Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் வரப்பிரசாதங்களை பெற்று தமிழர்களுக்கு துரோகமிழைத்தனர் அவர்கள் பெற்ற வரப்பிரசாதங்களை விரைவில் வெளிப்படுத்துவேன்....பஷில் ராஜபக் ஷ

Featured Replies

கூட்டமைப்பின் வரப்பிரசாதங்களை பெற்று தமிழர்களுக்கு துரோகமிழைத்தனர் அவர்கள் பெற்ற வரப்பிரசாதங்களை விரைவில் வெளிப்படுத்துவேன்

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி

நேர்­கண்­டவர் : - ரொபட் அன்­டனி  

முன்­னைய அர­சாங்­கத்­திடம் வரப்­பி­ர­சா­தங்­களை பெற்­றுக்­கொண்டு தமிழ் மக்­க­ளுக்கு கூட்­ட­மைப்­பினர் செய்த துரோகம் எமக்குத் தெரியும். கூட்­ட­மைப்­பினர் பெற்ற வரப்­பி­ர­சா­தங்கள் குறித்து நான் எதிர்­கா­லத்தில் வெளிப்­ப­டுத்­துவேன். அது தெரிந்தால் கூட்­ட­மைப்பின் சில உறுப்­பி­னர்­க­ளுக்கு அந்த வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு போகவும் முடி­யாது. தமது பிள்­ளை­க­ளுக்கு வெளிநா­டு­களில் வீடு­களை பெற்­றுக்­கொ­டுத்­தமை அவர்­க­ளுக்கு கல்வி சந்­தர்ப்­பங்­களை பெற்­றுக்­கொ­டுத்­தமை, என்­பன எமக்கு தெரியும். அவற்றை நான் நேரம் வரும்­போது கூறுவேன் என்று ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் பிர­தி­நி­தியும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.  

வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு

கேள்வி: தேர்தல் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன? 

பதில்: மிகவும் கஷ்­டப்­பட்டு இந்தத் தேர்­தலைப் பெற்றோம். அதன்­படி தற்­போது தேர்தல் பிரசார செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கிறோம். கிரா­மப்­புற மக்­களை எழுப்பும் தேர்­த­லாக இது அமைந்­தி­ருக்­கி­றது.

கேள்வி: உங்கள் கட்­சியின் பல்­வேறு வேட்­பு­ம­னுக்கள்  நிரா­க­ரிக்­கப்­பட்­ட­னவே? 

 

பதில்:தொழில்­நுட்பக் கோளா­றுகள் கார­ண­மா­கவே அவ்­வாறு இடம்­பெற்­றது. நாடு முழு­வதும் புதிய கட்சி என்ற வகையில் நாங்கள் வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய் தோம். இவ்­வா­றான செயற்­பா­டு­களின் போது சில கோளா­றுகள் இடம்­பெ­று­வது வழக்கம்.

கேள்வி:உங்கள் கட்சி மக்கள் மத்­தியில் செல்­கின்­றதா? 

பதில்: நாங்கள் வீடு­வீ­டாக மக்கள் மத்­தியில் செல்­கின்றோம். அனைத்து வேட்­பா­ளர்­களும் வீடு­க­ளுக்கு சென்று இந்த தேர்தல் முறை­மையின் கீழ் வாக்­காளர் வேட்­பா­ளர்­களை அறிந்து கொள்ள வேண்டும். வேட்­பாளர் வாக்­கா­ளர்­களை அறிந்து கொள்ள வேண்டும்.  

கேள்வி: மக்கள் என்ன கூறு­கின்­றார்கள்?

பதில்:மக்கள் பல்­வேறு விட­யங்­களை கூறு­கின்­றனர். மக்கள் என்ன நிலைப்­பாட்டில் உள்­ளனர் என்­பதை பெப்­ர­வரி 10 ஆம் திகதி அறிந்து கொள்ள முடியும்.

கேள்வி: வடக்கு, கிழக்கில் உங்கள் கட்­சியின் பிர­சாரப் பணிகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன ? 

பதில்:வடக்கு, கிழக்கில் பிர­சார பணி­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கின்றோம். அர­சாங்­கத்தில் இருந்­த­போது எமக்கு கிடைக்­காத பலம் வடக்கு, கிழக்கில் தற்­போது கிடைத்­துள்­ளது.விசே­ட­மாக வடக்கில் எமக்கு பாரிய ஆத­ரவு உள்­ளது.  

