Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறப்பு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

click below:

http://www.pathivu.com/files/sirappuparvai/si140307.wmv

source: www.pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விதமாக, யாழ்களத்தில் பலர் குழம்புகின்ற விடயங்களுக்கும் தமிழ்செல்வன் பதிலளித்திருந்தார். சர்வதேசத்தில் சிறிலங்கா அரசு செய்கின்ற குழந்தைகள் பற்றிய பிரச்சாரங்களுக்கு நாங்களும் தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும்.

சிங்களப் பிரதேசங்களில் குழந்தைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுதல், சித்திரவதைகள், உற்பட்ட, பல கொடுமைகள் நடந்தவண்ணம் உள்ளன. அந்தமாதிரியான விடயங்களை ஆவணப்படுத்துவதன் மூலம், கடுமையான அழுத்தங்களைச் சிங்கள தரப்பு மீது சுமத்த வழி செய்தாகவேண்டும். இதன் மூலம், தமிழ்குழந்தைகளைக் கொல்வதற்காகச் சிங்கள அரசு செய்யும் பிரச்சாரம் எடுபடாமல் போகும்.

தூயவனின் ஆலோசனை முக்கியமாக கவனத்திற்கு எடுத்து செயல்படவேண்டும்

1.பிச்சை எடுத்தல்--

2.உல்லாசப்பிரயாணிகளுடன் தன்னினச்சேர்க்கை மூலம் பணம் சம்பாதித்தல்

3.இளம் வயதில் கட்டாயா வேலையில் அமர்த்துதல்.

இப்படி எத்தனையோ அடுக்கி கொண்டு போகலாம்......

சில விடயங்களுக்கு முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். ஒரு கை தட்டினால்

சத்தம் வராது....பல கைகள் தட்ட.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு காவடி எடுக்கும் கேள்விகளை கேட்காமல் மக்களின் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டதற்கு வாழ்த்துக்கள்.

புலிகளுக்கு காவடி எடுக்கும் கேள்விகளை கேட்காமல் மக்களின் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டதற்கு வாழ்த்துக்கள்.

தமிழீழ நிகழ்வுகள் அவ்வாறுதானிருக்கும். அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

இதேபோன்ற நேர்காணலை வேறொங்காவது நடந்திருந்தால் பேட்டி கொடுப்பவர்

குழப்பமடைந்திருப்பார். அருமையான நிகழ்வு.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

''நல்ல விதமாக, யாழ்களத்தில் பலர் குழம்புகின்ற விடயங்களுக்கும் தமிழ்செல்வன் பதிலளித்திருந்தார். "

சு.ப. தமிழ்செல்வனின் இன்றைய செவ்வி ஒரு முக்கிய காலகட்டத்தில் அதாவது புலம்பெயர்ந்த மக்கள் குழம்பிய அதாவது குழப்பப்பட்ட நிலையில் இருந்த நேரத்தில் நிகழ்த்தப் பட்டுள்ளது ஒரு வரப்பிரசாதமாகும்.

நேற்றைய தினம் என்னால் பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்திலும் இந்த சிறுவர் படையில் சேர்க்கும் விவகாரம் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

மற்றும் தமிழ் தேசியத்திற்கு எதிராக இயங்கும் ஊடகவியலாளர்கள் வலைப்பின்னல் பற்றியும் சில தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறேன் பூர்த்தியானதும் விபரமாக பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

1.பிச்சை எடுத்தல்--

2.உல்லாசப்பிரயாணிகளுடன் தன்னினச்சேர்க்கை மூலம் பணம் சம்பாதித்தல்

3.இளம் வயதில் கட்டாயா வேலையில் அமர்த்துதல்.

இப்படி எத்தனையோ அடுக்கி கொண்டு போகலாம்......

சில விடயங்களுக்கு முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். ஒரு கை தட்டினால்

சத்தம் வராது....பல கைகள் தட்ட.....

