Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காபுல் தற்கொலை தாக்குதல் : பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம்

Featured Replies

காபுல் தற்கொலை தாக்குதல்  : பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம்

 

 

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150 க்கும் அதிகமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

kabul.jpg

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பழைய அலுவலகத்திற்கு அருகே இன்று பிற்பகல் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

 

ஆம்பியூலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தததாகவும் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தததாகவும் ஆரம்பத்தில் செய்திகள் தெரிவித்தன.

 

படுகாயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இந்த தாக்குதலில் பலியனோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. சோதனைச் சாவடி ஒன்றை கடந்து சென்ற குறித்த ஆம்பியூலன்ஸ் வாகனத்தின் டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த சோதனைச் சாவடியை நெருங்கியபோது திடீரென்று வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்க பதுக்கி வைத்திருந்த குண்டுகளை வாகனத்தின் சாரதி வெடிக்கச் செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

http://www.virakesari.lk/article/29995

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் ஆம்புலன்ஸ் வெடிகுண்டு தாக்குதலில் 95 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 158 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Afghan, Kabulபடத்தின் காப்புரிமைAFP

பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, காவல் சோதனை சாவடி அமைந்துள்ள வீதி ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆம்புலன்ஸ் ஒன்றை ஓட்டிச் சென்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்பு காபுல் நகரில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொன்ற தாலிபன் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.

வெளிநாட்டுத் தூதரகங்களும் காபுல் நகர காவல் தலைமை அலுவலகமும் அமைந்துள்ள அப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டபோது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இதற்கு முன்பு இயங்கி வந்த கட்டமும், ஆப்கானிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் மற்றும் ஆஃப்கன் ஹை பீஸ் கவுன்சில் (Afghan High Peace Council) எனும் தாலிபன்களுடனான பேச்சுவார்த்தைக்கான அமைப்பின் அலுவலகம் ஆகியவை சம்பவ இடத்துக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தில் உண்டான புகை மூட்டத்தை நகரம் முழுவதும் இருந்து காண முடிந்தது.

Afghan Kabul street with smoke in distanceபடத்தின் காப்புரிமைBBC AFGHAN Image captionதொலைவிலும் தெரியும் குண்டு வெடிப்பால் உண்டான புகை மூட்டம்

அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பின்போது, 2001இல் தாலிபன் அமைப்பு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், ஆஃப்கனின் கணிசமான பகுதிகள் இன்னும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன் அமைப்பின் நடவடிக்கைகள் அதிகரித்ததால் 2016இல் உயிரிழப்புகள் அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறியது. 2017ஆம் ஆண்டிலும் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

kabul attackபடத்தின் காப்புரிமைREUTERS Image captionதாக்குதலுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 176 கொல்லப்பட்டனர்.

அதற்கு முன்பு மே மாதம், காபுலில் நடந்த ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தாலிபன் அமைப்பு கூறினாலும், பாகிஸ்தான் உதவியுடன் அதன் கிளை அமைப்பான ஹக்கானி குழு நடத்தியது என்று ஆஃப்கன் அரசு கூறியது.

எனினும் ஆஃப்கனில் எந்த தீவிரவாத அமைப்புக்கும் தங்கள் உதவவில்லை என்று பாகிஸ்தான் அரசு மறுத்தது.

http://www.bbc.com/tamil/global-42845361

  • கருத்துக்கள உறவுகள்

காபுல்: ஆம்புலன்ஸ் குண்டு வெடிப்பில் பலி 95 ஆக உயர்வு - இந்தியா கண்டனம்

 

 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் ஆம்புலன்ஸ் இன்று வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ள நிலையில் காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

 
 
 
 
காபுல்: ஆம்புலன்ஸ் குண்டு வெடிப்பில் பலி 95 ஆக உயர்வு - இந்தியா கண்டனம்
 
காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பழைய அலுவலகத்தின் அருகே இன்று பிற்பகல் பயங்கரமான குண்டு வெடிப்பு சப்தம் கேட்டது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தததாகவும் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

படுகாயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

இன்று மாலை நிலவரப்படி இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. சோதனைச் சாவடி ஒன்றை கடந்து சென்ற இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக காவலர்களிடம் கூறியுள்ளார்.
 
201801272002573276_1_Gaja-2._L_styvpf.jp



அடுத்த சோதனைச் சாவடியை நெருங்கியபோது திடீரென்று வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்க பதுக்கி வைத்திருந்த குண்டுகளை டிரைவர் வெடிக்கச் செய்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இதைப்போன்ற கோழைத்தனமான - காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த கொடூரத்துக்கு காரணமானவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துயரகரமான இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் மக்களுடன் துணையாக இருப்பதுடன், இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதுடன் அவர்களின் சிகிச்சைக்கு உதவுவதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/27200257/1142564/Ambulance-bomb-attack-toll-in-Kabul-raises-to-95.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.