கேள்வி: வேட்­பாளர் பகிர்வு தொடர் பில் உங்கள் கட்­சிக்குள் பல நெருக்­க­டிகள் ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

பதில்: அது பழைய கதை. தற்­போது அது பொருத்­த­மற்­ற­தா­கி­விட்­டது. 

கேள்வி: நீங்கள் சில விட­யங்­களை தன்­னிச்­சை­யாக செய்­த­தாக குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளனவே?

பதில்: இல்லை. அது எப்­போதும் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு. எதிர்க்­கட்­சிகள் எப்­போதும் கூறும் கதை இது­வாகும்.  

கேள்வி: ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் கொள்கை என்ன?  

பதில்: இதில் நாங்கள் மக்­க­ளுக்கு கூறு­வது, இந்த தேர்­தலை அர­சாங்கம் தொடர்­பான உங்கள் கருத்துக் கணிப்­பாக பயன்­ப­டுத்­துங்கள் .என்­ப­தாகும். அர­சாங்கம் வடக்கு மற்றும் தெற்­கிற்கு வழங்­கிய எந்த வாக்­கு­று­தி­யையும் நிறை­வேற்­ற­வில்லை. அர­சாங்கம் நன்­றாக மக்­களின் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யது என்று கரு­தினால் மக்கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கலாம். இல்லை. அர­சாங்கம் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்று கரு­தினால் எமக்கு வாக்­க­ளிக்­கலாம். முடிவு மக்­களின் கைகளில் உள்­ளது. இது தான் எமது பிர­தான கருப்­பொ­ரு­ளாக இருக்­கின்­றது.  

ஆனால் இங்கு ஒரு­வி­ட­யத்தை கூற­வேண்டும். தமிழ் மக்கள் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். மஹிந்த ராஜ­பக் ஷ தமிழ் மக்­க­ளுக்கு பாரிய சேவை­யாற்­றினார். குறிப்­பாக சமா­தா­னத்தை கொண்டு வந்­தவர் அவ­ரே­யாவார். சைனட் குப்­பியை கழுத்தில் மாட்டிச் சென்ற பிள்­ளைகள் புத்­தகப் பையை சுமக்கும் நிலையை உரு­வாக்­கினார். அச்சம் சந்­தே­க­மின்றி மக்கள் வாழும் நிலையை உரு­வாக்­கினார். சோதனை சாவ­டி­களை அகற்­றினோம். 12 ஆயிரம் முன்னாள் போரா­ளி­களை விடு­வித்தோம். யாழ்.தேவியை யாழ்ப்­பா­ணத்­திற்கு கொண்டு சென்றோம். ஏ 9 வீதியை திறந்தோம். சங்­குப்­பிட்டி பாலத்தை அமைத்தோம். அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்தோம். விவ­சாய உற்­பத்­தி­களை முன்­னேற்­றினோம்.

சில விட­யங்­களை படிப்­ப­டி­யாக செய்து கொண்டு வந்தோம். ஆனால் அவற்றை விட அதி­க­மாக செய்­வ­தாக கூறியே நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. விசே­ட­மாக அர­சியல் தீர்வை வழங்­கு­வ­தாக வாக்­கு­றுதி அளித்­தனர். ஆனால் மூன்று வரு­டங்கள் கடந்தும் இது­வரை அது தொடர்பில் உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக எமது அர­சாங்க காலத்தில் முன்­னெ­டுத்த அபி­வி­ருத்திப் பணி­களும் இடை­நி­றுத்­தப்­பட்­டன. நாம் கொண்டு வந்த சமா­தானம் தற்­போது படிப்­ப­டி­யாக மாற்றம் அடை­கி­றது. தேசிய ஒற்­று­மையே இங்கு முக்­கி­ய­மாகும்.

