Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் குறித்த சம்­பந்­தனின் எதிர்­வு­கூறல்

Featured Replies

ஈழம் குறித்த சம்­பந்­தனின் எதிர்­வு­கூறல்

 

ஒரு­மித்த நாட்­டுக்குள் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொண்டு இணைந்து செயற்­ப­டவே நாம் முயற்­சித்து வரு­கின்றோம். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தமி­ழீழ கதை­க­ளைக்­கூறி சிங்­கள மக்­களை ஏமாற்றி தேர்தல் வெற்­றி­யினைப் பெற்­றுள்ளார். தமி­ழீழம் மல­ரு­மாயின் அது மஹிந்த ராஜ­­பக் ஷ­வி­னா­லேயே அமையும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா . சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை அர­சியல் நெருக்­க­டிகள் தொடர்பில் பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன முன்­வைத்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்தன் இதனை தெரி­வித்­துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரி­வித்த சம்­பந்தன் கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தேர்தல் பிர­சா­ரங்கள் அனைத்­துமே இன­வா­தத்­தையும் பிரி­வி­னை­வா­தத்­தையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்தத் தேர்­தலை மஹிந்த ராஜ­­பக் ஷ வெற்­றி­கொள்ள தமி­ழீழ கதை­யி­னையே கூறி பிர­சாரம் செய்தார். புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­பட்டால் ஈழம் மலரும் என கூறிக்­கொண்டு அவர்­களின் தேர்தல் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

நாம் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்றோம் என தெற்கின் சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்­களை கொண்டு சென்று அதன்­மூ­ல­மாக மக்­களை தங்­களின் பக்கம் திசை­தி­ருப்பும் செயற்­பா­டு­களை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் . சிங்­கள மக்கள் மத்­தியில் பிழை­யான கருத்­துக்­களை கூறி செயற்­ப­டு­வது மிகவும் தவ­றான ஒரு செயற்­பா­டாகும். விகா­ரை­களில், வீடு­களில், பொது இடங்­களில், சிங்­கள மக்கள் முன்­னி­லையில் பொய்­யான கருத்­துக்­களை கூறி பொது எதி­ர­ணி­யினர் அவர்கள் இருப்பை தக்­க­வைத்­துள்­ளனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தமி­ழீழம் உரு­வா­கு­வ­தாக தென்­ப­குதி சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்­களை கூறி அப்­பாவி சிங்­கள மக்­களை ஏமாற்­றி­வ­ரு­கின்றார். ஈழம் குறித்து இவர்கள் பேசு­கின்­றனர். ஆனால், தாமரை மொட்டின் பொய்ப்­பி­ர­சா­ரங்கள் மூலமே தமி­ழீழம் உரு­வாகும். அவ்­வாறு நிலைமை ஏற்­ப­டு­மாயின் அதற்கு மஹிந்த ராஜ­­பக் ஷ அணி­யி­னரின் பொய்­யான பிர­சா­ரங்­களே கார­ண­மாகும் என்று சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வு­காண்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு பல தட­வைகள் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். சில மாதங்­க­ளுக்கு முன்னர் மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷவை சம்­பந்தன் சந்­தித்து இந்த விடயம் தொடர்பில் பேசியும் இருந்தார். இத­னை­விட பாரா­ளு­மன்­றத்­திலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அமர்ந்­தி­ருக்­கத்­தக்­க­தாக அர­சியல் தீர்­வுக்கு ஒத்­து­ழைக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டியும் இருந்தார்.

இந்த நிலையில், உள்­ளூ­ராட்சி தேர்தல் பிர­சா­ரங்­களின் போது அர­சாங்­கத்­திற்கோ அல்­லது ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கோ வாக்­க­ளிக்­க­வேண்டாம் என்றும் அவ்­வாறு வாக்­க­ளித்தால் தமி­மீழம் உரு­வா­வ­தற்கு ஆணை­யாக அது அமையும் என்று பொது எதி­ர­ணி­யினர் பிர­சாரம் செய்­தனர். புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது ஈழத்தை உரு­வாக்கும் செயற்­பா­டாகும். எனவே, இந்தத் தேர்­தலை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பாக கருதி சிங்­கள மக்கள் அதற்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வேண்­டு­மென்றும் பொது எதி­ர­ணி­யினர் பிர­சாரம் செய்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலை­யில்தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அதி­க­ள­வான சிங்­கள மக்கள் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்தே அப்­பாவி சிங்­கள மக்­களை மஹிந்த ராஜ­­பக் ஷ தவ­றாக வழி­ந­டத்­து­கின்றார் என்று சம்­பந்தன் எம்.பி. பகி­ரங்­க­மாக குற்­றம்­சாட்டும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் இந்தக் கருத்து தொடர்பில் பதி­ல­ளித்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­­பக் ஷ தனது ஆட்­சிக்­கா­லத்தில் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காது சம்­பந்­தன் தற்­போது பிதற்­று­கின்றார். புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­க­ளி­னதும் இந்­தி­யா­வி­னதும் சொல்­லைக்­கேட்டு எனது அர­சாங்கம் மேற்­கொண்ட முயற்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காத சம்­பந்தன் தற்­போது பேசு­வது வேடிக்­கை­யா­னது என்றும் மஹிந்த ராஜ­­

பக் ஷ கூறி­யுள்ளார்.

