Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவ­நம்­பிய தீசன் தமிழ் மன்­னனா?

Featured Replies

தேவ­நம்­பிய தீசன் தமிழ் மன்­னனா?

 

 
 

தேவ­நம்­பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன்  கூறி­யி­ருந்த நிலையில், தீசன் என்­பது சிங்­கள அர­சரின் பெயர் என்றும், இலங்­கையின்  மூலப் பெயர் சிங்­கலே என்றும்  ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர  தெரி­வித்­துள்ளார்.  

ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில்  எழுப்­பப்­பட்ட  கேள்­வி­க­ளுக்கே சரத் வீர­கே­சர மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது 

கேள்வி: தேவ­நம்­பிய தீசன் உண்­மையில் ஒரு தமிழ் மன்னன் என அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன்  கூறி­யுள்ளார். இது தொடர்­பான தங்­க­ளது கருத்து என்ன?

பதில்: தேவ­நம்­பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என விக்­னேஸ்­வரன் தெரி­வித்­தி­ருந்தார். தீசன் என்­பது சிங்­கள அர­சரின் பெய­ராகும். தேவ­நம்­பிய என்­பது இந்த அர­சனைக் கௌர­விக்கும் முக­மாக வழங்­கப்­பட்ட பெய­ராகும்.

இந்­தி­யாவின் லும்­பி­னியில் காணப்­படும் அசோ­கரின் தூணில்  செதுக்­கப்­பட்­டுள்ள கல்­வெட்டில், அசோகச் சக்­க­ர­வர்த்­தியை கௌர­விக்கும் முக­மாக வழங்­கப்­பட்ட தேவன பியேன பிரி­ய­தர்­சன அசோக  எனப் பொறிக்­கப்­பட்­டுள்­ளது.

வட­மா­காண முத­ல­மைச்சர் இந்­தி­யா­விற்குச் சென்று ‘தீசன்’ கதையைக் கூற­வேண்டும், இந்­தி­யர்­க­ளிடம் போய் மௌரியப் பேர­ர­ச­னான அசோ­கனும் தமிழ் மன்னன் என்று அவர் கூறட்டும்.

கேள்வி: இது சிங்­கள பௌத்த நாடல்ல என முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கூறு­கிறார். இது தொடர்­பான தங்­களின் கருத்து என்ன?

பதில்: இந்த நாட்டின் மூலப் பெயர் ‘சிங்­கலே என்­ப­தாகும். 1815 இல் பிரித்­தா­னியத் தலை­வர்­க­ளாலும் ‘சிங்­கலே’ தலை­வர்­க­ளாலும் கண்­டிய சாசனம் எழு­தப்­பட்­டது. எமது நாடு சுதந்­திரம் பெற்ற பின்னர் ‘சிங்­கலே’ என்ற பெயரைத் தொடர்ந்தும் நாம் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் இந்த நாட்­டி­லுள்ள அனை­வரும் ‘சிங்­க­ள­வர்­க­ளா­கவே’ இருந்­தி­ருப்­பார்கள்.

உல­கி­லுள்ள அனைத்து நாடு­களும் பல்­லி­னங்­களைக் கொண்ட நாடு­க­ளா­கவே உள்­ளன. ஆனால் பொது­வாக நாடு­களில் உள்ள பெரும்­பான்மை சமூ­கத்­தினர் மற்றும் பெரும்­பான்மை மதங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அந்­தந்த நாடுகள் அடை­யாளங் காணப்­ப­டு­கின்­றன.

ஆகவே எமது நாடா­னது சிங்­கள பௌத்த நாடு என அழைக்­கப்­ப­டு­வதை எவரும் எதிர்க்க முடி­யாது. ஏனெனில் இந்த நாட்டில் 74 சத­வீ­த­மான சிங்­க­ள­வர்­களும் இவர்­களில் 85 சத­வீ­த­மா­ன­வர்கள் பௌத்­தர்­க­ளா­கவும் உள்­ளனர். இதுவே உண்­மை­யான நிலைப்­பா­டாகும்.

சிங்­க­ள­வர்கள் வடக்கில் குடி­யே­று­வதை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் விரும்­ப­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள புத்தர் சிலை­களை அகற்­று­மாறும் முத­ல­மைச்சர் கோரிக்கை விடுத்­துள்ளார். ஆனால் கொழும்­பி­லுள்ள சிங்­க­ள­வர்கள் மத்­தியில் தமி­ழர்கள் மிகவும் மகிழ்ச்­சி­யாக வாழ்­கின்­றனர். ஏனெனில் இது சிங்­கள பௌத்த நாடாகும்.

