Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் அழிக்க போகிறாயா இந்தியா ..........?

Featured Replies

  • தொடங்கியவர்

வானவில்,

இப்படியான பதிகளைத் தவிர்ப்போம்.

வேறு நாடுகளில் வழும் மக்களுக்கு மட்டுமல்ல, ஈழத்தமிழர் சிலருக்கே தெரியாத பல விடயங்கள் பல உண்டு. அவற்றை நாம் தெளிவுபடுத்தி எமது உண்மையான நிலையை உலகிற்கு அறிய வைப்பது, போராட்டத்தின் பங்களிப்புகளில் ஒன்றாகும்.

நீர் சொல்வதிலும் உண்மை இருக்கின்றது, களத்தில் யாரவது ஒருவர் போரியல் வரலாறை எழுதினால் நன்றாக இருக்கும்

இந்தியாவை அவன் கண்டுபிடித்தான், அமெரிக்காவை இவன் கண்டுபிடித்தான் என்று பரஸ்பரம் அறிந்து கொண்டதையே வரலாறாக படித்திருக்கும் நமக்கு நம்மர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவை விளக்கெண்ணைதனமான பஞ்ச் டயலாக்குகலாக தான் தெரியும். நம்ம வரலாறு என்பது நம்மவர்கள் எழுதிய பாட்டுக்களால் தான் அறிய முடியும் அந்த வகையில் இங்கு முடவனார்எழுதிய ஒரு பாடல்.

நீர்மிகின், சிறையும் இல்லை, தீமிகின்

மன்னுயிர் நிழற்றும் நிழழும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி

'தன் தமிழ் பொது' என பொறா அன் போர்எதிர்த்து

கொண்டி வேண்டுவன் ஆயின் 'கொள்க' எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே;

அளியரோ அளியர், அவன் அளி இழந்தோறே;

நுண்பல் சிதலை அரிது முயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல

ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே;

- முடவனார்

இன்னும் வரலாற்று விளக்கங்கள் வேண்டுமாயின் முயன்று தர முயற்ச்சிக்கிறோம். இப்பாடலுக்கும் விளக்கம் வேண்டும் எனில் யாழ் களத்திலும் பல புலவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அனுகவும்.

உங்கள் தமிழ் புலமை மிக உயர்வானது. விளக்கமும் அளித்தீர்களானால், இந்த பாமரனும் கொஞ்சம் கற்று கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் சிவராஜாவின் தமிழ் இலக்கியக் கருத்துக்கள் அருமை. தமிழிலக்கியங்களில் இது போன்று உள்ளத்தைக் கவரும் செய்திகள் பல உள்ளன. தனிப் பதிவில் அதை தந்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ அமரிக்காவோடு சேர்த்து இந்தியாவும் தமிழர்களை வஞ்சித்து இருக்கிறது

முன்பு ஒரு முறை நான், இந்தியா அமரிக்க அடிவருடி என்று எழுதிய போது இங்குள்ள தூயவன், நெடுக்காலபோவான் போன்ற இந்து, இந்திய அடிவருடிகள் என் போன்றவர்களை வாங்கு வாங்கென்று வாங்கினார்கள். அவர்களின் பைத்தியக் காரத்தனமான பற்றுக்கு இப்போது பலத்த அடி விழுந்திருக்கிறது.

தமிழ்த் தேசியப் போர் இன்னொரு தேசியத்திற்கு எதிரான போர் அல்ல. சிங்களப் பேரினவாதத்திற்கு எதரான போர் அது. அந்த சிங்களப் பேரினவாதத்துக்கு துணைபோகும் இந்தியா எவ்வளவு நயவஞ்சகம் பிடித்த அரசு. நான் இதை சொன்னால் இங்குள்ள இந்து இந்திய பக்திமான்களுக்கு கலை வந்து விடுகிறது. எகிறி எகிறி குதிக்கிறார்கள்.

