Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு !!!

Featured Replies

இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு !!!

 

மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் நேற்று  இரவு உடைக்கப்பட்டுள்ளமை இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

online_New_Slide__3_.jpg

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட 'லிங்கேஸ்வரர்' தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தினுள் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட சிவலிங்கம், புத்தர் , பிள்ளையார்  ஆகிய மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.  

மன்னார்-தாழ்வுபாடு பிரதன வீதி கீரி சந்தியில் கடந்த 18 வருடங்களாக காணப்பட்ட ஆலையடி பிள்ளையார் சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

DSC_0045.JPG

மன்னார்-தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக பல தடவைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.

DSC_0068.JPG

மகா சிவராத்திரி தினத்தன்று மன்னாரில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டமை மற்றும் அங்கிருந்து திருடி கொண்டு செல்லப்பட்டுள்ளமை மன்னார் மாவட்ட இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

DSC_0028__1_.JPG

மேலும் மன்னார் மாவட்ட சர்வ மத தலைவர்கள் குறித்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளதோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_0071.JPG

http://www.virakesari.lk/article/30562

மன்னார் மாவட்டம் தமிழரிடம் இருந்து முஸ்லிம் கைக்கு கைமாறி நீண்ட காலம்.

இஸ்லாமிய மத கொள்கைபடி  சிலை வழிபாடு தவறு

  • தொடங்கியவர்

இலங்கையில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு

இலங்கைபடத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA Image captionகோப்புப்படம்

இலங்கையின் வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறு கோயில் உட்பட மூன்று சிறிய இந்து கோயில்களில் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இன்று இலங்கையில் வாழும் சைவர்கள் மகா சிவராத்திரியை அனுட்டிக்கும் நிலையில் கடந்த இரவு இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது இங்குள்ள இந்துக்களின் மனதில் பெருத்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் உபதலைவரான சுப்ரமணியன் பிருந்தாவனநாதன் பிபிசியிடம் கூறினார்.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரர் ஆலயம் இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்தில் அவர்களால் சிறிய சிலை ஒன்று அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அது பெரிதுபடுத்தப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது. அங்கிருந்த மூன்று சிலைகள் கடந்த இரவு இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுவிட்டன.

மன்னார் தாழ்வுப்பாடு கீரி சந்தி எனும் இடத்தில் இருந்த ஆலையடி பிள்ளையார் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தள்ளாடியில் விமான ஓடுபாதைக்கு அருகாக திருக்கேதீஸ்வரம் வீதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று நான்காவது தடவையாக இப்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிருந்தாவனநாதன் கூறினார்.

இலங்கையை பொறுத்தவரை இங்குள்ள இந்துக்கள் சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் கூடுவது வழக்கம். அப்படியான நிலையில் அந்த ஆலயத்துக்கு செல்லும் ஒரு விக்கிரகம் உட்பட மூன்று இந்து வழிபாட்டிடங்கள் சேதமாக்கப்பட்டமை அங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் மனவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான சபையின் உபதலைவரான பிருந்தாவனநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் ஆலய சிலைகள் தாக்கப்பட்ட போது தமது முறைபாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தாம் போலிஸில் இந்தத்தடவை முறைப்பாடு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-43045142

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தகைய ஈனச் செயலை செய்தவர்கள் அண்டி பிழைக்க‌ அரேபியாவிலிருந்து வந்தவர்களால் அல்லது ஐந்திற்கும் பத்திற்கும் அந்நியர்களின் காலத்தில் சைவத்தை விட்டோடியவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். முதலில் அனைத்து சைவர்களும் ஒன்று திரண்டு இதற்கு எதிராக போராட வேண்டும்.

முல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.