Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தேர்தலில் போட்டியிட்டால், ரயர் போட்டு எரிப்பொம்” புளொட்டின் பெண் வேட்பாளரை மிரட்டிய சிவமோகனின் உதவியாளர் கைது..

Featured Replies

“தேர்தலில் போட்டியிட்டால், ரயர் போட்டு எரிப்பொம்” புளொட்டின் பெண் வேட்பாளரை மிரட்டிய சிவமோகனின் உதவியாளர் கைது..

alerts-layer.png?resize=668%2C338

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மிரட்டப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று (21.12.17) மிரட்டிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமது கட்சி சார்பில் மூன்று பிள்ளைகளின் தாயாராகிய பெண் வேட்பாளர் ஒருவரை, (ரெட்பான நிறுவனத்தில் இருந்து) கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற புளொட் அமைப்பு தெரிவு செய்திருந்தது.

இந்தப் பெண் வேட்புமனுவில் கையெழுத்திடுவதற்காக நேற்று (20.12.17) சிவமோகனின் புதுக்குடியிருப்பு அலுவலகத்திற்கு சென்றபோது அவரை வாசலில் வைத்து சிவமோகன் தரப்பினர் மிரட்டியதாக பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக “தேர்தலில் போட்டியிடக்கூடாது என்னும், மீறி போட்டியிட்டால் கொலை செய்து ரயர் போட்டு எரிக்கப்படுவாய்” அவர்கள் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளான மிரட்டப்பட்ட பெண், தேர்தலில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தலைமறைவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மிரட்டல் சம்பவம் நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சம்பவ இடத்தில் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உறுதிசெய்துள்ளனர்.  மிர்ட்டுதலுக்குள்ளான பெண் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து மிரட்டல்விடுத்த நபர் புதுக்குடியிருப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2017/56594/

  • தொடங்கியவர்

சிவமோகனின் செயற்பாட்டாளர் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டேன் ; வேட்பாளர் விசனம்!

 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுகின்ற பெண் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 சிவமோகனின்  செயற்பாட்டாளர் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டேன் ; வேட்பாளர் விசனம்!

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டில் தன்னை தடுத்து வைத்ததாக அச்சுறுத்தலுக்கு இலக்காகிய பெண் வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் புளட் அமைப்பின் சார்பாக இளங்கோபுரம் விசுவமடுவினை சேர்ந்த மஞ்சுளா என்பவர் போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கட்சி அலுவலகத்தில் நேற்று வேட்பாளர் கையெழுத்திட சென்றபோது தன்னை தடுத்து வைத்ததாக குறித்த பெண் வேட்பாளர் இன்று காலை புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ள அதேவேளை பெண் வேட்பாளரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவ அறிக்கையின் பின்னர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பெண் வேட்பாளரை தடுத்து வைத்திருந்தவர் மீது உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பின்மை தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/-The-activist-was-detained-at-home-civamokan

  • தொடங்கியவர்

பெண் வேட்பாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் த.தே.கூ விசனம்!

 

பெண் வேட்பாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் த.தே.கூ  விசனம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட இருந்த பெண் வேட்பாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட உறுப்பினர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பெண்ணை வட மாகாண சபை அமைச்சரான சிவநேசன், உறுப்பினரான துரைராசா ரவிகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக புளொட் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவாகி வேட்பு மனுவில் கையொப்பம் இடச்சென்ற குடும்ப பெண்ணான பா.மஞ்சுளா நேற்றுமுன்தினம் மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் அடியாட்களால் தாக்கப்பட்டு வீடு ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் அவரது அடியாட்களுமே மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தனது குடும்ப பாதுகாப்பிற்காக முறைப்பாடு செய்திருந்த நிலையில், தாக்குதல் நடத்திய அடியாள் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளனர்.

மூன்று பெண் பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண், தனது  வீட்டிற்கு சென்ற வேளை அவரது வீடு கட்சி ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. கைதுசெய்யப்பட்ட நபருக்கு ஆதரவு தெரிவித்த பலர் பெண்ணின் வீட்டுப்பகுதியினை சுற்றிவளைத்து முறைப்பாட்டை மீளப் பெறுமாறு நிர்ப்பந்தித்திருந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டை மீளப் பெறுவதற்காக முச்சக்கர வண்டியில் சென்ற வேளை மயக்கமடைந்த நிலையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணிடம் இன்று நண்பகல் பொலீஸாரால் தடுத்துவைக்கப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்தாமல் விடுவிடுவிப்பதற்காக கடிதம் ஒன்றில் கையொப்பம் ஒன்றை வாங்கி சென்றுள்ளனர்.

தனது மூன்று பிள்ளைகளுக்கும் தனக்கும் குறித்த நபரால் இனிவரும் காலங்களில் அச்சுறுத்தல் ஏதும் இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என பொலீஸாருக்கு தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

பெண் வேட்பாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் த.தே.கூ  விசனம்!

இந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணை வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சிவநேசன், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தமது கட்சியின் பெண் வேட்பாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

பெண் வேட்பாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் த.தே.கூ  விசனம்!

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனும் இன்று காலையில் மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்ட பெண்ணினை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,இந்த சம்பவம் குறித்து தலைமைக்கு தெரிவிப்போம் என குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தரசாவும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

பெண் வேட்பாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் த.தே.கூ  விசனம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-members-news-22

  • கருத்துக்கள உறவுகள்

"தலைமை"... என்ற சொல்லுக்குக்கே...  அர்த்தம் இல்லாமல், பண்ணி விட்டார்... வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்.
உங்களது தலைமை.... "கோமா"  நிலைக்கு போய், மரணப் படுக்கையில் உள்ளது.  
தலைமை.. என்ற சொல்லுக்கு, மேதகு பிரபாகாரன் தான்...  சிறந்த உதாரணம்.
இனத்தை.... விற்றவர்கள் எல்லாரையும், தலைமை என்று சொல்லி, எம் இனத்தை கொச்சைப்  படுத்த வேண்டாம்.

//  வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனும் இன்று காலையில் மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்ட பெண்ணினை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,இந்த சம்பவம் குறித்து  தலைமைக்கு  தெரிவிப்போம் என குறிப்பிட்டார்." //

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.