Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையின் சிவானந்தன் மறைவு

Featured Replies

இனவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையின் சிவானந்தன் மறைவு

அம்பலவானர் சிவானந்தன்படத்தின் காப்புரிமைROTA

தனது இனத்திற்காக போராட்டங்களை நடத்திய தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், ஆசிரியரும், நியாயமான சமூகத்திற்காக போராடிய இலங்கை செயற்பாட்டாளருமான அம்பலவானர் சிவானந்தன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உயிரிழந்தார்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் பிறந்த சிவானந்தன், தனது 35ஆவது வயதில், அதாவது 1958ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையினால் இலங்கையை விட்டு வெளியேறினார்.

தனது தாயகத்தை விட்டு வெளியேறிய சிவானந்தன், Institute of Race Relations(IRR) நிறுவனத்தில் நூலகராக இணைந்து, பின்பு அதனை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார்.

அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் பதவிக்கும், அந்த நிறுவனத்தினால் பிரசுரிக்கப்பட்ட Race (பின்னர் Race & Class) சஞ்சிகையின் ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

புத்தகம்

பின்னர் பிரிட்டன் சமூகத்தில் காணப்பட்ட இனவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பும் முன்னணியாளராக அவர் திகழ்ந்திருந்தார்.

அவர் முன்னெடுத்த போராட்டங்கள் ஒரு இனத்திற்காக மாத்திரம் அல்ல என ROTA நிறுவனத்தின் Oral History திட்டத்திற்காக அம்பலவானர் சிவானந்தன் குறித்த வீடியோவை தயாரித்த பூர்ணிமா கருணாகராச்சரன் பிபி.சியிடம் தெரிவித்தார்.

"இவரே Politically Black என்ற சூழலை ஏற்படுத்தியிருந்தார். அனைத்து நிறங்களையும் தாண்டி சென்று, அரசியல் நிறம் தொடர்பில் அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்" எனவும் பூர்ணிமா கூறினார்.

ROTA நிறுவனத்துடன் செயற்பட்ட தனது இளம் பருவத்தில் தெமட்டகொடை பகுதியில் சிவானந்தன் வசித்த வந்த போது, சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த சிறார்களுடன் கிரிக்கெட் விளையாடியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பெரும்பாலானோர் அவரை எழுத்தாளர் அல்லது புத்திஜீவி என்ற அடிப்படையிலேயே அடையாளப்படுத்தியதாக கூறும் பூர்ணிமா கருணாகராச்சரன், சிவானந்தன் பல்வேறு துறைகளிலும் திறமை வாய்ந்தவர் என்றார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-42594930

  • தொடங்கியவர்

அமரர் திரு. அ. சிவானந்தனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

 

 
 

அமரர் திரு. அ. சிவானந்தனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

திரு. அபலவாணர் சிவானந்தன் 03. சனவரி 2018 அன்று இலண்டனில் இறைவனடி எய்தியுள்ளார். திரு.அ. சிவானந்தன் அவர்களின் இழப்பு என்பது ஈழத்தமிழ் மக்களுக்கும் பல பிறமொழி இனத்தவருக்கும் ஏற்பட்டுள்ள இழப்பாகும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் பல தமிழ்ப் புத்திமான்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்தனர். போராட்ட காலங்களில் ஒருசிலர் சாதகமான ஆய்வுகளையும் வேறு சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து ஆய்வுக் கட்டுரைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டனர். இவர்களில் தனித்துவமானவர் அம்பலவாணர் சிவானந்தன் அவர்கள். இடதுசாரிக் கொள்கையுடைய இவர் தமிழர்களது ஆயுதப்போராட்டத்தை முற்றுமுழுதாக ஆதாதரித்துப் பல கட்டுரைகள் எழுதியதோடு சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் எழுதுவதில் விற்பன்னராகத் திகழ்ந்துள்ளார். இலங்கையில் பிறந்த சிவானந்தன் அவர்கள் 1958 இனக் கலவரத்தை அடுத்து ஐக்கியராச்சியத்திற்குக் குடிபெயர்ந்து இன்றுவரை இலண்டனில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலண்டனில் வசித்த காலங்களில் ” இன உணர்வுகளுக்கான கல்விநிலையம் ” எனும் கல்வி அறக்கட்டளையை நிறுவி அதன் இயக்குனராகப் பல காலமாகப் பணியாற்றியுள்ளார். எழுத்தாளராகப் பயணித்த இவர் பல புத்தகங்களையும் புதினங்களையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். வருடத்திற்கு இருமுறை ”இனமும் வகுப்பும்” என்ற இதழையும் வெளியிட்டுள்ளார். இவர் ஏழுதிய முதலாவது புதினம் ”நினைவு இறக்கும்போது” 1998 ஆம் ஆண்டு பொதுநலவாய எழுத்தாளர்களுக்கான பரிசைப் பெற்றது.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அமரர் திரு.அ.சிவானந்தனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்.

http://www.samakalam.com/செய்திகள்/அமரர்-திரு-அ-சிவானந்தனின/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.