அந்­நி­யோன்ய நம்­பிக்கை அவ­சியம். காரணம் இனங்­க­ளுக்­கி­டையில் சந்­தேகம் ஏற்­பட்­டு­விட்டால் அது பாரிய பிரச்­சி­னை­யா­கி­விடும். நாங்கள் அந்த சந்­தே­கத்தை துடைத்­தெ­றிந்தோம். ஆனால் இந்த அர­சாங்கம் மீண்டும் அந்த நிலையை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. சிங்­கள மக்­க­ளுக்கு சந்­தேகம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போன்று தமிழ் மக்­க­ளுக்கும் சந்­தேகம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்த நிலை மாற வேண்டும். நல்­லி­ணக்கம் என்ற பெயரில் இந்த ஒற்­று­மையை குலைக்க பார்க்­கின்­றனர். நல்­லி­ணக்கம் என்ற பெயரில் இருக்­கின்ற சமா­தா­னத்தை சீர்­கு­லைக்கப் பார்க்­கின்­றனர். எனவே தமிழ் மக்கள் இந்த தேர்­தலில் சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும்.

கேள்வி:சரி. யுத்தம் முடிந்­த பின்னர் உங்கள் அர­சாங்­கத்தின் வகி­பாகம் சரி­யாக இருந்ததா?

பதில்:நாங்கள் யுத்தம் முடிந்­ததும் மக்­களின் வாழ்க்­கையை கட்­டி­யெ­ழுப்­பினோம். மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை முன்­னெ­டுத்தோம். பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்தோம். அடுத்த கட்­டத்தை நோக்கி நாங்கள் நகர்ந்­த­போது அதனை விட அதி­க­மான எதிர்­பார்ப்­புக்­களை கொடுத்து மக்­களை ஏமாற்றி விட்­டனர். தற்­போது எதிர்­வரும் காலங்­களில் செய்­வ­தாக கூறு­கின்­றனர். மூன்று வரு­டங்­களில் செய்ய முடி­யா­ததை எஞ்­சி­யுள்ள இரண்டு வரு­டங்­களில் செய்ய முடி­யுமா? 

கேள்வி:யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் அபி­வி­ருத்­தியை செய்­த­ தாக கூறு­கின்­றீர்கள்.தற்­போ­தைய நிலைமை குறித்து என்ன கூற விரும்­பு­கின்­றீர்கள்?

பதில்:உண்­மையில் தற்­போ­தைய நிலை குறித்து நான் கவ­லை­ய­டை­கின்றேன். நான் தெற்கை விட வடக்கில் அதிக வேலை செய்தேன். முகாம்­களில் வாழ்ந்­தோரை மீள்­கு­டி­யேற்­றினோம். அவர்­களை அவர்­களின் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றினோம். அப்­போது அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர். ஆனால் அந்த அனைத்து விட­யங்­களும் இன்று ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. வடக்கு மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பி­ய­துடன் அவர்­களின் பிள்­ளை­க­ளுக்கு சிறந்த கல்­வியை பெற்­றுக்­கொ­டுக்கும் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்தோம்.  

வடக்கு பிள்­ளை­களின் கல்வி தொடர்பில் பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். அதனால் இம்­முறை உயர்­தரப் பரீட்­சையில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலாம் இடத்­துக்கு வந்தார். அது நாம் இட்ட அடித்­த­ளத்தின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அது தொடர்பில் நான் பெருமை அடை­வ­துடன் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். மஹிந்த ராஜ­பக் ஷ கண்ட கனவு நன­வா­கி­யது.

ஆனால் இந்த விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. இந்த பிள்­ளைகள் இவ்­வாறு முன்­னேற்­ற­ம­டை­வது தொடர்பில் கூட்­ட­மைப்­பினர் பொறாமை கொண்­டி­ருந்­தனர். மஹிந்த ராஜ­பக் ஷ வடக்­குக்கு செய்த வேலை­களை கூட்­ட­மைப்­பினர் விரும்­ப­வில்லை. அவர்­க­ளினால் அதனை தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை.

கேள்வி: எனினும் இன்னும் காணி கள் விடு­விக்­கப்­ப­டாமல் உள்­ள­னவே?  

