Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்யாவை திருமணம் செய்ய 7 ஆயிரம் பேர் விருப்பம்!!

Featured Replies

ஆர்யாவை திருமணம் செய்ய 7 ஆயிரம் பேர் விருப்பம்!!

 
1519008703441-750x430.jpg
 

ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள 7 ஆயிரம் பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஆர்யா, 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நான் கடவுள், அவன் இவன், வேட்டை, ராஜாராணி, கடம்பன் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கஜினிகாந்த், சந்தனத்தேவன் படங்களில் நடித்து வருகிறார்.

ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சில நடிகைகளுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை மறுத்தார். இந்த நிலையில் தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் தங்களைப் பற்றிய பெயர், படிப்பு, குடும்ப விவரங்களைத் தெரிவிக்கும் படி ஒரு தொலைபேசி இலக்கத்தையும் வெளியிட்டு இருந்தார். அதன் மூலம் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இவர்களில் 18 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். இந்த 18 பேரில் இருந்து தனக்குப் பொருத்தமான மணமகளை ஆர்யா தெரிவு செய்கிறார். தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலமாக மணமகளை அவர் தேர்ந்தெடுக்கிறார். எனவே விரைவில் ஆர்யா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஷாலும் திருமணத்துக்குத் தயாராகிறார். ஆர்யா திருமணம் முடிந்ததும் எனது திருமணம் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இருவரது திருமணமும் இந்த வருடத்திலேயே நடக்கும் என்று தெரிகிறது.

http://newuthayan.com/story/70482.html

  • தொடங்கியவர்

உங்களை யார் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்?: பெண் தேடும் ஆர்யாவுக்குப் பிரபல நடிகைகள் வாழ்த்து!

 

 
arya_co52

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலமாகத் தனக்கான துணையைத் தேர்வு செய்ய களமிறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. இந்த நிகழ்ச்சி நேற்று முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 பெண்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யவுள்ளார்.  

ஆர்யாவின் இந்த முயற்சிக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்கள். ட்விட்டரில் அவர்கள் கூறியதாவது:

நடிகை சுனைனா: அற்புதமான மனிதர் நீங்கள். உங்களை யார் தான் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் ஆர்யா? நல்ல மனதுடைய பெண்ணைத் தேர்வு செய்ய வாழ்த்துகள். சிறந்த மணமகளை அடைவீர்கள்.

நடிகை மற்றும் விஜே ரம்யா: அடடே... உங்கள் அருகில் யார் அமரப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் கனவுப் பெண்ணை அடைய வாழ்த்துகள். 

டிடி: வாழ்த்துகள் ஆர்யா. அனைத்துக்கும் வாழ்த்துகள்.    

நடிகை பிரியாமணி: பாராட்டுகள் மற்றும் ஆல் தி பெஸ்ட். 

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/21/who-wouldnt-want-to-marry-you-arya-2867737.html

 

  • தொடங்கியவர்

ஆர்யாவை திருமணம் செய்வதற்கு இந்தியா சென்ற இலங்கைப் பெண்!

 

ஆர்யாவை திருமணம் செய்வதற்கு இந்தியா சென்ற இலங்கைப் பெண்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் கனடா வாழ் இலங்கைப் பெண் சுசானா.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலே முதல் முறையாக நடைபெறும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இதில் நடிகர் ஆர்யா நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். நடிகை சங்கீதா கிரிஸ் தொகுத்து வழங்கும் இந் நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் இலங்கைப் பெண் சுசானா பங்கேற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தை பிறப்பிடமாகக் கொண்ட சுசாசனா, கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறார். இவரது பூர்விகம் இலங்கை என்பதும். கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sri-Lanka-woman-who-went-to-India-to-marry-Arya

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஆர்யாவின் பெண் தேடும் படலம்...எதிராகக் களமிறங்குகிறதா பெண்கள் அமைப்பு?

 
 

 

ஆர்யா

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில்  ஒருவராக விளங்குபவர் ஆர்யா. சமீபத்தில் அவர் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், ஆர்யாவிற்கு எதிராக பெண்கள் அமைப்பு ஒன்று காவல்துறையில் புகார் அளிக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் ஆர்யாவுக்கு திருமணம் ஆகவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த எண்ணுக்கு போன் செய்யலாம் என்று விளம்பரம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்கள் கழித்து இந்த விளம்பரம் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்காக ஆர்யா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான விளம்பரம் என்று தெரியவந்தது. 