எங்களோடு சிங்கங்களாய்ப் பிறந்து இன்று குரங்குகளாக கூனி நிற்கிறார்கள்.

Edited by இளங்கோ

இதோ அமரிக்காவோடு சேர்த்து இந்தியாவும் தமிழர்களை வஞ்சித்து இருக்கிறது

முன்பு ஒரு முறை நான், இந்தியா அமரிக்க அடிவருடி என்று எழுதிய போது இங்குள்ள தூயவன், நெடுக்காலபோவான் போன்ற இந்து, இந்திய அடிவருடிகள் என் போன்றவர்களை வாங்கு வாங்கென்று வாங்கினார்கள். அவர்களின் பைத்தியக் காரத்தனமான பற்றுக்கு இப்போது பலத்த அடி விழுந்திருக்கிறது.

தமிழ்த் தேசியப் போர் இன்னொரு தேசியத்திற்கு எதிரான போர் அல்ல. சிங்களப் பேரினவாதத்திற்கு எதரான போர் அது. அந்த சிங்களப் பேரினவாதத்துக்கு துணைபோகும் இந்தியா எவ்வளவு நயவஞ்சகம் பிடித்த அரசு. நான் இதை சொன்னால் இங்குள்ள இந்து இந்திய பக்திமான்களுக்கு கலை வந்து விடுகிறது. எகிறி எகிறி குதிக்கிறார்கள்.

எங்களோடு சிங்கங்களாய்ப்??! பிறந்து இன்று குரங்குகளாக கூனி நிற்கிறார்கள்.

ஒவ்வொரு நாடும் தங்கள் தேசிய நலன்களுக்கு தான் முன்னுரிமை தருவார்கள். எங்கள் அரசியல் அபிலாசைகள் இந்திய நலன்களுக்கு எதிரானது அல்ல என்று தெளிவாக்க வேண்டிய அரசியல், பூகோள காரணங்கள் உள்ளன.

கடந்த காலங்களில் இந்தியா ஈழப்பிரச்சினையை சரிவர கையாளாமல் செய்த குளறுபடிகளிலும்,

அதனால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார இழப்புகளிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனாலும் ஒரு பக்கம் இந்திய எதிர்ப்பு கருத்துக்களை வீசிக்கொண்டே, இந்தியா ஸ்ரீலங்கா அரசுக்கு உதவக்கூடாது என்று கோருவதில் என்ன இராஜதந்திரம் இருக்க முடியும்.

ஈழத்தமிழர்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பகைமை மேலும் மேலும் வளர்வது

சிங்கள அரசுக்கு இனிப்பான செய்தி தான். இதற்காகத் தானே எவ்வளவோ கஷ்டப்பட்டு, சிங்கள அரசு எத்தனையோ காய்களை பல பல வருடங்களாக நகர்த்தி கொண்டு இருக்கிறது. இதற்கு தான் சிலர் ஆத்திரத்தில் உளறுவதும் துணை போகிறது.

இந்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய விதத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய இடங்களில் சுட்டிக்காட்டி, அவர்களின் சிந்தனை போக்கை ஈழ மக்களுக்கு சார்பாக மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, அவசரப்பட்டு ஆத்திரத்தில் உணர்ச்சிகளை கொட்டி, திட்டி தீர்ப்பதால், கிடைக்கும் பலன் சிங்கள அரசின் வஞ்சக வலைவிரிப்புக்கு துணை போவது மட்டும் தான்.

நினைத்ததை எல்லாம் நினைத்த விதமாக கொட்டி தீர்த்து விட்டால் அரசியல் இராஜதந்திர சதுரங்கத்தில் வெற்றி பெற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதோ அமரிக்காவோடு சேர்த்து இந்தியாவும் தமிழர்களை வஞ்சித்து இருக்கிறது

முன்பு ஒரு முறை நான், இந்தியா அமரிக்க அடிவருடி என்று எழுதிய போது இங்குள்ள தூயவன், நெடுக்காலபோவான் போன்ற இந்து, இந்திய அடிவருடிகள் என் போன்றவர்களை வாங்கு வாங்கென்று வாங்கினார்கள். அவர்களின் பைத்தியக் காரத்தனமான பற்றுக்கு இப்போது பலத்த அடி விழுந்திருக்கிறது.

