Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடந்த வாரம் திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த பொறியாளர், அந்த ஊரின் சிறப்பான 'இருட்டுக்கடை அல்வா'வை வாங்கி வந்து கொடுத்தார்..

பொதியை திறந்து சாப்பிட்டால், என்ன ஒரு சுவையோ சுவை.. ! barbecue.gif

 

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி...

இக்கடையை 1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள்.

இருட்டுக்கடை என்று பெயர் வரக் காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு மண்ணெண்ணெய் விளக்கு அகன்று ஒரு 200 Watts பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. கடைக்கு எந்த விளம்பரமும் கிடையாது.. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம்.

மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த இருப்பும் காலியாகிவிட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.

 

Irratu+Kadai+Halwa+1.JPG

இருட்டுக்கடை

 

 

photo4jpg.jpg17_SM_HALWA_5

அல்வா வாங்க வரிசையில் காத்திருக்கும் கூட்டம்...

 

 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.