Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாதி மீது கூட்டு பலாத்­காரம் : வீடியோ எடுத்த இரா­ணுவ குழு கைது, மூவரைத் தேடி வலை வீச்சு

Featured Replies

தாதி மீது கூட்டு பலாத்­காரம் : வீடியோ எடுத்த இரா­ணுவ குழு கைது, மூவரைத் தேடி வலை வீச்சு

 

 

 

கொழும்பின் முன்­னணி தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­யாற்றும் யுவ­தியை கூட்டு பாலியல் பலாத்­காரம் செய்து வீடியோ படம் எடுத்­தமை தொடர்பில் இரா­ணு­வத்தின் கெப்டன் தரத்தை உடைய வைத்­தியர் ஒருவர், இரு லான்ஸ் கோப்ரல் தர சார­திகள் உள்­ளிட்ட மூவரை நார­ஹேன்­பிட்டி பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

gang-rape.jpg

தாதிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்து, மது, கஞ்சா சுருட்டு போன்­ற­வற்றை உப­யோ­கிக்கச் செய்து அவரை இவ்­வாறு பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு பல சந்­தர்ப்­பங்­களில்  உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், இந்த சம்­பவம் தொடர்பில் பொறி­யி­ய­லாளர் எனக் கூறப்­படும் ஒருவர் உள்­ளிட்ட மூவரைத் தேடி தீவிர விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கொழும்­புக்கு பொறுப்­பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்­ஜீவ மெத­வத்த, கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த டி சொய்ஸா ஆகி­யோரின் மேற்­பார்­வையில், உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன டி அல்­விஸின் ஆலோ­சா­னைக்கு அமை­வாக நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கயான் பிர­சன்ன தலை­மையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் லலித் பெத்­த­கத்த, பெண் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஜனாகீ உள்­ளிட்ட குழு­வினர் சம்­பவம் தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

 இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையில் சேவையில் உள்ள  கெப்டன் தரத்தை உடைய பல் வைத்­தி­ய­ரான சந்­தேக நபர் அங்கு சேவையில் இருக்கும் அதே சமயம் தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்­றிலும் சேவை செய்­துள்ளார். இதன்­போது குறித்த தனியார் வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்றும் இளம் தாதி ஒரு­வ­ருக்கும் வைத்­தி­ய­ருக்கும் இடையில் காதல் மலர்ந்­துள்­ளது.

 இரு பிள்­ளை­களின் தந்­தை­யான இரா­ணுவ கெப்டன் தர வைத்­தியர் அதனை மறைத்து காதல்  செய்­துள்ள நிலையில், இடையே புலமை பரிசில் ஒன்று பெற்று வெளி­நாட்­டுக்கு செல்ல அவ­ருக்கு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. அவ்­வாறு அவர் வெளி­நாடு சென்ற போது, இளம் தாதியின் தோழி ஒருவர் ஊடாக்  குறித்த வைத்­தியர் இரு பிள்­ளை­களின் தந்தை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து அந்த தாதி வைத்­தி­ய­ரான இரா­ணுவ கெப்­டனின் தொலை­பேசி அழைப்­புக்­களை புறக்­க­ணித்­துள்ளார்.

 8 மாதங்­களின் பின்னர் நாடு திரும்­பி­யுள்ள வைத்­தியர்,  குறித்த தாதியை வைத்­தி­ய­சா­லைக்கு சென்று  சந்­தித்து காதல் வசனம் பேசி­யுள்ளார். தன் மனை­வியை விவா­க­ரத்து செய்­து­விட்டு அவரை மணப்­பதாக அவர் உறுதி கொடுத்­துள்ளார்.

அதன்­பின்­ன­ரான ஒரு நாளில், குறித்த தாதியை, தனது வாக­னத்தில் நிட்­டம்­புவ பகு­தியில் உள்ள பாழ­டைந்த வீடொன்­றுக்கு அழைத்து சென்­றுள்ள கெப்டன், அங்கு அவ­ருக்கு மது, கஞ்சா சுருட்டு ஆகி­ய­வற்றை பலாத்­கா­ர­மாக கொடுத்து அவரை பாலியல் பலாத்­காரம்  செய்­துள்ளார். பின்னர் தனது சார­தி­யான லான்ஸ் கோப்­ர­லுக்கும் அவரை பலாத்­காரம் செய்ய சந்­தர்ப்பம் கொடுத்­துள்ளார். இதன்­போது அந்த பலாத்­கார நட­வ­டிக்­கையை அவர் வீடியோ எடுத்­துள்ளார்.