பதில்: நாங்கள் எமது காலத்தில் அதி­க­ளவில் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுத்தோம். இந்த காணிகள் எவையும் மஹிந்­தவின் ஆட்­சியில் எடுக்­கப்­பட்­ட­வை­யல்ல. அவற்றை மஹிந்த விரை­வாக விடு­வித்தார். நாங்கள் கண்­ணி­வெ­டி­களை அகற்­றி­விட்டு காணி­களை படிப்­ப­டி­யாக விடு­வித்தோம். ஆனால் இவர்கள் ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்­களில் அனைத்து காணி­க­ளையும் விடு­வித்­தி­ருக்­கலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு என்று கூற முற்­பட்­டனர். நாங்கள் எதிர்ப்­பில்லை. முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­குவோம். பொது மக்­களின் சொந்தக் காணி­களை அவர்­க­ளுக்கு மீண்டும் வழங்­க­வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும். அதனை நாங்கள் வலி­யு­றுத்­து­கின்றோம்.  

கேள்வி: காணாமல்போனோரின் உற­வி­னர்கள் இன்னும் வீதி­களில் போரா­டு­கின்­ற­னரே?

பதில்: நாங்கள் பர­ண­கம குழுவை நிய­மித்து இது தொடர்பில் விசா­ரித்தோம். அதனை இந்த அர­சாங்கம் குழப்­பி­யது. எமது நாட்டில் உள்­ள­வர்­க­ளினால் இதனை தேட முடி­யா­விடின் வெளி நாட்­டினர் வந்து தேட முடி­யுமா?  

கேள்வி:நல்­லாட்சி அர­சாங்கம் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை நிய­மித்­துள்­ளதே?  

பதில்:மூன்று வரு­டங்­க­ளாக அந்த அலு­வ­ல­கத்தை அமைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அலு­வ­ல­கத்தை அமைக்க மூன்று வரு­டங்கள் தேவைப்­பட்டால் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த எத்­தனை வரு­டங்கள் தேவை? இந்த அர­சாங்கம் இந்த விட­யத்தில் பொய் செய்­கின்­றது.  

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இவற்றை மறைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அன்று மக்­க­ளுக்கு எதி­ராக தமிழ்க் கூட்­ட­மைப்­பினர் அர­சாங்­கங்­க­ளிடம் பெற்ற வரப்­பி­ர­சா­தங்­களை தமிழ் மக்கள் அறிந்­து­கொண்டால் என்ன நடக்கும்? அர­சாங்­கத்­திடம் வரப்­பி­ர­சா­தங்­களை பெற்­றுக்­கொண்டு தமிழ் மக்­க­ளுக்கு செய்த சேதம் எமக்குத் தெரியும். அது எனக்கு தெரியும். கூட்­ட­மைப்­பினர் பெற்ற வரப்­பி­ர­சா­தங்கள் குறித்து நான் எதிர்­கா­லத்தில் வெளிப்­ப­டுத்­துவேன். அது தெரிந்தால் கூட்­ட­மைப்பின் சில உறுப்­பி­னர்­க­ளுக்கு அந்த மாகா­ணங்­க­ளுக்கு போக முடி­யாது. தமது பிள்­ளை­க­ளுக்கு வெளிநா­டு­களில் வீடு­களை பெற்­றுக்­கொ­டுத்­தமை அவர்­க­ளுக்கு கல்வி சந்­தர்ப்­பங்­களை பெற்­றுக்­கொ­டுத்­தமை எமக்கு தெரியும். அவற்றை நான் நேரம் வரும்­போது கூறுவேன்.

மக்­களை மீள்­கு­டி­யேற்­றும்­போது மக்­க­ளுக்கு ஒரு தண்ணீர் போத்­தலை கூட கூட்­ட­மைப்­பினர் வழங்­க­வில்லை. விநோதன் எம்.பி. மட்­டுமே அன்று வந்­தி­ருந்தார். சம்­பந்தன் இன்று எதிர்க்­கட்சி தலை­வ­ராக உள்ளார். தமிழ் மக்­க­ளுக்கு ஒரு மதகை கூட பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை. தமிழ் மக்­க­ளுக்கு அவர்­எ­தனை பெற்­றுக்­கொ­டுத்தார்? நாங்கள் மூன்று வரு­டங்­களில் பாரிய வேலைத்­திட்­டங்­களை செய்தோம்.

கேள்வி: உங்கள் ஆட்­சிக்­கா­லத்தில் கூட்­ட­மைப்­பினர் என்ன வரப்­பி­ர­சா­தங்­களை பெற்­றனர்?

