Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே நல்லிணக்கம்?

Featured Replies

எங்கே நல்லிணக்கம்?

 

முன்­னைய ஆட்­சி­யிலும் பார்க்க நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதில் அக்­கறை மிகுந்த செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வதை அடி­யோடு மறுப்­ப­தற்­கில்லை. முன்­னைய ஆட்­சி­யிலும் பார்க்க இந்த ஆட்­சியில் இது முன்­னே­றி­யுள்­ளது என்­ப­திலும் சந்­தே­க­மில்லை. ஆயினும், சாண் ஏற முழம் சறுக்­கு­வது போன்று அல்­லது தொட்­டி­லையும் ஆட்டி, குழந்­தையைக் கிள்­ளி­ வி­டு­வது போன்ற செயற்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நல்­லி­ணக்­கத்­திற்­கான இந்த வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

யாழ்பாணத்தில் நல்­லி­ணக்கம் இருக்­கின்­றதா, எங்கே நல்­லி­ணக்கம் என்று பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். பொது­ப­ல­சேன அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இந்தக் கேள்­வியை கேட்­டி­ருக்­கின்றார். 

இது பல்­வேறு அர்த்­தங்கள் நிறைந்த, மிகவும் முக்­கி­ய­மான கேள்­வி­யாகும். சமூகம், இன, மதம், அர­சியல், ஜன­நா­யகம், மக்கள் உரிமை என்ற பல்­வேறு பரி­மா­ணங்­களில் இந்த கேள்வி சிந்­த­னையை கிளப்­பி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் இத்­த­கைய பரி­மா­ணங்­களில் இன்று நாட்டில் நடை­பெற்­று ­கொண்­டி­ருக்­கின்ற சம்­ப­வங்­களின் உண்­மை­யான முகத்தை, அதன் பின்­பு­லத்தில் உள்ள மறை­மு­க­மான திட்­ட­மிட்ட நிகழ்ச்சி நிரலைத் தோலு­ரித்துக் காட்­டி­யி­ருக்­கின்­றது.  அல்­லது அதற்கு வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது.

நாட்டில் இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதற்­காகப் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்கின்றன. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தலை­மையில் நல்­லி­ணக்­கத்­திற்­கென விசேட அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய செய­லகம் ஒன்று அமைக்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­ போன்று அமைச்சர் மனோ கணே­சனின் தலை­மையில் இயங்கி வரு­கின்ற அமைச்சின் ஊடா­கவும் நல்­லி­ணக்­கத்­திற்­கென பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. 

இந்த நிலையில் யாழ்ப்­பா­ணத்தில் ஏன் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதே ஞான­சார தேரரின் ஆதங்கம். நல்­லி­ணக்­கத்தின் மீது அவர் கொண்­டுள்ள அக்­க­றையே இந்த வினாவின் ஊடாக வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. 

பௌத்த சிங்­கள இன­வாதம் தோய்ந்த தீவிர போக்­கு­டைய பௌத்த மத­வாத அமைப்­பாக பொது­ப­ல­சேனா அனை­வ­ராலும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. அதன் பொதுச்செய­லாளர் ஞான­சார தேரர் இனங்­க­ளுக்­கி­டையே பகைமை உணர்­வையும், மதங்­க­ளுக்­கி­டையே விசே­ட­மாக முஸ்லிம் மதத்­திற்கு எதி­ரான எதிர்ப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்தி இன, மத ஐக்­கி­யத்­திற்கு முர­ணான தீவி­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் வல்­ல­வ­ராகக் கரு­தப்­ப­டு­கின்றார். பௌத்த மதத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, அதன் ஊடாக சமூ­கங்­க­ளி­டையே அமை­தி­யின்­மையை ஏற்­ப­டு­த்­து­வதே அவ­ரு­டைய முக்­கிய இலக்கு. இது­கால வரை­யிலும் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்ற செயற்­பா­டு­களின் ஊடாக அதனை அவர் உறு­தி­யாக நிலை நிறுத்­தி­யி­ருக்­கின்றார். 

மொத்­தத்தில் நல்­லி­ணக்­கத்­திற்கு நேர்­மா­றான கோட்­பா­டு­களை கொள்­கை­யாக கொண்­டுள்ள ஞான­சார தேரரின் இந்தக் கேள்வி கருத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­யதா, கருத்திற் கொள்­ளப்­ப­டத்தான் வேண்­டுமா என்ற கேள்வி பல­ரிடம் இருக்­கத்தான் செய்­கின்­றது. அதனை மறுக்க முடி­யாது.

