Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரு ஜெயசூரியவுடன் சென்று மைத்திரியை சுற்றி வளைத்தார் றணில்…

Featured Replies

கரு ஜெயசூரியவுடன் சென்று மைத்திரியை சுற்றி வளைத்தார் றணில்…

Maithri-ranil-karu.jpg?resize=490%2C315

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தற்போது ஜனாதிபதியுடைய உத்தியோகபூர்வ இல்லத்தை சென்றடைந்துள்ளனர். பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்து என்ன? என்பது குறித்த இலங்கையும், சர்வதேசமும் எதிர்பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

http://globaltamilnews.net/2018/67397/

  • தொடங்கியவர்

ஜனாதிபதி இல்லத்தில் மந்திர ஆலோசனை ! நடப்பதென்ன ?

 

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதி இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

maithripala-sirisena-karu-jayasurya-rani

ஜனாதிபதி இல்லத்திற்கு சென்ற குறித்த இருவரும் பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இன்று இரவு இடம்பெறவிருந்த சந்திப்பே தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/30761

  • தொடங்கியவர்

அரசியல் பரபரப்பு ! மைத்திரி, ரணில், கரு ஆகியோரின் சந்திப்பின் இறுதி நிலைப்பாடு இது தான் !

 

 

 

தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுப்பதே ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் எட்டப்பட்ட இறுதித் தீர்மானமென ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்ததாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

ranil-wickramasinghe-maithripala-sirisen

பிரதமர் பதவி தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கத்தின்  எதிர்கால நடடிவக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேசுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று இரவு 6.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்தனர்.

இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு, அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் பேசி எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் அறிவித்தார்.

இக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதே எமதும் ஜனாதிபதியின் இறுதித் தீர்மானமாக அமைந்ததாக தெரிவித்ததாக அமைச்சர் சுஜீவசேனசிங்க மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/30763

  • தொடங்கியவர்

நல்லிணக்க அரசாங்கம் தொடரும் – UNP – தேசிய அரசை விட்டு செல்கிறோம் SLFP – என்ன நடக்கிறது?

slfp.jpg?resize=650%2C450

தேசிய அரசாங்கத்தை இருந்து  விலகிக் கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளார்கள் என கெழும்பில் இருந்து வெளியாகும் இரவு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஒரு புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால  கொழு்பில் தெரிவித்துள்ளார்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ranil-wickramasinghe-maithripala-sirisen

ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைப்பில் தற்போது  நிலவும்  நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுப்பதே ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் எட்டப்பட்ட இறுதித் தீர்மானமென ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில்  பிரதமர் தெரிவித்ததாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால நடடிவக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேசுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று இரவு 6.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்ட பிரதமர், ஜனாதிபதியுடன் பேசி எடுக்கப்பட்ட தீர்மானங்களை, அலரி மாளிகையில் இருந்து  ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் அறிவித்தார்.

இக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதே தமதும் ஜனாதிபதியினதும் இறுதித் தீர்மானமாக அமைந்ததாக  அமைச்சர் சுஜீவசேனசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/67444/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.