Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்

Featured Replies

 இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

Lee-Hsien-Loong.jpg

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24ம் திகதி இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கோ விதோதோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29731

  • தொடங்கியவர்
13 வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ள அரச தலைவர்
 

 image_3f26e03692.jpgசிங்கப்பூர் பிரமதரான லீ சிசெயன் லுன்க் இலங்கைக்கான 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (22) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவருக்கு நாளை (23) காலை  இராணுவ அணிவகுப்பு மற்றும் கலாசார விழுமியங்களுடனான வரவேற்பு ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடலும், சுதந்திர வர்த்தக உடனபடிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

13 வருடங்களின் பின்னர் சிங்கப்பூர் நாட்டின் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/13-வருடங்களின்-பின்னர்-இலங்கை-வந்துள்ள-அரச-தலைவர்/175-210587

  • தொடங்கியவர்

35 தூதுவர்களுடன் வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ 

 

 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் இன்று மாலை இலங்கை வந்தடைந்துள்ளார். 

sing.jpg

35 தூதுவர்கள் அடங்கிய குழுவொன்றுடனேயே சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்துள்ளார்.

_MG_0328.JPG

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று, இலங்கைக்கு விஜயம் வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளார்.

_MG_0417.JPG

http://www.virakesari.lk/article/29786

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவரை கொண்டுபோய் வெள்ளைகளை பேய்காட்டுவது போல் தலதா மாளிகையில் உள்ள ஆளை விழுங்கும் சுறா பல்லை புத்தனின் பல்லு என்று காட்டி போடதெங்கோ மனுஷன் புத்தனை அறிந்தவர் கோபம் வந்து கராட்டியில் நாலு வெட்டு போட்டு அந்த சுறா பல்லை உடைச்சு போடும் பிறகு சொரிலங்கன் சுற்றுலாத்துறை மெலிந்து போடும்  கவனம் .

  • தொடங்கியவர்

சிங்­கப்பூர் பிர­தமர் இலங்கை வருகை : விவியன் பால­கி­ருஷ்ணன், ஈஸ்­வ­ரனும் வந்­தனர்

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு நேற்று திங்­கட்­கி­ழமை இலங்­கையை வந்­த­டைந்த  சிங்­கப்பூர் பிர­தமர் லீ ஷியன் லூங் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உள்­ளிட்­ட­வர்­களை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.   

13 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் சிங்­கப்பூர் பிர­தமர் ஒருவர் இலங்­கைக்கு உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள நிலையில் அவ­ருக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அணி­வ­குப்பு மரி­யாதை அளிக்­கப்­பட உள்­ளது.

இந்த சந்­திப்­பு­களின் போது இரு நாட்டு சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்கள் தொடர்­பிலும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் சிங்­கப்­பூ­ருக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அதே போன்று இரு தரப்பு வர்த்­தக மாநாட்­டிலும் சிங்­கப்பூர் பிர­தமர் கலந்து கொண்டு சிறப்­புரை நிகழ்த்த உள்ளார். நாளை பாரா­ளு­மன்­றத்­திற்கும் விஜயம் செய்ய உள்ளார்.

சிங்­கப்பூர் பிர­த­மரின் இந்த விஜ­யத்தில் சிங்­கப்பூர் பிர­த­மரின் பாரியார் திரு­மதி லீ வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் விவியன் பால­கி­ருஸ்ணன் , வர்த்­தக மற்றும் கைத்­தொழில் அமைச்சர் எஸ் ஈஸ்­வரன் உள்­ளிட்ட குழு­வினர் கலந்து கொண்­டுள்­ளனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.