Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்பை கவிழ்ப்­ப­தற்கு பல ராஜ­பக்சாக்­கள் கங்­க­ணம்!!

Featured Replies

  •  
  • கூட்­ட­மைப்பை கவிழ்ப்­ப­தற்கு பல ராஜ­பக்சாக்­கள் கங்­க­ணம்!!
mavai-senathiraja-350-news-547x400.jpg

கூட்­ட­மைப்பை கவிழ்ப்­ப­தற்கு பல ராஜ­பக்சாக்­கள் கங்­க­ணம்!!

உள்­ளூ­ராட்சித் தேர்­தலைச் சாட்­டாக வைத்து தென்­னி­லங்­கை­யில் ஆட்­சியைக் கவிழ்க்க வேண்­டும் என்று மகிந்த ராஜ­பக்ச கங்­க­ணம் கட்­டிச் செயற்­பட்டு வரு­கின்­றார். அதே­போல வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உடைத்­தெ­றிய வேண்­டும் என்று இங்­கும் பல ராஜ­பக்­சக்­கள் மும்­ம­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

இவ்­வாறு தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை. சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார். மானிப்­பாய் பிர­தேச சபைக்­கான தேர்­தல் அறிக்கை வெளி­யீட்டு நிகழ்வு மானிப்­பாய் கலா­சார மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது-,

வடக்­கில் தான் நிகழ்த்­திய போர்க்­குற்­றத்தை மறைக்­க­வும், ஆட்­சி­யில் இருந்த போது அவ­ரும் அவ­ரது குடும்­ப­மும் செய்த ஊழல் மோச­டி­களை மறைக்­க­வும் கூட்­டாட்­சியை எப்­ப­டி­யா­வது கவிழ்த்து விட வேண்­டும் என்ற நோக்­கில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச பல முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்.

நாம் மகிந்­த­வின் கொடூர ஆட்­சியை முடி­வுக்கு கொண்டு வந்து ஆட்சி மாற்­றத்தை இந்த நாட்­டில் கொண்டு வந்­தோம். கடந்த அரச தலை­வர் தேர்­த­லின் போது கூட இவ்­வா­றான பரப்­பு­ரைக் கூட்­டங்­களை நாம் நடாத்த வில்லை.

தேர்­த­லுக்கு ஒரு வாரத்­துக்கு முன்­னரே மகிந்­தவை தோற்­க­டிக்க மைத்­தி­ரியை ஆத­ரிக்க மக்­க­ளி­டம் கோரி­னோம். நாம் எமது பாதை­யில் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கும் போது எம்­மீது திட்­ட­மிட்ட பழி­க­ளை­யும், பொய்­க­ளை­யும் கூறி சிலர் விச­மத்­த­ன­மான செயல்­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­னர்­னர்.

கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த என்ற கய­வன் தான்­தான் இம்­மு­றை­யும் வெற்றி பெறு­வேன் என்று ஆனந்­தக் களிப்­பில் இருந்த போது எதிர்­பா­ராத வித­மாக தோல்­வி­ய­டைந்­தார். கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்த அவர் தாம் அர­சி­யல் தீர்வை வழங்க இருந்­த­தா­க­வும் அது தொடர்­பாக சம்­பந்­தனை அழைத்த போது அவர் பேச வர­வில்லை என்று அப்­பட்­ட­மான பொய்யை கூறிச் சென்­றி­ருக்­கின்­றார்.

மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் நாம் உமது உரி­மை­கள் தொடர்­பி­லும் எமக்­கான அர­சி­யல் ரீதி­யான தீர்­வினை பெறு­வது தொடர்­பாக அவ­ரு­டன் சந்­திப்­புக்­களை மேற்­கொண்ட போது அவர் எம்மை உதா­சீ­னம் செய்து தீர்வு பற்­றிய பேச்­சுக்கு இட­ம­ளிக்­காது வந்­தார். இது­தான் உண்­மை­யில் நடந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை எடுத்த எடுப்­பில் விமர்­சிக்­கும் கஜேந்­தி­ர­கு­மார், ஆனந்­த­சங்­கரி போன்­றோர் இது வரை காலத்­தில் தமிழ் மக்­க­ளுக்­காக இறங்கி பணி­யாற்றி அவர்­க­ளது சட்­டை­யில் புழுதி பட்­டி­ருக்­கின்­றதா? இந்த இலட்­ச­ணத்­தில் நாம் ஒன்­றை­யும் மக்­க­ளுக்கு செய்­ய­வில்லை என்று எம்மை விமர்­சித்து வரு­கின்­றார்.

