Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

Featured Replies

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

 
அ-அ+

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kaalaa #April27 #Superstar #thalaivar

 
 
 
 
ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’
 
 
சென்னை:
 
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்துள்ள காலா படத்தின் படபிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. அதேசமயம் டைரக்டர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் 2-ம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் வெளிவரும் என்பதில் பெரும் குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
2.0 வின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் நிறைவடையாததால் காலா படம் முன்னதாக வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது. #Kaalaa #April27 #Superstar #thalaivar

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/10192252/1145245/Rajinis-Kaalaa-to-be-released-on-April27.vpf

  • கருத்துக்கள உறவுகள்

படு தோல்வி படமாக அமையும் .

படம் நல்லா இருந்தால் கூட .

யார் யாரை பகைக்க கூடாதோ அவ்வளவு பேரையும் கிழவர் பகைத்து கொண்டு விட்டார் .

  • தொடங்கியவர்

"2.0 படத்தின் சில காட்சிகளும், 'காலா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பும்!" #Kaala

 
 

முதலில் 'எந்திரன் -2' என்று வர்ணிக்கப்பட்ட  '2.0' படத்தின் பூஜை போடப்பட்டு கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென 2015-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று 'கபாலி' படத்துக்கு  பூஜை போடப்பட்டு, சென்னையில் படப்பிடிப்பும் துவங்கியது. அதன்பின் '2.0' படத்தின் ஷூட்டிங் நைல்நதியாய் நீ...ண்டு கொண்டே இருந்தது. 'கபாலி' படத்தைப் பொசுக்கென முடித்து விசுக்கென வெளியிட்டார்,  பா.ரஞ்சித். 'எங்கள் தயாரிப்பில் எத்தனையோ இயக்குநர்கள் எத்தனையோ படங்களை இயக்கி இருக்கின்றனர். எஸ்.பி.முத்துராமனுக்குப் பிறகு என் இதயம் கவர்ந்தவர், தம்பி ரஞ்சித்' என்று பாராட்டுமழை பொழிந்து உச்சிமுகர்ந்தார், 'கலைப்புலி' எஸ்.தாணு. ஒரே நேரத்தில் ஒரே இயக்குநருக்கு இரண்டு படங்களுக்குக் கால்ஷீட் கொடுப்பதை தவிர்த்துவந்த ரஜினி, 'கபாலி'க்கு பிறகு 'காலா'வை கொடுத்து ரஞ்சித்துக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார். மும்பை பின்புலத்தில் அமைந்த கதை என்பதால், அங்கே தாராவியில்  'காலா' படப்பிடிப்பு துவங்கியது  ரஜினி ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கவந்த  மக்கள் கூட்டத்தின் நெருக்கம் அதிகமாகவே போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது. 'கபாலி' படத்தை மலேசியாவில் படமாக்கியபோது இதேமாதிரி மக்கள் அலைஅலையாய் வந்தனர். அந்த நிலையை மாற்றுவதற்காக சென்னை மோகன் ஸ்டுடியோவில் மலேசியாவைப் போலவே செட்போட்டுப் படமாக்கினார்கள். அதுபோலவே, 'காலா'வில் இடம்பெறும் முக்கியமான காட்சிகளை மும்பையில் படமாக்கும்போது ஜனநெரிசல் இடையூறாக இருந்ததைத் தவிர்க்கும் பொருட்டு சென்னையில் ஈவிபி ஸ்டுடியோவில் தாராவியைப் போலவே செட்போட்டுப் படமாக்கினார், ரஞ்சித். இப்போது 'காலா' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் '2.0' படத்தின்  கிராஃபிக்ஸ் வேலைகள் சீனப்பெருஞ்சுவர் ரேஞ்சுக்கு உயர்ந்துகொண்டே செல்வதாகச் சொல்கிறார்கள்.

