Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் கடற்­படை தள­பதி கரன்­னா­கொ­டவை கைது செய்­ய­வேண்­டிய தேவை உள்­ளதா?

Featured Replies

முன்னாள் கடற்­படை தள­பதி கரன்­னா­கொ­டவை கைது செய்­ய­வேண்­டிய தேவை உள்­ளதா?

6-5348032ba40aee85ab38ce86f9c7017cebbe9276.jpg

 

நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ரவு
(எம்.எப்.எம்.பஸீர்)

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான விசா­ர­ணை­க ளில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொ­டவை கைது செய்ய வேண்­டிய தேவை உள்­ளதா என்­பதை நீதி­மன்­றுக்கு அறி­விக்­கு­மாறு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு நேற்று உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் அந்த விவ­காரம் தொடர்பில் இது­வரை செய்­யப்­பட்­டுள்ள விசா­ர­ணை­க ளில் மேலும் கைது செய்­யப்­ப­ட­வேண்­டிய சந்­தேக நபர்­களின் பெயர்ப் பட்­டி­ய­லையும் மன்­றுக்கு அறி­விக்­கு­மாறு அவர் குற்றப் புல­னா­யவுப் பிரி­வி­ன­ருக்கு அறி­வித்தார். 

  இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே, பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான அச்­சலா சென­வி­ரத்ன நீதி­மன்றில் முன்­வைத்த கோரிக்­கைக்கு அமை­வாக நீதிவான் இந்த உத்­த­ர­வினை பிறப்­பித்தார்.

இத­னி­டையே இந்த காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் இருந்து வேறு ஒரு பொலிஸ் பிரி­வுக்கு மாற்ற சந்­தேக நபர்கள் சார்பில் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­யினை, நீதிவான் நிரா­க­ரித்தார். அவ்­வாறு விசா­ரணை அதி­கா­ரியை மாற்றி வேறு ஒரு பிரி­வுக்கு விசா­ர­ணை­களை கைய­ளிக்கும் அதி­காரம் நீதி­வா­னுக்கு இல்லை எனவும் அந்த அதி­காரம் குறிப்­பிட்ட உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­ருக்கே இருப்­ப­தா­கவும் நீதிவான் இதன்­போது அறி­வித்தார்.

  இந்த விவ­கா­ரத்தில் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்ள 9 பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள காமினி, மெண்டிஸ் ஆகிய இரு முன்னாள் கடற்­படை புல­னாய்­வா­ளர்­க­ளையும் எதிர்­வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­தர்­விட்ட நீதிவான் அன்­றைய தினம் இது குறித்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுக்­கவும், பிணையில் உள்ள சந்­தேக நபர்கள் மே மாதம் 3 ஆம் திகதி மன்றில் ஆஜ­ரா­கவும் உத்­த­ர­விட்டார்.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

 புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா, புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன

சிறப்பு புல­னாய்வு பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன் கொமான்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமான்டர் ராக பதவி உயர்த்­தப்­பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார, நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ , கித்­சிரி மற்றும் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க ஆகியோர் கைது செய்­யப்­பட்டு தற்­போது பிணையில் உள்ள நிலையில் விளக்­க­ம­றி­யலில் உள்ள கடற்­படை புல­ன­யவுப் பிரிவின் முன்னாள் வீர­ரான கஸ்­தூ­ரிகே காமினி, அரு­ண­து­ஷார மெண்டிஸ் ஆகியோர் நேற்று சிறை அதி­கா­ரி­களால் வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். பிணையில் உள்­ளோரும் மன்றில் ஆஜ­ரா­கினர்.

இதன்­போது முதலில், குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் இருந்து விசா­ர­ணை­களை மாற்றக் கோரிய சந்­தேக நபர்­களின் கோரிக்கை தொடர்பில் நீதிவான் தனது தீர்ப்பை அறி­வித்தார்.

இதன்­போதே குற்றப் புல­னா­யவுப் பிரி­வி­ட­மி­ருந்து விசா­ர­ணை­களை மாற்றும் அதி­காரம் தனக்கு இல்லை எனக் கூறி அவர் அந்த கோரிக்­கையை நிரா­க­ரித்தார்.

 குற்றப் புல­னாய்வுப் பிரிவு சார்பில் மன்றில் நேற்று ஆஜ­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் சர­ண­பால விசா­ரணை அறிக்­கை­யினை நீதி­வா­னுக்கு சமர்ப்­பித்தார்.

 இந் நிலையில், மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்த பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி சுணில் சர­ண­பால,

' இந்த விசா­ர­ணைகள் தொடர்ந்­து­கொண்டே செல்­கின்­றன. ஒவ்­வொரு முறையும் மேல­திக விசா­ரணை அறிக்கை தாக்கல் செய்­யப்­படும் போதும் அதில் முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொட, இந்த கடத்தல் , காணாமல் ஆக்­கப்ப்ட்ட சம்­பவம் தொடரில் அறிந்­தி­ருந்தார் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவரை சி.சி.டி.யினர் சந்­தேக நப­ராக கருதி கைது செய்­வார்­களா, இந்த விவ­கா­ரத்தில் இன்னும் கைது செய்­யப்­ப­ட­வேண்­டிய எத்­தனை சந்­தேக நபர்கள் உள்­ளார்கள், அவர்கள் யார் என்­பதை மன்­றுக்கு குற்றப் புல­ன­யவுப் பிரிவு வெளிப்­ப­டுத்த வேண்டும்.' எனக் கோரினார்.

 இதன் போது அது தொடர்பில் மன்றில் ஆஜ­ரான குற்றப் புல­னாய்வுப் பிரிவு அதி­காரி சுனில் சர­ண­பால, விசா­ரணை பொறுப்­ப­தி­கா­ரி­யையே கேட்க வேண்டும் எனவும் தனக்கு தெரி­யாது எனவும் பதி­ல­ளித்தார்.

 அந்த விட­யங்­களை இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம் ஆராய்ந்து, எதிர்­வரும் தவ­ணையின் போது, முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொ­டவை கைது செய்ய வேண்­டிய தேவை உள்­ளதா என்­பதை மன்­றுக்கு அறி­விக்­கு­மாறு , முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவை கைது செய்ய வேண்டிய தேவை உள்ளதா என்பதை மன்றுக்கு அறிவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் அந்த விவகாரம் தொடர்பில் இதுவரை செய்யப்பட்டுள்ள விசாரணைகளில் மேலும் கைது செய்யப்படவேண்டிய சந்தேக நபர்களின் பெயர் பட்டியலையும் மன்றுக்கு அறிவிக்குமாறும் அவர் அறிவித்து வழக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அத்துடன் தேடப்படும் சந்தேக நபர் லெப்டினன் கொமான்டர் சம்பத் ஹெட்டி ஆரச்சிக்கு மீளவும் பகிரங்க பிடியாணை பிறப்பித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.