Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த அரசியல் நெருக்கடி ஏன்?

Featured Replies

இந்த அரசியல் நெருக்கடி ஏன்?

 

மக்­க­ளாட்­சிக்­கு­ரிய முறைப்­படி மக்கள் பிர­தி­நி­தி­களின் கைக­ளி­லேயே குடி­ய­ரசு எனும் ரீதியில் இலங்­கையின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் வழங்க வேண்டும். அதற்குத் துணை­யா­கவே ஜனா­தி­ப­தியும் உயர் நீதி­ய­ர­சரும் இருக்க வேண்டும்.

மன்­ன­ருக்­காக மன்­னரால் மக்­களை ஆளு­வதே மன்­ன­ராட்­சி­யாகும். மக்­களால் மக்­களை மக்­களே ஆளு­வது மக்­க­ளாட்­சி­யாகும். மன்­ன­ராட்­சியை முடி­ய­ரசு என்றும் மக்­க­ளாட்­சியை குடி­ய­ரசு என்றும் கூறு­வார்கள். நாட்­டி­லுள்ள எல்லா மக்­களும் எப்­படி ஆளு­வது என நீங்கள் வின­வலாம். அத­னால்தான் மக்கள் வாக்­க­ளித்துத் தமது பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்­கி­றார்கள்.

நவீன அறி­வு­லகம் மன்­ன­ராட்­சி­யி­லி­ருந்து மக்­க­ளாட்­சிக்கு மாறிய காரணம் பல மன்­னர்­களின் சர்­வா­தி­கா­ரமும் கொடூ­ர­மு­மே­யாகும். எனினும் மக்­க­ளாட்­சி­யிலும் கூட அந்த விளை­வுகள் நிக­ழவே செய்­கின்­றன என்­பதை மறுக்க முடி­ய­வில்லை.

மன்­ன­ராட்­சியில் மன்­ன­னுக்கே சுய­நிர்­ண­யமும் இறை­மையும் சொந்தம். மக்­க­ளாட்­சியில் மக்­க­ளுக்கே சுய­நிர்­ண­யமும் இறை­மையும் சொந்­த­மா­கி­விடும். எல்­லோரும் இந்­நாட்டு மன்னர் எனக் கூறப்­ப­டும்­போது எல்­லோரும் ஆளப்­ப­டு­வோ­ரல்லர். ஆளு­வோரே என்­பதே கருத்­தா­கி­றது. எனினும் மக்­க­ளாட்­சி­யி­லும்­கூட பிர­தி­நி­தி­களில் பலர் சர்­வா­தி­கார உணர்­வுள்­ள­வர்­க­ளா­கவும் கொடூ­ர­மா­ன­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­வதால் ஒரு மன்­ன­னுக்குப் பதில் பல மன்­னர்­களை உரு­வாக்­கிய நிலையே காணப்­ப­டு­கி­றது. முடி­யாட்­சியில் ஜன­நா­ய­கமோ சம­தர்­மமோ இருக்­காது. காரணம் மன்­னனே முழு ஆதி­பத்­தி­யமும் உள்­ளவன் என்­பதால் பிர­ஜைகள் அவ­னுக்கு முழுதும் கட்­டுப்­பட வேண்­டி­யி­ருக்கும். அவன் அதி உயர் அந்­தஸ்தில் இருப்­பதால் சம­தர்­மமும் இருக்­காது. எனினும் மக்­க­ளாட்­சியில் ஜன­நா­ய­கமும் சம­தர்­மமும் இருந்­தே­யா­க­வேண்டும். மக்­க­ளாட்சி உரிய முறையில் பயன்­ப­டு­வ­தற்கு சீராக நிர்­வாகக் கட்­ட­மைப்பு அவ­சி­ய­மாகும்.

மக்­க­ளாட்­சிக்­கு­ரிய முறைப்­படி மக்கள் பிர­தி­நி­தி­களின் கைக­ளி­லேயே குடி­ய­ரசு எனும் ரீதியில் இலங்­கையின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் வழங்க வேண்டும். அதற்குத் துணை­யா­கவே ஜனா­தி­ப­தியும் உயர் நீதி­ய­ர­சரும் இருக்க வேண்டும்.