ரஜினி 2.0

 

தனுஷ் தயாரிப்பாளராக இருக்கும் 'காலா' படத்தை '2.0' படத்துக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்தால் '2.0' படத்தின் தயாரிப்பாளர் 'லைக்கா' சுபாஷ்கரன் கோபித்துக் கொள்வாரே... என்று யாராவது வருத்தப்பட்டால் அவர்களின் அறியாமைக்கு 'வெரி ஸாரி' பதிலைத்தான் தரமுடியும். ஏனென்றால் 'சிவாஜி' படத்தில் 'சிவாஜியும் நான் தான்... MGRம் நான் தான்...' என்று  ரஜினி ஸ்டைலாக  சொல்வது போல் இப்போது 'காலா'  தயாரிப்பாளரும் நானே... '2.0' தயாரிப்பாளரும் நானே...' என்று கூலாக கூவிக்கொண்டு இருக்கிறார், 'லைக்கா' சுபாஷ்கரன். '2.0' படத்திற்கு முன்பாக, 'காலா' ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஆனால், இதை முன்கூட்டியே திட்டமிட்டது, 'லைக்கா' நிறுவனம்தான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே  'காலா' படத்துக்கு முன்கூட்டியே அட்வான்ஸ் பணம் கொடுத்து உலகம் முழுக்க வெளியிடும் விநியோக உரிமையைப் பெற்றுவிட்டது லைக்கா. அதுசரி '2.0'  ப்ளஸ் 'காலா' படங்களின் உண்மை நிலை என்ன?

'2.0' திரைப்படம் 2015-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பு 2017-ஆம் ஆண்டோடு முடிந்தது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில்  இரண்டே நாளில் டப்பிங்கைப் பேசி முடித்தார், ரஜினி. அதன்பிறகு ஆரம்பிக்கப்பட்ட '2.0' படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் வெளிநாட்டில் அமெரிக்கா, லண்டன் இடங்களிலும், சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ, நேக் ஸ்டுடியோவிலும் நடந்து வருகிறது. முதலில் ஜனவரி 26-ஆம்தேதி உறுதியாக ரிலீஸ் செய்வதாக முடிவுசெய்யப்பட்டது. புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய டெக்னீஷியன்களைக் கொண்டு ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உருவாக்கினார், ஷங்கர். இங்கே கோடம்பாக்கம் கதை டிஸ்கஷனில் கலந்து கொள்பவர்கள் அந்தப்பட கதையை வேறு சினிமா கம்பெனியில் உளறுகிற மாதிரி வெளிநாட்டு டெக்‌னீஷியன்களும் டங் ஸ்லிப்பாகி அங்கே சொல்லிவிட, '2.0' படத்தில் இடம்பெற்ற முக்கியமான கிராஃபிக்ஸ் காட்சிகள் போலவே  டிசம்பர் மாதம் வெளியான ஹாலிவுட் படத்தில் வெளிவந்துவிட்டதால் படுடென்ஷன் ஆகிவிட்டதாம் ஷங்கர் டீம். இதனால், கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான நேரம் இன்னும் அதிகம் தேவை என்பதல், ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் இருந்த படத்தின் வெளியீட்டு தேதி, இப்போது தள்ளிப்போயிருக்கிறது. எனவேதான், தற்போது 'காலா' படத்தை வெளியிடலாம் என்று முடிவில், 'ஏப்ரல் 27' என்ற தேதியையும் அறிவித்திருக்கிறார், நடிகர் தனுஷ்.

காலா - ரஜினிகாந்த்

 

'2.0' படத்துக்கு ரஜினி டப்பிங் பேசியதே சினிமாவில் பலருக்கு தெரியாது. நேக் ஸ்டுடியோவுக்கு 'காலா'பட டப்பிங் பேசுவதற்காக வந்தபோது  உலகம் முழுக்க அந்த செய்தியும், போட்டோவும் பரவிவிட்டது. முதல்நாள் காலை 9 மணிக்கு வந்தவர் 'காலா' படத்துக்கான டப்பிங்கை பேசினார், மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் ஒய்வெடுத்தார் அதன்பின் சரியாக  2.30 மணிக்குப் பேச ஆரம்பித்தவர் 5 மணிக்கு முடித்துவிட்டார். தன் வேலை முடிந்துவிட்டது என்று உடனே வீட்டுக்குச் செல்லவில்லை அதன்பிறகு அன்று காலையில் இருந்து தான் பேசிய டயலாக்குகள் சரியாக வந்து இருக்கிறதா? என்று சரி பார்த்த பின்னரே வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இதுவரை மொத்தம் இரண்டரை நாட்களில் முழுப்படத்துக்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார், ரஜினி. 'காலா' படத்தில் நடித்து இருக்கும் நடிகர், நடிகைகளில் பெரும்பாலானவர்கள் தங்களில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசிவிட்டனர். குறிப்பாக சமுத்திரக்கனி, தாஸ்பாண்டியன் பேசினார்கள். 'காலா' படத்தின் முக்கியமான வில்லனான நானா படேகர் இந்தி பதிப்பில் மட்டும் சொந்தகுரலில் பேசுகிறார். தமிழ், தெலுங்குக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியிருக்கிறார். தற்போது 'காலா' படத்தின் 'ட்ரிம்மிங்' வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ரஜினியின் '2.0' படத்தின் தெலுங்கு உரிமையை ஆசியன் பிலிம்ஸ்  61 கோடிக்கு விநியோக உரிமையை பெறுவதற்கு முன்கூட்டியே விலைபேசி இருக்கிறது. அதுபோல கேரளாவில் 15 கோடிக்கும், கர்நாடகாவில் 12 கோடிக்கும் விலைபேசி வருகின்றனர். குறித்த நேரத்தில் '2.0' ரிலீஸ் ஆகாமல் போனால் ரசிகர்கள் மற்றும்  திரையரங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதைத் தவிர்க்கத்தான், '2.0' படத்திற்குக் குறித்து வைத்திருந்த தேதியில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் கணக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான தியேட்டர்களை இப்போதே  பரபரப்பாக ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது, லைக்கா நிறுவனம்.    