அரசியற் துறைப் பொறுப்பாளர் சர்வதேச சமூகத்தின் நலன் சார் நடவடிக்கைககள் பற்றிக் கோடிட்டுக் கதைத்திருக்கிறார். இந்த சிங்கள தேச சிறுவர் நிலமை பெரிய அளவில் மேற்கால் பேசப்படாமைக்குரிய காரணமும் கூட அது அவர்களின் நலன் சார் நிகழ்ச்சி நிரலில் பெருமங்கம் வகிக்கவில்லை என்பதனாலேயே தவிர இந்ந நிலைமையினை மேற்கு அறிந்திருக்கவில்லை என்பதனாலில்லை.

எனது கடந்த தாயகப் பயணத்தின் போது எனது விமான இருக்கையின் அயல் இருக்கையில் ஒரு இருபது வயது வெள்ளையின பெண் அமர்ந்திருந்தார். அவரோடு உரையாடும் போது நானறிந்தது அது அவருடைய இலங்கைக்கான ஆறாவது பயணம். அது மட்டுமல்ல தான் கட்டுநாயக்காவில் இருந்து காலிக்கு பொதுப் போக்குவரத்தில் தான் பயணிப்தாயும் தனக்கு நிறை நண்பர்கள் அங்கு இருப்பதாயும் அவர்களிற்காய் தான் தான் சற்று முன்னர் வாங்கிய சிமனோவ் வொட்காப் போத்தலை வாங்கியதாயும் சொன்னார்.

இது போலத்தான் கனடாவின் ஒன்ராறியோ மாகாகாணத்தின் தற்போதைய முதல்வரின் மகளும் தெற்கில் தற்சமயம் தங்கியிருந்து சமூகவியல் அனுபவம் பெறுகின்றார். கபரணையில் குண்டு வெடித்த அன்று இவர் கபரணவிற்கு கொளும்பில் இருந்து சென்றிருந்தாயும் அதனால் முதல்வர் பதற்றமடைந்ததும் இங்கு செய்தி ஆகியிருந்தது. அது போல கனேடிய வெளிவிவகார அமைச்சில் முன்நாள் Desk Officer ஆக இருந்து இப்போ Director ஆகப் பதவி உயாந்துள்ள Glen Hodgins என்ற Bureaucrat ஒரு சிங்களச் சிறுமியைத தத்தெடுத்துள்ளதோடு தெற்கில் வியாபாரங்களையும் சிங்கள ஆதரவோடு நடத்தி வருகின்றார்.

இவையெல்லாம் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இப்படி நிறையவே தொடர்புகள் அவர்களிற்றும் இவர்களிற்கும் உள்ளது. சாதாரண கல்லூரி மாணவி முதல் அரசியல் பிரமுகர்கள் வரை மேற்கிற்கு இலங்கையின் தெற்கோடு நிறையப் பிணைப்புள்ளது. அங்குள்ள நிலவரங்களை இவர்கள் நன்கே அறிவர். நூங்கள் சொல்லித் தான் தெற்கின் சிறுவர் துஸ்பிரயோகம் இவர்களிற்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. தமக்குத் தேவைப் பட்டால் மட்டுமே இவர்கள் விடயங்களைப் பிரபலப் படுத்துவர்.

அதற்காக நாம் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் இவ்வாறான நிலமையினை மனதிருத்தி நாம் பிரச்சாரம் செய்தால், நாம் எதிர்பார்த்த விழைவு மேற்கில் ஏற்படாது போகும் போது நாம் மனம் தளரத் தேவையில்லை.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் தமிழீழத்தில் நடக்கின்ற பிரச்சனைகளை இந்திய மக்களுக்குச் செல்லவிடாமல் சில சக்திகள் தடுத்தன. ஆனால், பிற்பட்ட காலங்களில் அச்செய்தி சென்றடைந்தவுடன், அல்லது அது பற்றிய அக்கறை மக்களுக்கு வந்தவுடன், ஓரளவாவது, மக்களினை மனதில் வைத்து, மத்திய அரசு பதிலளிக்கவில்லையா?

