Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது.?

Featured Replies

வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது.?

 

 

வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கோரி முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த போராட்டம் இன்று செவ்­வாய்க்­கி­ழமை ஒரு­வ­ரு­டத்தை எட்­டி­யுள்ள நிலை யில் பாரிய போராட்டமொன்று கிளி­நொச்­சியில் இடம்­பெ­ற­வுள்­ளது.

காணா­ம­லாக்­கப்­பட்டோர் தொடர்பில் தகவல் தரு­மாறும் அவர்­களை மீளக் கண்­டு­பி­டித்து தரு­மாறு கோரியும் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­கள் தொட ர்ந்தும் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அந்த வகையில் காணா­ம­லாக்கப்­பட்­டோரின் உற­வு­களால் இன்று செவ் வாய்க்கிழமை காலை ஒன்­பது மணி தொட க்கம் மூன்று மணி வரை கிளி­நொச்­சியில்  போராட்டம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. 

 காண­ாம­லாக்­கப்­பட்ட தமது உற­வு­களின் உண்­மை­நிலை குறித்து தகவல் தரு­மாறு கோரியும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு பொறுப்­பா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறு த்­து­மாறு கோரியும் குறித்த போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வருடம் ஜூன் மற்றும் நவம்பர் மாத ­ங்களில் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­களை சந்­தித்­த­தோடு 2009ஆம் ஆண்டு இடம்­பெற்ற இறுதி யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த போரா­ளி­க ளின் விவரங்களை வெளி­யிட நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். இதன்­போது காண­ாம­லாக்­கப்­பட்­டோரின்  குடும்­பத்­தினர் ஐந்து பிர­தான நிபந்­த­னைகள் அடங்­கிய மக­ஜ­ரொன்றை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­தனர். அதில் போரின் போதும் போரின் பின்னரும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த போரா­ளி­களின் தக­வல்கள், இர­க­சிய தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளோர் தொடர்­பான தக­வல்கள் மற்றும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பான தக­வல்கள் என்­பன பகி­ரங்­க­மாக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரி க்கை பிர­தா­ன­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­ தது.

இந் நிலையில் போராட்டம் இன்­றோடு ஒரு வரு­டத்தை எட்­டி­யுள்­ளது. ஒரு தசா ப்தகால யுத்­தத்­தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாறான இழுத்தடிப்பு நடவடிக்கைகளால் அரசின் மீதான நம்பிக்கையைஇழந்துள்ளனர். குறித்த போராட்டம் ஆரம் பிக்கப்பட்டதிலிருந்து காணாமலாக்கப்பட்டோரின் வயது முதிர்ந்த பெற்றோர் 7 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/30809

  • தொடங்கியவர்
  • காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்
 
5a8bbdf9721f4-IBCTAMIL.jpg

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 366 வது நாளாக தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை என நாட்டின் அரசதலைவரும் தலைமை அமைச்சரும் அறிவித்திருந்த நிலையிலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது.

5a8bbdf994f86-IBCTAMIL.jpg5a8bbdf9afd94-IBCTAMIL.jpg

http://newuthayan.com/story/70249.html

சர்வதேசமே இறுதி நம்பிக்கை – உறவுகளுடன் சேரும் வரை போராட்டம் தொடரும் :

Missing-_7633.jpg?resize=800%2C533
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று(20) 366 வது நாள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூகஅமைப்புகள், அரசியல் கட்சிகள் மதகுருமார்கள், தென்னிலங்கை அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டு இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நண்பகல் ஒரு மணிவரை இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த கலாரஞ்சனி கருத்து தெரிவித்த போது

எங்களது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை, நாட்டின் ஜனாதிபதியும் எங்கள் விடயத்தில் கைவிரித்து விட்டார், நாங்கள் கேட்பது எங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இருக்கின்றார்களா? இருக்கின்றார்கள் என்றால் எங்கு இருக்கின்றார்கள்? எப்போது விடுவிக்கப்படுவார்கள்? அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உயிரோடு இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதுவே. இதனை பொறுப்புடன் கூற வேண்டிய அரசு பொறுப்பற்று நடந்துகொள்கின்றமை வருத்தமளிக்கிறது.

இலங்கை விடயம் தொடர்பில் ஜநாவுக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் ஒரு வருடம் நிறைவுப்பெற்றுள்ள நிலையில் இதுவரைக்கும நம்பிக்கை தரும் வகையில் எதுவும் இடம்பெறவில்லை, ஜநாவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே. எங்களை பொறுத்தவரை இந்த இரண்டு வருடகால அவகாசம் என்பது ஒரு பயன்றற நடவடிக்கையே. எனத் தெரிவித்த அவர்

தமிழ் அரசியல் தரப்புக்கள் தங்களின் கட்சி பேதங்களை கடந்து எங்களின் பிச்சினைகளுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறே சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் எங்களுக்காக கடந்த காலம் போன்று குரல் எழுப்ப வேண்டும். இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இருந்து தற்போதைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரேயோரு நம்பிக்கை சர்வதேசமே எனவும் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் குற்றங்களை மறைக்க சட்டத்திருத்தமா? சர்வதேசமே உள்நாட்டு பொறிமுறையில் எமக்கு நம்பிக்கையில்லை,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் சர்வதேசத்திற்கான கண் துடைப்பு, சர்வதேசமே எங்களுக்கு நீதி வேண்டும், நீதி கேட்கும் எமக்கு நிவாரணம் எதற்கு? அடைக்கலமாக கொடுத்தவர்களை அரசு காணவில்லை என்று கூறுவது எப்படி நியாயமாகும்? ஜநாவே பன்னாட்டு தலையீட்டுடான நீதி பொறிமுறையே எமக்குத் தேவை போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்

Missing-_7628.jpg?resize=800%2C533Missing-_7642.jpg?resize=800%2C533Missing-_7678.jpg?resize=800%2C533Missing-_7695.jpg?resize=800%2C533Missing-_7698.jpg?resize=800%2C533Missing-_7705.jpg?resize=800%2C533Missing-_7721.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2018/67641/

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிங்களப் பெண்மணி

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் போராட்டத்தில் ஒரு சிங்களப் பெண்மணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இவர் வேறு யாரும் இல்லை. அனைவரும் நன்கு அறிந்த பரீட்சயமான ஒருவர் தான்.

இராஜகிரிய பகுதியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடதான் அந்த பெண்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் ஒருவருடமாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் ஒரு வடிவம் தான் இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்.

இதற்கு வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூக அமைப்புகள்,அரசியல் கட்சிகள் மதகுருமார்கள், தென்னிலங்கை அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இவர்களுடன் சந்தியா எக்னெலிகொடவும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமது குழந்தைகளுக்காக கிளிநொச்சியில் வீதியில் இறங்கி தாய் மார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

சமூக பிரச்சினைகளை காரணம் காட்டி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இதுவரை தீர்வுகளை தேடித்தரவில்லை.

ஜெனீவாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. இந்த நாட்டின் நீதி எங்கே? இந்த நாட்டின் செயற்றிறன் எங்கே?

எமக்கு ஒரு தீர்வை தரும் அளவுக்கு இந்த ஆட்சிக்கு சக்தி இல்லை. என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்களப் பெண்மணி தமிழர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுப்பது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டதுடன், சமூகவலைத்தளங்களில் இந்த விடயம் பரவிவருகின்றது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/politics/01/174836?ref=home-imp-parsely

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.