https://cinema.vikatan.com/tamil-cinema/116077-reasons-of-rajinis-kaala-release-date-announcement.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

காலா பற்றிய 8 ரகசியங்கள்! - ஆனந்த விகடன் பேட்டியில் பா.இரஞ்சித் #KaalaInAV

 
 

அரசியல் என்ட்ரி, கேங்ஸ்டர் சினிமா, 2.0 என 3டி எதிர்பார்ப்பில் இருக்கிறார் ரஜினி. அதில் ஒன்றான ‘காலா’ பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் படங்கள் எதிர்வரும் ஆனந்த விகடன் இதழில் இடம்பெறுகிறது. அதில் ‘காலா’ இயக்குனர் பா.இரஞ்சித் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் பற்றி ஒரு டீசர் கட் இங்கே...  

Kaala

 

1) மும்பை தாராவியில் கள ஆய்வு மற்றும் திரைக்கதை இறுதி வடிவமைப்புக்குப் பின் மும்பை  கேங்க்ஸ்டர் கதையைத்தான் எழுதிக் கொண்டு வருவார் இரஞ்சித் என ரஜினி எதிர்பார்த்திருக்க, இயக்குநர் விவரித்ததோ... ரஜினியே எதிர்பாராதது! அதற்கு ரஜினியின் ரியாக்‌ஷன், ”இப்படி ஒண்ணை நான் எதிர்பார்க்கவே இல்லையே டைரக்டர் சார். ஆனா நல்லா இருக்கு!” அப்படி என்ன சொன்னார் இரஞ்சித்? 

2) ’கபாலி’க்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது படத்தை இயக்கும் படத்தை இரஞ்சித்துக்கு எப்படி கொடுத்தார் ரஜினி? இதை இரஞ்சித்தே ரஜினியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி சொன்ன பதில்..?! 

3) ’காலா’-வுக்கு மூன்று பெயர்க்காரணங்கள்.. அவை என்ன? 

4) படத்தில் ரஜினி காதாபாத்திரத்தின் பெயர் காலா சேட்டு. அவர் தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக வருகிறார்? படத்தில் ரஜினியின் மனைவி பெயர் செல்வி. ‘செல்வி’யாக நடித்திருப்பவர் யார்? 

kaala

5) ’கபாலி’யைப் பற்றிய நியாயமான விமர்சனமான இரஞ்சித் சொல்லும் அந்த விஷயம்... ஒவ்வொரு ரஜினி ரசிகனும்.... சினிமா அபிமானியும் முழு மனதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்! 

6) பிரதான காட்சிகள் மும்பை தாராவியிலேயே படமாக்கப்பட்டாலும், சில காரணங்களுக்காக சென்னையில் ‘தாராவி’ செட் அமைக்கப்பட்டது. அதற்கு எவ்வளவு செலவானது? 

7) ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையமாக வைத்து காலாவில் வசனங்கள்/காட்சிகள் இருக்குமா? நச்சென தெளிவுப்படுத்தியிருக்கிறார் இரஞ்சித்!

8) ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ குழவைச் சேர்ந்த ஒருவருக்கு ‘காலா’வில் பாடல் எழுதும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இரஞ்சித். அவர் யார்... கணிக்க முடிகிறதா? 

https://www.vikatan.com/news/vikatan-specials/117709-8-secrets-about-kaala-pa-ranjith-interview-in-ananda-vikatan.html

  • தொடங்கியவர்

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

 
 

எம்.குணா, தமிழ்ப்பிரபா

 

p10g_1519801474.jpg

``டீஸர் சிறப்பா வந்திருக்கு ப்ரோ... பாக்குறீங்களா?’’ - அன்போடு கேட்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ரஜினியுடன் இரண்டாவது இன்னிங்ஸையும் வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தி அவரது முகத்தில் தெரிகிறது. டீஸரைப் பார்த்துவிட்டு இரஞ்சித்துடன் நடத்திய  உரையாடல் இங்கே!

`` `கபாலி’ முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டிருந்தப்ப, ‘அப்பா உங்களை மீட் பண்ண நினைக்கிறார்’ன்னு சௌந்தர்யா சொன்னாங்க. சாரை மீட் பண்ணேன். ‘கபாலி கொடுத்த புத்துணர்ச்சியில நான் இன்னும் எட்டுப் படம் பண்ற அளவுக்கு எனர்ஜியா இருக்கேன் டைரக்டர் சார். திரும்பவும் நாம சேர்ந்து படம் பண்ணலாம்’னு சொன்னவர் `கபாலி இரண்டாம் பாகமே பண்ணலாமா?’ன்னு கேட்டார். `சரி சார்’னு சொல்லி அதுக்காக வொர்க் பண்ணேன். ஆனா, இந்தக் `கபாலி’ கதை வேற ஒரு களத்துல பயணிக்கணும்னு சார்கிட்ட சொல்லிட்டு  மும்பைக்குக் கிளம்பிட்டேன். அங்க இருக்கிற கேங்ஸ்டர்களைப் பத்தி தெரிஞ்சிக்க நிழல் உலக தாதாக்களைச் சந்திச்சேன். ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை முழுசா ஆராய்ச்சி பண்ணேன். மும்பைத் தெருக்கள்ல சும்மா சுத்திட்டிருந்தேன். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரம், எங்க போனாலும் பெரிய பெரிய கட்டடங்கள்... அதன் காலடியில சுற்றி இருக்கிற குடிசைப்பகுதிகள்... இதெல்லாம் பாக்குறப்ப அது எனக்கு வேறொரு புரிதலையும் பார்வையையும் கொடுத்தது. கேங்ஸ்டர் கதையை விட்டுட்டு அந்த மக்களோட வாழ்க்கையையும் அவங்க பிரச்னையையும் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். அவங்க சந்திக்கிற பிரச்னை இந்தியப் பெருநகரங்கள்ல வாழ்கிற எல்லா விளிம்புநிலை மக்களுக்கான பிரச்னையாகவும் இருந்தது. அதன் அடிப்படையில அங்க இருக்கிற தமிழ் மக்களோட தொடர்ந்து உரையாடினேன். அந்த பாதிப்புல முற்றிலும் வேறொரு கதையை உருவாக்கிட்டு சார்கிட்ட போனேன். அதுதான் ‘காலா’ ’’ 

``கபாலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருந்த ரஜினி, `காலா’ கதையைக் கேட்டுட்டு என்ன சொன்னார்?’’

`` 80-கள்ல மும்பையில் வாழ்ந்த ரௌடிகள், அவங்களுக்குள்ள இருக்கிற மோதல்கள்னு கேங்ஸ்டர் கதையைத்தான்  எழுதிட்டு வருவேன்னு சார் எதிர்பார்த்தார். ஆனா, நான் கொண்டுபோனது ஒரு எமோஷனல் குடும்பத்தலைவனோட கதை. ஒரு அப்பா, அவருக்கு நான்கு மகன்கள், கணவன் மனைவி, காதல், பேரன் பேத்திகள், வயதான நண்பர்கள், இப்டின்னு கதை சொல்லிட்டுப் போறப்போ... சார், தலையாட்டி சிரிச்சுக்கிட்டே “இப்படி ஒண்ணை நான் எதிர்பார்க்கவே இல்லையே டைரக்டர் சார். ஆனா, நல்லா இருக்கு.. மேல சொல்லுங்க”ன்னு தாடியைத் தடவிக்கிட்டே கேக்க ஆரம்பிச்சதும் எனக்கு அவ்ளோ சந்தோஷம். ஏன்னா இந்தக் கதையை அவர் ஏத்துக்குவாரான்னு ரொம்பத் தயங்கினேன். எப்படி இரண்டாவது படமும் ரஜினி உங்களுக்குக் கொடுத்தார்னு சிலபேர் கேக்குறாங்க. ஒருவாட்டி நானே சார்கிட்ட அதைக் கேட்டேன். ‘உங்க வொர்க், உங்ககிட்ட இருக்கிற நேர்மை. இது ரெண்டுதான் உங்களோட படம் பண்ண வெச்சது, இனியும் வைக்கும்’னு சொன்னார். அவரோட நம்பிக்கையைக் காப்பாத்தியிருக்கேன்னு நம்புறேன்.’’