ஆயினும், வட­மா­காண சங்க நாயக்­கரும், யாழ்ப்­பாணம் நாக­வி­ஹா­ரையின் பிர­தான விகா­ரா­தி­ப­தி­யு­மா­கிய மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்­ன தேர­ரு­டைய இறு­திக்­ கி­ரி­யை­களை யாழ்ப்­பா­ணத்தில் நடத்­து­வ­தற்கு இட­ம­ளிக்க மறுத்து, நீதி­மன்றம் வரை இந்தப் பிரச்­சினை கொண்டு செல்­லப்­பட்­டதை சுட்­டிக்­காட்டி, ஞான­சார தேரர் இன­ நல்­லி­ணக்­கத்­தின் பால் தனக்­குள்ள கரி­ச­னையை வெளிப்­ப­டுத்தும் வகையில் யாழ்ப்­பா­ணத்தில் நல்­லி­ணக்கம் இருக்­கின்­றதா என்ற வினாவை வின­வி­யி­ருக்­கின்றார். 

நாக­வி­ஹாரை விகா­ரா­தி­ப­தியின் இறு­திக்­கி­ரி­யைகள் கடந்த சனிக்­கி­ழமை யாழ் முற்­ற­வெ­ளியில் முனி­யப்பர் ஆலய சூழலில், 1974 ஆம் ஆண்டு உலகத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்டின் மீது பொலிஸார் அடா­வ­டி­யாக மேற்­கொண்ட தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட 9 தமி­ழர்­களின் நினைவுச் சின்னம் அமைந்­துள்ள இடத்­துக்­க­ருகில் நடத்­தப்­பட்­டன. பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில், முழுக்க முழுக்க இரா­ணு­வ­ம­ய­மான ஒரு சூழலில் நடை­பெற்ற அந்த இறு­திக்­ கி­ரி­யை­களில் பல முக்­கி­யஸ்­தர்­களில் ஒரு­வ­ராக ஞான­சார தேரரும் கலந்து கொண்­டி­ருந்தார். இன, மத, பிரி­வி­னை­வாதம் இல்­லாத நல்­லி­ணக்­கத்தை யாழ்ப்­பா­ணத்தில் இருந்து நாங்கள் ஆரம்­பிக்க வேண்டும் என்று, சாத்தான் வேதம் ஓதி­யதைப் போன்று அங்கு இரங்­க­லு­ரை­யாற்­றிய அவர் கூறி­யி­ருந்தார். 

இந்த நிகழ்வு யாழ்ப்­பாணம் உட்­பட, வடக்கில் தமிழ் மக்­களின் மனங்­களை கீறி, குழப்­ப­க­ர­மான ஓர் உணர்வு நிலையை ஏற்­ப­டுத்தி மௌன­மாக வருந்தச் செய்­தி­ருந்­தது. அந்த இறு­திக்­ கி­ரி­யைகள் முடி­வ­டைந்த மூன்­றா­வது நாள், அந்த நிகழ்வை மையப்­ப­டுத்­தி­ய­தாக யாழ்ப்­பா­ணத்தின் நல்­லி­ணக்கம் பற்­றிய தனது ஐயப்­பாட்டை, தனது ஆதங்­கத்தை, அக்­க­றையை அவர் வெளி­யிட்­டி­ருக்­கின்றார். இ தன் கார­ண­மாக இந்த வினா முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. 

ஏன் நல்­லி­ணக்கம்?

அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் நெடுங்­கா­ல­மாக நீடித்து, பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காணப்­ப­டாத சூழலில் நிலை­மைகள் மோச­ம­டைந்­த­தை­ய­டுத்து, அர­சுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடையில் மட்­டு­மல்­லாமல், அர­சாங்­கங்­களின் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்ட இன­வாத அர­சியல் செல்­நெறி கார­ண­மாக சிங்­கள மக்­க­ளுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடையே இன ரீதி­யான மத ரீதி­யான கசப்­பு­ணர்வு மேலோங்­கி­யது. தனி மனித உற­வை ­க­டந்த, அர­சியல் ரீதி­யான கூட்டு அர­சியல் பகை­யு­ணர்­வுக்கு அர­சாங்­கங்­களின் ஆட்சிப் போக்கு நிரந்­த­ர­மான வழி சமைத்­தி­ருக்­கின்­றது. 

