Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து பேருக்குமேல் வீடுவீடாக சென்று வாக்குகேட்க முடி­யாது

Featured Replies

பத்து பேருக்குமேல் வீடுவீடாக சென்று வாக்குகேட்க முடி­யாது

 

 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல்­க­ளுக்­காக வீடு வீடாக சென்று பிர­சார பணி­களில் ஈடு­ப­டு­வ­தற்கு கடும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்ளன. மோதல்கள், வன்­மு­றைகள் இடம்பெ­று­வதை தவிர்க்கும் முக­மாக இந்த கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அதன்­படி 10 பேருக்கு மேல் குழு­வாக பிரசார நட­வ­டிக்­கை­களில் வீடு வீடாக செல்ல முடி­யாது என தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ruwan-gunasekara.jpg

அதன்­படி பிர­சார நட­வ­டிக்­கைகளில் 10  பேருக்கு மேல­தி­க­மானோர் பங்கேற்பின் அதனை சட்ட விரோத பேர­ணி­யாக கருதி கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர எச்­ச­ரித்தார்.

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வுக்கும் கட்­சி­களின் செய­லா­ளர்கள் மற்றும் பிரதி நிதி­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பின் போது பொலிஸ் தரப்பில் விஷேட குழு­வொன்று பங்­கேற்­ற­துடன் அக்­கு­ழுவின் பாது­காப்பு தொடர்­பி­லான உபா­யங்­களை மையப்­ப­டுத்­தியே இந்த கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் இடம்­பெற்ற இந்த கலந்­து­ரை­யா­டலின் போது, தேர்­தல்கள் மற்றும் பொலிஸ் நிர்­வா­கத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குண­வர்­தன, பொலிஸ் சட்டம் மற்றும் ஒழுக்­காற்று பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதி­பருன் தேர்­தல்கள் விவ­காரம் தொடர்­பி­லான ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி பீரிஸ் மற்றும் பொலிஸ் பேச்­சாளர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர ஆகியோர் இதில் பங்­கேற்­றனர்.

 இதன்­போது அமை­தி­யான தேர்­த­லினை நடத்­து­வ­தற்­காக பொலிஸ் தரப்பில் பல்­வேறு திட்­டங்கள் தேர்­தல்­கள்கள் ஆணைக் குழு முன்­னி­லையில் முன்­வைக்­கப்­பட்­டன. வீடு வீடாக செல்லும் பிரச்­சார நட­வ­டிக்­கையை கட்­டுப்­ப­டுத்தல், போஸ்டர், கட்­டவுட் விவ­கா­ரங்கள், ஒலி பெருக்கி விவ­காரம் போன்­ற­வற்றில் கடும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் கட்­டளைச் சட்­டத்­தினை மையப்­ப­டுத்தி இதன் போது பொலிஸ் தரப்பில் முன் மொழி­வுகள் முன்­வைக்­கப்­பட்­டன. இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டியே கடும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தேர்­தல்கள் ஆணைக் குழு பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டலின் பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­செ­கர தெரி­வித்­த­தா­வது,

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் கட்­டளைச் சட்­டத்தின் 81 ஆ அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக போஸ்­டர்கள் ஒட்­டு­வதோ, கட்­டவுட் வைப்­பதோ சட்ட விரோ­த­மாகும். வேட்பு மனு தககல் தினம் முதல் இது அமு­லுக்கு வந்­துள்­ளது. பிரச்­சார கூட்டம்  இடம்­பெறும் இடத்­துக்கு உள்ளும் அபேட்­ச­கரின் வாக­னத்­திலும் மட்டும் போஸ்­டர்கள் கட்­ட­வுட்­களை ஒட்­டிக்­கொள்­ளலாம். இதனை தவிர ஏனைய நிலை­மை­களின் போது பொலிஸார் போஸ்டர் கட்­டவுட் தொடர்பில் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்ப்ட்­டுள்­ளது. சட்ட விரோ­த­மாக போஸ்­டர்கள் கட்­ட­வுட்­களை வைப்­போரும், அவற்றை உடன் வைத்­தி­ருப்­போரும் தகுதி தரா­தரம் பார்க்­காது கைது செய்­யப்­ப­டுவர். அத்­துடன் ஏற்­க­னவே ஓட்­டப்­பட்­டுள்ள போஸ்­டர்­களை அகற்­று­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

 தற்­போதும் ஒட்­டப்­பட்­டுள்ள போஸ்­டர்­களை அகற்ற தலை­மை­யக பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு 3 தொழி­லா­ளர்கள் வீதமும் ஏனைய பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு 2 தொழி­லா­ளர்கள் வீதமும்  இணைத்­துக்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி நாட­ளா­விய ரீதியில் 1041 தொழி­லா­ளர்கள் போஸ்­டர்­களை அகற்றும் பணி­க­ளுக்­காக சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். அவ­சியம் ஏற்­படின் மேலும் தொழி­லா­ளர்­களை இணைத்­துக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவ்­வாறு இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட தொழி­லாளர் ஒரு­வ­ருக்கு நாளொன்­றுக்கு 1068 ரூபா சம்­ப­ள­மாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

பதிவு செய்­யப்­ப­டாத வாகன பயன்­பாடு:

அதே நேரம் தேர்தல் காலத்தில் அபேட்­ச­கர்கள், ஆத­ர­வா­ளர்கள் பதிவு செய்­யப்­ப­டாத வாக­னங்கள் அல்­லது கராஜ் இலக்­கத்­த­கட்­டுடன் கூடிய வாக­னங்­களை பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வ­தாக தகவல் கிடைத்­துள்­ளது. இது மோட்டார் வாகன கட்­டளைச் சட்­டத்தின் 2 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக முற்­றிலும் சட்ட விரோ­த­மாகும். இவ்­வாறு கராஜ் இலக்­கத்தில் வாகனம் செலுத்த அச்­சட்­டத்தின் 43,44 ஆவது அத்­தி­யா­யங்­களில் சில ஏற்­பா­டுகள் உள்­ளன. எனினும் 1991 ஆகஸ்ட் மாத சுற்று நிருபம் ஒன்றின் பிர­காரம்,  தேர்­தல்கள் காலப்­ப­கு­தி­யான இக்­கா­லப்­ப­கு­தியில் பதி­வி­லக்கம் இல்­லாத வாகங்­களை செலுத்­து­வது, பயன்­ப­டுத்­து­வது தண்­டனைக் குரிய குற்­ற­மாகும். இது தொடர்பில் பிடி­யாணை இன்றி அவர்­களைக் கைது செய்ய முடியும். அது தொடர்பில் நாம் உன்­னிப்­பாக அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம்.

இன மத பேதங்­களை உரு­வாக்­கினால் சட்டம் பாயும்

இதே­வேளை, இனம், மதம் மற்றும் பிரி­வினை வாத கருத்­துக்­களை தேர்தல் பிர­சா­ரங்­களில் பயன்­ப­டுத்த வேண்டாம் எனவும் அவ்­வாறு இன­வாத மத­வா­தத்தை தூன்டும் கருத்­துக்­களை பரப்­பு­வோ­ருக்கு எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­ப­தையும் அறி­யத்­த­ரு­கின்றோம். குறிப்­பாக உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் கட்­டளைச் சட்­டத்தின் கீழும்  தண்­டனை சட்­டத்தின் கீழும் இதற்­கான ஏற்­பா­டுகள் உள்ள நிலையில் அனைத்து பொலிஸ் நிலை­யங்­களும் இது தொடர்பில் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக தண்­டனை சட்டக் கோவையின் 120, 291 அ, ஆ அத்­தி­யா­யங்­களின் பிர­கா­ரமும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் கட்­டளைச் சட்­டத்தின் 82 எ (1) இன் பிர­கா­ரமும் இவ்வ்­வாறு பேதங்­களை ஏற்­ப­டுத்­து­வோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். வெறுப்­பு­ணர்வை தூன்­டுவோர் கைது செய்­ய­பப்­டுவர்.

பிர­சா­ரத்­துக்கு 10 பேருக்கு மட்டும்

  தேர்தல்  காலப்­ப­கு­தியில் வன்­முறை அல்­லது மோதல் நிகழும் மற்­றொரு சந்­தர்ப்­ப­மாக நாம் வீடு வீடாக சென்று வாக்குக் கேட்கும்  பிரச்­சார பணி அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் தேர்தல் சட்­டத்தில் நேரடி கட்­டுப்­பாடு இல்­லாத நிலையில் இன்று நாம் தேர்­தல்கள் ஆணை குழு தலைவர் உள்­ளிட்­டோ­ருக்கு விட­யத்தை தெளி­வு­ப­டுத்­தினோம். இந் நிலையில் கட்சி செய­லா­ளர்கள் உள்­ளிட்டோர் முன்­னி­லையில் கென்­வஷிங் செல்ல முடி­யு­மான ஆகக் கூடிய உறுப்­பி­னர்கள் எண்­ணிக்கை 10 ஆக மட்­டுப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ளது. 10 இர்கு மேர்­பட்ட நபர்­களை உள்­ள­டக்கி கெவஷிங் சென்ரால் சட்ட விரோத பேர­ணி­யாக அது கரு­தப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். 

  கட்­டுப்­பாடு:

 போஸ்­டர்கள் ஒட்­டு­வோ­ருக்கும் அதனை வைத்­தி­ருப்­போ­ருக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். எவ­ரிடம் இருந்­தா­வது போஸ்­டர்கள் கைப்­பற்­றப்­ப­டு­மாயின் அந்த போஸ்டருக்கு உரிய வேட்பாளரிடமும் நாம் விசாரணை செய்வோம். அது தொடர்பில் விசாரணை  அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும். அதில் அந்த வேட்பாளருக்கு எதிராக வழக்கு தாககல்  செய்ய அல்லது நடவடிக்கை எடுக்க ஆலோசனை கிடைக்குமாயின் அதனையும் முன்னெடுப்போம்.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் பல உறுப்பினர்கள், குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் என கூறப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கே செயற்படும் அதிகாரம் உள்ளது. யாரேனும் அபேட்சகர் ஒருவர் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழு எம்மிடம் அறிக்கை கோருமாயின், அவரது முன் செய்த்ய குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் திரட்டி சமர்ப்பிக்க நாம் தயாராக உள்ளோம். என்றார்.

http://www.virakesari.lk/article/28683

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிடுவோர் வீடு வீடாக போய் பிரச்சாரம்பண்ணி வாக்குப் பிச்சை கேட்பதை ஒழிக்கணும் அதைவிட்டிட்டு 10 பேர் கட்டுப்பாடு அது இது எல்லாம் வேர்க் அவுட் ஆகாது. வாக்காளர்களின் வீடுகளுக்கு போவது பிரச்சாரம் செய்வதற்கல்ல வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்குத்தான். இந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.