'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற பெயரில் அந்த தனியார் தொலைக்காட்சியில் ரியால்டி ஷோ நிகழச்சிக்கான அறிவிப்பை அந்த தொலைக்காட்சி அறிவிப்பு செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு பல பெண்கள் விண்ணப்பத்திருந்தனர். அவர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் வைக்கபட்டுள்ளது. இந்த டாஸ்குகள் அனைத்திலும் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என்று சொல்லப்பட்டது. இதனால், பல்வேறு இளம் பெண்கள் மத்தியிலும் ஆர்வம் ஏற்பட்டு, இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்திருந்தனர். மன்னர் காலங்களில் நடைபெறும் சுயம்வரம் போன்று, நவீன சுயம்வர நிகழ்ச்சியாக இதை அந்த தொலைக்காட்சி வடிவமைத்துள்ளது. 

ஆர்யா

சமீபத்தில் இந்த நிகழச்சியில் பங்குபெற்ற பெண்களுடன் ராஜஸ்தான் சென்ற நடிகர் அங்கு அவர்களுடன் சைக்கிளில் பயணம் செய்வது போன்ற படங்களை வெளியிட்டு இருந்தார். அதாவது,சைக்கிளிங் பிரியரான ஆர்யாவிற்கு வரும் மனைவியும் சைக்களிங்கில் கில்லியாக இருக்க வேண்டும் என்ற டாஸ்கிற்காக இந்த டாஸ்க் வைக்கபட்டது. அதற்காக ராஜஸ்தானின் கடும் வெயிலில் பெண்களை சைக்கிள் ஓட்டவைத்தனர். 

ஒருபுறம் இளம் பெண்களிடம் இந்த நிகழச்சி வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதே நேரம் சில பெண்கள் அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போர்க்கொடி துாக்கும் முடிவில் உள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக அந்த அமைப்பை சேர்ந்த பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல பெண்களை வைத்து ஷோ நடத்தி அதில் ஒருவரை தேர்வு செய்யும் ஆர்யாவின் மனோபாவம் பெண்களின் சுயமரியாதைக்கே இழுக்காக அமைவதாக அவர்கள் போர்க்கொடி குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

எனவே, சட்ட ரீதியாக இந்த பிரச்னையை எதிர்கொள்ள அந்த பெண்கள் அமைப்பினர் திட்டமிட்டுள்ளார்கள். வழக்கறிஞர் ஒருவர் ஆலோசனையின் அடிப்படையில் காவல்துறையில் ஆர்யா மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் ஆர்யாவிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கும் திட்டத்தில் அந்த பெண்கள் அமைப்பினர் தீவிர ஆலோசனையில்  உள்ளனர். ஆர்யா மீதான புகார் மனுவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் வேளையில் பெண்கள் அமைப்போ, ஆர்யாவிற்கு எதிராக கச்சை கட்டி கிளம்புகின்றனர். காவல்துறையில் அளிக்கப்படும் புகாருக்கு பிறகே இந்தப் பிரச்னையின் வீரியம் பற்றி தெரியப்போகிறது என்கிறார்கள் அந்த பெண்கள் அமைப்பினர். 

 

பெண்தேட போய் வம்பை விலைக்கு வாங்கி கொள்ளபோகிறார் ஆர்யா என்று கமெண்ட் அடிக்கிறார்கள். ரியாலிட்டி ஷோ நடத்துபவர்கள் இதனை கவனத்தில் கொள்வார்களா?. 

https://www.vikatan.com/news/tamilnadu/118379-womans-association-to-file-complaint-against-reality-show-starring-arya.html

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

பெண்கள் என்ன கடைச் சரக்கா? நீதி கேட்கும் மதுரை மகள்

 

 
arya4

ஜானகியம்மாள்

ARYA2
Arya1
arya3

ரஜினி

arya4

ஜானகியம்மாள்

ARYA2

‘கலர்ஸ் டி.வி’யில் ஒளிப்பரப்பாகும் ஆர்யாவின் சுயம்வர நிகழ்ச்சியான, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் ஜானகியம்மாள்.

தேடிச்சென்றபோது ஆச்சரியம் காத்திருந்தது. வழக்குத் தொடுத்திருக்கும் ஜானகியம்மாளுக்கு வயது 50. சொந்த வீடுகூட இல்லாத ஏழை. கணவரை இழந்த இவர், ஆதரவற்றோர் உதவித்தொகை மூலம் வாழ்க்கையை நகர்த்துகிறார். மதுரை அரசு மருத்துவமனை சாலையில், பழுதடைந்த தனது பழவண்டிக் கடையை சரி செய்யும் முனைப்பில் இருந்தவரைச் சந்தித்ததும், “நீங்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டோம்.