இத்­த­கை­யதோர் அர­சியல் சூழலில், அரசு – தமிழ் மக்கள், தமிழ் - சிங்­கள மக்கள் என்ற இரு தளங்­களில் பரஸ்­பரம் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய நல்­லி­ணக்க முயற்­சிகள் இன்­றி­ய­மை­யா­த­தாக மாறி­யி­ருக்­கின்­றன. ஆனால், அந்த முயற்­சிகள் அரச தரப்­பி­னரால் உண்­மை­யான நலன்­களைக் கருத்திற் கொண்ட, இத­ய­ சுத்தி நிறைந்­த­வை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 

இருப்­பினும், முன்­னைய ஆட்­சி­யிலும் பார்க்க நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதில் அக்­கறை மிகுந்த செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வதை அடி­யோடு மறுப்­ப­தற்­கில்லை. முன்­னைய ஆட்­சி­யிலும் பார்க்க இந்த ஆட்­சியில் இது முன்­னே­றி­யுள்­ளது என்­ப­திலும் சந்­தே­க­மில்லை. ஆயினும், சாண் ஏற முழம் சறுக்­கு­வது போன்று அல்­லது தொட்­டி­லையும் ஆட்டி, குழந்­தையைக் கிள்­ளி­ வி­டு­வது போன்ற செயற்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நல்­லி­ணக்­கத்­திற்­கான இந்த வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

நாட்டில் முரண்­பா­டான நிலையில், நிலை­மைகள் மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றன என்­ப­தையே நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள வேலைத்­திட்­டங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. அதுவும் மோச­மான நீண்­ட­தொரு யுத்தம் முடி­வ­டைந்து எட்டு ஆண்­டுகள் கடந்த பின்பும் இன்னும் இனங்­க­ளுக்­கி­டையில் பல்­வேறு விட­யங்­களில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­ப­தையும் நல்­லி­ணக்க முயற்­சிகள் நினை­வூட்­டு­கின்­றன. 

தமிழ் மக்கள் தமது அர­சியல் உரி­மைக்­காக சுமார் ஆறு தசாப்­தங்­க­ளாக பல்­வேறு வழி­களில் போராடி வந்­துள்­ளார்கள். அவர்­க­ளு­டைய போராட்­டங்கள் தொடர்ச்­சி­யாக அடக்­கி­யொ­டுக்­கப்­பட்­ட­னவே தவிர, அந்தப் போராட்­டங்­க­ளுக்கு அடிப்­ப­டை­யான பிரச்­சி­னைகள் மாறி மாறி ஆட்சி நடத்­திய அர­சாங்­கங்­க­ளினால் சரி­யான முறையில் கையா­ளப்­பட்டு அவற்­றுக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. ஒரு புறம், பொலி­ஸா­ரி­னதும், இரா­ணு­வத்­தி­ன­ரதும் உதவி கொண்டு அந்தப் போராட்­டங்கள் அடக்­கப்­பட்­டன. மறு­பு­றத்தில் தமிழ் மக்கள் மீதான அடக்­கு­மு­றையும் இன ஒடுக்கல் நட­வ­டிக்­கை­களும் பல்­வேறு வடி­வங்­களில் அர­சாங்­கங்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இதனால் படிப்­ப­டி­யாக நிலை­மைகள் மோச­ம­டைந்து, அர­சாங்­கங்­க­ளுடன் ஆயு­த­மேந்தி போராட வேண்­டிய நிலை­மைக்கு தமிழ் மக்கள் தள்­ளப்­பட்­டி­ருந்­தார்கள். இந்த ஆயுதப் போராட்டம் வெறும் ஆயுதப் போராட்­ட­மாக அல்­லாமல், ஒரு பெரிய யுத்­த­மா­கவே வெடித்து மூன்று தசாப்­தங்­க­ளுக்கு நீடித்­தி­ருந்­தது. ஆயினும், தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் மிக­ மோ­ச­மான பயங்­க­ர­வா­தச் ­செ­யற்­பா­டாக உரு­வ­கப்­ப­டுத்தி பல நாடு­களின் இரா­ணுவ உத­வி­க­ளுடன் இறு­தி­யாக 2009 ஆம் ஆண்டு தோற்­க­டிக்­கப்­பட்­டது. 

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த அர­சாங்கம் ஆயு­த­ மேந்தி போராட நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை மனதில் இருத்தி, அர­சியல் ரீதி­யாக அவற்றில் கவனம் செலுத்தி, தீர்வு காண்­ப­தற்கு முற்­ப­ட­வில்லை. அத்­த­கைய அர­சியல் ரீதி­யான மனி­தா­பி­மான செயற்­பாட்டின் மூலம் நீண்­ட­கால அர­சியல் உரிமை பிரச்­சி­னை­க­ளி­னாலும், யுத்த மோதல்­க­ளினால் ஏற்­பட்ட இழப்­பு­க­ளி­னாலும் பாதிக்­கப்­பட்டு, தோல்வி நிலையில் இருந்த பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. 