p10f_1519801502.jpg

`` ‘காலா’ பெயர்க் காரணம் என்ன?’’

`` படத்துல கரிகாலன் அவருடைய பேர். அதுல காலன் அப்டிங்கிற பேரைத்தான் சுருக்கிக் காலான்னு வெச்சிருக்கோம். திருநெல்வேலி மாவட்டத்துல வழிபடப்படுற சிறுதெய்வங்கள்ல காலா சாமியும் ஒருத்தர். ரஜினி சார் அந்த மாவட்டத்தைச் சார்ந்தவராக நெல்லைத் தமிழ் பேசுபவராக இருப்பதால் இந்தப் பேர் பொருத்தமா இருந்துச்சு. அதே நேரத்துல இந்தி மொழியில காலான்னா கறுப்புன்னு அர்த்தம். கறுப்பு என்பது உழைக்கும் மக்களின் வண்ணம். படத்துலேயும் கறுப்பு நிறம் ஒரு குறியீடா பயன்படுத்தப்பட்டுருக்கிறதால காலாங்கிற பெயர் பலவகையில இந்தக் கதைக்குத் தொடர்புடையதா இருக்கும்னு அதை டைட்டிலா வெச்சோம்.’’

``காலா எங்களுடைய கதைதான் என்று சிலர் சொல்கிறார்களே?’’

``இது எந்தத் தனிநபரின் கதையும் இல்ல, தனிநபரைப்பற்றிய கதையும் இல்ல; மக்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசுற படம். அதுவும் தாராவி, குறிப்பிட்ட மக்களின் கலாசாரத்தை மட்டும் பிரதிபலிக்கிற பகுதி கிடையாது. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மராத்தி, இந்தி, நெல்லைத் தமிழ், தெலுங்குன்னு பல்வேறு மொழிகள் பேசுற, சாதியடையாளங்களை வலுவாக முன்னிறுத்துகிற பல்வேறு இனக்குழுக்கள் வாழுற பகுதி. திருநெல்வேலில இருக்கிற தமிழர்கள் பெரும்பான்மையாக அங்க இருக்காங்க. இந்த எல்லாத் தரப்பினரையும் மையமா வெச்சு கற்பனையைக் கலந்து நானா எழுதினதுதான் காலா. சொல்லப்போனா இந்தக் காலா கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் எங்க தாத்தாதான். அவர் பேர் பஞ்சாட்சாரம். எங்க ஊர்ல முக்கியமான ஆள். தான் வாழ்ந்த நிலத்தின் மீது ரொம்பப் பற்றுதலோட இருந்தவர். எங்க குடும்பம், குழந்தைங்ககிட்ட, அவர் நண்பர்கள்கிட்ட அவ்ளோ அன்பா இருப்பார். ஊர்ல ஜனங்களுக்கு ஒரு பிரச்னைன்னா அந்த வயசுலயும் எதுக்கும் பயப்படாம முன்னாடிபோய் நிப்பார். ஒரு பிரமிப்பான மனுஷனான அவரைப் பாத்துதான் வளர்ந்தேன். காலா கதாபாத்திரத்தை அவரை அடிப்படையா வெச்சுத்தான் உருவாக்குனேன்.’’

 p10e_1519801527.jpg

``தயாரிப்பாளர் தனுஷுடன் பணிபுரிந்த அனுபவம் சொல்லுங்க?’’