தமிழ்த் தேசியப் போர் இன்னொரு தேசியத்திற்கு எதிரான போர் அல்ல. சிங்களப் பேரினவாதத்திற்கு எதரான போர் அது. அந்த சிங்களப் பேரினவாதத்துக்கு துணைபோகும் இந்தியா எவ்வளவு நயவஞ்சகம் பிடித்த அரசு. நான் இதை சொன்னால் இங்குள்ள இந்து இந்திய பக்திமான்களுக்கு கலை வந்து விடுகிறது. எகிறி எகிறி குதிக்கிறார்கள்.

எங்களோடு சிங்கங்களாய்ப் பிறந்து இன்று குரங்குகளாக கூனி நிற்கிறார்கள்.

இளங்கோ!

உமக்கு என் மீது தனிப்பட்ட பகை, அல்லது உமது பகுத்தறிவுத் தலைவர் பற்றிச் சொன்னது குறித்து கோபம் இருந்தால் நேரடியாக மோதிப் பார்க்கலாம். உமது தேவைகளுக்காக இந்த போராட்டத்தைப் பயன்படுத்ததீர்.

எந்தவொரு நாடும், தன்னைப் பற்றிச் சிந்தித்து விட்டுத் தான், மற்றய லாபக்கணக்கைப் போடும். அதில் இந்தியா விதிவிலக்கல்ல. நாமும் அவ்வாறன லாபக்கணக்கைத் தான் போட வேண்டும் என்பதே என் அவா. இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தில் உள்ள மற்றய நாடுகளோடு பகையைத் தூண்டி விட்டு, எங்களால் நிச்சயம் தமிழீழம் பெற முடியாது. எம் மீது அவ்வாறன பகையைத் தூண்டத்தான் சிங்கள அரசு முயன்று கொண்டிருக்கின்றது.

இங்கே, இந்தியா கெட்டநாடு, அமெரிக்கா அடிவருடி என்று எல்லாம் போடும் கூச்சலால், ஒரு மயிர் கூட உம்மால் புடுங்கமுடியாது. அவர்கள் தமிழீழத்தை எதிர்த்தால், அதை அவர்களாகவே ஆதரிக்க வைக்கின்ற நிலையை உணருதலே இராஜதந்திரம். எமக்குத் தேவை தமிழீழமே, தவிர, மற்றவர்கள் மீது பகையல்ல.

இன்றைக்கு இந்தியா சிங்கள அரசுக்கு துணை போகின்றது என்று நீங்கள் கத்தும் கூச்சலால், உங்களால் என்ன செய்யமுடியும்? ஆனால், சிங்கள அரசுக்குத் துணை போகாத அளவிற்கு அழுத்ததைக் கொடுக்க வேண்டியதே பொறுப்புள்ள செயற்பாடு.

எம்மை அங்கிகரிக்க வேண்டிய தேவையை, யாரும் கொண்டிருக்கவில்லை என்பதைப் புரிந்த கொள்ளுங்கள். நாங்கள் தான் அதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்காக, அவர்களின் கீழ் பணிதல் என்ற செயற்பாடு அல்ல. அவர்களை எங்களின் வழிக்கு கொண்டுவரச் செய்தலே ஆகும்.

--------------------------------------------------------

இந்து மதம் மீதான உம் காழ்புணர்ச்சியை எல்லா இடங்களிலும் கொட்டுவது, சமணப்பெரியார் என்ற நிலையை நிச்சயம் கேவலப்படுத்தும்

Edited by தூயவன்

இந்தியா ஈழப்பிரச்சனைக்குள்ள மூக்க நுழைக்கிறதை நிப்பாட்டீட்டு முதல்லை தனக்கிருக்கிற காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கட்டும்.

