Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தை கலக்கும் அடுத்த மலையாள பெண்! இவரின் ரியாக்‌ஷனுக்கு பசங்க கிளீன் போல்டு தான்...

Featured Replies

இணையத்தை கலக்கும் அடுத்த மலையாள பெண்! இவரின் ரியாக்‌ஷனுக்கு பசங்க கிளீன் போல்டு தான்...

கடந்த வருடம் ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாடல் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெளிபாடிண்டே விசேஷம் படத்தில் வெளியான இந்த பாடலுக்கு ஷெரின் என்ற பெண் நடனமாடியிருந்தார். இதில் அவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் அடிமை.

இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகவிருக்கும் “Oru Adaar Love” என்ற படத்தில் மாணிக்க மலராய பூவி.. என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதில் நடித்திருக்கும் பிரியா தான்.

இதில் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷனால் பசங்க கிளின் போல்ட் ஆகிவிடுகின்றனர். அவர் தான் அடுத்த "மலையாள குயின்" என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

  • தொடங்கியவர்

கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்? சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?

யார் இந்த பிரியா பிரகாஷ்?

'பிரேமம்' சாய் பல்லவி, 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் வரிசையில் மீண்டும் இந்தியளவில் டிரெண்டிங்கை பிடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஒரு அடார் லவ்'. படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

யார் இந்த பிரியா பிரகாஷ்?

கடந்த வாரம் 9 ஆம் தேதி, யு டியூப் தளத்தில் 'மாணிக்க மலராய பூவி' என்ற பாடல் பதிவேற்றப்பட்டது. சில நிமிடங்களிலே மிகவும் வைரலான இப்பாடல் தற்போது வரை சுமார் ஐந்து லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

பாடல் பிரபலமானதற்கு மற்றொரு முக்கிய காரணம் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர்.

யார் இந்த பிரியா பிரகாஷ்? சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?

பாடல் நடுவே அவர் புருவத்தால் செய்யும் மாயாஜால ரொமான்ஸால் பாட்டிற்கு எக்கச்செக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை சமூக ஊடகங்களில் பிரியா குறித்த மீம்கள் குவிந்து வருகின்றன. பிரியா பிரகாஷ் வைரலான பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கின் பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

யார் இந்த பிரியா பிரகாஷ்?

கேரளாவை சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்தான் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம்.

யார் இந்த பிரியா பிரகாஷ்?படத்தின் காப்புரிமைINSTAGRAM யார் இந்த பிரியா பிரகாஷ்?படத்தின் காப்புரிமைINSTAGRAM யார் இந்த பிரியா பிரகாஷ்?படத்தின் காப்புரிமைINSTAGRAM

 

http://www.bbc.com/tamil/india-43029776

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை இப்படியான செய்திகள் அமுங்கபன்னுகின்றது .

மற்றபடி குரங்கையும் நவீன மேக்கப் மூலம் அழகிய நங்கையாக காட்டமுடியும் என்பதை தமிழ்நாட்டு ரசிகனுக்கு புரிவதில்லை உதாரணாமாக குடுகுடு கிழவன் ரஜனிகாந்த் இன்னும் கீரோ வேசத்தில் நடிப்பது .

மற்றபடி குரங்கையும் நவீன மேக்கப் மூலம் அழகிய நங்கையாக காட்டமுடியும் என்பதை தமிழ்நாட்டு ரசிகனுக்கு புரிவதில்லை உதாரணாமாக குடுகுடு கிழவன் ரஜனிகாந்த் இன்னும் கீரோ வேசத்தில் நடிப்பது .

DV4n92HV4AAf4rM.jpg

  • தொடங்கியவர்

இணையத்தில் வாழ்த்து மழை: சமூகவலைத்தளத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு குவியும் ரசிகர்கள்

 

 
priyaprakash1jpg

ப்ரியா பிரகாஷ் வாரியர்

'மானிக்க மலராயா பூவி' பாடலின் வரவேற்பால், ப்ரியா பிரகாஷ் வாரியரை சமூகவலைத்தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்திலிருந்து 'மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடல் இதுவரை சுமார் 85 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள்.

இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். கேரளா திருச்சூரைச் சேர்ந்த இவர் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டே மாடலிங்கும் செய்து வருகிறார். நேற்று இணையத்தில் இவருடைய முகபாவனைகள் அடங்கிய ட்வீட்கள் மற்றும் மீம்ஸ்கள் என ஆட்கொண்டன.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் "Theeeee Cutesttt Video I have seen in recent times . The power of simplicity . Love it ! #ManikyaMalarayaPoovi #OruAdaarLove ." என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் சில இயக்குநர்களும் இவருக்கு இருக்கக்கூடிய இந்த எதிர்பார்ப்பை முன்வைத்து தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்கள். ஆனால், இவருடைய குடும்பத்தினர் அதுகுறித்து 12-ம் வகுப்பு பரீட்சை முடிந்தவுடன் தான் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரத்தை கடந்திருக்கிறது. மேலும், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் போன்று ப்ரியா பிரகாஷ் வாரியருக்கும், ரசிகர்கள் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ப்ரியா பிரகாஷ் வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒரு ஆதார் லவ்' படத்தின் டீஸர், காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. சமூகவலைத்தளத்தில் எழுந்துள்ள எதிர்பார்ப்பால், படத்தின் டப்பிங் உரிமையைக் கைப்பற்றுவதற்கும் கடும் போட்டி நடைபெற்று வருகிறது.