மனி­தா­பி­மான முலாம் பூசிய நட­வ­டிக்­கைகள் 

வென்­றவன் தோற்­றவன் என்ற மனப்­பாங்கில், பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை மேலும் மேலும் வருந்த செய்­வ­தற்­கான சூட்­சுமம் மிகுந்த அர­சியல் ரீதி­யான ஒடுக்­கு­ முறை நட­வ­டிக்­கை­க­ளி­லேயே யுத்­தத்தில் வெற்­றி­ பெற்ற அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. ஆயினும் மனித உரிமை விவ­கா­ரங்கள், போர்க்­ குற்றச் செயற்­பா­டுகள் தொடர்பில் ஐ.நா. உட்­பட சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள், சர்­வ­தேச நாடுகள் என்­ப­வற்றின் கண்­ணோட்­டத்தில் தன்னை ஒரு நியா­யா­திக்கம் மிகுந்த அர­சாங்­க­மாகக் காட்­டி ­கொள்­வ­தற்­கான தேவை அதற்கு ஏற்­பட்­டி­ருந்­தது. அதற்­காக மனி­தா­பி­மானம் மற்றும் நல்­லி­ணக்க முலாம் பூசிய, மீள் குடி­யேற்ற செயற்­பா­டுகள் உள்­ளிட்ட அமைதி ஐக்­கி­யத்­திற்­கான அர­சியல் ரீதி­யான செயற்­பா­டுகள் சார்ந்த அபி­வி­ருத்தி கட்­ட­மைப்பு வேலைத் திட்­டங்கள் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டன.  

இருப்­பினும் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த இரா­ணு­வத்­தி­னரை, யுத்தம் முடிந்த பின்னர் அங்­கி­ருந்து விலக்கிக் கொள்­ள­வில்லை. மாறாக தேசிய பாது­காப்பைக் காரணம் காட்டி, மக்கள் குடி­யி­ருப்­புகள், மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு அத்­தி­யா­வ­சி­ய­மான பிர­தே­சங்­களில் கேந்­திர முக்­கி­யத்­துவம் மிக்க இடங்­களில் அள­வுக்கு அதி­க­மான எண்ணிக்கையி­லான இரா­ணுவ முகாம்­களை அமைத்து அரசு முப்­ப­டை­க­ளையும் நிரந்­த­ர­மாக நிறுத்­தி­யி­ருக்­கின்­றது. 

இதனால் யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும், யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று மக்கள் மீள்­கு­டி­ய­மர்ந்­துள்ள போதிலும், இரா­ணுவ மய­மான ஒரு சூழலே நில­வி­யது. தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில் இரா­ணு­வத்­திற்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களின் ஊடாக மக்­க­ளு­டைய சிவில் வாழ்க்­கையில் அத்­து­மீறி மூக்கை நுழைத்து செயற்­பட்­ட­தனால், அங்கு நிழல் இரா­ணுவ ஆட்­சியே நடை­பெற்­றது. 

முன்­னைய ஆட்­சியில் நில­விய இந்த நிலை­மையில் முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்கள் இப்­போது காணப்­ப­டு­கின்­றன. இருப்­பினும், மக்­க­ளு­டைய இயல்பு வாழ்க்­கைக்கு போதிலும், மறை­மு­க­மான இரா­ணுவ கெடு­பி­டிகள் நிறைந்த போக்கில் பாதிக்­கப்­பட்ட இதனால், சிவில் வாழ்க்­கையில் இரா­ணு­வத்தின் தலை­யீடு அதி­க­ரித்­தி­ருந்­தது. சிங்­கள மக்­களை முதன்­மைப்­ப­டுத்­திய மனி­தா­பி­மான செயற்­பா­டுகள், பௌத்த மதத்தை பரப்­பு­கின்ற நோக்­கத்தில், பௌத்­தர்­களே இல்­லாத இடங்­களில் ஏனைய மதத்­தினர் நிறைந்த வாழ்ந்த பகு­தி­களில் புத்தர் சிலை­களை நிர்­மா­ணிப்­பது, பௌத்த விகா­ரை­களை அமைப்­பது போன்ற செயற்­பா­டு­க­ளுக்கு இரா­ணுவம் முழு­மை­யாகப் பின்­ன­ணியில் இருந்து பாது­காப்பு வழங்கி வரு­கின்­றது. நல்­லி­ணக்கம் மற்றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான மனி­தா­பி­மானச் செயற்­பா­டுகள் என்ற போர்­வையில் தமிழ் மக்­க­ளு­டைய சிவில் வாழ்க்­கை­யிலும், பொது வாழ்க்கை செயற்­பா­டு­க­ளிலும் இரா­ணுவம் தாரா­ள­மாக தலை­யீடு செய்து இயங்கி வரு­கின்­றது. இதன் அப்­பட்­ட­மான வெளிப்­பா­டா­கவே, கொழும்பில் இறந்த நாக­வி ஹ­ாரை விகா­ரா­தி­ப­தியின் பூதவு­டலை யாழ்ப்­பா­ணத்­திற்குக் கொண்டு வந்த இரா­ணுவம் அதனை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் பெரும் எடுப்­பி­லான ஒரு நிகழ்வில் தகனம் செய்­துள்­ளது.