ஜி.ஜி.பொன்­னம்­ப­லம் பிர­சித்தி பெற்ற சட்­டத்­த­ரணி. ஆனால் அவ­ரது பேரன் கஜேந்­தி­ர­கு­மார் சட்­டத்­த­ர­ணி­கள் அணி­யும் கறுப்பு கோட்ஸ் அணிந்­ததை நான் இன்­று­வரை காண­வில்லை. ஆனால் அவ­ரு­டன் இருக்­கும் சில சின்ன சட்­டத்­த­ர­ணி­கள் ஏதோ எல்­லாம் கதைக்­கின்­ற­னர்.

வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்­கை­யில் என்ன இருக்­கின்­றது என்­பதை முழு­மை­யாக படித்து அறி­யாது தங்­க­ளுக்கு ஏற்­ற­வ­கை­யில் கருத்­துக்­களை கூறு­கின்­ற­னர். இவ்­வா­றான மனோ நிலை­யில்­தான் சிலர் உள்­ள­னர்.

மேடை­க­ளில் கூக்­கு­ர­லி­டு­ப­வர்­கள் கேட்­கின்­ற­னர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இத்­தனை நாள்­க­ளாக மக்­க­ளுக்கு என்ன செய்­தது என்று. அவர்­க­ளுக்கு இப்­போது பதில் அளிக்­கின்­றேன். ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் இது­வரை கால­மும் விடு­விக்­கவே முடி­யாது என்று கூறி­வந்த மயி­லிட்டி துறை­மு­கம் மற்­றும் அதனை அண்­டிய காணி­கள், கேப்­பாப்­பி­லவு பகு­தி­யில் ஒரு­ப­குதி, மேலும் பல காணி விடு­விப்­புக்­கள், மீள்­கு­டி­யேற்­றம், அதன் விளை­வாக 50 ஆயி­ரம் கல்­வீ­டு­கள் நடப்­பாண்­டும் கிடைத்­துள்­ளது. இதனை விட முக்­கி­ய­மாக அர­சி­யல் தீர்­வின் ஆரம்ப படி­யில் உள்­ளோம் – என்­றார்.

http://newuthayan.com/story/66885.html

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நவீனன் said:

ஐயா சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் மகிந்தவுக்கு வாக்களித்தனர். தமிழ்., முஸ்லிம் வாக்குகளால் மைத்திரி _ரனில் கூட்டரசு சாத்தியமானது.

தேர்­த­லுக்கு ஒரு வாரத்­துக்கு முன்­னரே மகிந்­தவை தோற்­க­டிக்க மைத்­தி­ரியை ஆத­ரிக்க மக்­க­ளி­டம் கோரி­னோம். நாம் எமது பாதை­யில் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கும் போது எம்­மீது திட்­ட­மிட்ட பழி­க­ளை­யும், பொய்­க­ளை­யும் கூறி சிலர் விச­மத்­த­ன­மான செயல்­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­னர்­னர்.

அதெப்படி? கஜேந்திரனில் இருந்து சுரேஸ் வரை கட்சியால்  விலக்கப்பட்டுள்ளனர். அல்லது விலகி உள்ளனர். அதைப்பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் சிலர் விசமத்தனமாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்று தேர்த்தல் நெருங்கும் போது அங்கலாய்ப்பது ஏன்?

கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த என்ற கய­வன் தான்­தான் இம்­மு­றை­யும் வெற்றி பெறு­வேன் என்று ஆனந்­தக் களிப்­பில் இருந்த போது எதிர்­பா­ராத வித­மாக தோல்­வி­ய­டைந்­தார். கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்த அவர் தாம் அர­சி­யல் தீர்வை வழங்க இருந்­த­தா­க­வும் அது தொடர்­பாக சம்­பந்­தனை அழைத்த போது அவர் பேச வர­வில்லை என்று அப்­பட்­ட­மான பொய்யை கூறிச் சென்­றி­ருக்­கின்­றார்.

மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் நாம் உமது உரி­மை­கள் தொடர்­பி­லும் எமக்­கான அர­சி­யல் ரீதி­யான தீர்­வினை பெறு­வது தொடர்­பாக அவ­ரு­டன் சந்­திப்­புக்­களை மேற்­கொண்ட போது அவர் எம்மை உதா­சீ­னம் செய்து தீர்வு பற்­றிய பேச்­சுக்கு இட­ம­ளிக்­காது வந்­தார். இது­தான் உண்­மை­யில் நடந்­தது.

