Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்­பு மீட்சி பெறுதல் மக்கள் கரங்களில்!!

Featured Replies

  • கூட்­ட­மைப்­பு மீட்சி பெறுதல் மக்கள் கரங்களில்!!
கூட்­ட­மைப்­பு மீட்சி பெறுதல் மக்கள் கரங்களில்!!
 
 

கூட்­ட­மைப்­பு மீட்சி பெறுதல் மக்கள் கரங்களில்!!

 
 

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­குப் பின்­னர் தற்­போது மத்­தி­யில் உள்ள கூட்­டாட்சி எவ்­வாறு மறைந்து போகக் கூடுமோ, அதைப் போன்­ற­தொரு நிலை­தான் கூட்­ட­மைப்­புக்­கும் ஏற்­ப­டு­மெ­னக் கருத முடி­கின்­றது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து மத்­தி­யில் கூட்­டாட்­சியை அமைத்­துச் செயற்­ப­டு­கின்­றன.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அரச தலை­வ­ராக்­கி­ய­தில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பங்கு மகத்­தா­னது. ஐ.தே.கட்­சி­யின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­ சிங்க வகுத்த அர­சி­யல் வியூ­கம் அரசியலில் அசைக்க முடி­யா­ த­வ­ரென வர்­ணிக்­கப்­பட்ட மகிந்­தவை அரச தலை­வர் தேர்­த­லில் அசைத்­துக் கீழே தள்­ளி­விட்­டது. மைத்­திரி எவ­ருமே எதிர்­பார்க்­காத வகை­யில் அரச தலை­வ­ரா­னார்.

கூட்­டாட்­சி­யின் ஆரம்­ப­கால நிலை­யில் இன்று தலை­கீழ் மாற்­றம்

இதன் பய­னாக ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தலைமை அமைச்­ச­ரா­னார். ஆரம்­பத்­தில் எல்­லாமே நன்­றா­கத்­தான் நடந்­தன. அரச தலை­வ­ரும் தலைமை அமைச் சரும் பிரிக்க முடி­யாத சக்­தி­க­ளாக வலம் வந்­த­னர். ஐக்­கிய தேசி­யக் கட்சி முழுக்க முழுக்க ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் கட்­டுப்­பாட்­டி­னுள் கொண்டு வரப்­பட்­டது. கட்­சிக்­குள் அவரை மீறி எவ­ரா­லும் எது­வுமே செய்ய முடி­ய­வில்லை. கட்­சிக்­குள் அவர் வைத்ததே சட்டம் எனக் கொள்­ளப்­பட்­டது.

ஆனால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­ட­வில்லை. அந்­தக் கட்சி இரண்­டா­கப் பிள­வ­டைந்து காணப்­ப­டு­கின்­றது. இதில் ஒரு பகு­தியை மகிந்த தனது கட்­டுப்­பாட்­டி­னுள் கொண்டு வந்­து­விட்­டார். மற்­றைய பிரி­வுக்கு மைத்­திரி தலை­ வ­ரா­க­வுள்­ளார்.

ஆனால் மகிந்த தலை­மை­யி­லான பிரி­வி­னர் வேறு கட்­சி­க­ளு­டன் இணைந்து கூட்டு எதி­ரணி என்ற பெய­ரில் அரசை எதிர்த்து வரு­கின்­ற­னர். இந்த இரண்டு அணி­க­ளை­யும் ஒன்று சேர்ப்­ப­தற்­கான முயற்­சி­கள் யாவும் தோல்­வி­யி­லேயே முடி­வ­ டைந்­துள்­ளன.

உள்­ளூ­ராட்சி தேர்­த­லின் போதா­வது மைத்­தி­ரி­யும் மகிந்­த­வும் இணைந்து கொள்­வார்­க­ளென்ற எதிர்­பார்ப்­புக் காணப்­பட்­டது.அதற்­கான முயற்­சி­க­ளும் முழு வீச்­சில் இடம் பெற்­றன. ஆனால் அது­வும்­கூட வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.இந்த நிலை­யில் அரச தலை­வ­ருக்­கும் தலைமை அமைச்­ச­ருக்­கு­மி­டையே கருத்து வேறு­பாடு தோன்­றி­யுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர் இது பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா சுதந்­தி­ ரக்­கட்சி ஒன்­று­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் அந்த வேளை­யில் ஏற்ப­டக் கூடு­மெ­னக் கருத வேண்­டி­யுள்­ளது.

ஐ.தே.கட்சி நலி­வு­ப­டு­மா­னால் அதன் ஆட்­சிக்­கும் ஆபத்து ஏற்­ப­ட­லாம்

அரச தலை­வர் தமது பத­விக்­கா­லம் முடி­வ­டை­யும் வரை­யில் தமது பத­வி­யில் அமர்ந்­தி­ருக்க முடி­யும். ஆனால் தலைமை அமைச்­ச­ரின் நிலை அவ்­வா­றில்லை. அவர் தமது பத­வி­யில் நீடிக்க வேண்­டு­மா­னால், நாடா­ளு­மன்­றத்­தில் ஐ.தே.கட்­சிக்கு பெரும்­பான்­மைப் பலம் இருந்­தாக வேண்­டும். ஆனால், இன்­றைய நிலை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யால் தனித்து நின்று இதைச் சாதிக்க முடி­யாது.