பதில்:அதனை நான் தற்­போது கூற­மாட்டேன். வரப்­பி­ர­சா­தங்­களை பெற எவ்­வாறு செயற்­பட்­டனர் என்­ப­த­னையும் இன்னும் நான் கூற­வில்லை. 

ஆனால் கூட்­ட­மைப்பின் தலைவர் தமிழ் மக்­க­ளுக்கு இன்னும் எத­னையும் பெற்­றுக்­கொ­டுக்­காமல் இருந்தால் சில விட­யங்­களை நான் வெளிப்­ப­டுத்­த­வேண்­டி­யேற்­படும். எதிர்க்­கட்சித் தலைவர் நிய­மித்­துக்­கொண்ட ஜனா­தி­பதி ஒருவர் இன்று இருக்­கின்றார். அவர் எவ்­வ­ளவோ வேலைத்­திட்­டங்­களை செய்­தி­ருக்­கலாம். கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கா­விடின் இந்த அர­சாங்கம் உரு­வா­கி­யி­ருக்­காது. ஆனால் இதில் தமிழ் மக்­க­ளுக்கு என்ன பெற்­றுக்­கொ­டுத்­தனர்? கிழக்கு மக்­க­ளுக்கு எதனை பெற்­றுக்­கொ­டுத்­தனர்?

கேள்வி இந்த அர­சாங்­கத்தில் தீர்வு கிடைக்­காது என்று கூறு­கின்­றீர்­களா?

பதில்:தீர்வைப் பெற முடியும். ஆனால் எதிர்க்­கட்சித் தலைவர் அதனை பெற மாட்டார். அன்று அவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவுடன் இணைந்து செயற்­பட்­டி­ருந்தால் ஒரு தீர்­வுக்கு சென்­றி­ருக்­கலாம். ஆனால் அன்று அவர் ஆத­ரவு வழங்­க­வில்லை. மஹிந்த ராஜ­பக்ஷ எத்­தனை தடவை அழைத்தார்? அவர்கள் வர­வில்லை. இன்று மாகாண சபை உரிமை இல்­லாமல் போயுள்­ளது. இன்று கிழக்கு மாகாண சபை தேர்தல் நடை்­பெ­ற­வில்லை. மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­களை கேட்­கின்­றனர். ஆனால் மாகாண சபை உரி­மையை மறுக்க ஆத­ர­வ­ளித்­தனர். ஆளு­நரின் அதி­கா­ரங்­களை குறைக்­கு­மாறு கூறி­விட்டு தற்­போது கிழக்கு மாகாண சபை அதி­கா­ரங்­களை ஆளு­ந­ருக்கு வழங்­கி­யுள்­ளனர். இதற்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதி­ல­ளிக்­க­வேண்டும்.

 வடக்கு மாகாண சபை தொடர்பில் மக்­களின் மதிப்­பீடு என்­ன­வென்று பார்க்­க­வேண்டும். கூறிய எதுவும் வழங்­கப்­ப­ட­வில்லை. நாங்கள் மத்­திய அர­சாங்­கத்தில் இருக்­கும்­போது செய்த வேலைத்­திட்­டங்கள் மட்­டுமே உள்­ளன. விவ­சாய மற்றும் பொறி­யியல் பீடங்­களை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுத்தோம். ஆனால் கடந்த மூன்று வரு­டங்­களில் கூட்­ட­மைப்பு எதனை பெற்­றுக்­கொ­டுத்­தது? மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை குழப்­பி­யுள்­ளனர். வெங்­காய பருவ காலத்தில் வெங்­கா­யத்தை இறக்­கு­மதி செய்­கின்­றனர். பால் விற்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. பால் மா இறக்­கு­மதி வரி நீக்­கப்­பட்­டது.

நான் வடக்கின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பை தெரிந்து வேலை செய்தோம். கூட்­ட­மைப்பு எமக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்தால் மேலும் அதி­க­மாக செய்­தி­ருக்­கலாம். வடக்கில் உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­தினோம். வடக்கு மாகாண சபையை உரு­வாக்­கினோம். வடக்கு மாகாண சபை இருக்­க­வில்லை. மஹிந்த ராஜ­பக் ஷவே வடக்கு மாகாண சபையை உரு­வாக்­கினார். மஹிந்த நீட்டிய கைகளை பிடிக்­காமல் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் கூட்­ட­மைப்பு அவற்றை வெட்­டி­விட்­டது.