அடுத்தவீட்டு அடுப்படீக்கஎட்டிப்பார்க்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்! நமது கருத்து மோதல்களை இங்கும் தொடரவேண்டாம். அதற்கென்று இருக்கும் பதிவில் தொடருவோம்.

இங்கு நடப்பது வெறும் கருத்துப் பரிமாற்றமே. நான் வெறும் சாதாரண ஈழத்தமிழன்தான். இந்தியா ஒரு வேளை தமிழீழத்தை ஆதரித்தால் (நான் அப்படி நினைக்க வில்லை) என் போன்றவர்களின் கருத்துக்களா மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன?

இந்தியா தமிழீழத்தை ஆதரித்தால் அது எங்களுக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம். உண்மையில் தமிழீழம்தான் இந்தியாவின் நேச நாடு. தந்தை செல்வா காலத்தில் இருந்து இந்தியா மேல் ஈழத்தமிழர்கள் காட்டி வரும் அன்பு அளப் பெரியது. ஆனால் சிங்களம் அப்படி அல்ல. அன்றிலிருந்து இன்று வரை அது காட்டி வருவது இந்திய விரோதப் போக்கையே!

ஆனால் இந்தியாவோ ஈழத்தமிழர்களின் நலனை புறக்கணித்து விட்டு சிங்களத்திற்கே துணைபோகிறது. இதில் என்ன இராஜதந்திரம் இருக்கிறது. இது முழுக்க முழுக்க ஓர வஞ்சனையே!

உம்மைப் போன்றவர்கள் சற்று யோசிக்கட்டும். இந்தியாவைக் காட்டிலும் நயவஞ்சகமான அரசு இருக்க முடியுமா? எவ்வளவு கயமைத்தனமான அரசு அது!!! தன்னாட்டு மீனவர்கள் கொல்லப் படுவதையே கண்டிக்காத அரசா எங்களுக்கு கருணை காட்டப் போகிறது. உலகில் இதை விடக் கேவலமான அரசு இருக்க முடியுமா?

இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கிற அப்துல் கலாம் என்பவருக்கு இவைகளைப் பற்றிப் கவலை இல்லை. அணு ஆயுதம் ஏவுகணை என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார். படித்த முட்டாள்கள் என்று பெரியார் குறிப்பிட்டது இவர்களைத்தானோ! ஏன் அவர் தமிழர்தானே தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கலாமே !

அடுத்து தேவையற்று என்னைச் சமணப் பெரியார் என்று கூறி உமது புத்தியைக் கட்டி நிற்கின்றீர்;

எனது ஒரே ஒரு அடையாளம் தமிழ்தான் . தமிழ் இலக்கியங்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்கியவர்கள் அவர்கள்தான். தமிழ் இலக்கியங்களைப் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். அதனால்தான் சமணத் துறவிகளிடம் எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. சமணம் மதமே அல்ல. மார்க்சிஸம் போன்று அதுவும் ஒரு தத்துவம் அவ்வளவுதான்

தயவு செய்து உமது இந்து வெறியை மதச்சார்பற்ற இந்த பகுத்தறிவுவாதியிடம் காட்டதேயும். இங்கு அது எடுபடாது. அத்துடன் இந்தப் பதிவையும் கெடுத்து வேறு பதைக்கு கொண்டு செல்ல வேண்டாம். பதிவுகள் தலைப்புக்கு ஏற்ற வகையில் அமையட்டும்

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்தியின் போக்கைத்தான் மாற்றும் தகுதியில் எமது செயற்பாடுகள் இல்லை.

தமிழ்மானிலத்தின் உறவிலாவது அதை அடைய முறற்சிக்கலாம் அல்லவா?