http://tamil.thehindu.com/cinema/south-cinema/article22738971.ece

  • கருத்துக்கள உறவுகள்

இதே கிண்டு தான் ரசுனிக்கு பத்தாயிரம் வேட்டு விழ பத்து லட்சம் என்று புளுகினது .

  • தொடங்கியவர்

’வேலண்டைன்’ யார்?: ரகசியம் சொல்லும் 'வைரல்' பிரியா வாரியர்

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக அறிமுகமாகும் 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் காணொளி காட்சிகள் பரவலான வரவேற்பையும், அனைவரின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றது.

கண்ணால் கவிதை பேசும் பிரியா இதற்காக எத்தனைக் காலம் பயிற்சி எடுத்துக்கொண்டார்?

இதற்கான பதிலை பிரியாவிடம் கேட்டோம். பிபிசியிடம் பேசிய பிரியா, ''படத்தின் இயக்குனர் படபிடிப்பின்போது அந்த இடத்தில் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். க்யூட்டாக எதாவது செய் என்று சொன்னார். நான் செய்தேன்'' என்கிறார்

எத்தனை டேக்குகள் ஆனது?

சரி, காட்சி சரியாக வருவதற்காக எத்தனை டேக்குகள் எடுத்துக் கொண்டார்? என்ற கேள்விக்கு, ''நான் ஒருமுறை முயற்சி செய்தேன், அதுவே நன்றாக இருக்கிறது என்று இயக்குநர் சொல்லிவிட்டார். ஆனால் அந்த காட்சி இவ்வளவு பிரபலமாகும் என்று நான் நினைக்கவேயில்லை.'' என்று பதல் தருகிறார்.

''இந்த காட்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள் என்றால் அது அனைத்தும் இயக்குநருக்கு உரித்தானது. அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். அவர் இது சரியில்லை என்று சொல்லியிருந்தால், வேறு முயற்சி செய்திருப்பேன். எது சரி, எது நன்றாக இருக்கும் என்று முடிவு செய்வது இயக்குநர்தானே? அவரே அனைத்து புகழுக்கும் உரியவர்.''

''நான் எந்தவித பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. என்ன நடந்ததோ, அது ஆன் த ஸ்பாட் நடந்தது, அது நன்றாகவே வந்திருக்கிறது. அந்த காட்சி எடுத்தபிறகு, சிறப்பாக வந்திருப்பதாக அனைவரும் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.''என்கிறார் பிரியா.

வீடியோவை நையாண்டி செய்ததில் பிரியாவுக்கு மகிழ்ச்சியா?

பிரியா தோன்றும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் பல்வேறு விதமாக நையாண்டி செய்யப்படுகிறது. அதையெல்லாம் பிரியா பார்த்தாரா என்று கேட்டோம். ''நிறைய ட்ரோல் ஆகியிருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபலங்கள் பலருடன் சேர்த்து ட்ரோல் செய்திருப்பது சந்தோஷத்தை தருகிறது'' என்று குதூகலிக்கிறார் பிரியா.

கேரள மாநிலம் திருச்சூரில் வசிக்கும் பிரியாவின் தந்தை மத்திய சுங்கவரித் துறையில் பணிபுரிகிறார், தாய் குடும்பத்தை பராமரிக்கிறார். தாத்தா, பாட்டி, தம்பி என மகிழ்ச்சியான குடும்பத்தை சேர்ந்தவர் பிரியா.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

தற்போது திருச்சூர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வரும் பிரியாவின் முதல் திரைப்படம் இது. இதற்கு முன்பு மூன்று குறும்படங்களில் பிரியா நடித்துள்ளார். நடிப்பதில் மிகவும் ஆர்வம் இருப்பதாகவும் சொல்கிறார் பிரியா.

பாலிவுட்டில் யாரைப் பிடிக்கும்?

''ஒரு அடார் லவ் திரைப்படம் எனக்கு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் தற்போது வெளியான காணொளி காட்சிகள் மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்துவிட்டன'' என்று சொல்கிறார் பிரியா.

''அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.'' என்று கூறும் பிரியா ஹிந்தி திரைப்படங்களில் நடித்தால், கதாநாயகனாக யாரைப்போடலாம்? இதற்கும் உற்சாகத்துடன் பதில் சொல்கிறார் பிரியா, ''ரண்வீர் சிங், ஷாரூகான், சித்தார்த் மல்ஹோத்ரா.'' என்று.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

18 வயது பிரியா, பாரம்பரிய நடனம் மற்றும் இசையை கற்றுக் கொண்டிருக்கிறார்.