இந்த செயற்­பாட்டின் மூலம் இரா­ணுவம் தான்­தோன்றித் தன­மாக செயற்­பட்­டி­ருக்­கின்­றது என்று ஈபி­ஆர்­எல்எவ் கட்­சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்ந்­திரன் சாடி­யி­ருக்­கின்றார். இது தமிழ் மக்­களை சீண்டிப் பார்க்­கின்ற ஒரு செய­லாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

நாக­வி­ஹாரை தேரரை தகனம் செய்த இடத்தில் நினைவுச்சின்னம் எழுப்ப முற்­பட்டால், அதனை எதிர்ப்போம் என்று வட­மா­கா­ண­ சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் கூறி­யி­ருக்­கின்றார். 

இரா­ணு­வத்­தி­னரின் பிரத்­தி­யேக செயற்­பா­டு­களின் மூலம் விகா­ரா­தி­ப­தியின் உடல் தக­னத்­திற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­ட­மை­யா­னது, தேவை­யற்ற இன முரண்­பாட்­டிற்கு வித்­திடும் அபா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று வட­மா­காண மகளிர் விவ­காரம் புனர்­வாழ்­வ­ளித்தல் செயற்­பா­டு­ளுக்­கான அமைச்சர் அனந்தி சசி­தரன் எச்­ச­ரிக்கை செய்­துள்ளார். 

என்ன நடந்­தது?

நாட்டின் தென்­கோ­டியில் அம்­பாந்­தோட்டை பகு­தியில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்­ன தேரர் 1968 ஆம் ஆண்டு பிறந்தார். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற பாரிய இடப்­பெ­யர்­வை­ய­டுத்து யாழ் நகரை இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றி­ய­தை­ய­டுத்து, யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்தார். தீவிர பௌத்­த­ வாத போக்­கு­டை­ய­வ­ராகக் கரு­தப்­பட்ட  மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்­தன தேரர், 1996 ஆம் ஆண்டு, யாழ்ப்­பா­ணத்தில் நிலை­கொண்­டி­ருந்த இரா­ணு­வத்தின் 51-2 ஆம் படைபி­ரிவின் தலை­மை­ய­கத்தில் நீண்ட கால­மாக தங்­கி­யி­ருந்து செயற்­பட்டு வந்தார். அக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்ற யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டமை மற்றும் தமிழ் இளை­ஞர்கள் மீதான மோச­மான சித்­தி­ர­வதைச்  செயற்­பா­டு­க­ளுக்கு இந்தத் தலை­மை­ய­கமே மத்­திய நிலை­ய­மாகச் செயற்­பட்­டி­ருந்­தது என்று பல­ராலும் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.

இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்ட யாழ் நக­ர ­ப­கு­தியில் மக்கள் குடி­யே­றி­யதைத் தொடர்ந்து யாழ் ஆரி­ய­குளம் சந்­தியில் இரா­ணு­வத்தின் பொறுப்பில் இருந்த நாக­வி­ஹா­ரையின் பிர­தம விகா­ரா­தி­பதி பொறுப்பை ஏற்றுச் செயற்­பட ஆரம்­பித்தார். மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்­ன தேரர் சுக­வீனம் கார­ண­மாக கொழும்பில் மர­ண­ம­டையும் வரையில் வட­மா­காண சங்­க­நா­யக்­க­ராகப் பதவி வகித்து வந்தார். வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலையில், டிசம்பர் 19 ஆம் திகதி அவர் கால­மானார். அவர் உயி­ரி­ழந்த உட­னேயே அவ­ரு­டைய இறு­திக்­கி­ரி­யை­களை யாழ்ப்­பா­ணத்தில் செய்­வது என்று முடி­வெ­டுத்­தி­ருந்த யாழ் மாவட்ட ஆயு­த ப­டை­களின் தலை­மை­யகம் வட­மா­காண ஆளு­நரின் ஒத்­து­ழைப்­புடன் உட­ன­டி­யா­கவே அதற்­கான ஏற்­பா­டு­களை செய்ய தொடங்­கி­யி­ருந்­தது. 

