Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருபது மில்லியன் இலஞ்சத்துக்கு நூறு கோடி நட்ட ஈடு

Featured Replies

இருபது  மில்லியன் இலஞ்சத்துக்கு நூறு கோடி நட்ட ஈடு

 

 

தற்போதைய அரசினால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு மாவை சேனாதிராஜா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

1_Sivasakthi.jpg

அவ்வாறு ஆதரவு தெரிவிப்பதற்காக இருபது மில்லியன் ரூபாவை மாவை சேனாதிராஜா உட்பட மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலடியாக மாவை சேனாதிராஜா தனது சட்டத்தரணிகள் மூலம் சிவசக்தி ஆனந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், தவறானதும் உண்மையற்றதுமான குற்றச்சாட்டுக்களைத் தம் மீது சுமத்தியமைக்காக, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நூறு கோடி ரூபாவை நட்ட ஈடாகத் தமக்குச் செலுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அவ்வாறு செலுத்தத் தவறினால் அதை வட்டியுடன் சட்டப்படி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/30223

Edited by நவீனன்

தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களுடன், தமிழ் மக்கள் ஒருவரும்  கொல்லப்படவில்லை என்று கூறியவர்களுடன் கூடிக் குலாவும் மாவை இப்போது வெகுண்டெழுந்திருப்பது அவருக்கு தமிழ் மக்கள் மேல் அக்கறை இல்லை என்பதை தெளிவாக கூறி நிற்கிறது!

குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மட்டும் பணம் வாங்கிய சூழல், நேரம் அனைத்தும் இதுவொரு இலஞ்சம் என்பதை தெளிவாக கூறி நிற்கிறது!

மாவை வழக்கு போட்டால் பல குட்டுகள் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

மாவை வழக்கு போட்டால் பல குட்டுகள் வெளிவரும்.

சிவசக்தி ஆனந்தனிடம் நூறு கோடி இருக்காது தானே? மாவைக்கு வழக்கு போடட்டும்.

  • தொடங்கியவர்
  • சிவ­சக்­தி­யி­டம் ரூ.100 கோடி கோரி மாவை எம்.பி. கடி­தம்
625.320.560.350.160.300.053.800.868.160.

சிவ­சக்­தி­யி­டம் ரூ.100 கோடி கோரி மாவை எம்.பி. கடி­தம்

On Feb 3, 2018
 

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ந.சிவ­சக்தி ஆனந்­த­னின் பொய்­யா­ன­தும், அவ­தூறு ஏற்­ப­டுத்­தும் கூற்­றால் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அதற்கு இழப்­பீ­டாக 100 கோடி ரூபாவை அவர் இரண்டு வாரங்­க­ளுக்­குள் வழங்­க­வேண்­டும். இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வின் சட்­டத்­த­ர­ணி­க­ளால் சிவ­சக்தி ஆனந்­த­னுக்கு கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 15 பேருக்கு 2 கோடி ரூபா கையூட்டு வழங்­கப்­பட்­டது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ந.சிவ­சக்தி ஆனந்­தன் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ரது இந்­தக் கூற்­றுத் தொடர்­பில் இரண்டு நாள்­க­ளுக்­குள் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக சட்­டத்­த­ர­ணி­கள் ஊடாக கடி­தம் அனுப்பி வைக்­கப்­ப­டும் என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னுக்கு நேற்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது-
நீங்­கள் எங்­கள் கட்­சிக்­கா­ர­ருக்கு எதி­ராக பொய்­யா­ன­தும் அவ­தூறு ஏற்­ப­டுத்­தும் கூற்­றைத் தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்­றீர்­கள்.

கடந்த டிசெம்­பர் 19ஆம் திக­தி­யி­லி­ருந்து அதன் பின்­ன­ரும் இவ்­வாறு கூறி­யுள்­ளீர்­கள். எங்­கள் கட்­சிக்­கா­ர­ரும் அவ­ரு­டன் வேறு சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், தலா 20 மில்­லி­யன் ரூபாவை, 2018ஆம் ஆண்டு வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க அர­சி­ட­மி­ருந்து இலஞ்­ச­மா­கப் பெற்­றுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளீர்­கள்.

 
 

எங்­கள் கட்­சிக்­கா­ர­ரும் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இந்­தக் குற்­றச்­சாட்டை பகி­ரங்­க­மாக மறுத்­துள்­ள­னர். அதன் பின்­ன­ரும் நீங்­கள் இத­னைத் தொடர்ந்து கூறி­வ­ரு­கின்­றீர்­கள். எங்­கள் கட்­சிக்­கா­ரர் சொல்­ப­வற்றை நீங்­கள் கவ­னத்­தில் எடுக்­கா­மல், இந்­தக் கூற்று பொய்­யா­னது என்று தெரிந்து கொண்­டும், குரோ­தம் கார­ண­மாக இத­னைத் தெரி­வித்து வரு­கின்­றீர்­கள்.

எங்­கள் கட்­சிக்­கா­ரர் சமூ­கத்­தில் மிகப்­பெ­ரும் மதிப்­பில் உள்­ள­வர். அவர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் இருக்­கின்­றார். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வும் உள்­ளார். அவ­ரின் சேவை கார­ண­மாக பல தேர்­தல்­க­ளில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளார்.

உங்­க­ளு­டைய பொய்­யா­ன­தும் அவ­தூறு பரப்­பும் கூற்­றுக்­க­ளால் பொது­மக்­கள் முன்­னி­லை­யில், அவ­ரது மதிப்­புக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. தேர்­தல் நேரத்­தில் நீங்­கள் கூறும் பொய்­யா­ன­தும் அவ­தூறு பரப்­பும் கூற்று அவ­ரைப் பெரி­தும் பாதித்­துள்­ளது.

உங்­க­ளின் போலி­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளால் அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் அவ­மா­னம் மிகப் பெரி­ய­தா­யி­னும், எங்­கள் கட்­சிக்­கா­ரர் அவ­ருக்கு ஏற்­பட்ட பாதிப்­பை­யும் இழப்­பை­யும் ஈடு­செய்­வ­தற்­காக ஒரு பில்­லி­யன் ரூபாவை உங்­க­ளி­ட­மி­ருந்து கோரு­கின்­றார்.

உங்­க­ளி­ட­மி­ருந்து இந்­தத் தொகையை இழப்­பீ­டாக எங்­கள் கட்­சிக்­கா­ர­ருக்கு, கடி­தம் கிடைத்து இரண்டு வாரங்­க­ளுக்­குள் கொடுக்­கும்­படி தெரி­விக்­கின்­றோம். குறித்த கால எல்­லைக்­குள் நீங்­கள் கொடுக்­கா­மல் தாம­த­மாக்­கும் பட்­சத்­தில் அந்­தத் தொகையை வட்­டி­யு­டன் பெற­வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தை­யும் அறி­யத் தரு­கின்­றோம் – என்­றுள்­ளது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னுக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட கடி­தத்­தின் பிரதி தேர்­தல்­கள் ஆணை­யா­ள­ருக்­கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/66459.html

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

சிவசக்தி ஆனந்தனிடம் நூறு கோடி இருக்காது தானே? மாவைக்கு வழக்கு போடட்டும்.

இதுவரை ஏமாறிய தமிழ் மக்கள் எத்தனை கோடி ரூபா கேட்டு வழக்கு போட வேண்டும்  இவர்களை நம்பி  ஆனால் இப்ப கோடிகள் தான் புழங்குது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.