 பின்னர் இந்த சம்­ப­வத்தை யாரி­ட­மா­வது கூறினால் கொலை  செய்து டயர் போட்டு எரிப்­ப­தாக தாதியை அவர் மிரட்­டி­யுள்ளார். பிறி­தொரு தினத்தில் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று குறித்த தாதியை பலாத்­கா­ர­மாக தன்­னுடன் அழைத்துச் சென்­றுள்ள  கெப்டன், அவரை மொறட்­டுவ பகு­தியில் வீடொன்­றுக்கு கூட்டிச் சென்­றுள்ளார்.

அங்கு வைத்து, மது, கஞ்­சாவை கொடுத்து அவரை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ள அவர், வீட்டில் இருந்த பொறி­யி­ய­லாளர் ஒரு­வ­ருக்கும், அப்­போது சார­தி­யாக இருந்த லான்ஸ் கோப்ரல் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கும் துஷ்­பி­ர­யோகம் செய்ய சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளார். இத­னையும் அவர் வீடியோ எடுத்­துள்ளார்.

குறித்த தாதி சேவை­யாற்றும் வைத்­தி­ய­சா­லையின் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு தாதியின் நிர்­வாணப் படங்கள் சில­வற்றை கெப்டன் அனுப்­பி­யுள்ள நிலையில், அதனை அறிந்த தாதி நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட்­டுள்ளார். இந் நிலை­யி­லேயே வைத்தியரான கெப்டன், லான்ஸ் கோப்ரல்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கெப்டன் தங்கியிருந்த இராணுவ குடியிருப்பை சோதனையிட்ட பொலிஸார் அங்கிருந்து துஷ்பிரயோக வீடியோ அடங்கிய இரு தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர். இந் நிலையிலேயே ஏனைய சந்தேக நபர்களைத் தேடி விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள் ளன.

http://www.virakesari.lk/article/30561

  • தொடங்கியவர்

தாதி மீது கூட்டு வல்லுறவு ; இராணுவ ஒழுக்காற்று பிரிவின் கெப்டன் தர அதிகாரியும் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பின் முன்­னணி வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாகப் பணி­யாற்றும் யுவ­தியைக் கூட்டுப் பாலி யல் வல்லுறவுக்குட்படுத்திய வீடியோ  படம் எடுத்­தமை தொடர்பில் இரா­ணு­வத்தின் கெப்டன் தரத்தைச் சேர்ந்த மற்­றொரு அதி­கா­ரி­யையும் நார­ஹேன்­பிட்டி பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இரா­ணு­வத்­தி­னரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்­படும் இரா­ணுவ பொலிஸ் பிரிவின் கப்டன் தர அதி­கா­ரி­யான ஜே.எம்.ஏ.கே. ஜய­வர்­தன என்­ப­வரே சந்­தே­கத்திarrested2-2.jpgன் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இரா­ணுவ தலை­மை­யகம் ஊடாக விடுக்­கப்­பட்ட அழைப்­புக்கு இணங்க அவர் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைக்கு ஆஜ­ரான போது, அவரைக் கைது செய்­த­தா­கவும் அவ­ரி­ட­மி­ருந்து கஞ்சா போதைப் பொருளை உறிஞ்­சு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் ஒரு­வகை உப­க­ர­ணங்­க­ளையும் கைப்­பற்­றி­ய­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். சந்­தேக நபர் கல்­லடி, மன்னார் இரா­ணுவ முகா­முக்கு உட்­பட்டு சேவையில் இருப்­பவர் எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஏற்­க­னவே இந்த விவ­காரம் தொடர்பில் இரா­ணுவ கெப்டன் தர வைத்­தியர் ஒருவர், லான்ஸ் கோப்ரல் தர சாரதி, தகவல் தொழில்­நுட்ப பொறி­யி­ய­லாளர் என மூவரை நார­ஹேன்­பிட்டி பொலிஸார் கைது செய்­துள்ள நிலையில் அவர்கள் இன்­று­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பாதிக்­கப்­பட்ட தாதிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்து மது­பானம், கஞ்சா, சுருட்டு போன்­ற­வற்றை உப­யோ­கிக்கச் செய்து அவரை பல தட­வைகள் பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் இந்தச் சம்­பவம் தொடர்பில் மேலும் மூவரைத் தேடி தீவிர விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கொழும்­புக்கு பொறுப்­பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்­ஜீவ மெத­வத்த, கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த டி சொய்ஸா ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன டி அல்­விஸின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கயான் பிரசன்ன தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் லலித் பெத்தகத்த, பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஜானகி உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://metronews.lk/?p=21400

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.