Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் – மைத்திரிபால சிறிசேன

Featured Replies

இன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் – மைத்திரிபால சிறிசேன

maithri-1.jpg?resize=500%2C355
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றினால் வழங்கப்படும் எந்தவொரு சட்ட விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்குரஸ்ஸவில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பதவி வகிக்க கூடிய காலம் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டதனால் சட்ட விளக்கம் கோரியதாகவும் எத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டுமென கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிரந்தரமாக ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தாம் ஒரு போதும் திட்டமிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/60996/

  • கருத்துக்கள உறவுகள்

செல்லலாம்

செல்லுவேன்

ஆனால்

செல்லமாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான, எளிமையான ஆளப்பா. எதுக்கும்  போகமுதல் ஒருக்கா கேட்டிட்டு போவோம் எண்டு கேட்டிருக்கிறார் பாவம்.

  • தொடங்கியவர்

வீடு செல்ல தயார்

p13-1c077cd7f1ca9c415d3f9217dfa2e01901e0a6e8.jpg

 

உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்பை கௌர­வ­மாக ஏற்­கின்றேன் என்­கிறார் ஜனா­தி­பதி 

(ரொபட் அன்­டனி)

நான் நாளை அல்ல. இன்றே பத­வி­யை­விட்டு வீடு செல்லத் தயா­ராக இருக்­கின்றேன். ஜன­நா­யகம் என்­பது அது­வே­யாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்  ளார். எனது பத­விக்­காலம் தொடர்­பான உயர்  நீதி­மன்­றத்தின் தீர்ப்பை நான் மிகவும் கௌ ர­வ­மாக ஏற்­றுக்­கொள்­கின்றேன் என்றும் ஜனா  தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது டுவிட் டர் தளத்தில் பதிவு செய்­துள்ளார்.   

தன்னால் ஆறு வரு­டங்கள் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடி­யுமா என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர்­நீ­தி­மன்­றத்தின் சட்ட அபிப்­பி­ரா­யத்தை கோரி­யுள்ள நிலை­யி­லேயே அது தொடர்­பாக எழுந்­துள்ள விமர்­ச­னங்­க­ளை­ய­டுத்தே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது டுவிட்டர் தளத்தில் இந்த கருத்தை பதிவு செய்­துள்ளார்.  

தன்னால் ஆறு வரு­டங்கள் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடி­யுமா என்று உயர்­நீ­தி­மன்­றத்தின் சட்ட அபிப்­பி­ரா­யத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரி­யுள்ள நிலையில் அது தொடர்­பான சட்ட சமர்ப்­ப­ணங்கள் நேற்று முன்­தினம் ஐந்து நீதி­ய­ர­சர்­க­ளைக்­கொண்ட உயர்­நீ­தி­மன்ற அமர்வில் முன்­வைக்­கப்­பட்­டன.

அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால ஆறு வரு­டங்கள் பதவி வகிக்­கலாம் என்ற சட்ட மா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய உயர்­நீ­தி­மன்­றத்தில் வாதிட்ட நிலையில் சில சட்­டத்­த­ர­ணிகள் அவ்­வாறு முடி­யா­தென வாதிட்­டனர்.

இந்­நி­லையில் நாட்டின் அர­சியல் தளத்தில் இது தொடர்­பான சாதக பாதக விமர்­ச­னங்கள் அதி­க­ரித்­தன. இந்த பின்­ன­ணி­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் இன்றும் பதவி விலகிச் செல்ல தயார் என்று அறி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவரின் டுவிட்டர் தளத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது ""எனது பத­விக்­காலம் தொடர்­பான உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பை நான் மிகவும் கௌர­வ­மாக ஏற்­றுக்­கொள்­கின்றேன். நான் நாளை அல்ல. இன்றே பத­வி­யை­விட்டு வீடு செல்ல தயா­ராக இருக்­கின்றேன். ஜன­நா­யகம் என்­பது அது­வே­யாகும் "" என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

தன்னால் ஆறு வரு­டங்கள் ( 2021 வரை ) ஜனா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யுமா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் நீதி­மன்­றிடம் அபிப்­பி­ராயம் கோரி­யி­ருந்த நிலையில் அதனை ஆராய்­வ­தற்­காக உயர் நீதி­மன்றம் அந்த விவ­கா­ரத்தை நேற்று முன்­தினம் திறந்த நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­டது.

இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தனது பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகள் வகிக்க முடியும் எனவும் அவரது பதவிக் காலம் 6 வருடங்கள் என்பதே தனது அபிப்பிராயம் எனவும் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.