மத்தி உங்களைப் புறக்கணிக்கின்றது என்று புராணம் பாடுவதாலும், பிரிவினைவாதத்துக்கு நெய் விடுகின்ற கருத்துக்களாலுமா அந்தமக்களுக்கு எம்மேல் நல்லஅபிராயம் ஏற்படும்.

கடவுள் மறுப்பை ஈழத்தில் எத்தனை வீதத்தினர் பாராட்டுகிறார்கள், இதை தமிழ்நாட்டுக்கு வேறு எடுத்துச் சென்று விரோதத்தை சம்பாதிக்கவேண்டுமா?

அதுவும் இந்த நேரத்தில்.

இளங்கோ!

இந்து மதம் மீதான உம் காழ்புணர்ச்சியை எல்லா இடங்களிலும் கொட்டுவது, சமணப்பெரியார் என்ற நிலையை நிச்சயம் கேவலப்படுத்தும்

எனக்கும் அப்பவே சந்தேகம் இந்து மதத்தை குறி வைத்து தாக்கி பேசும்போதே இவர் ஏதோ தமிழ் ஈழ மக்களை மதமாற்றவதற்க்கு வந்து இருப்பவர் போல தோன்று கிறதே என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் அப்பவே சந்தேகம் இந்து மதத்தை குறி வைத்து தாக்கி பேசும்போதே இவர் ஏதோ தமிழ் ஈழ மக்களை மதமாற்றவதற்க்கு வந்து இருப்பவர் போல தோன்று கிறதே என்று.

யோவ் சச்சிதா!

நான் ஒரு மதசார்பற்ற பகுத்தறிவுவாதி!

ஈழத்தமிழர்களைப் பற்றி அந்த மண்ணின் மைந்தனான எனக்கு நன்கு தெரியும் உம்மைப் போன்ற இந்திய வெறியர்களுக்கு தூயவன் போன்றவர்கள் தூபம் போடுவதால் நீர் தப்புக் கணக்கு போடாதேயும்!

தலைப்பை மாற்றி வேறு பாதைக்கு கொண்டு செல்ல வேண்டாம் நீரோ அந்நியர் அழையா விருந்தாளி!

சொல்றேன்னு வருத்தப் படாதீங்க சம்பந்தம் இல்லாம ஏன் ஆளாளுக்கு சண்டை போடுறிங்க.

Mr. rmsachitha !!!!

இளங்கோ எங்கே மதம் பரப்பினார்? அபாண்டமா ஏன் பழி போடுறேள்!

இளங்கோ பெரியாரைப் பத்திதான் அதிகமாக பேசுறார். அவர் ஒரு செக்கியுலரிஸ்ட் .

சமணம் அது இதுன்னு ? எதுக்கு இதெல்லாம். அவர்தான் தான் ஒரு செக்கியூலரிஸ்ட்னு தெளிவா சொல்லிட்டாரே அப்புறம் ஏன் இதெல்லாம். இந்த மாதிரி சண்டை போட்டுகிட்டு இருந்தால் பர்க்கிற மத்த மனுஷாளுக்கு போர் அடிக்காதா?

Edited by ஜனனி

யுத்தம் புரிய நான் ரெடி நீர் டெடியா இளங்கோ என்ர பகுத்து அறியும் விலங்கினமே. எங்கே உமது வாள் மோதும் என்னுடன் என் சிந்தனைக்குறிய கருத்தரங்கில். நீர் உண்மையாக உமது கருத்தில் உறுதியியாக இருந்தால் சபேசனையும் கூட்டிக்கொண்டு சமராட வாரும். 3 டவுண்ட்லில் என்னை விழுத்தினால் நான் கானாமலே போய்விடுகிரேன்.

யோவ் சச்சிதா!

நான் ஒரு மதசார்பற்ற பகுத்தறிவுவாதி!