உண்­மை­யி­லேயே மஹிந்த ராஜ­­பக் ஷ வின் ஆட்­சிக்­கா­லத்தில் 2009 ஆம் ஆண்டு பேர­ழி­வு­க­ளுக்கு மத்­தியில் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. யுத்தம் முடி­வ­டைந்­ததை அடுத்து அர­சாங்­க­மா­னது பேரி­ழப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு காணும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து இலங்­கைக்கு வருகை தந்த ஐ.நா.வின் முன்னாள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் முன்னாள் இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங்­கிற்கும் இனப்­பி­ரச்­சி­னைக்­கு­ரிய தீர்வு காணப்­படும் என்று மஹிந்த ராஜ­பக் ஷ உறு­தி­வ­ழங்­கி­யி­ருந்தார். 13 ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் சென்று தீர்வு காணத் தயார் என்று அவர் கூறி­யி­ருந்தார்.

ஆனால், இந்த வாக்­கு­று­தி­யினை அன்­றைய அர­சாங்­க­மா­னது உரிய வகையில் நிறை­வேற்­ற­வில்லை. 2011 ஆம் ஆண்டு இந்­தி­யாவின் அழுத்தம் கார­ண­மாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­க­மா­னது பேச்­சு­வார்த்தை நடத்த இணங்­கி­யி­ருந்­தது. இதனைத் தொடர்ந்து அர­சாங்கத் தரப்­பி­ன­ருக்கும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கு­மி­டையில் 16 சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வந்­தன. ஆனால் இந்த பேச்­சு­வார்த்­தை­யி­லி­ருந்து அர­சாங்கத் தரப்­பினர் தன்­னிச்­சை­யாக வில­கிக்­கொண்­டி­ருந்­தனர். இதனால் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான பேச்­சுக்கள் முறி­வ­டைந்­தி­ருந்­தன.

இதனை அடுத்து பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வொன்­றினை அமைத்த அர­சாங்கம் அந்தத் தெரி­வுக்­கு­ழு­விற்கு வந்தால் மட்­டுமே பேச்­சுக்­களை நடத்த முடியும் என்று அறி­வித்­தி­ருந்­தது. ஆனால், தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்போ அர­சாங்­கத்­துடன் பேசி இணக்­கப்­பாடு காணப்­பட்ட பின்­னரே தெரி­வுக்­கு­ழுவில் பங்­கேற்­பது குறித்து பரி­சீ­லிக்க முடியும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்­தது. இதனால் இரு­த­ரப்­புக்­க­ளுக்­கு­மி­டையில் பேச்­சுகள் இடம்­பெ­ற­வில்லை. இதன்­பின்னர் தீர்வு குறித்து ஆராய நிபு­ணர்­குழு அமைக்­கப்­பட்­டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் திஸ்­ஸ­ வி­தா­ரண தலை­மையில் சர்­வ­கட்­சிக்­குழு அமைக்­கப்­பட்­டது. ஆனால் இந்த முயற்­சி­களில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது பங்­கேற்­க­வில்லை. ஏனைய கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய சர்­வ­கட்­சிக்­கு­ழு­வா­னது நூற்­றுக்கும் மேற்­பட்ட தடவை கூடி தீர்­வுத்­திட்ட வரை­வொன்றை தயா­ரித்­தது. அந்த வரைவை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க அர­சாங்­க­மா­னது அனு­ம­திக்­க­வில்லை. இதனால் அந்த திட்­ட­வ­ரை­வா­னது குப்­பைக்­கூ­டைக்குள் செல்லும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

சர்­வ­தே­சத்­தையும் இந்­தி­யா­வையும் சம­ர­சப்­ப­டுத்தும் முயற்­சியில் அன்­றைய அர­சாங்கம் ஈடு­பட்­டதே தவிர உண்­மையில் இத­ய­சுத்­தி­யுடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வு­காண முயற்­சிக்­க­வில்லை. இவ்­வாறு அர­சாங்கம் செயற்­பட்­டி­ருந்த நிலையில் தனது அர­சாங்கம் அர­சியல் தீர்வு காண முயன்­ற­தா­கவும் ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது அந்­த­வே­ளையில் தமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­­பக் ஷ தற்­போது கூறு­வது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல.

ஏனெனில் அன்­றைய ஆட்­சிக்­கா­லத்தில் பேச்­சுக்கள் முறி­வ­டைந்­த­தை­ய­டுத்து கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக் ஷவை தனிப்பட்ட முறையிலும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். யுத்தத்தில் வெற்றிகொண்ட அன்றைய அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகியே இருந்தது. இதனால்தான் உரிய வகையில் பேச்சுக்களை நடத்த முன்வந்திருக்கவில்லை.

தற்போதும் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை குழப்பியடிக்கும் செயற்பாட்டிலேயே பொது எதிரணியினர் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பொது எதிரணியினரின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, இனியாவது அரசியல் சுயநலன்களை மட்டும் பாராது நாட்டின் நலன்கருதி அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு பொது எதிரணி ஒத்துழைக்கவேண்டும். அவ்வாறு ஒத்துழைக்குமானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக் ஷவின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் என்பது மட்டும் உண்மையாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-22#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.