சிரித்தவர், “நான் தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பில் உறுப்பினரா இருக்கேன்பா. மத்த பெண்கள் மாதிரி, டிவி சீரியல் பார்க்கிற பழக்கம் கெடையாது. ஆனா, பொது வாழ்க்கையில இருக்கிறதால நிறைய பேரோடு பேசுவேன். அப்ப எங்க ஏரியா பொண்ணுங்கதான் சொன்னாங்க, ‘ச்சே, அந்த நிகழ்ச்சி ரொம்ப மோசம். கல்யாணம் பண்ணிக்கிறேங்கிற பேர்ல 18 பெண்களை வெச்சி கேவலப்படுத்தறாரு ஆர்யா. கட்டிப்பிடிக்கிறது, ஒருத்தர் மேல ஒருத்தர் படுத்துக்கிட்டு எக்ஸர்சைஸ் பண்றதுன்னு மோசமா போகுது. இதைத் தட்டிக்கேட்க யாருமில்லையா?’ன்னு கேட்டாங்க. அப்புறம்தான் நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்” என்றார்.

இவருக்கு அறிமுகமான பிரபல பெண் வழக்கறிஞர் ரஜினியும் இந்த நிகழ்ச்சி பற்றி இதுபோலவே வருத்தப்பட, இருவரும் சேர்ந்து வழக்குப் போட்டிருக்கிறார்கள். “ஒவ்வொரு பொண்ணும் அந்த நடிகரை இம்ப்ரஸ் பண்றேன்ங்கிற பேர்ல தன்னை மறந்து ஏதேதோ உளறுதுக. ஒவ்வொரு நாளும் அதுல ஒரு பொண்ணைத் தேர்ந்தெடுத்து ‘டேட்டிங்’ போறாரு ஆர்யா. அப்ப, தன்னைப் பத்துன ரகசியத்தைப் பூராம் ஆர்யாகிட்ட சொல்றதா நினைச்சி உலகத்துக்கே சொல்றாங்க அந்தப் பொண்ணுங்க. ‘நான் 2 பேரைக் காதலிச்சேன், ஒருத்தன்கூட உறவு வெச்சிருந்தேன்’ அப்படீனெல்லாம் ஊருக்கே தெரியும்படி சொல்லித்தான் ஒரு பொண்ணு தனக்கான கணவனைத் தேடிக்கணுமா? அநியாயத்துக்கும் அத்துமீறிட்டு, ‘நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க’ன்னு ஒவ்வொரு பொண்ணையா ‘எலிமினேட்’ பண்றாங்க. அதுங்களும் அழுதுக்கிட்டே போகுதுங்க. பொண்ணுங்கன்னா இவங்களுக்கு இவ்வளவு கேவலமா?” என்று கேட்கிறார் ஜானகியம்மாள்.

“நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்கள் சுயவிருப்பத்தோடு கலந்துகொண்டிருக்கும்போது, நிகழ்ச்சியைத் தடைசெய்ய முடியுமா?” என்று வழக்கறிஞர் ரஜினியிடம் கேட்டோம். “வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் ஹேமலதாவும் இதே கேள்வியை எழுப்பினார். என்னுடைய பதில் இதுதான். சினிமா நடிகர்களை தலைவராக, முதல்வராக கொண்டாடுகிற மாநிலம் இது. அந்தப் பெண்களும் அதேபோன்ற பிரமிப்பான மனநிலையில் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால், பாதிப்பு ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கும்தான்.

பெண்ணுரிமைக்காகப் போராடியவர்களின் இத்தனை ஆண்டுகால உழைப்பையும் தவிடுபொடியாக்கிவிட்டு, மீண்டும் கற்காலத்துக்கே பெண்களை இழுத்துச்செல்கிறது இந்த நிகழ்ச்சி. வீட்டுக்கே போய் பெண் பார்த்தாலும்கூட, ‘பெண்ணுக்குப் பாடத் தெரியுமா, சமைக்கத் தெரியுமா?’ என்பது போன்ற கேள்விகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இன்றைய சூழலில், ஒரு சர்வாதிகாரி போல 18 பெண்களை ஆடச் சொல்லி, பாடச் சொல்லி, சமைத்துத் தரச் சொல்லி, அந்தரங்கமாகப் பழகி சுயம்வரம் நடத்துகிறார் நடிகர் ஆர்யா. நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிற நடிகை சங்கீதா இன்னும் மோசமாக அந்தப் பெண்களை இழிவுபடுத்துகிறார்.

‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொன்னதற்கே நடுரோட்டில், அந்தப் பெண்ணை கழுத்தை அறுத்துக்கொல்கிற வக்கிரங்கள் அரங்கேறும் சமூகம் இது. அப்படி இருக்க... தனக்கான ஜோடியை ஒரு ஆண் தேர்வு செய்வதற்கு சுயமரியாதை இழந்து கேவலமான பல ‘டெஸ்ட்டு’களை ஒரு பெண் கடந்து வரவேண்டும் என்று விஷம் விதைக்கப் பார்க்கிறது இந்த நிகழ்ச்சி. இதேபோல ஒரு பெண் வரிசையாக ஆண்களை அழைத்து, அவர்களின் தன்மானத்தை இதுபோல் காலில்போட்டு மிதித்து மாப்பிள்ளைத் தேர்வு நடத்தினால், இந்தச் சமூகம் இப்படி வேடிக்கைப் பார்க்குமா? எனவேதான், இந்த நிகழ்ச்சியைத் தடை செய்வதோடு அந்த டி.வி-யின் அதிகாரி, ஆர்யா, சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கூறுகிறோம்.

ஒரு காட்சியில் நாயைப் பயன்படுத்தினால்கூட, அதனைத் துன்புறுத்தவில்லை என்று சான்றிதழ் கேட்கிறது சினிமா தணிக்கை வாரியம். அப்படியிருக்க, பெண்களை இவ்வளவு மட்டமாக நடத்துகிற நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று கேட்டோம். பதிலளிக்குமாறு சினிமா தணிக்கை வாரியத்துக்கும், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.” என்றார் ரஜினி.

ஆர்யாவிடம் கேட்டபோது, “மீடியாவுக்கு வெளியில் என்னுடைய சொந்த விஷயம் அல்லது சினிமா பத்தின்னா கேளுங்க. இது சேனலுக்கான நிகழ்ச்சி. அவங்க பதில் சொன்னாத்தான் சரியா இருக்கும்’’ என்றார். ‘கலர்ஸ் தமிழ்' பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்றம், வழக்கு என்று சட்டரீதியான விஷயமாக மாறியுள்ளதால் இதுகுறித்து தற்போது எதுவும் நான் பேசக்கூடாது’’ என்றார்.

http://tamil.thehindu.com/opinion/columns/article23402914.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆர்யாவின் மனைவியாகப் போவது யார்? பிக் பாஸ் அளவுக்கு ‘எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு; ஆரவார வரவேற்பு இல்லையே!

 

 
0000_arya

 

கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்றொரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆர்யா, இந்த நிகழ்ச்சியின் மூலமாகத் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு வந்து குவிந்த விண்ணப்பங்களில் இருந்து 16 பெண்களை ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சி மூலமாகத் தேர்வு செய்திருந்தார். இந்த 16 பெண்களும் ஆர்யாவுடன் ஜெய்ப்பூர் சென்று அங்கு தங்கி இருந்து ஒருவருக்கொருவர் பழகிப் பார்த்து எந்தப் பெண் ஆர்யாவுக்குப் பொருத்தமானவர் என்பதை ஆர்யாவே நிகழ்ச்சியின் முடிவில் கண்டடைவது தான் இந்நிகழ்ச்சிக்கான கான்செப்ட். ஒருவழியாக கலந்து கொண்ட பெண்களில் பலரும் வடிகட்டப்பட்டு தற்போது அபர்னதி, அகாதா, சுஸானா, ஸ்வேதா, சீதாலட்சுமி எனும் 5 பெண்களில் வந்து நிற்கிறது இந்த ஷோ. இந்த 5 பெண்களிலும் 4 பேர் வடிகட்டப்பட்டு இறுதியில் முழுதாக ஆர்யாவின் மனதைக் கவர்ந்த பெண் எவரோ அவரே அவருக்கு மனைவியாகப் போகிறவர் என ஆர்யாவும், சேனலும் அறிவிப்பார்கள். இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரும் நடிகை சங்கீதா தான் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட. அதோடு ஆர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாண்டி இதை ஒரு ரியாலிட்டி ஷோ என்ற முறையில் பார்த்தீர்களானால் இது பார்வையாளர்களுக்கு முற்றிலும் பொழுது போக்கு அம்சங்களைத் தரக்க்கூடிய நிகழ்ச்சியாக இருந்தும் பார்வையாளர்கள் மட்டத்தில் சன் தொலைக்காட்சியின் பிக் பாஸ் அளவுக்கு இதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக் கூடிய அம்சம் என்னவோ குறைவு தான். ஆர்யாவுக்காகவும், கலந்து கொண்ட இளம்பெண்களுக்காகவும் கல்லூரிப் பெண்களும், பள்ளியிறுதி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இதை ரசிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பெரியவர்களிடையே மணப்பெண்ணை ரியாலிட்டி ஷோ மூலம் தேர்வு செய்ய நினைக்கும் ஆர்யாவின் எதிர்பார்ப்பு கேலிக்கு இடமானதாக இருக்கிறது. இது இதன் பாதக அம்சங்களில் ஒன்று. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் சிலர் தங்களைப் புரமோட் செய்து கொள்ளும், மக்களிடையே தங்களது முகத்தைப் பாப்புலர் ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிய வந்ததால் பார்வையாளர்களிடையே இந்த நிகழ்ச்சியைக் காணும் ஆர்வம் படிப்படியாக குறையத் தொடங்கி விட்டது என்பது உண்மை.