வேறு கட்­சி­க­ளின் உத­வி­யு­ட­னேயே ஐ.தே.கட்­சி­யில் இதைச் சாதிக்க முடி­யும். இதற்குக் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு கோரப்­ப­டு­மெ­னத் தெரி­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்பு அதற்கு உடன் படுமா? என்ற சந்­தே­கம் தற்­போது தோன்­றி­யுள்­ளது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் களம் கூட்­ட­மைப்­பின் அடித்­த­ளத்­தையே ஆட்­டிப் பார்த்­து­விட்­டது. ஆச­னப்பங்­கீடு விடயம் பங்­கா­ளிக் கட்­சி­க­ளி­டையே பெரும் விரி ­சலை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. ஏற்­க­னவே ஒரு கட்சி வில­கிய நிலை­யில் எஞ்­சி­யுள்ள மூன்று கட்­சி­க­ளா­வது நிலைத்து நிற்­குமா என்­ப­தில் பலத்த சந்­தே­கங்­கள் தோன்­றி­யுள்­ளன.

புலி­கள் இருக்­கும் வரை­யில் வாய்­மூடி மெள­னம் காத்­த­வர்­கள் தற்­போது சிறு விட­யத்துக்­குக் கூட வீறு­கொண்டு எழு­கின்­ற­னர். கூட்­ட­மைப்பை அசைத்­துப் பார்க்­கின்­ற­னர். மக்­கள் மாற்று வழி­யில்­லா­த­தால் கூட்­ட­மைப் பைத் தொடர்ந்து ஆத­ரித்து வரு­கின்­ற­னர். ஆனால் எதிர்­கா­லத்­தில் கூட்­ட­மைப்பு என்ற கட்­டுக்­கோப்பு நிலைத்து நிற்­குமா? என்ற சந்­தே­கம் தற்­போது எழுந்­துள்­ளது.

தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளது போக்­கில் பெரும் வேறு­பா­டு­கள்

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளின் கருத்தை அறிந்து செயற்­ப­டு­கின்ற தன்மை தற்­போது வெகு­வா­கக் குறைந்து விட்­டது. தமது கொள்கைகளை மக்­க­ளி­டம் திணிக்­கின்ற போக்­குத்­தான் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்றது.அவர்­கள் சலர தரப்பினரையும் மதித்து நடந்­தி­ருந்­தால், கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு­வ­தற்கு வழி யேற்பட்டிருக்கமாட்டாது. தமிழ் அர­சி­யல் வா­தி­க­ளின் சுய­ந­லத் தால் தமிழ் மக்­கள் குழம்­பிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­ற­னர்.

கூட்­ட­மைப்பு என்ற தோப்பு அழிந்து போக நேரு­மா­னால், அதன் பாதிப்பை எந்த வகை­யி­லும் ஈடு­செய்ய முடி­யாது. தமி­ழர்­க­ளின் குர­லாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற கூட்­ட­மைப்பு ஒரு தோப்­பாக இருந்த நிலை மாறி, தனி மரங்­கள் என்ற நிலை உரு­வா­கு­மே­யா­னால், அவற்றை ஒவ்­வொன்­றா­கத் தறித்து அழித்து விடு­வது பேரி­ன­வா­தத் தரப்­பு க­ளுக்கு இல­கு­வான காரி­ய­மா­கி­வி­டும்.

ஏற்­க­னவே தோற்­றுப்­போ­ன­வர்­கள் என்ற இழி­வான பெய­ரைத் தமி­ழர்­கள் தாங்கி நிற்­கின்­ற­னர். இதைப் போக்­கிக்கொள்ள வேண்­டு­ மா­னால், சில வெற்­றி­க­ளை­யா­வது அவர்­கள் ஈட்­டிக்­கொள்ள வேண்­டும். அர­சி­யல் ரீதி­யான வெற்­றி­க­ளைத் தனித்து நின்று தமி­ழர்­க­ளால் ஈட்­டிக்­கொள்ள முடி­யாது. கடந்த காலத் தில் ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வங்­கள் இதற்­குச் சாட்சி பகர்­கின் றன.

மக்­கள் தமது அமை­தி­யைக் கலைத்து கிளர்ந்து எழு­வார்­க­ளா­யின் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் பல­ரது தான்­தோன்­றித் தன­மான செயற்­பா­டு­கள் அவர்­க­ளுக்­குப் பெரும் பின்­ன­டை­வு­ க­ளையே ஏற்­ப­டுத்­தும். கூட்­ட­மைப்பு பலம் வாய்ந்த, ஒற்­று­மை­மிக்­க­தொரு அமைப்­பாகத் திகழ்ந்து தமிழ் மக்­க­ளுக்­கா­கக் குரல் கொடுக்க வைப்­பிக்க வேண்­டிய பொறுப்பு தமிழ் மக்­க­ளது கரங்­க­ளிலே தான் தங்­கி­யுள்­ளது

http://newuthayan.com/story/58100.html

8 hours ago, நவீனன் said:

கூட்­ட­மைப்­பு மீட்சி பெறுதல் மக்கள் கரங்களில்!!

தமிழரசுக் கட்சியையும், ஜனநாயகம் என்றால் கைக்கூலி அரசியல் செய்தல் என்று புரிந்துவைத்துள்ள சம்பந்தன்-சுமந்திரன்-மாவை அணியை முழுமையாக தோற்கடிப்பதன் மூலமே கூட்டமைப்பை மீட்டெடுக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.