உரிய காலத்தில் பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­வதும் கலைப்­பதும் ஜனா­தி­ப­தியின் பொறுப்­பாகும். தேர்­த­லுக்குப் பின் கூட்­டுவார், ஆட்­சிக்­காலம் முடிந்த பின் கலைப்பார். இரண்டும் பாரா­ளு­மன்­றத்தின் கோரிக்­கைப்­படி அவர் செய்ய வேண்­டிய பொறுப்­பு­க­ளாகும். தொங்கு பாரா­ளு­மன்றம் எக்­கட்­சிக்கும் ஆட்­சி­ய­மைக்க முடி­யா­த­தாகும். நிர்­வாகச் சிக்­கலோ, குழப்­ப­நி­லையோ உள்ள பாரா­ளு­மன்­றமும் அந்த நிய­திக்கு உட்­பட்­ட­வை­யல்ல.

இவை 1946 ஆம் ஆண்டு சோல்­பரி யாப்பு மூலம் சேர் ஐவர் ஜனிங்ஸ் வழங்­கிய அழ­கிய எளிய அர­சியல் முறையைப் போன்ற அம்­சங்­க­ளாகும். ஆக முடி­யாட்­சியும் கூட குடி­யாட்­சியை அழ­காக வடி­வ­மைத்துத் தந்­தி­ருந்­தார்கள். ஆளுநர் என்­ப­தையே பின்னர் 1972 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி என மாற்­றி­னார்கள். சோல்­பரி யாப்பை முழு­தாக மாற்­றாமல், அதன் அடிப்­ப­டையை அப்­ப­டியே வைத்துக் கொண்டு பௌத்த மத, பௌத்த சாசன, சிங்­கள மொழிப் பேரி­ன­வ­டி­வத்தைப் புகுத்தி சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்தை நீக்­கி­னார்கள்.

எனினும் ஜே.ஆர். 1977 ஆம் ஆண்டு எம்.பி.யாக வந்து ஆறில் ஐந்து பெரும்­பான்மை தனது கட்­சிக்கு எனும் கார­ணத்­தைக்­காட்டி புதிய யாப்பை 1978 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தின் முழு அதி­கா­ர­த­்தையும் சுவீ­க­ரித்­துக்­கொண்டு ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்­தையும் கைய­கப்­ப­டுத்திக் கொண்டார்.

புதிய யாப்பை இயற்றி நீதிக் கட்­ட­மைப்­பையும் தன­தாக்­கினார். தன்னை நீதி­மன்­றத்தால் விசா­ரிக்க முடி­யாது என ஜே.ஆர்.விதித்த சட்­டத்­தி­லி­ருந்து இதை நாம் புரிந்து கொள்­ளலாம்.

ஆக அவ­ரது ஆட்­சியின் வெளித் தோற்றம் மக்­க­ளாட்சி போல் இருந்­த­போதும் அது மன்­ன­ராட்­சியின் வடி­வ­மைப்­பே­யாகும். அதில் என்றும் நிலைத்­தி­ருக்க மஹிந்த ராஜபக் ஷ மேலும் அதி­கா­ரங்­களைக் கூட்­டிக்­கொண்டார். இந்­நி­லையில் சந்­தி­ரி­காவின் காலத்தில் எதி­ரொ­லித்த நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைக்கு எதி­ரான கோஷம் பல­மாக முழங்­கி­யது.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை முற்­றிலும் நீக்கி விடு­வ­தா­கவே மக்­க­ளிடம் ஆணையைக் கோரி­யது. மஹிந்த பூசி­மெ­ழு­கிய போதும் மைத்­திரி அழுத்­த­மா­கவே கூறினார். இப்­போது மஹிந்த தரப்­பினர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை வேண்டும் என கண்­டிப்­பாகக் கூறு­கையில் மைத்­திரி மௌனம் சாதிக்­கிறார். ரணில் தரப்­பினர் அடுத்த ஜனா­தி­பதி ரணிலே என்­கின்­றனர். பழைய குருடி கதவைத் திற­டியா? அரசின் அரை ஆயுளில் ஏன் இந்த மாற்றம்? மைத்­தி­ரியும் ரணிலும் இதற்கா மக்­க­ளா­ணையைப் பெற்­றார்கள். இரு­பெ­ருங்­கட்­சி­களும் தமது எதிர்­கால இருப்­புக்கு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை கண்­டிப்­பாக வேண்டும் எனும் நிலைப்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கின்­றன போல் தெரி­கி­றது. கட்சி நல­னுக்கா இந்த மாற்றம்?