ஆர்யா, போட்டியில் தன்னுடன் கலந்து கொண்டு பங்கு பெற்ற அத்தனை இளம்பெண்களுடனும் நேசத்துடனே இருந்தார்.. குறைந்த பட்சம் இருப்பதாகக் காட்டிக் கொண்டார். எலிமினேட் செய்யப்படவிருப்பதைக் கூட சோகம் கவிந்த முகத்துடனே சொல்லி வந்திருக்கிறார். நிச்சயமாக இந்திய திருமணச் சட்டங்களின் படி ஆர்யாவால் இந்த ஷோவில் கலந்து கொண்ட அத்தனை பெண்களையும் மணக்க முடியாது. எவராவது ஒருவரைத் தான் மணக்க முடியும். அந்த ஒருவரையும் மணப்பதற்கு முன் என்ன விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரியவில்லை. ஏனெனில், இந்தியில் இதே போன்றதொரு ஷோ மூலமாகத் தனது வாழ்க்கைத் துணைவரை தேர்வு செய்தவரான நடிகை மல்லிகா ஷெராவத் பிறகு ஏனொ அவருடன் சண்டையிட்டு திருமணத்திற்கு முன்பே பிரிந்து விட்டார். எனவே ஆர்யாவின் கதை என்னவாகும் என்பது நிகழ்ச்சியின் நிறைவு அறிவிப்பன்று தான் தெரிய வரும்.

நடுவில், ஆர்யாவின் இந்த ரியாலிட்டி ஷோ இந்தியக் கலாசாரத்தை அவமதிப்பதாக இருக்கிறது. பெண்களை இழிவு படுத்தும் விதமாக இருக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிகழ்ச்சி அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி வெகு விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

முடிவாக ஆர்யாவின் மனைவி யார் என்பதில் அகாதா, சுஸானா, அபர்னதி மூவருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது என சமூக ஊடகங்களில் திரி பற்ற வைத்திருக்கிறார்கள் இந்நிகழ்ச்சியின் தொடர் பார்வையாளர்கள். இதில் அகாதா போலியானவர் என அவருடன் அந்தப் போட்டியில் பங்கு பெற்று எலிமினேட் ஆன பிற போட்டியாளர்கள் தெரிவித்திருப்பதாகத் தகவல். அபர்னதி வெளிப்படையாகப் பேசக்கூடிய உண்மையான நபராக இருந்த போதும் அவரது அப்பட்டமான வெளிப்படைத் தன்மையே அவருக்கு எதிராகத் திரும்பக் கூடும். என்றும் பேசப்படுகிறது. சுஸானா எனும் கனடாவைச் சேர்ந்தவரே இது வரை ஆர்யாவிடன் இருந்து அதிக எண்ணிக்கையில் டோக்கன் ஆஃப் லவ் என்று சொல்லப்படக் கூடிய இதய வடிவ கைக்காப்பை வென்றவர் என்பதால் அவருக்கு போட்டியில் ஜெயித்து ஆர்யாவின் மனைவியாகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது என்கிறார்கள். இதுவரையில் இந்ந்கழ்ச்சியின் போக்கு இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. சிலர் தொடர்ந்து பார்த்து விட்டு சமூக ஊடகங்களில் அதைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தாலும் கூட ஒரு ரியாலிட்டி ஷோ என்ற முறையில் தமிழ்நாட்டில் இதற்கு பிக் பாஸுக்கு கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே நிஜம். 

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/apr/03/who-is-aryas-wife-enga-veetu-mappillai-2892940.html

  • தொடங்கியவர்

யாழில் ஆர்யா

Edited by நவீனன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

“யாரையும் புண்படுத்த விரும்பலை..!" ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா! ஃபைனலில் நடந்தது என்ன?

