Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பர­ப­ரப்­பான சூழலில் திங்­க­ளன்று ஆரம்­ப­மா­கி­றது ஜெனிவா சமர்

Featured Replies

பர­ப­ரப்­பான சூழலில் திங்­க­ளன்று ஆரம்­ப­மா­கி­றது ஜெனிவா சமர்

p16-9e3a291b096d661656ee7f0bb1bcd34cbf8edf47.jpg

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கின்­றது. மனித உரிமை பேர­வையின் தலைவர்  

தலை­மையில் நடை­பெறும் இந்த 37 ஆவது கூட்டத் தொடரில் நிலையில் இலங்கை மனித உரிமை நிலை­வரம் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களின் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன.  

இதே­வேளை 37 ஆவது கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிக முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட இலங்கை குறித்த பிரே­ரணை எவ்­வாறு இலங்கை அர­சாங்­கத்­தினால் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது குறித்து இந்தக் கூட்டத் தொடரில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

எதிர்­வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் எதிர்­வரும் 21 ஆம் திகதி இலங்கை குறித்த பிர­தான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இலங்­கையை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த அறிக்கை வெ ளியா­கி­யுள்­ளது. இதில் பல்­வேறு விட­யங்­களை அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

நாளை திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது அமர்வில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் உள்­ளிட்ட தரப்­பினர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

முத­லா­வது அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்­பான தனது நிலைப்­பாட்டை அறி­விக்­க­வுள்ளார்.

இலங்கை குறித்த ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை ஏற்­க­னவே இலங்கை குறித்த அறிக்­கையில் தெரி­வித்­துள்ள என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் கடும் அதி­ருப்­தியை வெ ளியி­ட­வுள்­ள­துடன் பாரிய அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

இதே­வேளை இம்­முறை கூட்டத் தொடரில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில் மக்கள் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். குறிப்­பாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி, மற்றும் பல்­வேறு அர­சியல் கட்­சி­களின் மக்கள் பிர­தி­நி­திகள் ஜெனி­வாவில் முகா­மிட்டு பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமை தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

 

விசே­ட­மாக ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள 20க்கும் மேற்­பட்ட விசேட உபக்­கு­ழுக்­கூட்­டங்­களில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.

 

அது­மட்­டு­மன்றி தென்­னி­லங்­கையின் சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் இம்­முறை கூட்டத் தொடரில் கலந்­து­கொண்டு ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்பில் சர்­வ­தேச சமூ­கத்தை வலி­யு­றுத்­த­வுள்­ளனர்.

 

அதே­போன்று தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து இரா­ணு­வத்தை பாது­காக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் ஜெனி­வாவில் முகா­மிட்டு விளக்­கங்­களை அளிக்­க­வுள்­ளனர்.

 

மேலும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்­பாக ஜெனிவா வளா­கத்தில் இம்­மு­றையும் பல்­வேறு உபக்­கு­ழுக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன.

இந்த உபக்­கு­ழுக்­கூட்­டங்­களில் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் மற்றும் புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­தர்­களும் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். இதற்­கான ஏற்­பா­டுகள் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இம்­முறை பொது­ந­ல­வாய நாடு­களின் செய­லகம் சர்­வ­தேச பாரா­ளு­மன்ற ஒன்­றியம் உள்­ளிட்ட அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் முதலாம் கட்ட அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர். அதே­போன்று அமெ­ரிக்கா, கனடா, பிரிட்டன் அவுஸ்­தி­ரே­லியா, டென்மார்க் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்­களும் 37ஆவது கூட்டத் தொடரின் முதலாம் கட்ட அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.

 

இது இவ்­வாறு இருக்க வெளி­வி­வ­கார அமைச்சர் தலை­மையில் அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் ஜெனிவா நோக்கி செல்­ல­வுள்­ளனர். அதா­வது எதிர்­வரும் 21 ஆம் திகதி நடை­பெறும் விவா­தத்­தின்­போது இலங்­கையின் சார்பில் வெ ளிவி­வ­கார அமைச்சர் பங்­கேற்று உரை­யாற்­ற­வுள்ளார்.

 

வெளி­வி­வ­கார அமைச்சின் உரையில் ஜெனிவா பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது. மற்றும் அதில் காணப்­ப­டு­கின்ற சவால்கள் என்­பன குறித்­து­வி­ளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

 

அதே­போன்று காணாமல் போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்­வு­காண காணா­மல்­போனோர் குறித்த அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் விளக்­க­ம­ளிக்­கப்­படும். நம்­ப­க­ர­மான பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­படும் என அர­சாங்­கத்தின் சார்பில் தெரி­விக்­கப்­ப­டு­மென கூறப்­ப­டு­கின்­றது.

