Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் கொல்லைப்புற ஆதிக்கம் சிறிலங்காவில் நீண்டகாலம் நீடிக்காது – சியாம் சரண்

Featured Replies

இந்தியாவின் கொல்லைப்புற ஆதிக்கம் சிறிலங்காவில் நீண்டகாலம் நீடிக்காது – சியாம் சரண்

 

shyam saranஅண்டை நாடுகளுக்குள் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து இந்தியா கரிசனை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

ஜெய்பூர் இலக்கிய விழாவில், நேற்று அவர் இந்தியா மற்றும் உலகம் என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இராணுவ மற்றும் பொருளாதார வழிகளின் மாத்திரமன்றி, விஞ்ஞான தொழில்நுட்பத் துறைகளிலும் கூட, சீனா மிகப்பெரும் சக்தியாக எழுந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நேபாளத்தில் சீனாவின் தலையீடுகள் பெரியளவில் உள்ளன. உள்நாட்டு அரசியலிலும் சீனாவின் தலையீடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

அதுபோலவே, சிறிலங்காவில் அம்பாந்தோட்டையிலும் நடக்கிறது. நாங்கள் விரும்பாவிட்டாலும், பல ஆண்டுகளாக அது உண்மையாகி வருகிறது.

சிறிலங்காவிலும், நேபாளத்திலும் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வரும் விடயத்தில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகம் மாறி விட்டது. இது எனது கொல்லைப்புறம், இங்கு நான் மட்டும் தான் ஆட்சி செய்வேன் என்று நீண்டகாலத்துக்கு கூறிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.

அதனால் நீங்கள் சீனாவுடன் போட்டியிட வேண்டும்.

உங்கள் அண்டைநாடுகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், ஏன் உங்களின் தலையீடுகளை அதிகரிக்க முடியாது? இந்தியாவுக்கு அதற்கான ஆற்றல்கள் உள்ளன.

சீனாவைப் பிடிப்பதற்கு மாத்திரமன்றி அதனை முந்துவதற்கும் கூட, இந்தியாவினால் மட்டும் தான் முடியும். அதற்கான சனத்தொகை, பரப்பளவு, ஆற்றல்கள் இந்தியாவிடம் உள்ளது. சீனாவை முந்துவதற்கு உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்று நான் நம்புகிறேன்.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளில் சீனா உலகின் இரண்டாவது பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் என்று எவராவது கூறியிருந்தால் அவரை பைத்தியம் என்று கூறியிருப்பர்.

எனவே, வாய்ப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். அதற்கான முடிவுகளை இன்றே எடுக்க வேண்டும்

சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ள, அமெரிக்கா, ஜப்பான், வியட்னாம் போன்ற நாடுகளுடன் இந்தியா இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/01/30/news/28740

23 minutes ago, நவீனன் said:

சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ள, அமெரிக்கா, ஜப்பான், வியட்னாம் போன்ற நாடுகளுடன் இந்தியா இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியனுக்கு பிச்சை எடுக்கும் புத்தி விட்டுப்போகாது! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் இராணுவ தளபதி - "சொறி சிங்கள லங்காவை சீன பக்கம் சாய்வதற்கு விடக்கூடாது."

இந்திய அரசின் முன்நாள் வெளியுறவு செயலாளர் - "சொறி சிங்கள லங்காவில் இந்திய அரசின் ஆதிக்கம் எவ்வாறாயினும், சொறி சிங்கள லங்காவின் காலில் விழுந்து கூட அடிமை ஆதிக்கமாயினும்  தொடரவேண்டும்."

இந்திய வெளியுறவு, இராணுவ, புலனாய்வு கொள்கைகளின் சுவாத்தியமான நிலை, அந்த பெரு நிலத்தில் இறைமை உடைய மக்கள் பாதுகாப்பு, தொழில்நுட்பம்,  பொருளாதாரத்தில் துறைகளில்  தமது காலில் ஊன்றி நிற்க முயற்சித்தாலும் , தீர ஆராய்ந்த பின்பும், மாற்றாரின் காலில் வீழ்ந்து பொருளாதார, தொழில் நுட்ப  அபிவிருத்தி, பாதுகாப்பு நிர்மாணத்தின் சுவாத்தியம் என்பவற்றில் பரிபூரண திருப்தியும் நிம்மதியும்.

சொறி   சிங்கள லங்கா கூட, பெண், மண், பொருள், மாணிக்கம் என்பவற்றை பேரம் பேசி தனது காலிலேயே நிற்கிறது.

அரசு சாரா சின்னச் சிறிய புலிகள் கூட, தோல்வி நிச்சயம் என்ற போதும், தமது காலிலேயே நின்றது. இதில்  கூட இந்திய அரசு தனது காலில் நிற்பதற்கு தகுதியில்லாததாகவே இருந்தது.

பிச்சை எடுப்பவன் கூட தனது காலிலேயோ, கையிலேயோ அல்லது முண்டத்திலோ (அங்கவீனமாயின்) நின்றே பிச்சை எடுப்பான்.

வெள்ளையன் சுதந்திரம் அளிப்பதாக விட்டுச் சென்றாலும், அடிமை தனத்தில் இருந்து ஹிந்தியா தேசம்  விடுபடவில்லை.

அண்மையில் கூட CIA சீனாவையும் ரசியாவையுமே அமெரிக்காவின் 21ம் நூதண்டின்  சவாலாக குறிப்பிட்டது.

நாய்க்கு கூட நக்குத்தண்ணிக்கு தகுதியுண்டு, ஏனெனில் அது அதை சிறப்பாக செய்யும்.

இதில் சீனாவுக்கு இணையாக பரிணமிக்க கிந்தியவிற்கு நக்குத்தண்ணி தகுதியாவது உண்டா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.