வழ­மைபோல் அர­சி­யல்­வா­தி­களால் இம்­மு­றையும் மக்­க­ளாணை அப்­பட்­ட­மா­கவே மீறப்­பட்­டி­ருக்­கி­றது. 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரியும் ரணிலும் சேர்ந்தே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வ­தற்­காக மக்­க­ளாணை பெற்­றனர். எனினும் அவர்கள் வைத்­துக்­கொண்ட 100 நாள் வேலைத்­திட்­டத்தின் படி வென்­றதும் இயற்­றப்­பட்ட 19 ஆம் ஷரத்தில் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­தோடு நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பகிர்ந்து கொண்­டுள்­ளனர்.

அத்­தோடு பாரா­ளு­மன்­றத்தை நிறை­வேற்று ஜனா­தி­ப­தியால் ஒரு வருடம் கழிந்த பின் கலைக்க முடி­யாது எனவும் அடுத்து வரும் நான்கு வரு­டங்­க­ளுக்கு இந்த உத்­த­ர­வாதம் பாரா­ளு­மன்­றத்­துக்கு இருக்கும் எனவும் ஜனா­தி­ப­தியின் ஆட்­சி­க்காலம் ஆறு வரு­டங்­க­ளி­லி­ருந்து ஐந்து வரு­டங்­க­ளாகக் குறைக்­கப்­படும் எனவும் 19 ஆம் ஷரத்து குறிப்­பி­டு­கி­றது. இவை மூலம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­முறை நீக்­கப்­ப­ட­மாட்­டாது என்­பது உறு­தி­யா­கி­றது அல்­லவா? அப்­ப­டி­யானால் நிறை­வேற்று அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­தி­டமே வழங்­கப்­பட்­டு­விடும் எனக் கூறி மக்­க­ளி­ட­மி­ருந்து பெற்ற மக்­க­ளா­ணையின் நிலை என்ன? 1988 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க அம்­மையார் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வ­தாகக் கூறி எட்டு கட்­சி­களைக் கூட்டி செய்த முயற்­சியை இங்கு ஞாப­கப்­ப­டுத்த விளை­கிறேன்.

தேர்­த­லுக்குப் பின் கூட்டு ஒப்­பந்தம் என அவர் கூறினார். மற்றக் கட்­சிகள் தேர்­த­லுக்கு முன் கூட்டு ஒப்­பந்தம் வேண்டும் என்­றன. தேர்­த­லுக்குப் பின்­புதான் என அநுர பண்­டா­ர­நா­யக்க அடம்­பி­டிக்­கவே சோம­வங்ச அம­ர­சிங்­கவும் ருக்மன் சேன­நா­யக்­கவும் அஷ்­ரபும் அந்தக் கூட்­டி­லி­ருந்தும் வில­கினர்.

