Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எம்.பிக்களின் இலஞ்ச விவகாரத்தால் சபையில் சலசலப்பு

Featured Replies

கூட்டமைப்பு எம்.பிக்களின் இலஞ்ச விவகாரத்தால் சபையில் சலசலப்பு
 
 

image_95ea10fb9e.jpg2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது.

இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.

 “வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு, 20 மில்லியன் ரூபாயை, இலஞ்சமாக நாங்கள் பெற்றதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், எம்மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது, எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது” என சுமந்திரன் எம்.பி குற்றம்சாட்டினார்.

இதன்போது எழுந்த, சரவணபவன் எம்.பி, “இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதனிடையே எழுந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி, “வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு எமக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்தோம். பொருளாதார அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்ற காரணத்தைக் காட்டியே, இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரப்பட்டது” என்றார்.

சிவசக்தி ஆனந்தனின் கூற்றைக்கு கடுமையான எதிர்ப்பை சுமந்திரன் எம்.பி வெளிப்படுத்தினார். இதன்போது, அக்கிராசனத்தில் இருந்த சபாநாயகர், சுமந்திரன் எம்.பிக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அமருமாறு கூறினார்.

எனினும், சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்த கருத்தை ஹன்சாட்டிலிருந்து இருந்து நீக்க வேண்டுமென, சுமந்திரன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கூட்டமைப்பு-எம்-பிக்களின்-இலஞ்ச-விவகாரத்தால்-சபையில்-சலசலப்பு/175-211858

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இதனிடையே எழுந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி, “வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு எமக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்தோம். பொருளாதார அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்ற காரணத்தைக் காட்டியே, இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரப்பட்டது” என்றார்.

உண்மையை உரக்க சொல்லுங்கள். வழக்கு போட போனவர்கள் ஏன் அமைதியாகி விட்டார்கள்??

  • தொடங்கியவர்

சிவசக்தி ஆனந்தன் எம்.பி.யை கடுமையாக எச்சரித்த சபாநாயகர்

 

 

பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த முனைந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய மூன்று தடவைகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. இதன்போது வாய்மூல விடைக்கான வினா நேரம் முடிவடைந்த பின்னர் சரவணபவன் எம்.பி. யின் சிறப்புரிமை பிரச்சினைக்கு பதிலளிக்க சிவசக்தி ஆனந்தன் முனைந்த போதே இந்நிலைமை ஏற்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறும் போது,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க  அபிவிருத்தி என்ற பெயரில் 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எம்மீது குற்றம் சுமத்தினார். இதனால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே  இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தினார்.

இதனையடுத்து சரவணபவன் எம்.பி. யின் சிறப்புரிமை பிரச்சினைக்கு சிவசக்தி ஆனந்த எம்.பி பதலளிக்க முனைந்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் சரவணபவனும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். 

எனினும் சிவசக்தி ஆனந்தன்  எம்.பி தனது உரையை தொடர்ந்து நிகழ்த்தி வந்தார். இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய நீங்கள் பேச்சை நிறுத்திக்கொண்டு அமருங்கள் என பலமுறை கூறிய போதும் அதனை பொருட்படுத்தாமல் சிவசக்தி ஆனந்த எம்.பி தனது உரையை நிகழ்ச்சி வந்தார். 

இதனையடுத்து  சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக கோபமடைந்து நீங்கள் அமர போகின்றீரா? இல்லையா?. அமருங்கள். மூன்றாவது தடவையாக கூறுகின்றேன் அமராவிட்டால்  கடுமையான நடவடிக்கை   எடுக்க வேண்டி வரும் என்றார். இதன்பின்னர் சிவசக்தி ஆனந்த எம்.பி தனது பதிலை இடைநடுவே நிறுத்தி விட்டு அமர்ந்தார்.

இதனையடுத்து எழுந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்,

சிவசக்தி ஆனந்தன் எம்.பி. யின் உரையை ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்க வேண்டும் என கோரினார்.

http://www.virakesari.lk/article/30889

  • கருத்துக்கள உறவுகள்

கன்சாட் அறிக்கையிலிருந்து உரையை நீக்கிவிட்டால் குற்றவாளிகள் அனைவரும் கனவான்கள் ஆகிவிடுவார்கள். :shocked::grin::100_pray:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.