 

37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் நான்கு முனை பிர­சாரப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­படும் என எதிர்­பார்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக அர­சாங்கத் தரப்பு பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்பு மற்றும் சர்­வ­தேச தரப்பு தென்­னி­லங்கை தரப்பு ஆகி­யன கடும் பிர­சாரப் பணி­களில் ஈடு­ப­ட­வுள்­ளன.

 சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் அனு­ச­ர­ணை­யுடன் பாதிக்­கப்­பட்ட மக்கள் விசேட உபக்­கு­ழுக்­கூட்­டங்­க­ளையும் தென்­னி­லங்­கையின் அமைப்­புக்­களும் இம்­முறை ஜெனி­வாவில் நடத்­து­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் பல்­வேறு தரப்­புக்­களும் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கடும் பிர­சாரப் பணி­களில் ஈடு­ப­ட­வுள்­ளன.

 

இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென தெரி­வித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.

 

அந்தப் பிரே­ர­ணை­யா­னது கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்­பிக்­கப்­பட்டு இலங்­கைக்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

அதன்­படி எதிர்­வரும் 2019ஆம் ஆண்டு வரை இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மன்றி 2017 ஆம் ஆண்டு இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கி­ய­நா­டு­களின் விசேட நிபுணர் பென் எமர்­சனின் இலங்கை தொடர்­பான அறிக்கை இம்­முறை கூட்டத் தொடரில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. அவர் இலங்கை விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு போகும்­போது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்து சென்­றவர்.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பயங்­க­ர­வா­தத்தை ஒடுக்கும் போது அடிப்­படை சுதந்­திரம் மற்றும் மனித உரி­மையை பாது­காப்­பது தொடர்­பான ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் இம்­முறை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் தனது இலங்கை விஜயம் குறித்த அறிக்­கை­யையே தாக்கல் செய்­ய­வுள்ளார்.

இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமை ஊக்­கு­விப்­புக்கள் தொடர்பில் மதிப்­பீ­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் இலங்­கையின் பல்­வேறு தரப்­பு­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.

இதே­வேளை இம்­முறை கூட்டத் தொடரில் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் கடும் அழுத்­தத்தை இலங்­கைக்கு பிர­யோ­கிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஏற­ங­க­னவே சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் கடும் விச­னத்தை இலங்கை தொடர்பில் வெ ளியிட்­டுள்­ளது.

குறிப்­பாக ஐ. நா. மனித உரிமைக் பேர­வையில் இலங்கை அளித்த பொறுப்பு கூறல் மற்றும் அர­சியல் நல்­லி­ணக்கம் பற்­றிய வாக்­கு­றுதி ஸ்தம்­பித நிலை­யி­லேயே உள்­ளது . அதே போன்று வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக சர்­வ­தேச சாச­னத்­துக்கு இணங்க தயா­ரிக்­கப்­பட்ட சட்டம் திக­தி­யி­டப்­ப­டாமல் உள்­ளமை ஏற்­பு­டை­ய­தல்ல என சர்­வ­தேச மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது.

அதே­போன்று ஐரோப்­பிய ஒன்­றி­யமும் இலங்­கை­யா­னது விரைந்து பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மேலும் கடந்த வரு­டத்தின் இறுதி பகு­தியில் இலங்­கை்­கான விஜ­யத்தை முன்­னெ­டுத்த உண்மை, நீதி, நட்­ட­ஈடு,மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் இலங்­கைக்குள் நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டாவிடின் சர்வதேச மட்டத்தில் நீதியை தேடுவதற்கான முயற்சிகள் மிகவும் வலுவான முறையில் இடம்பெறும் என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையை தொடர்ந்தும் தாமதமாக்கவேண்டாம். இவ்வாறு தொடர்ந்தும் இந்த செயற்பாட்டை தாமதமாக்குவது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது. எனவே அரசாங்கம் உடனடியாக நம்பகரமான பரந்துபட்ட சுயாதீனமான வெளிப்படைத் தன்மைமிக்க அனைவரும் பங்கேற்கக்கூடிய பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்வைக்கவேண்டுமென வலியுறுத்துகின்றேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான பரபரப்பான சூழலில் ஜெனிவா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதுடன் இலங்கை குறித்த வி்வாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.