யாழ் மாவட்ட ஆயு­த ­ப­டை­களின் தலை­மை­யக இரா­ணுவ கட்­டளைத் தள­பதி மேஜர் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்­சியின் தலை­மை­யி­லான இரா­ணு­வத்­தினர் இறு­திக்­கி­ரி­யை­க­ளுக்­கான முழு ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர். மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்­ன தேரரின் உடல் கொழும்பில் இருந்து இரா­ணு­வத்­தி­னரால் யாழ்ப்­பா­ணத்­திற்கு வான் ­வ­ழி­யாக 20 ஆம் திகதி கொண்டு வரப்­பட்டு யாழ் நாக விகா­ரையில் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்டு 22 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் யாழ் முற்­ற­வெ­ளியில் தகனக் கிரி­யைகள் நடை­பெற்­றன. 

நாக விஹா­ரையில் வைக்­கப்­பட்­டி­ருந்த மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்­தன தேரரின் உடலை, யாழ் முற்­ற­வெளி முனி­யப்பர் ஆல­யத்­திற்கும், 1974 ஆம் ஆண்டு தமி­ழ­ராய்ச்சி மா நாட்­டின்­போது பொலி­சாரின் அத்­து­மீ­றிய துப்­பாக்­கி பி­ர­யோ­கத்­தின்­போது கொல்­லப்­பட்ட 9 தமி­ழர்­களின் நினைவுச் சின்னம் வைக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்கும் இடைப்­பட்ட பகு­தியில் தகனம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருப்­பதை அறிந்­ததும், வர­த­ராஜன் பார்த்­திபன், கம­லக்­கண்ணன் ஆகிய இருவர் சட்­டத்­த­ரணி மணி­வண்ணன் ஊடாக தக­னக் ­கி­ரி­யை­க­ளுக்குத் தடை­யுத்­த­ரவு  கோரி யாழ் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­தனர்.

இறு­திக்­கி­ரி­யைகள் நடை­பெற்ற தின­மா­கிய வெள்­ளி­யன்று காலை இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு, பிர­தி­வா­தி­க­ளாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த யாழ் பொலிஸ் தலை­மை­யக இன்ஸ்­பெக்டர் மற்றும் சம்­பந்­தப்­பட்ட பொலிஸார், யாழ் மாந­கர ஆணை­யாளர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் ஆகி­யோரை விசா­ர­ணைக்­காக நீதி­மன்றம் அழைத்­தி­ருந்­தது. பிற்­பகல் 1.30 – 2 மணி­ய­ளவில் நீதவான் நீதி­மன்ற அலு­வ­லக அறையில் நடை­பெற்ற இந்த விசா­ர­ணை­யின் ­போது ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாந்தா அபி­மன்­ன­சிங்கம் தலை­மையில் 12 சட்­டத்­த­ர­ணிகள் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­தனர். பொலிஸார் தரப்பில் யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தலை­மையில் பொலிஸார் தோன்­றி­யி­ருந்­தனர். 

முனி­யப்பர் ஆலயம் அமைந்­துள்ள புனித பிர­தே­சத்தில், தமி­ழ­ராய்ச்சி மா நாட்டில் உயி­ரி­ழந்­த­வர்­களின் நினைவுத் தூபி, துரை­யப்பா விளை­யாட்டு மைதானம், பொதுச் ­சந்தை உட்­பட பொது­மக்கள் கூடு­கின்ற ஓரி­டத்தில் மரண இறு­திக்­கி­ரி­யை­களை நடத்­து­வது பிர­தே­சத்தின் மர­பு­ரிமை, பாரம்­ப­ரிய கலா­சாரம் போன்­ற­வற்­றுக்கு நேர் முர­ணான, யாழ் நகர மக்­களின் மனங்­களை கலா­சார பண்­பாட்டு ரீதி­யாகப் பாதித்து புண்­படச் செய்­கின்ற ஒரு நட­வ­டிக்­கை­யாகும் என சட்­டத்­த­ரணி தனது வாதத்­தின் ­போது எடுத்­து­ரைத்து, தக­னக்­கி­ரி­யை­க­ளுக்கு யாழ் மாந­க­ர­ச­பையின் அனு­மதி பெற்­றி­ருக்க வேண்டும் என்ற சட்­ட­வி­திகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என குறிப்­பிட்டு, எனவே, அதனை தடுப்­ப­தற்கு தடை­யுத்­த­ரவு வழங்க வேண்டும் என நீத­வா­னிடம் கோரினார். 