 
 

கடந்த பிப்ரவரியில் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய `கலர்ஸ் தமிழ்' சேனல். அதில் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷோ, `எங்க வீட்டு மாப்பிள்ளை. நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என அறிவித்தார்கள். `இந்த ஷோவில் கலந்து கொண்டு, ஆர்யாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய பிரத்யேகமாக வெப்சைட் உருவாக்கப்பட்டது. ஒரு லட்சம் அழைப்புகள் வந்தன. ஏழாயிரம் பேர் பதிவு செய்தார்கள். பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தப் பதினாறு பேரும் ஷோவில் கலந்துகொள்ள, மொத்தம் 41 எபிசோடுகளாக ஒளிபரப்பாகின. ஆரம்ப எபிசோடுகள் ஜெய்ப்பூர் அரண்மனைகளில் ஷூட் செய்யப்பட்டன. போட்டியாளர் ஆர்யாவிடம் மனம் விட்டுப் பேசினார்கள், அந்தப் பெண்களிடம் ஆர்யாவும் தன் கடந்த காலம் குறித்து, தான் கடந்து வந்த பாதை குறித்து... என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார். சில பெண்கள் ஆர்யாவை `வாடா போடா' எனச் செல்லமாக அழைத்துப் பேசினார்கள். சிலர் கொஞ்சினார்கள். அபர்ணதி எலிமினேஷன் ஆனபோது கெஞ்சினார். பதினாறு பேரில் முதல்கட்ட எலிமினேஷனில் 11 பேர் வெளியேற, மீதமுள்ள ஐந்து பேரில் யாரை ஆர்யா கரம் பிடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

ஆர்யா

அந்த ஐந்து பேரின் வீடுகளுக்கும் `ஹோம் விசிட்' போனார், ஆர்யா. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை எதிர்த்த சில மகளிர் அமைப்புகள் இந்த ஹோம் விசிட்டின் போது நேரடியாக ஸ்பாட்டுக்குச் சென்று ஆர்யாவையும் நிகழ்ச்சியையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கும்பகோணம் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஷூட்டிங் நடத்தவே சிரமப்பட்டது யூனிட். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுசானாவின் உறவினர்களைச் சந்திக்கச் சென்றபோது, யாழ்ப்பாணம் நூலகம், எல்.டி.டி.இ மற்றும் இலங்கை ராணுவத்துக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

ஹோம் விசிட் முடிந்ததும், ஐந்து பேரில் இரண்டு பேர் எலிமினேட் ஆனார்கள். கடைசியில் சுசானா, சீதாலக்ஷ்மி, அகதா மூவரும் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள... அதில், தான் மணக்கப் போகிறவரை அறிவிப்பார் ஆர்யா என்றார்கள்.

ஆர்யா

இதற்கிடையில் நிகழ்ச்சியின் இயக்குநர் பிரகாஷும் `ஷோ அப்டேட்ஸ்' குறித்து நம்மிடம் பேசியபோது, `ஷோ முடிவில் ஆர்யா கல்யாணம் நடக்குமா?' என்கிற கேள்விக்கு எந்தவோர் உறுதியான பதிலையும் தரவில்லை.

 

இந்த நிலையில், இன்று (17/04/2018) ஒளிபரப்பாக உள்ள கிராண்ட் ஃபினாலே எபிசோடுகான ஷூட்டிங் சில நாள்களுக்கு முன் நடந்தது. அப்போது, கடைசி நிமிடத்தில் யாரும் எதிர்பாராத முடிவை எடுத்த ஆர்யா, சேனல் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி தந்திருக்கிறார். அந்த முடிவு, இதுதான்..

``என்னோட வாழ்க்கையை முடிவு செய்றதா அறிவிக்கப்பட்ட இந்த ஷோவுல, இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!"

https://cinema.vikatan.com/tamil-cinema/television/122453-enga-veettu-maappillai-grand-finale.html

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

“யாரையும் புண்படுத்த விரும்பலை..!" ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா! ஃபைனலில் நடந்தது என்ன?

....

...ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!"

https://cinema.vikatan.com/tamil-cinema/television/122453-enga-veettu-maappillai-grand-finale.html

 

satya_2_29_03_2011.jpg

கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்..?

இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் இருக்கே ஆர்யா..?

நேரடியாக அறுபதாம் கல்யாணம்தான் உங்களுக்கு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் முஸ்லீமாச்சே!

மூணையும் வைச்சுக்கலாமில்ல!