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, அதற்­குப்பின் நீ யாரோ நான் யாரோ எனும் பழ­மொ­ழியைப் போலும் ஆற்றைக் கடக்­கத்தான் படகு அதற்குப் பின் படகு கரையில் இருக்க வேண்­டி­ய­துதான் தோளில் சுமந்து திரிய முடி­யாது எனும் பழ­மொ­ழியைப் போலும் ஒரு நிலை ஏற்­ப­டா­தி­ருக்­கவே கூட்­டுக்­கட்­சிகள் அப்­போது முன்­கூட்­டியே கூட்டு ஒப்­பந்­தத்தை வலி­யு­றுத்­தின எனினும் ஸ்ரீமாவோ அம்­மை­யா­ரிடம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திப்­ப­தவி மீது விருப்பம் இருந்­ததால் தேர்­த­லுக்குப் பின்பே கூட்டு ஒப்­பந்தம் எனக் கூறி­விட்டார். அவ­ரது உள்­நோக்­கத்தை ஏழு கட்­சி­களும் அறிந்­து­கொண்டு வில­கி­ய­தா­லேயே அவர் அந்த தேர்­தலில் தோற்றுப் போனார்.

2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராகக் களத்தில் நின்­ற­வர்கள் வெளிப்­ப­டை­யாக ஒன்றும் உள்­ளூர ஒன்றும் எனும் இரு நிலைப்­பாட்டில் இருந்­தி­ருப்­பது இப்­போது தெளி­வா­கி­றது. அதா­வது மக்­க­ளிடம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இல்­லாமற் செய்­வ­தற்கு மக்­க­ளா­ணையைப் பெற்­று­விட்டு ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்­றமும் கலந்த நிறை­வேற்று அதி­கார முறை­யைக்­கொண்டு வரு­வ­தாகும்.

தனி­நபர் முழு­மை­யாக வசப்­ப­டுத்­தி­யி­ருக்கும் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்றம் முழு­மை­யாக மீளவும் பெற்­றுக்­கொள்­வதா? அல்­லது தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்­தி­லி­ருக்கும் ஜன­நா­யக விரோத அம்­சங்­களை நீக்­கு­வதா? அல்­லது ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்­றமும் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பகிர்ந்து கொள்­வதா? எனும் மூன்று விட­யங்கள் உள்­ளன. இவற்றில் முத­லா­வது விட­யத்தைக் கூறியே மக்­க­ளாணை பெறப்­பட்­டி­ருந்­தது. இரண்டாம் விட­யத்தைக் கூறி மக்­க­ளா­ணையைப் பெற்­றி­ருந்தால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையைத் தொடர்ந்தும் வைத்­தி­ருந்­தி­ருக்­கலாம். ஏனெனில் அதில் எந்த பாதிப்பும் மக்­க­ளுக்கு இல்லை. ஆனால் அதைக் கூறி மக்­க­ளாணை பெறப்­ப­ட­வில்லை. முற்­றிலும் தனி­நபர் ஜனா­தி­பதி முறையை அகற்றி பாரா­ளு­மன்­றத்­திடம் முழு­மை­யாக ஒப்­ப­டைக்­கவே மக்­க­ளாணை பெறப்­பட்­டி­ருந்­தது. அத­னால்தான் அடுத்த முறை நான் போட்­டி­யிடப் போவ­தில்லை என மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அறி­வித்­தி­ருந்தார். இவர் போட்­டி­யி­ட­வில்­லை­யானால் இன்­னொ­ருவர் போட்­டி­யி­டு­வாரா? எனும் கேள்­வியே தற்­போது எழு­கி­றது. எனினும் தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்­தோடு பாரா­ளு­மன்­றத்­துக்கும் நிறை­வேற்று அதி­காரம் பகி­ரப்­பட்­டிருக்­கி­றது.

குறு­கிய காலத்­துக்குள் சாதக பாத­கங்­களைப் பற்றிச் சிந்­திக்­காமல் இது வகுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஒரு வரு­டத்­துக்குள் மட்­டுமே ஜனா­தி­ப­தியால் பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­கலாம் என்றால் அற்ப ஆயுளே நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கோடிக்­க­ணக்கில் செல­வ­ழித்த பின் அற்ப ஆயுளா? அதற்குப் பின் நான்கு ஆண்­டு­கள்­வரை ஜனா­தி­ப­தியால் பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்க முடி­யாதாம். விகி­தா­சார தேர்தல் முறை நீங்கி கலப்­பு­முறை ஏற்­பட்டு அறுதிப் பெரும்­பான்­மை­யற்ற தொங்கு பாரா­ளு­மன்­றத்தை என்ன செய்­வது?