ஆயினும் பொலிஸார் தரப்பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர், தொல்­பொ­ரு­ளியல் திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மான காணி­யி­லேயே தக­னக்­கி­ரி­யைகள் செய்­யப்­ப­ட­வுள்­ளது என்றும் அதற்­கு­ரிய அனு­மதி அந்தத் திணைக்­க­ளத்­திடம் இருந்து பெறப்­பட்­டுள்­ள­தா­கவும் எனவே இதில் சட்ட நடை­முறைப் பிரச்­சினை இல்லை என நீதி­வா­னிடம் எடுத்­து­ரைத்தார். அத்­துடன், இரா­ணு­வத்­தி­னரால் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள இந்த இறு­திக்­கி­ரி­யை­க­ளுக்­கான ஊர்­வலம் இரா­ணுவ பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள், பொது­மக்­க­ளுடன் ஆரி­ய­குளம் சந்­தியில் உள்ள நாக­வி­கா­ரையில் இருந்து புறப்­பட்டு, யாழ் முற்­ற­வெ­ளியை நோக்கி சென்று கொண்­டி­ருப்­ப­தா­கவும், இந்த வேளையில் தடை­யுத்­த­ரவு விதிக்­கப்­பட்டால், பொது அமை­திக்கு பங்கம் ஏற்­படும் என யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நீத­வானின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்தார். 

இரு­பக்க வாதங்­க­ளையும் செவி­ம­டுத்து, நிலை­மை­யையும் கவ­னத்திற் கொண்ட யாழ் நீதவான் தடை­யுத்­த­ர­வுக்­கான கோரிக்­கையை நிரா­க­ரித்து, இறு­திக்­ கி­ரி­யை­களைச் செய்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கினார். 

இத­னை­ய­டுத்து நாக­வி­ஹாரை விகா­ரா­தி­பதி மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்­ன தேரரின் இறு­திக்­கி­ரி­யைகள் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மி­டப்­பட்­ட­வாறு, யாழ் முற்­ற­வெ­ளியில் யாழ் ஆயு­தப் ­ப­டை­களின் இரா­ணுவத் தள­பதி மேஜர் ஜெனரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்­சியின் நேரடி மேற்­பார்­வையில் ஆயு­த­ மேந்­திய படை­யி­னரின் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில், பூத­வுடல் தகனம் செய்­யப்­பட்­டது. 

தக­னக்­கி­ரி­யை­களின் தாக்கம் 

யாழ் ஆரி­ய­குளம் நாக­வி­ஹா­ரையில் இருந்து புறப்­பட்ட விகா­ரா­தி­பதி மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்­ன தேரரின் இறுதி ஊர்­வ­லத்தில் இரா­ணுவத் தள­பதி லெப்­டினன் ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, யாழ் மாவட்ட ஆயு­த ­ப­டை­களின் தளபதி மேஜர் ஜெனரல் தர்­ஷன ஹெட்­டி­ய­ாராச்சி ஆகி­யோரின் முன்­னி­லையில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான சிவி­லி­யன்­களை போன்று வெண்­ணுடை தரித்த இரா­ணு­வத்­தி­னரும், பௌத்த மத குருக்கள், தென்­னி­லங்­கையில் இருந்து அழைத்து வரப்­பட்­டி­ருந்­த­வர்­களும், வட­மா­காண ஆளுநர் உள்­ளிட்ட முக்­கிய அதி­கா­ரி­களும், இந்து கிறிஸ்­தவ மத குருக்­களும் கலந்து கொண்­டனர். 

இறுதி ஊர்­வலம் சென்ற வழி­யிலும் முற்­ற­வெ­ளி­யிலும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான ஆயு­தந் ­தாங்­கிய இரா­ணு­வத்­தினர் பாது­காப்­புக்­காக குவிக்­கப்­பட்டு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். ஒரு பௌத்த மதத் தலை­வ­ருக்கு ஆன்­மீக ரீதி­யான சிவி­லியன் தன்­மை­ சார்ந்த இறுதி அஞ்­சலி என்­ப­திலும் பார்க்க, இரா­ணுவ மய­மா­னதோர் இறு­திக்­கி­ரி­யை­க­ளுடன் கூடிய இறுதி அஞ்­ச­லி­யா­கவே மீஹ­கா­ஜந்­துரே ஞான­ரத்ன தேரரின் இறு­திக்­கி­ரி­யைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. 

