Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழிற்சாலைகளை உருவாக்கி, இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க மாகாண சபை தயாரானால் நானும் தயார் :

Featured Replies

தேசிய, மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று(08.01.2018) காலை நடைபெற்றது.

தேசிய, மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன், குணசீலன், சர்வேஸ்வரன் உட்பட மாகண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய, மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

தேசிய, மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

தேசிய, மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Honorable-students-of-national-districtlevel

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தொழிற்சாலைகளை உருவாக்கி, இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க மாகாண சபை தயாரானால் நானும் தயார் :

governor-_0370-copy.jpg?resize=800%2C533
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆளுநர் செயலகத்தின் புதுவருடத்தின் பணிகளை சர்வமத தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கும் நிகழ்வு சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று (08) காலை இடம்பெற்றது.

ஆளுநர் றெயினோல்ட் குரே தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கேஸ்வரன், எதிர்கட்சி தலைவர் தவராசா, அமைச்சர்களான சர்வேஸ்வரன், ஆனந்தி சசிதரன், சிவனேசன், குணசீலன் ஆகியோர் உட்பட வட மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் உயர்தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்றுக்கொண்ட 9 மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

governor-0305-copy.jpg?resize=800%2C533
இங்கு உரையாற்றிய ஆளுநர் வட மாகாணசபை எஞ்சியிருக்கின்ற காலத்தினை மத்திய அரசுடன் இணைந்து, பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு உதவிபுரிய முயலவேண்டும் என இந்த புதிய ஆண்டு ஆரம்பத்தில் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

மக்களுக்கு உதவி புரிய வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் வழங்குவதற்;கு தயாராக இருப்பதாகவும் வட மாகாணத்தில் காணப்படும் தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் அதற்கு வேண்டிய அனைத்தினையும் மாகாணசபை செய்யுமானால் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்தார்.

சிந்தித்து செயற்படுவதற்கான காலம் பிறந்துள்ளதாகவும் அதனால் அனைத்து தலைவர்களும் சிந்தித்து செயற்பட்டு மக்களுக்கு தமது கடமைகளை ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

governor-_0292-copy.jpg?resize=800%2C533governor-_0192-copy.jpg?resize=800%2C533governor-_0193-copy.jpg?resize=800%2C533governor-_0206-copy.jpg?resize=800%2C533governor-_0218-copy.jpg?resize=800%2C533governor-_0235-copy.jpg?resize=800%2C533governor-_0238-copy.jpg?resize=800%2C533governor-_0272-copy.jpg?resize=800%2C533governor-_0276-copy.jpg?resize=800%2C533governor-_0313-copy.jpg?resize=800%2C533governor-_0322-copy.jpg?resize=800%2C533governor-_0354-copy.jpg?resize=800%2C533governor-_0370-copy-1.jpg?resize=800%2C5governor-0208-copy.jpg?resize=800%2C533governor-0274-copy.jpg?resize=600%2C400governor-0300-copy.jpg?resize=800%2C533governor-0305-copy-1.jpg?resize=800%2C53governor-0315-copy.jpg?resize=800%2C533governor-0324-copy.jpg?resize=800%2C533governor-0349-copy.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/60213/

14 hours ago, நவீனன் said:

மக்களுக்கு உதவி புரிய வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் வழங்குவதற்;கு தயாராக இருப்பதாகவும் வட மாகாணத்தில் காணப்படும் தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் அதற்கு வேண்டிய அனைத்தினையும் மாகாணசபை செய்யுமானால் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்தார்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் ஏஜென்ட் ஆன பயங்கரவாதி ரெஜினோல்ட் கூரேயின் உதவி தமிழருக்கு தேவையில்லை.
தமிழர் சுயமாக முன்னேறுவார்கள்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் தமிழ் மண்ணில் இருந்து விலகினால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நவீனன் said:

மக்களுக்கு உதவி புரிய வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் வழங்குவதற்;கு தயாராக இருப்பதாகவும் வட மாகாணத்தில் காணப்படும் தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் அதற்கு வேண்டிய அனைத்தினையும் மாகாணசபை செய்யுமானால் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்தார்.

சிந்தித்து செயற்படுவதற்கான காலம் பிறந்துள்ளதாகவும் அதனால் அனைத்து தலைவர்களும் சிந்தித்து செயற்பட்டு மக்களுக்கு தமது கடமைகளை ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஈடாக  எங்களின் இராணுவத்துக்கு எதிராக உங்களால் முன்னெடுக்கப்படுகிற  போர்க்குற்ற விசாரணை கைவிடப்படவேண்டும், எங்கட இராணுவம் நிரந்தரமாக வடக்கில் தங்கி கொள்ளை அடிக்க பூரண சுதந்திரம் கொடுக்க  வேண்டும், அதற்கு எதிர்ப்புக் காட்டக்கூடாது பவுத்த, சிங்கள குடியேற்றத்திற்கு தமிழர் ஆதரவு குடுக்க வேணும், நாங்கள் போடுற எச்சில் இலையை  இரண்டு கைகளாலும் ஏந்தவேண்டும், நாங்கள் எது செய்தாலும் எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது இன்ன பிற மிகுதி இன்னும் யோசித்துச் சொல்லுவோம். நினைத்தால் தந்ததையும்  பிடுங்கி எடுப்போம் எதிர்ப்பின்றி திருப்பி தந்திட வேணும். 

நாங்கள் இழந்தவற்றை  உவற்றை மத்திய அரசால்  திருப்பி தர முடியுமே?முதலில நாட்டை நீங்கள்  பட்ட  கடனில இருந்து மீளுங்கோ. ஒவ்வொரு நாடாய் வந்து ஒவ்வொண்டாய் உரிமை கோரி பிடுங்கிக் கொண்டு போகப்போகுது.    தங்கட பிச்சைக்கு தன் மானத்தை இழந்து கை ஏந்துவோம் என்று கணக்குப் போடுவதுமல்லாமல் முதல்வருக்கு எதிராய் காய் நகர்த்துது. இது  விழுந்தடிச்சுக்கொண்டுபோய் சித்தி அடைந்த மாணவர்களை சந்திக்கேக்கையே நினைச்சேன் என்னவோ நடக்கப் போகுதெண்டு. இளைஞர், யுவதிகளுக்கு அபிவிருத்தி ஆசை காட்டி தன் வலையில் விழுத்தப்போறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.