Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேயிலைக்கான தடையை நீங்கியது ரஷ்யா

Featured Replies

தேயிலைக்கான தடையை நீங்கியது ரஷ்யா

 

 

இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/28606

  • கருத்துக்கள உறவுகள்

இவை இப்படி சொல்லுனம் அவங்கடை தளம்களில் ஒன்றையும் காணவில்லையே ?

  • தொடங்கியவர்

சிறிலங்கா மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்படும் – ரஷ்யா

 

Russian-Flagசிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர உற்பத்திகளின் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்று ரஷ்யாவின், விவசாய மற்றும் விலக்குகள் கண்காணிப்பு அமைப்பான, Rosselkhoznadzor இன் தலைவர், சேர்ஜி டாங்க்வேர்ட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மீதான தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சிறிலங்காவில் இருந்து அனைத்து தாவர உற்பத்திகளையும் இறக்குமதி செய்வதற்கு கடந்த 18ஆம் நாளில் இருந்து Rosselkhoznadzor தடை விதித்திருந்தது.

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதியில், தானியங்கள் மற்றும் விதைகளுக்கு ஆபத்தான பூச்சியினமான கப்ரா என்ற வண்டு, கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்தப் பூச்சி ரஷ்யாவுக்குள் நுழைந்தால், டசின்கணக்கான மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சிறிலங்காவில் இருந்து எல்லா தாவர உற்பத்திகளையும் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை, எதிர்வரும் 30ஆம் நாளில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்.

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்லா தாவர உற்பத்திகளின் மீதான கண்காணிப்பும் அதிகரிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/12/26/news/28174

  • தொடங்கியவர்

தேயிலைக்கான தடை நீக்கம் : ரஷ்யா சென்ற இலங்கைக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம்

 

(ஆர்.யசி)

இலங்கை தேயிலையின் இறக்குமதிக்கு ரஷ்ய அரசாங்கம் விதித்திருந்த தடை  நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி யில் இருந்து மீண்டும் இலங்கையில் இருந்து  

ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வ தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்நுட்ப ஆய்வுக்குழு ரஷ்ய அதிகாரிகளுடன் முன்னெடுத்த பேச்சு  வார்த்தையின் அடிப்படையில் இந்த இணக் கப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அது குறித்து ரஷ்ய அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப் பினை விடுத்துள்ளது. 

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி தேயிலையில் ஒருவகை வண்டினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து இலங்கையின் தேயிலையினை இறக்குமதி செய்ய ரஷ்ய அரசாங்கம் இம்மாத 17 ஆம் திகதி தற்காலிக தடை விதித்திருந்தது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில் காணப்பட்டதாக கூறப்படும் வண்டு இனம் இலங்கையில் மிகவும் அரிய வகையில் காணப்படும் ஒன்றாகும் எனவும் வேறு வழியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்ததுடன் ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், சுசில் பிரேமஜெயந்த ஆகியோரை இந்த விவகாரத்தை கையாள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இவர்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இலங்கை தேயிலைசபைத் தலைவர் உட்பட பிரதிநிதிகளும், வெளியுறவுத்துறை அமைச்சின் பிரதிநிதிகளும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இலங்கையின் தொழிநுட்ப ஆய்வுக்குழுவு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்தது. ரஷ்யாவின் அரச உயர்மட்டக் குழுவும், விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்றுக் காலை மொஸ்கோவில் முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றதுடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே இம்மாதம் 30ஆம் திகதி முதல் ரஷ்யா விதித்த இலங்கை தேயிலைக்கான தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீண்டும் தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் 23 வீதத்தை ரஷ்யா அரசாங்கம் இறக்குமதி செய்கிறது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் கடந்த 10 மாத காலப்பகுதியில் இலங்கையிலிருந்து 41 ஆயிரத்து 300 லட்சம் தொன் தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலமாக இலங்கைக்கு 436 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தாக்கதாகும்.

இலங்கைத் தூதுவர் கருத்து

இது குறித்து ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவிக்கையில்

இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்ய அரசாங்கம் தற்காலிக தடையினை விதித்திருந்த நிலையில் நேற்று ரஷ்ய அரச உயரதிகாரிகளுக்கும் விவசாயத்துறை அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கையில் இருந்து விஜயம் செய்திருந்த உயர்மட்ட நிருவாகிகள் ஆகியோர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தேயிலை ஏற்றுமதியின் போது ஏற்பட்ட சில தவறுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இனிமேல் இவ்வாறான ஒரு தவறு ஏற்படாத வகையில் இலங்கை தரப்பினர் பார்த்துக்கொள்வதாக இலங்கையின் உயர்மட்ட நிருவாகிகள் குழுவினர் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

மேலும் கடந்த 17 ஆம் திகதி ரஷ்ய அரசாங்கம் இந்தத் தடையினை விதித்திருந்த நிலையில் 8 நாட்களுக்குள் குறித்த தடையினை நீக்கியுள்ளமை முக்கியமான ஒரு விடயமாகும். இதற்கு முன்னர் அவ்வாறு ஒரு நிகழ்வு இடம்பெற்றதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தயாரிக்கப்பட்ட கடிதத்தையும் குறித்த நிருவாகிகள் குழுவினர் ரஷ்ய உயரதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.