யாழ்ப்­பா­ணத்தில் உள்ள பௌத்த விஹா­ரை­யொன்றின் விகா­ரா­தி­ப­திக்கு யாழ்ப்­பா­ணத்தில் இத்­த­கைய இரா­ணுவ முனைப்­புடன் மேற்­கொண்ட இறுதி அஞ்­சலி ஊர்­வ­லமும், யாழ் மண்ணின் வர­லாற்­றுக்கும், பொது பண்­பாட்டு மர­புக்கும் முர­ணான வகையில் மேலோங்­கி­யதோர் அதி­கார தோர­ணையில் முற்­ற­வெ­ளியில் நடத்­தப்­பட்ட தக­னக்­கி­ரி­யைகள் யாழ் நகர மக்­களை பெரிதும் உள­வியல் ரீதி­யாகப் பாதித்­திருந்;தது. 

இரா­ணுவ மய­மான ஒரு சூழலில் நடத்­தப்­பட்ட இந்த இறு­திக்­கி­ரி­யை­களின் மூலம் யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவம் தனது இருப்பின் அதி­கார வலி­மையை பலவந்­த­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கவே மக்கள் உணர்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன வழிகளில் இராணுவம் தனது தன்னிச்சையான ஆக்கிரமிப்பு ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க போகின்றதோ என்ற அச்ச உணர்வையும் இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. 

அதற்கும் அப்பால், யாழ் மண்ணின் கலாசார, பண்பாட்டு, மரபுரிமை பண்புகளின் அந்தரங்கத்திற்குள் சிவிலியன் தொடர்பிலான ஒரு நிகழ்வின் ஊடாக இந்த நிகழ்வு அத்துமீறிப் பிரவேசித்து அவர்களை அச்சப்படுத்தியிருக்கின்றது. 

தொல்பொருளியல் திணைக்களம் யாழ் நகரின் மையப் பகுதியில் உள்ளதொரு பொது இடத்தில் அந்தப் பிரதேசத்தின் கலை, கலாசாரப் பண்புகளை தகர்த்தெறியும் வகையில் அத்துமீறி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த இறுதிக்கிரியைகளை அரங்கேற்றியிருப்பதாக அரச திணைக்கள வட்டாரங்களில் உணரப்படுகின்றது. 

மரணங்களின் பின்னர் இடம்பெறுகின்ற இறுதிக்கிரியைகள், தகனக் கிரியைகளுக்கான இடங்களை ஒதுக்கி அவற்றுக்கான அனுமதியை வழங்குகின்ற, அரசியலமைப்பில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கே உரித்தான சட்ட அதிகார வலுவைப் பலாத்காரமாக மத்திய அரசாங்கம் தொல்பொருளியல் திணைக்களத்தின் ஊடாக மீறியிருப்பதாகவே கருதப்படுகின்றது. 

இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட செயற்பாடுகளில் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய நேரத்தில் இனவாத ஒடுக்குமுறை நோக்கில் தலையிட்டு செயற்படுவதற்கு அரசாங்கம் தயங்கப் போவதில்லை என்பது இந்த நிகழ்வின் மூலம் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது. 

அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு ஆட்சி உரிமை கொண்டுள்ள உள்ளுராட்சி சபையொன்றின் சட்ட ரீதியான அதிகார எல்லைக்குள் தொல்பொருளியல் திணைக்களம் அத்துமீறித் தலையிட்டு, மரண இறுதிக்கிரியை ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளதன் மூலம் ஜனநாயக வரைமுறைகள் முறிக்கப்பட்டிருக்கின்றன. 

யாழ் மண்ணுக்கே உரிய கலாசார, மரபுரிமை பண்பாட்டைப் புறந்தள்ளிய வகையில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த இறுதிக்கிரியைகள் நிகழ்வானது, அடிப்படை கலை கலாசாரப் பண்பாட்டு உரிமை மீறலாகவும், அதனோடு இணைந்த அடிப்படை மனித உரிமை மீறலாகவும் தோற்றம் காட்டியிருக்கின்றது. 

யுத்தத்திற்குப் பின்னரான நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான இனங்கள், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் உதவப் போவதில்லை. அத்துடன் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கும், இனங்களுக்கிடையிலான ஐக்கியம் சமாதானத்திற்கும் இது போன்ற செயற்பாடுகளும் அணுகு முறைகளும் நேர் முரணான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை.  

 

பி.மாணிக்கவாசகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.