படிப்பதிலும் ஆர்வமாக இருக்கும் அவர் நடிப்பையும், படிப்பையும் இரு கண்களாக கருதுகிறார். கண்களால் அபிநயத்தையும், நவரசத்தையும் காட்டும் பிரியா எந்தவிதமான நடிப்பு பயிற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை தேவை?

தனக்கு ஹிந்தி பேசும் பகுதிகளில் இருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லும் பிரியா, ''பாலிவுட்டில் நடித்தாலும் இதே அன்பும், வரவேற்பும் கிடைக்கும் என்று நினைக்கிறார்''.

மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளைத் தவிர ஹிந்தியையும் நன்றாக பேசுகிறார் பிரியா.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமையார்

''என் அப்பா மும்பையில் வேலை பார்த்தார். எனவே நாங்கள் ஐந்து ஆண்டுகள் மும்பையில் வசித்திருக்கிறோம். அப்போது ஹிந்தி கற்றுக்கொண்டேன்'' என்கிறார் பிரியா.

நல்ல இளைஞனுக்கான பிரியாவின் வரையறை என்ன? முத்தான மூன்று வார்த்தைகளில் வரையறுக்கிறார் பிரியா ''அன்பானவன், அக்கறையானவன், ஆதரவானவன்''.

வேலண்டைன் யார்?

வேலண்டைன் யார் என்றால் ரோஷன் என, திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ரோஷன் அப்துல் ரஹூஃப்பை பற்றி சொல்கிறார். அவரும் இந்த காணொளிக் காட்சியில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தனக்கு நிதர்சனத்தில் காதலர் யாரும் இல்லை என்று சொல்கிறார் பிரியா.

சரி, காணொளி காட்சியில் பிரியா கண்ணால் பேசிய ரோஷன் அப்துல் ரஹூஃப் உடன் பேசினோம்.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

உற்சாகத்தின் உச்சியில் ரஹூஃப்

காணொளி காட்சி வைரலானதால் உற்சாகத்துடன் இருக்கும் ரஹூஃப், தனது இண்ஸ்ட்ராகிராமில் இவ்வாறு எழுதியிருக்கிறார், ''எங்கள் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி, மிக்க நன்றி.''

''எனது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. உங்கள் உள்ளத்துக்கு அருகில் எங்களை கொண்டு சென்றதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஒரு ஆடார் லவ்' என்ற தலைப்பே திரைப்படத்தில் இருக்கும் காதல் உணர்வை வெளிப்படுத்துகிறது. எனவே எங்கள் மீது அன்பை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்''.

 

ரோஷனைப் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. அவரது இண்ஸ்ட்ராகிராமில் இருக்கும் புகைப்படங்களை வைத்து விதவிதமாக கதைகள் புனையப்படுகின்றன.

'இப்படி நடக்கும் என்று நினைத்ததேயில்லை'

ரோஷனிடம் நேரடியாக பேசியது பிபிசி. அவர் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாரா என்று கேட்டோம். இல்லை என்று பதிலளித்த அவர், ''நான் நடிப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டதில்லை. ரியாலிடி ஷோவில் பங்கேற்றிருக்கிறேன். அது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்க்கு உதவியாக இருந்தது.''

இனி அவரது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன, பாலிவுட்டில் நடிப்பீர்களா என்று கேட்டோம், ''வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் முடிவு செய்யவில்லை'' என்கிறார் ரோஷன்.

யார் இந்த பிரியா?படத்தின் காப்புரிமைINSTAGRAM

நிதர்சனத்தில் காதல் அனுபவம் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று மறுக்கிறார் ரோஷன். திரைப்படத்தில் உங்கள் காதல் அனுபவத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டோம். ''11-12ஆம் வகுப்பு மாணவனுடைய காதல் கதை இது'' என்று தெரிவித்தார் ரோஷன்.

ஒரு சகோதரர், இரண்டு சகோதரர்கள் என அன்பான குடும்பத்தில் வாழும் ரோஷனின் தந்தை உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

குடும்பத்தினரின் மகிழ்ச்சி

இது குறித்து குடும்பத்தார் எவ்வாறு உணர்கிறார்கள் என்ற கேள்விக்கு ''குடும்பத்தில் அனைவரும் மகிழ்ந்தார்கள்'' என்று கூறும் ரோஷனின் குடும்பத்தில் யாரும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் இல்லை.

பாலிவுட் படங்கள் பார்ப்பதில் விருப்பம் உடைய ரோஷனின் விருப்ப கதாநாயகன் ஷாரூகான். சரி கதாநாயகிகளில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு ரோஷனின் பதில், ''பிரியா''. என்று வருகிறது.

http://www.bbc.com/tamil/india-43054108

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.