நிர்­வாக முடக்கம் ஏற்­பட்டு செய­லி­ழந்தால் என்ன செய்­வது? ஒரு வரு­டத்­துக்குள் ஜனா­தி­பதி சுய­வி­ருப்­போடு கலைத்­து­வி­ட­லாமா? நான்கு வரு­டங்­க­ளுக்கு சுய விருப்­போடும் கலைக்­க­மு­டி­யாதா? ஜனா­தி­ப­திக்கு எதி­ராக வழக்குத் தொட­ரலாம் என 19ஆம் ஷரத்து குறிப்­பி­டு­கி­றது. பாரா­ளு­மன்­றத்­துக்கு எதி­ரா­கவும் வழக்குத் தொட­ரலாம் எனும் வாசகம் இல்லை அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரா­கவும் முப்­ப­டை­களின் தலைமைத் தள­ப­தி­யா­கவும் பிர­தமர் உட்­பட அமைச்­ச­ர­வையை நிய­மிக்கும் அதி­கா­ரத்தைக் கொண்­ட­வ­ரா­கவும் ஜனா­தி­ப­தியே இருப்­பாராம்.

இவற்றின் மூலம் அரசின் செயற்­பா­டு­க­ளுக்கும் பாது­காப்பு விட­யங்­க­ளுக்கும் ஜனா­தி­ப­தியே பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வ­ரா­கிறார். ஆணைக்­குழு நிய­மிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இல்லை என்­றாலும் கூட இவர் நிய­மித்துக் கொண்­டி­ருக்­கிறார். 19 ஆம் ஷரத்து ஜனா­தி­ப­தியின் அதி­கா­ர­மற்ற சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளையே வலி­யு­றுத்­து­கி­றது.

46 (1) மற்றும் 46 (2) உப விதி­க­ளின்­படி 30 அமைச்­ச­ரவை அமைச்­சர்­களும் 40 துணை அமைச்­சர்­க­ளு­மாக 70 பேர் என 19 ஆம் ஷரத்து வரை­ய­றுத்­தி­ருக்­கையில் அந்த வரம்பு மீறப்­ப­டு­கி­றது. காரணம் எண்­ணிக்கை பாரா­ளு­மன்­றத்தால் தீர்­மானிக்­கப்­பட வேண்டும் எனும் விதியே ஆகும். அப்­ப­டி­யானால் தீர்­மானிக்கும் அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­துக்கே இருக்­கி­றது. அதன்­ப­டியே நிய­மிக்கும் அதி­காரம் மட்­டுமே ஜனா­தி­ப­தி­யிடம் இருக்­கி­றது. பிர­த­மரின் சொல்­படி தான் ஜனா­தி­பதி அமைச்­சர்­க­ளுக்­கான பொறுப்­புக்­க­ளையும் நிய­ம­னத்­தையும் வழங்க வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­மாறு அழைக்­கவும், இடை நிறுத்­தவும், கலைக்­கவும் ஜனா­தி­ப­தியால் முடியும். மூன்றில் இரண்டு பங்­கினர் வாக்­க­ளித்து, பாரா­ளு­மன்றம் கோரி­னால்தான் கலைக்க முடியும். நான்கு வரு­டங்­க­ளுக்கு கலைக்க முடி­யாது எனக் கூறி­விட்டு மூன்றில் இரண்டு பங்கு வாக்­குகள் மூலம் கலைக்­கலாம் என­லாமா-? இடை­நி­றுத்தல் எப்­போது செய்­யப்­பட வேண்டும்-? என்­ப­திலும் தெளி­வில்லை. சில உயர்­தர அரச நிய­ம­னங்­களை ஜனா­தி­பதி வழங்­கு­கையில் அர­சி­ய­ல­மைப்பின் பேரவை சிபா­ரிசும் அங்­கீ­கா­ரமும் வழங்க வேண்டும் இல்­லா­விட்டால் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்க முடி­யாது எனவும் காணப்­ப­டு­கி­றது.