முஸ்லிம் நாடொன்றில் வாழும் முல்­லாக்­களை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இவ்­வாறு துன்­பப்­ப­டுத்­தினால், அவ­ரது தலை துண்­டிக்­கப்­படும். ஆனால் இது சிங்­கள பௌத்த நாடு என்­பதை விக்­னேஸ்­வரன் அறிந்­துள்­ளதால் தான் அவர் தனது அதி­ருப்­தி­களை வெளி­யிட்டு வரு­கிறார்.

பௌத்­தர்கள் ஏனைய மதங்­களை மதிக்­கின்­றனர். இதன் கார­ண­மா­கவே இந்த நாட்டில் பல ஆயி­ரக்­க­ணக்­கான கோயில்கள், தேவா­ல­யங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

வெசாக் போயா தினத்தை அனைத்துலக விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜெனிவாவில் வைத்து லக் ஷ்மன் கதிர்காமர் பரிந்துரை செய்திருந்தார். இதுவே உண்மையான நல்லிணக்கமாகக் காணப்பட்டது. ஆனால் இன்று இந்த நல்லிணக்கத்தை விக்னேஸ்வரன் போன்றவர்கள் அழிக்க முயற்சிக்கிறார்கள்.

http://www.virakesari.lk/article/27818

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வெசாக் போயா தினத்தை அனைத்துலக விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜெனிவாவில் வைத்து லக் ஷ்மன் கதிர்காமர் பரிந்துரை செய்திருந்தார். இதுவே உண்மையான நல்லிணக்கமாகக் காணப்பட்டது. ஆனால் இன்று இந்த நல்லிணக்கத்தை விக்னேஸ்வரன் போன்றவர்கள் அழிக்க முயற்சிக்கிறார்கள்.

ஒரு தமிழர்  வரக்கூடாது என்பதற்காக கதிர்காமரை போட்டது சந்திரிக்கா என்பது தான் மிக சாத்தியமாக உள்ளது புலிகள் கதிர்காமரை போட்டது என்பற்கு   எதிராக.

Quote

முஸ்லிம் நாடொன்றில் வாழும் முல்­லாக்­களை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இவ்­வாறு துன்­பப்­ப­டுத்­தினால், அவ­ரது தலை துண்­டிக்­கப்­படும். ஆனால் இது சிங்­கள பௌத்த நாடு என்­பதை விக்­னேஸ்­வரன் அறிந்­துள்­ளதால் தான் அவர் தனது அதி­ருப்­தி­களை வெளி­யிட்டு வரு­கிறார்.

பர்மாவில் எப்படி சாத்தியமாயிற்று??

Quote

பௌத்­தர்கள் ஏனைய மதங்­களை மதிக்­கின்­றனர். இதன் கார­ண­மா­கவே இந்த நாட்டில் பல ஆயி­ரக்­க­ணக்­கான கோயில்கள், தேவா­ல­யங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

அப்படியா ?? நீங்கள் எப்போவாவது வடக்கு கிழக்கு மாகாண திசைப்பக்கம் தலை வைத்து படுத்ததுண்டா??

Quote

ஆகவே எமது நாடா­னது சிங்­கள பௌத்த நாடு என அழைக்­கப்­ப­டு­வதை எவரும் எதிர்க்க முடி­யாது. ஏனெனில் இந்த நாட்டில் 74 சத­வீ­த­மான சிங்­க­ள­வர்­களும் இவர்­களில் 85 சத­வீ­த­மா­ன­வர்கள் பௌத்­தர்­க­ளா­கவும் உள்­ளனர். இதுவே உண்­மை­யான நிலைப்­பா­டாகும்

50 வருடத்துக்கு முன்பு இப்படிஒரு இனப்பரம்பல் இருந்ததில்லையே?? அதெப்படி?? குறிப்பாக கிழக்கில்???

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கூறும் இந்தச் செய்திகளில் உண்மை இல்லை என்று கண்டு நாங்கள் சரித்திர வரலாறுகளைச் சாட்சியாகவும் அழைத்து, அமைதி கொள்கிறோம். ஆனால் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் சிங்களர், சரித்திரங்களை மாற்றி எழுதி, அதனைப் பாலர் வகுப்பிலிருந்தே பாடமாகப் போதிக்க முற்படுகின்றனர். இதனை நாங்கள் செய்தியாக அல்ல, நிதர்சனமாகப் பார்க்கின்றோம். இன்னமும் ஓரிரு தலைமுறையின் பின்பு இலங்கையில் இளைஞர்கள்.... இராவணன் சிங்களவன் என்றும், முருகன் சிங்களக் கடவுள் என்றும் சரித்திரச் சான்றுகளோடு ஆணித்தரமாக எடுத்துரைக்கப் போவதைக் காணலாம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.