­தற்கு நாங்கள் விருப்பம் இல்லை. எனவே கூட்டு எதி­ர­ணிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றாலும் இரண்டு தரப்­பிற்­கு­மி­டையில் இணைவு என்­பது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இணைந்து கொள்­வ­தற்­கான சாத்­தியம் மிகவும் குறை­வா­கவே உள்­ளது. இங்கு இரண்டு தரப்பும் இணையும் பட்­சத்தில் மிகப்­பெ­ரிய சிக்கல் அர­சி­யல்­ ரீ­தியில் ஏற்­படும். உதா­ர­ண­மாக எனது தொகு­தியில் நான் தற்­போது தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்­களை தெரிவு செய்­து­விட்டேன். அவர்கள் தற்­போது தேர்­த­லுக்கு தயா­ரா­கி­விட்­டார்கள். இந்­நி­லையில் தற்­போது இரண்டு தரப்பும் இணைந்தால் நான் தற்­போது தெரி­வு­செய்­துள்ள வேட்­பா­ளர்­களில் அரை­வா­சி­ப்பேரை பட்­டி­யலில் இருந்து நீக்­க­வேண்டி வரும். இது கட்­சி ­மட்­டத்தில் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும். ஆத­ர­வா­ளர்கள் மத்­தி­யிலும் சிக்­கலை கொண்­டு­வ­ரு­வ­தாக அமையும். எனவே இந்த முயற்சி கைகூ­டாது என்­பதே யதார்த்­த­மாகும்.

அது­மட்­டு­மன்றி ஸ்ரீ­லங்­கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­மை­யி­லான நல்­லாட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. அவர்கள் ஆட்­சியில் இருப்­ப­தற்கே விரும்­பு­கின்­றனர். எனவே அவர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­மை­யி­லான நல்­லாட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றா­விடின் கூட்டு எதி­ர­ணிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மான இணைவு சாத்­தி­ய­மற்றுப் போய்­விடும். அவ்­வா­றான ஒரு நிலையே தற்­போது காணப்­ப­டு­கின்­றது.

எனவே பெரும்­பாலும் சுதந்­தி­ரக்­கட்­சியின் கூட்டு எதி­ர­ணியும் இணை­வ­தற்­கான சாத்­தியம் மிகவும் குறை­வாக இருக்­கின்­றது. அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தற்­காக பேச்சு நடத்­தப்­ப­டு­கின்­றதே தவிர இணைந்­து­கொள்ளும் நோக்­கத்­துடன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே உண்­மை­யாகும் என்று கெஹெ­லி­ய­ ரம்­புக்­வெல்ல சுட்­டிக்­காட்­டினார்.

ரம்­புக்­வெல்ல மட்­டு­மன்றி கூட்டு எதி­ர­ணியின் மேலும் பல முக்­கி­யஸ்­தர்கள் இணைவு சாத்­தியம் இல்லை என்ற கருத்­தையே வெளி­யிட்டு வரு­கின்­றனர். அதா­வது எந்­தக்­கா­ரணம் கொண்டும் சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்­டிலும் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் கருத்து வெளி­யிட்டு வரு­வதை காண முடி­கின்­றது.

 இது குறித்து தனது அவ­தா­னிப்பை வெளியிட்­டுள்ள மக்கள் விடு­தலை முன்­னணி அதா­வது மீண்டும் மஹிந்­த­ த­ரப்­பு­டன்­ ஒட்­டிக்­கொண்­டு­ செல்­ல ­வேண்­டும்­ என்­ற­ மு­யற்­சி­யில்­ ஸ்ரீ­லங்­கா ­சு­தந்­தி­ர­க் கட்­சி­ செ­யற்­ப­டு­கின்­றது என்று குறிப்­பிட்­டுள்­ளது. குறிப்­பாக பொது எதி­ர­ணி­யும் ­இந்­த ­வாய்ப்­பை­ ப­யன்­ப­டுத்­தி ­தா­மும் ­தப்­பித்­துக் ­கொள்­ள ­மு­யற்­சிக்­கின்­றது. மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்­கு ­மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சே­ன­விற்­கும்­ இ­டை­யில்­த­னிப்­பட்­ட ­மு­ரண்­பா­டு­கள்­ இ­ருக்­கின்­றதே தவி­ர­கொள்கை ரீதியில் பிள­வுகள் இல்லை என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க பகி­ரங்­க­மாக குற்­றஞ் ­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

இவ்­வாறு நிலைமை நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் பிர­தான ஆளும் கட்­சி­யான ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சி­யா­னது சுதந்­தி­ரக்­கட்சி என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பதை உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதா­வது கூட்டு எதி­ரணி கூறு­வ­தைப்­போன்று சுதந்­தி­ரக்­கட்சி அர­சி­லி­ருந்து விலகி கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­து­கொள்­ளு­மானால் அடுத்­து­வரும் நிலை­மையில் எவ்­வாறு அர­சாங்­கத்தை நிறு­வு­வது ஆட்­சியை அமைப்­பது என்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆராய்ந்து கொண்டு வரு­கி­றது.

 தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஆட்சி அமைக்­கலாம் என்­பது தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆராய்ந்து வரு­கின்­றது. இவ்­வாறு அர­சியல் கள­மா­னது மிகவும் சூடு­பி­டித்­துக்­கொண்டே சென்­று­கொண்­டி­ருக்­கின்­றது. ஸ்ரீ­லங்­கா சுதந்­தி­ரக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதில் மிகப்­பெ­ரிய விருப்பம் இல்­லா­வி­டினும் ஒரு­சில செல்­வாக்கு செலுத்­த­வேண்­டிய விட­யங்கள் கார­ண­மாக ஆட்­சியில் ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின் செயற்­பா­டுகள் கார­ண­மாக தாங்கள் அதி­ருப்­தி­யுடன் இருப்­ப­தாக சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் அடிக்­கடி கூறி­வ­ரு­கின்­றனர்.

அந்­த­வ­கையில் சுதந்­தி­ரக்­கட்சி விருப்­ப­மின்றி நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இருந்­தாலும் ஒரு­சில விட­யங்­களில் செல்­வாக்கு செலுத்­த­வேண்டும் என்­ப­தற்­கா­கவே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்­த­நி­லையில் ஸ்ரீ­லங்­கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் நல்­லாட்­சியை அமைப்­ப­தற்­காக செய்­து­கொண்ட உடன்­ப­டிக்கை டிசம்பர் மாதத்­துடன் காலா­வ­தி­யா­கின்­றது.

எனவே டிசம்பர் மாதத்­தி­லி­ருந்து சுதந்­தி­ரக்­கட்சி நல்­லாட்­சி­யி­லி­ருந்து வில­கி­வி­டுமா என்ற கேள்­வியும் எழு­கின்­றது. ஆனால் சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களின் கூற்­றுக்­க­ளைப்­பார்க்­கும்­போது அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகும் எண்ணம் இல்லை என்றே தோன்­று­கின்­றது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யைப்­பொ­றுத்­த­வ­ரையில் அந்­தக்­கட்­சியே தற்­போது கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­து­கொள்ள கடும் முயற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. காரணம் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி வெற்­றி­பெற்று மஹிந்த தரப்பு தனித்து போட்­டி­யிட்டு இரண்­டா­வது இடத்தைப் பிடித்தால் சுதந்­தி­ரக்­கட்சி மூன்றாம் நிலைக்கு சென்­று­விடும். ஜனா­தி­பதி அங்கம் வகிக்­கின்ற ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மூன்றாம் இடத்­திற்கு செல்­வதை அக்­கட்சி விரும்­பாது. தேர்தல் முடி­வு­களை தற்­போது எதிர்­வு­கூற முடி­யா­வி­டினும் கள­நி­லை­மை­களைப் பார்க்கும் போது என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை ஓர­ளவு ஊகிக்க முடி­கின்­றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில் சுதந்திரக்கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாகவே அக்கட்சி கூட்டு எதிரணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முனைகின்றது. சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களான சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரட்ன ஆகியோர் கூட்டு எதிரணியை இணைக்கவேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூட்டிணைவதற்கான தேவை அதிகமாக சுதந்திரக்கட்சிக்கு இருப்பதை உணர்ந்துகொண்டுள்ள கூட்டு எதிரணி அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடும் நிபந்தனைகளை விதித்து வருகின்றது. கூட்டிணைவதற்கான தேவை சுதந்திரக் கட்சிக்கு இருந்தும் அக்கட்சி கூட்டு எதிரணியின் நிபந்தனைகளை ஏற்பதற்கு தயாராக இல்லை.

இந்நிலையிலேயே இரண்டு தரப்புக்களும் இணைய முடியாத சூழல் அதிகரித்து செல்கின்றது. அத்துடன் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்கள் வெளியிடும் கருத்துக்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொள்வதற்கான தேவையில்லை என்றே தெரிகிறது.

கூட்டு எதிரணி தனித்துத்தான் போட்டியிடும் என்ற ரீதியில் அக்கட்சியானது தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பல்வேறு பிரதேசங்களில் செலுத்திவிட்டது. எனவே பெரும்பாலும் கூட்டு எதிரணியும் சுதந்திரக்கட்சியும் பிரிந்தே போட்டியிடும் என்பதும் உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் தேர்தல் களம் மும்முனை போட்டிக்களமாக சூடுபிடிக்கும் நிலைமை காணப்படுகின்றது. விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் என்று ஒரு கூற்று உள்ளது. அதுபோன்று தற்போது எதிர்வரும் வாரங்கள் நாட்டின் அரசியலில் தீர்க்கமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொபட் அன்­டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-02#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.