கேள்வி:  ஏன் சுதந்­திரக் கட்­சி­யுடன் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன இணைந்­து­கொள்­ள­வில்லை? தேர்­தலின் பின்னர் இணைந்­து­கொள்ளும் நோக்கம் உள்­ளதா?

பதில்:  ஏன் நாங்கள் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­து­கொள்­ள­வேண்டும். சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கட்டும். நாங்கள் அவர்­க­ளுடன் இணை­கின்றோம். ஜனா­தி­பதி 44 எம்.பி. க்களை வைத்து ரணிலை பிர­த­ம­ராக்­கினார். அப்­ப­டி­யானால் ஏன் தற்­போது சுதந்­திரக் கட்­சியின் ஒரு­வரை பிர­த­ம­ராக்க முடி­யாது? தேசிய சொத்­துக்­களை விற்க நாங்கள் இட­ம­ளிக்­க­மாட்டோம். அர­சியல் பழி­வாங்­கல்­களை செய்­தனர். அவர்­க­ளுடன் நாங்கள் ஏன் இணை­ய­வேண்டும்?

கேள்வி: பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பாரிய ஊழல் விவ­கா­ரங்கள் குறித்த அறிக்­கையில் உங்கள் பெயர் உங்கள் சகோ­­த­ரர்­களின் பெயர்கள் உள்­ளன? அதற்கு முகம்­கொ­டுக்க தயாரா?

பதில்: அது முன்­னரே சமர்ப்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. தற்போது தேர்தல் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைதான் அரசியல் பழிவாங்கல் என்கிறோம். எமது அரசாங்கத்தில் இருந்து தற்போதைய அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கும் எவரினதும் பெயர்கள் அந்த அறிக்கையில் இல்லை. அவர்களின் பெயர்கள் எங்கே?

கேள்வி:  12000 புலி உறுப்பினர்களை விடுவித்த உங்கள் அரசாங்கம் 200 அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்கலாமே?

பதில்: அதில் ஒரு சிக்கல் இருந்தது. அதாவது அரசாங்கத்திடம் சரணடைந்த உறுப்பினர்களையே நாங்கள் அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு விடுவித்தோம். இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள். எனவே ஒரு செயற்பாடு தேவைப்பட்டது.

எப்படியிருப்பினும் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையை வைக்கின்றேன். கடந்த மூன்று வருடங்களில் தற்போதைய அரசாங்கம் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் நீங்கள் அவர்களுடன் இருக்கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லாவிடின் எங்களுக்கு வாக்களியுங்கள். கடந்த மூன்று வருடங்களில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக தங்கள் நோக்ங்கள் நிறைவேறியதாக கருதினால் அவர்களுடன் நிற்கலாம். இல்லாவிடின் எங்களுடன் இணையலாம். எங்களுக்கு வாக்களிக்கலாம். நாங்கள் எங்கள் சேவையை மீண்டும் வழங்க தயாராக இருக்கின்றோம். ஆனால் நாடு தற்போது பின்னுக்கு சென்றுள்ளது. எனவே நிறுத்திய இடத்திலிருந்து நாங்கள் ஆரம்பிக்க முடியாது. மாறாக அதனையும் தாண்டி ஆரம்ப இடத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டியுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-01-27#page-5

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நவீனன் said:
18 hours ago, நவீனன் said:

விசே­ட­மாக அர­சியல் தீர்வை வழங்­கு­வ­தாக வாக்­கு­றுதி அளித்­தனர். ஆனால் மூன்று வரு­டங்கள் கடந்தும் இது­வரை அது தொடர்பில் உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை

நீங்கள் தமிழருக்கு செய்த அழிவுகளும்   இவர்கள் ஒத்துழைப்பு கிடைத்ததால்தான்    செய்தீர்களோ? ஒரு சந்தேகம். அதனால்தான் கேட்ட்டேன். 

அரசியல் தீர்வை நீங்கள்தான் குழப்புகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு ஒரு முடிவு சொல்லி தீர்வை வைத்துவிட்டு வந்தீர்கள் என்றால் எங்களுடைய வாக்கெல்லாம் உங்களுக்குத்தானய்யா. கண்ணாமூச்சி விளையாடாமல் சொன்னதை செய்யுங்கோ நம்புறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.