  • தொடங்கியவர்

"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா!" - ஸ்டுடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்

 
 

'பிக்பாஸ்' போல பேசப்படணும்; முடிஞ்சா அதை பீட் பண்ணலாம்... அப்படியொரு நிகழ்ச்சியோட தமிழ் லாஞ்ச் இருக்கணும்'

இரண்டு மாதங்களுக்கு முன் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய 'கலர்ஸ் தமிழ்' சேனலுக்கு அதன் வட இந்திய தலைமையிடம் இருந்து வந்த கட்டளை இது. அடுத்த நாளே, பிசினஸ் ஆட்களும் கிரியேட்டிவ் டீமும் ரூம் போட்டு (சென்னை வடபழனி கிரீன் பார்க்கில்தான் பெரும்பாலான மீட்டிங்) யோசித்தார்கள். சினிமா செலிபிரிட்டியில யார் சரியா வருவாங்க, எதைப் பேசலாம், யாருக்கு என்ன பிரச்னை... யோசிச்சிட்டே வந்தப்பதான், அவங்க சிந்தனையில சிக்கினார், கோலிவுட்டின் எலிஜிபிள் பேச்சிலர் ஆர்யா. கரெக்ட்... 'ஆர்யா கல்யாணம்'ங்கிற அந்த வார்த்தை உதயமாச்சு. 'குய்க்.. கான்செஃப்ட் இதுதான், பேசிடுங்க' என்றது, சேனல் தலைமை. மீட்டிங்கில் கலந்து கொண்ட சில நார்த் புள்ளிகள், 'எங்க சைடு இந்த மாதிரி சுயம்வர நிகழ்ச்சி நடிகைகளுக்கே நடந்திருக்கு' என எடுத்துக் கொடுத்தார்கள். 'அங்க செய்வாங்க.. இங்க வெச்சு செய்யப் போறாங்க...' என அப்போதே முணுமுணுத்திருக்கிறார்கள் சிலர். கடைசியில் முதல் மீட்டிங்கிலேயே 'எங்க வீட்டு மாப்பிள்ளை' கான்செஃப்ட் முடிவாகிவிட்டது.

ஆர்யா

சரி, ஆர்யாவிடம் பேச வேண்டும். பிசினஸ் ஹெட் நேரில் போனார். 'இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது பாஸ்' என்ற ஆர்யா, 'நான் பாட்டுக்கு பேச்சிலர் லைஃபை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். இது வேறயா' என மறுத்தார். சேனல் விடவில்லை. 'ட்ரையல் பண்ணிப் பார்க்கலாம். நம்மூர்ல ஃபர்ஸ்ட் டைம் இப்படிப் பண்றோம். பிக்பாஸைக் கூடத் திட்டினாலும் பிறகு பார்த்தாங்க'.. இப்படி என்னென்னவோ சொன்னவங்க, கடைசியா, அந்த வார்த்தையை விட்டாங்க. 'நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு கூட கட்டாயமல்ல பாஸ்! சேனலைப் பொறுத்தவரை கல்யாணம் நடந்தால் சந்தோஷம். இல்லையா, முடிவை அந்த நேரம் பார்த்துக்கலாம்!

'என்ன சொன்னீங்க...' எனக் கேட்ட ஆர்யா, 'வித்தியாசமா இருக்கே இது' என்றபடி ஒருபடி இறங்கியிருக்கிறார். மறுபடி பின்வாங்காதபடி கவனமாக பார்த்துக் கொண்டது சேனல். 'ஆமா சார், பெண் பார்க்கிற வைபோகம்னு நடக்குதில்ல, அந்த மாதிரிதான். எவ்வளவோ பொண்ணுகளைப் பார்க்கிறோம். எத்தனை வீடுகள்ல ஸ்வீட் காபியோட முடிச்சுக்கிடுறோம். அந்த மாதிரிதான். உங்களைப் பிடிக்கும்னு வரப்போறாங்க. உங்களுக்கு அவங்களைப் பிடிக்குதான்னு பார்க்கலாம். எல்லாத்துக்கும்மேல இது ஒரு ஷோதான்' என அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்கள், கூடவே 'ஓ.கே.,ன்னா பேமென்ட் பேசிடலாம்' என்றார்கள்.

படங்கள் பெரிதாக இல்லாத நிலையில், 'பேமென்ட் பெருசாக் கேட்டாக்கூட மடியும்' என நினைத்த ஆர்யா மனம் கிரீன் சிக்னலுக்குத் தயாரானது. ஆனாலும் நட்பு வட்டாரங்கள் சிலர், 'வேண்டாம் மச்சி' என எச்சரித்திருக்கிறார்கள். ரெண்டு மூணு நாள் ஊசலாட்டத்திற்குப் பிறகு ஓ.கே. சொல்லி விட்டார். அப்போது, 'அக்ரீமென்ட்'னு ஒண்ணு போடுவீங்களே, அதைக் கவனமாப் போடுங்கப்பா' என்றாராம்.

சேனல் அறிமுக விழாவிலேயே 'நிச்சயம் ஆர்யா கல்யாணம் செய்து கொள்வாரா' என திரும்பத் திரும்பச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'கவனமாக 'நாங்களும் நம்புறோம்' என்றே பதிலளித்தார் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரசேகர்.