`` `அட்டகத்தி’ கதை எழுதிட்டு தனுஷை அணுகலாம்னுதான் இருந்தேன். அந்தச் சூழல்ல முடியலை. `காலா’ கதையை ரஜினி சார் ஓகே பண்ணதும் தனுஷை மீட் பண்ணி கதை சொல்லச் சொன்னார். தனுஷ் தீவிரமான ரஜினி ரசிகர். கதையைக் கேட்கக் கேட்க செம்மையா என்ஜாய் பண்ணார். எந்தெந்தக் காட்சிகள்ல ரசிகர்கள் ரசிப்பாங்கன்னு சொல்லி எக்சைட் ஆனார். இந்தப் படத்தை இவ்ளோ சீக்கிரம் எடுத்து முடிச்சு ரசிகர்கள்கிட்ட கொண்டு சேர்க்கிறோம்னா தயாரிப்பாளர் தனுஷ் அவர்களோட ஒத்துழைப்பு மிக முக்கியமானது.’’

`` `கபாலி’யில் ரஜினி நடிப்பு பல பரிமாணங்களை உள்ளடக்கி இருந்தது. `காலா’வில் எப்படி?’’

`` ‘காலா’வில் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம். `கபாலி’ல ஆரம்பம் முதலே தன் கடந்த கால நினைவுகளைச் சுமந்துகிட்டு ஒருவிதமான சோர்வுடனும், இறுக்கத்துடனும் விரக்தி மனநிலையிலேயே கபாலி கடைசிவரை இருப்பார். ஆனா இதுல ரஜினி சார், காலா சேட்டுங்கிற கதாபாத்திரத்துல ரகளை பண்ணியிருக்கார். அடிப்படையில் காலா ரொம்பப் பிடிவாதமான ஆள். யார் எதிரே நின்னாலும் தனக்கும் தன் மக்களுக்கும் இதுதான் தேவைன்னா அதுல ரொம்ப உறுதியா நின்னு போராடுற ஒரு மனிதன். இன்னொரு பக்கம் தன் மனைவியோட ரொமான்ஸ், மகன்கள்கிட்ட தன் காதல் கதைகளைப் பேசி நெகிழுறது, பேரப்பிள்ளைகளோட கிரிக்கெட், ஃபுட்பால் விளையாடுறது, ஊர்மக்களை வழிநடத்துற தலைவன், எதிரிகள் கிட்ட காட்டுற மூர்க்கம்னு ரஜினிசார் செம சூப்பரா நடிச்சிருக்கார். படப்பிடிப்புக்கு வெளிய அவர் சாதாரணமா எப்படிப் பேசுவாரோ, அவரோட உடல்மொழி எப்படி இருக்குமோ அதைத்தான் திரையில் கொண்டு வந்திருக்கார். ஒரு மனுஷனுக்குள்ள இருக்கிற ஒட்டுமொத்த எமோஷனையும் காலா சேட்டுகிட்ட பார்க்கலாம். ரஜினிசார் ரொம்ப இயல்பா நடிச்ச படங்கள்ல `காலா’வுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும். ஸ்டைலுக்கு மட்டுமல்லாம அவருடைய நடிப்புக்குன்னு ஒரு இடம் இருக்கில்ல, அது இந்தப் படத்துல முழுமையடைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்.’’

p10d_1519801547.jpg

``கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே கலக்கியிருப்பாங்க. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி யார்?’’