ஏன், சந்திரிக்கா அம்மையார் தான், புலிகளைப் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தை ஊக்குவிப்பதில் முன்நின்றவர். ஆரம்பகாலத்தில் அது பற்றி அனைவரும் அசட்டையினமாகத் தான் இருந்தோம். ஆனால், சந்திரிக்கா உலகம் பயப்படும், பயங்கர அமைப்புக்களைப் ப்றறிப் பேசி, அதனோடு விடுதலைப்புலிகளையம் உலகமட்டத்தில் பேசிவந்தார். ஆத ஏற்கின்றோமோ, இல்லையோ, ஒரு பொய்யை 1000 தடவை சொன்னால் அது உண்மையாகும் என்பது போன்றதே அது.

இன்றைக்கு அப்போது சந்திரிக்கா போட்ட, சிறு விதை ஆலமரமாக வியாபித்து நிற்கின்றது. இப்போது சிங்கள அரசு சார்பாக பேசும் எவரும், பயங்கவாதிகள் என்று, அடிக்கடி புலிகளைப் பற்றிக் கதைப்பதன் நோக்கமும் அது தான்.

சிறுவர் விடயத்தைச் சிங்கள அரசு பொய்ப் பிரச்சாரமாகச் செய்யாமல் இருக்க, அவர்களின் பிரதேசங்களில் நடக்கின்ற துஸ்பிரயோகங்களை நாங்கள் கையில் எடுத்து, செம அடி கொடுப்பது தான் வழி. முன்பைப் போல, சிறுவர் பற்றி சிங்கள அரசு கதைக்காமல் இருப்பதற்கு, கருணா கும்பலுக்கு ஆட்கள் பிடித்துக் கொடுக்கின்றார்கள் என்று உலகம் அறிந்த உண்மையால் தான்.

எமக்குச் சார்பான எந்தத் துரும்பையும் விடாமல் பிடித்து வைத்துக் கொள்வது தான் முதல் வெற்றி.

நான் சொல்ல வந்தது என்னவெனில் ஒரு விடயத்தை ஒருவரிற்கு அறியப்படுத்த முயல்வதற்கும் ஒருவரை மடக்கி சில விடங்களைச் செய்ய வைப்தற்கும் இடையே நிறையவே வித்தியாசம் உள்ளது. எனது அனுபவத்தில் இரண்டாவது தான் இங்கு பலன் தரும்.

மேற்கைப் பொறுத்த வரை அதற்குப் புரிகின்ற ஒரே மொழி பலம். அது பொருளாதாரமாகவோ, அரசியல் வாக்கு வங்கியாகவோ, ஆயதமாகவோ என்ன வடிவிலேனும் இருக்கலாம். ஆனால் இவர்கள் புரிந்து கொள்ளும் ஒன்றே ஒன்று பலம்.

ஏனவே தான் மன சாட்சியின் அடிப்படையில் அல்லது நியாய தர்மத்தின் அடிப்படையில் இவர்களோடு வியாபாரம் செய்ய முடியாது.

ஏனக்குத் தெரிய எத்தனையோ பேர் இங்கு தினமும் பல மணித்தியாலங்களைச் செலவிட்டுக் தமிழீழ அவலங்களின் புள்ளி விபரங்களைக் கடிதம் எழுதி அமைச்சுக்களிற்கு பக்கம் பக்கமாக அனுப்புகின்றனர். ஆனால் உண்மையில் இவர்களது கடிதங்கள் எவ்வாறு அமைச்சுக்களால் கையாளப் படுகின்றன என்றால் கடிதம் எந்த விடயம் தொடர்பாக அமைகிறது என்பதனை ஒரு அடிநிலை ஊழியர் முதலில் நிருணயித்து பின் அதன் அடிப்படையில் ஒரு templated (அதாவது முன்னரே எழுதப்பட்ட, அனைவரிற்கும் அனுப்புகின்ற ஒரு பொதுப்பதில். இதில் ஆரிற்கு அனுப்புகிறோம் என்று பெயர் மட்டும் தான் அவர்கள் மாற்றுவார்கள்) பதிலை இவர்களிற்கு அனுப்புவார். மொத்தத்தில் கடிதம் எந்த அமைச்சரிற்கு அனுப்பப்பட்டதோ அவரிற்கு அப்படி ஒரு கடிதம் வந்ததே தெரியாது. ஆனால் கடிதம் அனுப்பிய நம்மவரோ அகா நமது கடிதம் நல்லா வேலை செய்திருக்கின்றது என புலம்பித் திரிவார். பின்னர் ஒரு கொஞசக் காலத்தில் ஒரு சிவதம்பி வந்து அவுஸ்திரேலியா வானொலியில் புலம் பெயர்ந்த மந்தைகளிற்கு பிரச்சாரம் தெரியவில்லை என்பார். எல்லாரும் ஒமோம் பாருங்கோ படிச்ச மனுசன் சொல்லுது உண்மை தான் என்பார்கள். பின்னர் மனம் தளர்ந்து ஒரு அழுத்தநிலையில் புலம்புவார்கள். அப்பாவித்தனமாக, கடிதம் அனுப்பிக் கொண்டு தானே இருக்கிறோம் என்று அங்கலாய்ப்பார்கள். சிலர் தொடர்ந்தும் அதே பாணியில் எழுதி அனுப்பிக் கொண்டிருப்பார்கள். சிலர் பிரச்சாரம் பலனில்லை என்று ஒதுங்கி இருப்பார்கள். மற்றைய இடங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, இங்கு இது தான் நடந்து வருகின்றது.