ஆர்யா

இரண்டு மாதங்கள், ஐம்பது எபிசோடுகள்... பதினாறு பெண்கள் கலந்து கொண்டார்கள். 'ஆண்களுக்குதான் ஷோ பிடிக்கலை, பெண்கள் ஆர்வமாப் பார்கிறாங்க' என்றார் ஷோ இயக்குநர். பெண்கள் விரும்பிப் பார்த்தார்கள்தான். ஆனால், அந்தப் பெண்கள் ஷோ இறுதியில் ஆர்யா கல்யாணம் நடக்குமென நம்பினார்கள். 'அந்தப் பதினாறு பெண்களுக்கு எந்தளவு நம்பிக்கை இருந்ததெனத் தெரியவில்லை. ஆனால், அவர்களில் சிலரின் குடும்பத்தினர் ஆர்யா சொந்தமாகமாட்டாரானு ஏங்கினது தெரிஞ்சது' என்கிறார், அந்த யூனிட்டிலேயே இருந்த ஒருவர். கனடா பெண் சுசானாவின் அந்தச் சின்னஞ்சிறு மகனின் மனநிலை எப்படி இருந்தது என்பது அவனுக்கும் சுசானாவுக்குமே தெரியும்.

ஷோவின் நிறைவு நாள் மேடை மூன்று பெண்களுடன் பரபரப்பானது. 'ஆர்யா கட்டிக்கப் போற பொண்ணு யார்யா'னு பார்க்க உலகத் தமிழர்களே காத்துக்கிடக்காங்க' எனத் தன் பங்குக்கு சங்கீதா கிச்சுகிச்சு மூட்டினார். அந்த க்ளைமாக்ஸ் காட்சியும் வந்தது. 'யாராவது ஒருத்தரைத் தேர்வு செய்தா, மத்த ரெண்டு பேர் நிலைமையை யோசிச்சுப் பாருங்க. அதனால யார் மனதையும் காயப்படுத்த விரும்பலை. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்' என ஆர்யா அமைதியாக நிற்க, அந்த மூன்று பெண்களும் அவர்களது குடும்பங்களும் அதிர்ந்தார்களோ இல்லையோ, இரண்டு மாதங்களாக நிகழ்ச்சியைப் பார்த்து வந்த ஆடியன்ஸ் அதிர்ந்து போனார்கள். 'இப்படித்தான் நடக்கும்னு நாங்க எதிர்பார்த்தோம்' எனக் கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.

ஆர்யா

இறுதிநாள் நிகழ்ச்சி ஷூட் செய்யப்பட்ட போது அதில கலந்து கொண்ட ஒரு டிவி பிரபலம் ஆர்யாவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக அங்கேயே பதிவு செய்திருக்கிறார். 'இதெல்லாம் முன்னாடியே தெரியாதா? அப்ப இது திட்டமிட்ட நிகழ்ச்சியா' என்றெல்லாம் அவர் கேட்க, அவரைத் தொடர்ந்து பேசவிடாமல் தடுத்து விட்டார்களாம்.

சென்னையில் தனியார் வங்கியில் பணிபுரியும் அந்தப் பெண் நம்மிடம் பேசினார். "இதுவரை பத்து பேருக்கு மேல என்னைப் பொண்ணு பார்த்துட்டுப் போயிட்டாங்க சார். ஒவ்வொருத்தனும் வந்துட்டுப் போன மறுநாள்ல இருந்து ஒரு மாசம் வரை போன் வரும்னு எதிர்பார்ப்பாங்க வீட்டுல. அந்த மனநிலை ஊர் உலகம் அறியாது. கிட்டத்தட்ட அதேநிலைதான் இந்த ஷோவுல நடந்திருக்கு. நாலு சுவருக்குள்ள நடக்கறதை கேமரா வெச்சுக் காட்டியிருக்காங்க, அவ்ளோதான். ஆர்யாவுக்கு இதை மட்டும் சொல்ல விரும்பறேன். தயவு செய்து 'பெண் பார்க்கும் படல'த்திற்குப் பிந்தைய எங்க மனசைப் புரிஞ்சுக்கோங்க . இனியொரு முறை இத மாதிரி நடந்துக்காதீங்க!"

 

எப்படியோ, பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்துடன் ஷோ முடிந்துவிட்டது. 'கடைசியில் யார் ஜெயிப்பாங்க' எனக் கேட்டுவிட்டு, மூணு பேருமே தோத்துட்டாங்க' எனச் சொல்லிவிட்டார்கள்.. உண்மையில் தோற்றது ஆர்யாதான்.

https://cinema.vikatan.com/tamil-cinema/television/122964-regarding-enga-veetu-mapillai-result-request-to-arya.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.