ஆகவே ஜனா­தி­ப­திக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் சம­நி­றை­வேற்று அதி­காரம் இருப்­ப­தாகக் கூறப்­பட்­ட­போதும், ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தால் முடக்­கப்­படும் நிலையே காணப்­ப­டு­கி­றது. ஆக மக்­க­ளிடம் நிறை­வேற்று அதி­கார முறையை முற்­றிலும் நீக்­கு­வ­தாகக் கூறி மக்­க­ளா­ணையைப் பெற்­றபின் பொறுப்­புக்­கூறும் அலங்­காரப் பத­வியில் வைத்து பிர­தமர் பயன்­ப­டுத்­து­கி­றாரோ எனும் எண்­ணத்தால் தான் அண்­மையில் மைத்­திரி மஹிந்­தவின் தயவை நாடு­கி­றாரோ? ரணிலின் யுக்­தி­யால்தான் ஐ.நா. வில் மைத்­திரி போர்க்­குற்­றத்­தையும் ஏற்­றுக்­கொண்டு பொறுப்­புக்­கூ­று­த­லையும் ஒப்­புக்­கொண்டு இணை­அ­னு­ச­ர­ணைக்கும் இணங்­கி­யி­ருக்க வேண்டும்.

இப்­போது இவற்­றி­லெல்லாம் ஐ.நா. வுக்கு முகம் கொடுக்க வேண்­டி­யவர் மைத்­தி­ரி­யா­கவே இருக்­கிறார். அர­சுக்கும் இரா­ணு­வத்­துக்கும் அமைச்­ச­ர­வைக்கும் தலைமைப் பொறுப்பு இவரே என்­பதால் இவரே மீண்டு கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

எனினும் போர்க்­குற்­றமும் பொறுப்­புக்­கூ­றலும் இணை­அ­னு­ச­ர­ணையும் இராணுவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அதை தாஜா செய்ய வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இருப்பு கேள்விக்குறியாகி விடும். ஐ.நா. விடம் ஏற்றுக்கொண்டபடி செயற்படாவிட்டால் சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுவதோடு அதன்பழி மைத்திரியின் தலைமீதே விழும். இரண்டிலும் ரணிலுக்கு எந்தப்பாதிப்புமே இல்லை. மைத்திரி மஹிந்தவோடு சேரமாட்டார் என்பதும் கூட ரணிலுக்குத் தெரியும்.

மஹிந்தவுடன் மைத்திரி சேர்ந்தால் ஐ.நா. வின் பிடியிலிருந்து மஹிந்தவைக் கழற்றும் நிபந்தனையை ஏற்க வேண்டியிருக்கும். இதற்கு மைத்திரி உடன்பட முடியுமா? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முழு நோக்கமும் கூட மஹிந்தவைக் காப்பாற்றுவதாகவே இருக்கிறது. இதற்கும் மைத்திரி உடன்பட முடியாது. இவ்வாறெல்லாம் செய்தால் சர்வதேசத்தின் பிடி மேலும் இறுகிவிடும். ரணிலைப் பகைத்தால் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் கூட இறுக வேண்டிவரும்.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, பொலிஸ் விவ­கார அமைச்சர் சாகல ரத்­னா­யக்க, முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியும் தற்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா, நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள, நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர, வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம இவர்கள் முக்­கிய பத­வி­களை வகிக்­கி­றார்கள். இவர்கள் யாவரும் ரணிலின் ஆட்­க­ளாவர். இவ்­வா­றா­கத்தான் நிறை­வேற்று அதி­காரம் ஜனா­தி­ப­திக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் பகி­ரப்­பட்­டி­ருக்­கி­றது. நடைமுறைச் சிக்கலுக்குரிய இது மக்களாணை பெறப்படாததுமாகும்.

ஏ.ஜே.எம்.நிழாம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-30#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.