ஈழத்தமிழர்களைப் பற்றி அந்த மண்ணின் மைந்தனான எனக்கு நன்கு தெரியும் உம்மைப் போன்ற இந்திய வெறியர்களுக்கு தூயவன் போன்றவர்கள் தூபம் போடுவதால் நீர் தப்புக் கணக்கு போடாதேயும்!

தலைப்பை மாற்றி வேறு பாதைக்கு கொண்டு செல்ல வேண்டாம் நீரோ அந்நியர் அழையா விருந்தாளி!

நல்ல மரியாதை

நான் அழையா விருந்தாளிதான் உங்களை யாரு வெத்தலை பாக்கு வைத்து அழைத்தது எனக்கு தெரியவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் எம்னக்கு தெறியும் நீங்களும் என்னைபோன்றே அழையா விறுந்தாலி என்று.

தங்களை மதச்சாற்பற்றவன் என்று கூறிக்கொள்பவர்கள் இந்துக்களையும் இந்து மத சம்பிராதயங்களையும் கேவலத்தி பேசுபவர்கள் தங்களுக்கு தாங்களே ஏற்ப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு கேடயமே.

ஆஸ்த்திரேலிய பாதிரியார் படுகொளை செய்யப்பட்டதையும், கன்னியாஸ்த்திரிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதையும் எழுதும் நீர் ஏன் இந்துக்கள் மற்ற மதங்களால் இந்துக்கள் தாக்கபட்டதை பற்றி எதுவும் எழுதவில்லையே. மதத்தை பரப்புவதற்க்காக நீங்கள் யாழ் தளத்தை பயன்படுத்தாதீர்கள்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு திருவாளர் இளங்கோ அவர்களே

பிரச்சனை இல்லாத உலகம் எங்கு இருக்கிறது, துருதிஸ்டவசமான சம்பவங்கள் நடக்கத்தானே செய்யும், அதை ஊதி ஊதி பெரிது படுத்தி உலகத்தின் முன்னால் இந்துக்களை கேவலப்படுத்துவதுதான் இலங்கோ போன்றவர்களின் நோக்கமே தவிர பெரியாரின் கொள்கைகளை பற்றி இந்த விசமப்பிராசாரகர் பேசுவது சும்மா தற்க்காப்புக்கானது.

நன்றி ஜனனி

Edited by rmsachitha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்தது ஆயுதமும் கொடுக்கவில்லை, ஆனால் அதை யாழ் தள உருப்பினரும் நன்றி கூரவில்லை. ஓரவங்சனை செய்கிறார்கள் ஈழத்தவர்கள்.

யானை இரவு ராணுவ முகாம் தாக்கப்பட்டபோதும் இந்தியாவிடம் கென்சி கேட்டும் இலங்கைக்கு ராணுவ உதவி எதுவும் செய்யவில்லை, இதையும் எந்த உருப்பினரும் நினைத்து பார்பதில்லை, இந்தியர்களை திட்டுவதென்றால் அல்லவா சாப்பிடுவது போல இனிக்கிறது ஈழத்தவர்களுக்கு.

ஈழச்சகோதரர்கள் நம்மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்தது நாம் தான். காரணம் நம் பார்ப்பன மற்றும் தமிழ் விரோத ந்பர்கள் வெளியுறவு துறையில் ஆதிக்கம் செலுத்துவது தான்.இந்தியா மறைமுகமாக இலங்கை இனவாத அரசுக்கு உதவவே எண்ணுகிறது. நாம் ஈழ தமிழ் சகோதரகளுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை .அவர்களுக்கு உபத்திரவம் செய்ய வேண்டாம்.இந்திய அமைதிப்படை செய்த குற்றங்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம்.ஆனால் அதை எல்லாம் மறந்து அவர்கள் நம்மை தன் சொந்த உறவாக பாவிக்கிறார்கள் அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்.குறைந்த பட்சம் உணர்வுபூர்வமான ஆதரவையாவது தெரிவிப்பதை விட்டு அவர்களை தூற்ற வேண்வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.