மிக உண்மையான கருத்து. பேச்சுவார்த்தையின் தோல்வியின் பின்னராவது மகிந்தவின் முகத்திரையை கிழிக்க முயலவில்லை. அதற்கும் பிரபாகரன் தான் தேவை போலுள்ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை எடுத்த எடுப்­பில் விமர்­சிக்­கும் கஜேந்­தி­ர­கு­மார், ஆனந்­த­சங்­கரி போன்­றோர் இது வரை காலத்­தில் தமிழ் மக்­க­ளுக்­காக இறங்கி பணி­யாற்றி அவர்­க­ளது சட்­டை­யில் புழுதி பட்­டி­ருக்­கின்­றதா? இந்த இலட்­ச­ணத்­தில் நாம் ஒன்­றை­யும் மக்­க­ளுக்கு செய்­ய­வில்லை என்று எம்மை விமர்­சித்து வரு­கின்­றார்.

ஜி.ஜி.பொன்­னம்­ப­லம் பிர­சித்தி பெற்ற சட்­டத்­த­ரணி. ஆனால் அவ­ரது பேரன் கஜேந்­தி­ர­கு­மார் சட்­டத்­த­ர­ணி­கள் அணி­யும் கறுப்பு கோட்ஸ் அணிந்­ததை நான் இன்­று­வரை காண­வில்லை. ஆனால் அவ­ரு­டன் இருக்­கும் சில சின்ன சட்­டத்­த­ர­ணி­கள் ஏதோ எல்­லாம் கதைக்­கின்­ற­னர்.

வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்­கை­யில் என்ன இருக்­கின்­றது என்­பதை முழு­மை­யாக படித்து அறி­யாது தங்­க­ளுக்கு ஏற்­ற­வ­கை­யில் கருத்­துக்­களை கூறு­கின்­ற­னர். இவ்­வா­றான மனோ நிலை­யில்­தான் சிலர் உள்­ள­னர்.

சரி ஒருபேச்சுக்கு யாருக்கும் எதுவுமே புரியவில்லை என வைத்துக்கொள்வோம். எப்படி உங்கள் தலைவரால் 2016 முடிவில் தமிழர்களுக்கு தீர்வு வரும் என சொன்னீர்கள்?? எப்போ தீர்வு வருமென இன்னுமொரு திகதியை சொல்ல உங்களுக்கு துணிவும் தகுதியும் உள்ளதா??

மேடை­க­ளில் கூக்­கு­ர­லி­டு­ப­வர்­கள் கேட்­கின்­ற­னர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இத்­தனை நாள்­க­ளாக மக்­க­ளுக்கு என்ன செய்­தது என்று. அவர்­க­ளுக்கு இப்­போது பதில் அளிக்­கின்­றேன். ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் இது­வரை கால­மும் விடு­விக்­கவே முடி­யாது என்று கூறி­வந்த மயி­லிட்டி துறை­மு­கம் மற்­றும் அதனை அண்­டிய காணி­கள், கேப்­பாப்­பி­லவு பகு­தி­யில் ஒரு­ப­குதி, மேலும் பல காணி விடு­விப்­புக்­கள், மீள்­கு­டி­யேற்­றம், அதன் விளை­வாக 50 ஆயி­ரம் கல்­வீ­டு­கள் நடப்­பாண்­டும் கிடைத்­துள்­ளது. இதனை விட முக்­கி­ய­மாக அர­சி­யல் தீர்­வின் ஆரம்ப படி­யில் உள்­ளோம் – என்­றார்.

இதற்கும் கூட்டமைப்பு காரணமெனில் மகிழ்ச்சி. கேப்பப்புலவு மக்கள் வருட கணக்காக போராடுகிறார்கள். அவர்களுக்கான தீர்வை எதிர்கட்சியாக இருந்தும் எந்த வித தீர்வையும் அவர்கள் (சில இடங்களை  தமது சொந்த போராட்டம் மூலம் பெற்றதை தவிர) பெறவில்லை.
கட்சியில் இருக்கும் அராஜகதனத்தால் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டு­ள்ளனர் அல்லது வெளியேறியுள்ளனர். இது நிறுவப்பட்ட உண்மை.

தன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்கள் கொள்கைக்களுக்காக வாழ்ந்தார்கள். தமது இன்னுயிரை வழங்கினார்கள்.மக்களால் பாராளுமன்றம் அனுப்பப்பட்ட நீங்களோ பல பொய் வாக்குறிதிகளை வழங்கி இனவாத சிங்கள அரசுக்கு துணை போகாதீர்கள் தயவு செய்து. நன்றி ஐயா.

http://newuthayan.com/story/66885.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.