``காலாவின் மனைவியாக செல்விங்கிற கதாபாத்திரத்தில் ஈஸ்வரிராவ் நடிச்சிருக்காங்க. ரொம்ப எமோஷனலான கதாபாத்திரம்.  நிச்சயம் பேசப்படும். ஏன்னா அந்தச் செல்வியை எல்லா வீடுகளிலும் பொருத்திப் பார்த்துக்கலாம். சகிப்புத்தன்மையுடன் ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்ற, கணவனையும், நான்கு மகன்களையும் மருமகள்களையும், பேரப்பிள்ளைகளையும் கட்டி மேய்க்கிற ஒரு பெண்மணி. `கபாலி’யைப் பற்றி நியாயமாகச் சொல்லப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து சில விஷயங்கள்ல வேலை பண்ணியிருக்கோம். அதுல ஒண்ணு, `கபாலியில் வில்லன் கதாபாத்திரம் இன்னும் வலுவா இருந்திருக்கலாம்’கிற விமர்சனம். அந்த வகையில் `காலா’வில் வில்லனாக நானா படேகர். ரஜினி சாரும், நானாஜியும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. காலாவுக்கு நண்பனா வாலியப்பன்ங்கிற கேரக்டர்ல சமுத்திரக்கனி நடிச்சிருக்கார். அஞ்சலி பாட்டில், சம்பத், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன்னு நிறைய கதாபாத்திரங்கள்.  அவங்க இயல்பா எப்படிப் பேசிப் பழகுவாங்களோ அந்த உடல்மொழியைத்தான் எல்லோருடைய நடிப்புலயும் கொண்டு வந்திருக்கோம். இவங்க தவிர படத்துல  முக்கியமான கேரெக்டர்ல ஹூமா குரேஷி நடிச்சிருக்காங்க. `கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ எனக்கு ரொம்பப் பிடிச்ச, நிறையவாட்டி பார்த்த படம். அந்தப் படத்துலதான் ஹூமா குரேஷியைப் பார்த்தேன். `காலா’ படத்துல சரினாங்கிற கதாபாத்திரத்துக்கு அவங்க கரெக்ட்டா இருப்பாங்கன்னு தோணுச்சு. கதையில ரஜினிசார்க்கும் அவங்களுக்கும் உள்ள உறவு ரொம்பவே சுவாரஸ்யமானது.’’

p10c_1519801572.jpg

p10b_1519801590.jpg

`` `காலா’ பெரும்பாலும் செட் போட்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் உண்மைக்கு எந்த அளவு நெருக்கமாக இருக்கும்?’’

``இதுவரையிலான என்னுடைய படங்கள் லைவ் லொகேஷனில் எடுக்கப்பட்டவைதான். ரஜினி சாரைக் கூட்டிட்டு வந்து தாராவிலதான் ஷூட் பண்ணோம். படப்பிடிப்பு நடக்கிற இடத்தைச் சுற்றி ராத்திரி, பகல்னு மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தது. ஆனாலும், தாராவியிலேயே எடுத்தாக வேண்டிய காட்சிகள்ல நான் உறுதியா இருந்தேன். அதனடிப்படையில் நாலுநாள் ரஜினிசார் தொடர்பான காட்சிகள் எடுத்துட்டு அப்புறம் பதினைந்துநாள் அங்க ஷூட் பண்ணோம். சென்னைக்கு வந்து தாராவி மாதிரி செட் போட்டோம். தாராவி எப்படி இருக்கோ, மும்பையில இருக்கிற ஸ்லம்ஸ் எப்படி இருக்கோ அதேமாதிரியான டூல்ஸ், மெட்டீரியல்ஸ வெச்சு 25 கோடி ரூபாய் செலவுல ஒரு ஊரையே கிட்டத்தட்ட உருவாக்கியிருக்கோம். எது செட், எது ரியல் தாராவின்னு பார்வையாளர்களால எளிதில கணிக்க முடியாத மாதிரி கலை இயக்குநர் ராமலிங்கம் வேலை பண்ணியிருக்கார். உண்மைத்தன்மையுடனும் அதேசமயம் கலைநயத்துடனும் அவர் செஞ்ச வேலை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். படம் ரியலிஸ்டிக்கா இருக்குன்னா அதுக்கு இன்னொரு முக்கிய பலம் ஒளிப்பதிவாளர் முரளி.’’

p10a_1519801633.jpg

``ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையமாக வைத்து காலாவில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளதா?’’

`` `காலா’ கதையை ரஜினிசாரிடம் சொல்லும்போதிலிருந்து, படப்பிடிப்பு நடந்து முடியும்வரை அவருக்கு அரசியலில் களமிறங்கணும்ங்கிற ஆர்வம் இருந்த மாதிரி எனக்குத் தெரியல. அரசியலுக்கு வருவேன்னு அவர் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே எழுதப்பட்டு, படமாக்கப்பட்டிருக்கிற ஒரு படம் இது.  அவருடைய அரசியல் நுழைவை இந்தப் படம் வலுப்படுத்தினால் அது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.’’

``படத்தின் இசை, பாடல்கள் எப்படி வந்திருக்கிறது?’’

``கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுதியிருக்காங்க. இவங்க தவிர்த்து, ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’வில் பாடல்கள் பாடிய அறிவு ஒரு பாட்டு எழுதியிருக்கார். காதல் பாடல், குடும்பப் பாடல், ரஜினி சார் ரசிகர்களுக்கான பாடல்னு எல்லாவிதமான உணர்வுகளையும் இசைவடிவங்கள்ல கொண்டு வர்ற தருணங்கள் படத்தில் உண்டு. புதுவிதமான சில இசைக்கருவிகளை வெச்சு சந்தோஷ் பண்ணியிருக்கிற மியூசிக் அதகளமா இருக்கும். மெட்ராஸ்ல இருக்கிற விளிம்புநிலை மக்களுக்கு கானா பாடல்கள் மாதிரி பாம்பே விளிம்புநிலை மக்கள் ராப், ராக் வகைப் பாடல்களை அதிகமாக பாடுவாங்க. முதல்பாடலே அப்படியொரு பாடல்தான். `மெட்ராஸ்’ படத்துல டான்ஸ் குரூப் இருந்த மாதிரி இதுல ராப் குரூப் இருக்கு. கதையில் சில முக்கியமான இடங்கள்ல அவங்களைப் பயன்படுத்தியிருக்கேன். ஒரு வாழ்க்கைமுறையை அதன் அசலான அடிப்படைகளுடன் கொண்டு சேர்க்கிற முயற்சிகள்தான் இவை எல்லாமே.’’

p10_1519801452.jpg

``அடுத்த படத்துக்கான கதை, களம் முடிவு பண்ணிட்டீங்களா?’’

``கதை எழுதி முடிச்சாச்சு. இன்னும் மற்ற விஷயங்கள் முடிவு பண்ணலை. ஆனால் என்னுடைய எல்லாப் படங்களும் அரசியல் படமாகத்தான் இருக்கும்ங்கிறதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.’’

https://www.vikatan.com/anandavikatan/2018-mar-07/cinema-news/139034-pa-ranjith-exclusive-interview-about-kaala-movie.html

  • தொடங்கியவர்

வெளியானது காலா டீசர்! ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

 

 
rajini-kala1

கபாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கரிகாலன்' என்கிற 'காலா'. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 

நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் பிப்ரவரி 10-ந் தேதி ட்வீட் செய்தார். இச்செய்தி ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், காலா டீஸரை  தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், 'வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்க லே!!!' என்கிற பஞ்ச் டயலாக் பேசியுள்ளார் ரஜினி. மும்பை தாராவியில் வாழும் நெல்லைத்  தமிழராக நடித்துள்ள ரஜினிகாந்த் நெல்லைத் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/mar/02/வெளியானது-காலா-டீசர்-ரஜினி-ரசிகர்கள்-உற்சாகம்-2873102.html

  • தொடங்கியவர்

காலா திரைப்படத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ள தொடர்பு இதுதான்!

 

காலா திரைப்படத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ள தொடர்பு இதுதான்!

காலா பட விளம்பர படங்களில் ரஜினிகாந்த் ஒரு மேசைக்கு அருகில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படம் உண்டு. இந்த புகைப்படத்திற்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஏராளமான தொடர்புகள் உள்ளன.

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'காலா'. இந்த திரைப்படத்தின் முன்னோடிக் காட்சி நேற்று வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் தொடர்பான புகைப்படங்கள் சிலவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

இந்த மேசையில் உள்ள புத்தகம் 'கே.டானியல் படைப்புகள்' எனும் தலைப்பில் உள்ளன. அந்த நூலில் ஆறு நாவல்கள் (1.பஞ்சமர், 2.கோவிந்தன், 3.அடிமைகள், 4.கானல், 5.பஞ்ச கோணங்கள், 6.தண்ணீர்) தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆறு நாவல்களுமே இலங்கை ஈழத்தமிழர்களிடம் தலித்துகள் எதிர்கொண்ட வாழ்க்கையை பதிவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நாவல்களின் ஆசிரியர் கே.டானியல் ஆவார். கே.டானியல் இலங்கை வடக்கு மகாணப்பகுதியின் ஆனைக் கோட்டையில் 1929 இல் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். 1960களில் அங்கே எழுந்த தலித் எழுச்சியில் 1967 இல் தோன்றிய 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்' முன்னோடித் தலைவராவார்.

இவ்வாறான புத்தகங்களை அதை காலா திரைக்காட்சியில் கொண்டு வந்து குறியீடாக்கியிருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித். அந்த மேசையில் ராவண காவியமும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/This-is-the-link-between-Gala-and-Jaffna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.