ஏமது இலக்கினைச் சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவு படுத்தாது, அரச கட்டமைப்புக்களையும் அவற்றின் தொழிற்பாட்டையும் புரியாது, வியூகம் அமைக்காது, சரியான திட்டமிடல் இல்லாது, எமது செயற்பாடு தொடர்பான தொடர்ந்த மதிப்பீடு இல்லது, எழுந்த மானத்தில் செய்கின்ற எந்தப் பிரச்சார நடவடிக்கையும் பலன் தரப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏமது இலக்கினைச் சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவு படுத்தாது, அரச கட்டமைப்புக்களையும் அவற்றின் தொழிற்பாட்டையும் புரியாது, வியூகம் அமைக்காது, சரியான திட்டமிடல் இல்லாது, எமது செயற்பாடு தொடர்பான தொடர்ந்த மதிப்பீடு இல்லது, எழுந்த மானத்தில் செய்கின்ற எந்தப் பிரச்சார நடவடிக்கையும் பலன் தரப் போவதில்லை.

திட்டமிடல் என்பது நமக்குள் இல்லை என்பது உண்மை தான். அதைவிடப் பிரச்சனை, எல்லோரையும் நம்பமுடியாமலும் இருப்பதும் தான், இதற்கு எப்படியும், ஒரு நல்ல வழி செய்திட வேண்டும்.

தமிழீழ குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுவதாக சிங்கள அரசு நடித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், நம்மவர்கள் சிறிலங்கா பற்றி அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில்லை. தனிநாடக யோசிக்கின்றோம் ஏன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமென்று.

ஆனால், அழுத்தம் கொடுக்க வேண்டுமால், சிங்களக் குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். இது சுயநலம் என்று சிலர் சொல்லலாம். ஆனால் வேறு வழியில்லை.

சிறிலங்கா சார்பான மனித உரிமையமைப்பை உருவாக்கி, அவர்களுக்குள் இருக்கின்ற மனித உரிமையார்வளர்களை உள்வாங்கி, நம் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். அந்தக் குரலே வலுவானால், நிச்சயம் சிறிலங்கா அரசிடம் ஒரு முடக்கத்தை எதிர்பார்க்கலாம்.

மேற்குலகை வசப்படுத்த எமது பிரச்சனைகளை புரியப்படுத்த ஒரெ வழி நான் முன்னரும் குறிப்பிட்டது போல நெடுங்காலத்திட்டப்படி எந்த எந்த நாடுகளில்

வாழ்கிறோமோ அடிமட்டத்தில் எங்கள் கலாச்சாரங்களை கட்டிக்காத்துகொண்டு

கிராமம் நகரரீதியில் வெளினாட்டுக்காரங்களுடன் கலாச்சார ரீதியில் இணைந்து

உ+ம் சமுக சேவைகள் செய்தல்........ கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் எமது பிரச்ச்னைகளை இலகுவாக அணுகுதல்.................இது மத்திய அரசுக்களை போய் அடையும்.......தொடரும்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.