Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை உள்ளூராட்சித் தேர்தலும் ராஜபக் ஷவின் மீள்வருகையும்

Featured Replies

இலங்கை உள்ளூராட்சித் தேர்தலும் ராஜபக் ஷவின் மீள்வருகையும்

 

இலங்­கையில் பெரிது-ம் எதிர்­பார்க்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் எந்­த­வித பிரச்­சி­னையும் இன்றி 2018 பெப்­ர­வரி 10 இல் நடந்து முடிந்­தது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதி­தாக உரு­வான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன இத்­தேர்­தலில் நாடு­த­ழு­விய ரீதியில் பெரு­வெற்­றி­யீட்டி அவ­தா­னி­களை திகைப்­ப­டைய வைத்­தது.

 இந்தக் கட்சி நாட­ளா­விய ரீதியில் மொத்த வாக்கின் 45 வீதத்தை பெற்­றுள்­ள­துடன் சிங்­கள பெரும்­பான்மைப் பகு­தி­களில் அதிக வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது. குறிப்­பாக 16 மாவட்­டங்­களில், தமி­ழர்கள் அதிக அளவில் வாழும் வடக்கு கிழக்கில் உள்ள பல மாவட்­டங்­களில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் முக்கிய கட்­சி­யான இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதி­க­வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்­டது.

மொத்த வாக்குகளில் 32 சத­வீத வாக்குகளை பெற்று 4 மாவட்­டங்­களில் வெற்­றி­பெற்று இரண்­டா­வது இடத் தைத் தன­தாக்­கி­யது. ஐக்­கிய தேசியக் கட்சி நாட்டின் அர­சியல் யதார்த்­தத்தின் அடிப்­ப­டையில் ராஜபக் ஷவின் வெற்றி பற்றி நாடு தழு­விய வெற்றி எனும் பதத்தை பயன்­ப­டுத்­து­வது அதனை குறைத்து மதிப்­பி­டு­வ­தாகும். இலங்­கையின் தற்­போ­தைய அர­சியல் போக்­கையும் அரசின் அமைப்­பையும் இவ்­வெற்றி முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்கும் வலு­க்கொண்­டது.

தெற்கு, அர­சாங்கம் பற்றி ஒருவர் பரந்­து­பட்ட அதி­ருப்தி கொள்­ளக்­கூடும் என உள்­ளூ­ராட்சித் தேர்தல் பற்றி ஆசி­ரியர் அண்­மையில் எழு­திய ஒரு கட்­டு­ரையில் குறிப்­பிட்­டி­ருந்தார். அதி­கப்­ப­டி­யான வாழ்க்கைச் செல­வினம், உதா­ர­ண­மாக தேங்­காயின் விலை பொது­வான குற்­றச்­சாட்­டாக மேல்­ எ­ழு­கி­றது. குறைந்த அபி­வி­ருத்தி நட­வ­டிக்கை, ஊழல் குற்­றச்­சாட்டு என்­பன உட்­பட இவ்­வா­றான கார­ணி­களே தேசிய அர­சாங்கம் இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வெற்­றி­பெ­றா­மைக்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தன. எது உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டதோ அது வழங்­கப்­ப­ட­வில்லை என இத்­தேர்தல் முடிவு குறித்து உயர்­மட்ட அரசு அதி­கா­ரி­யொ­ருவர் எனக்கு தனிப்­பட்ட முறையில் தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் அவ­ரது குடும்­பத்­த­வர்கள் மீது சுமத்­தப்­பட்ட ஊழல் குற்­றச்­சாட்டை விசா­ரிக்க திரா­ணி­யற்ற அர­சாக இருந்­தமை வாக்­க­ளிப்பில் தாக்கம் செலுத்­திய மேலும் ஒரு கார­ண­மாகும். ஆளும் கட்­சிக்கு எதி­ராக தாக்கம் செலுத்த சுமத்­தப்­பட்ட ஊழல் குற்­றச்­சாட்­டுகள் இறு­தி­யாக இடம் பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் ராஜபக் ஷ கவிழ்க்­கப்­பட கார­ண­மா­கி­யது. தேசிய சொத்தில் பாரிய தொகை ராஜபக் ஷவி­னாலும் அவ­ரது குடும்­பத்­தாலும் கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக எதிர்க்­கட்­சியால் எடுத்­தி­யம்­பப்­பட்­டது. பொது­மக்­களின் சீற்­றமே 2015 தேர்­தலில் ராஜபக் ஷ தோல்­வி­யுற கார­ண­மாக நேர்ந்­தது எனலாம்.

ராஜபக் ஷ குடும்­பத்தில் ஒரு­வ­ரை­யேனும் சட்­டப்­படி நிரூ­பிக்கத் தவ­றி­யமை, ஊழல் குற்­றச்­சாட்டை பல­வீ­ன­ம­டையச் செய்து புதிய அரசு தோல்­வி­ய­டையக் கார­ண­மா­னது. அர­சாங்­கத்தின் மற்ற செயற்­பாடு கார­ண­மாக முன்னாள் ஆட்­சி­யா­ளர்கள் ஊழல் குற்­றச்­சாட்டில் இருந்து விடு­விக்­கப்­பட்­டது போன்று ஆகி­விட்­டது. இதுவே ராஜபக் ஷ உள்­ளூ­ராட்சி தேர்­தலில் வெற்­றி­பெற உத­வி­ய­தெ­னலாம்.

ராஜபக் ஷ நிகழ்ச்சி நிரல்

தேசிய அர­சாங்­கத்தில் தாக்கம் செலுத் தும் அள­விற்கு ராஜபக் ஷவும் அவ­ரது பங்­கா­ளி­களும் சக்தி பெற்­ற­வர்­க­ளாக மாறி­விட்­டார்கள் என்­பது அவ­தா­னிக்கத் தக்­கது. ஆரம்­பத்தில் ராஜபக் ஷவின் சில ஆத­ர­வா­ளர்கள், ராஜபக் ஷ மக்­க­ளிடம் நிக­ரற்ற நம்­பிக்கை பெற்­று­விட்டார் எனவே இதனால் அவர் பிர­தம மந்­தி­ரி­யாக நிய­மிக்­கப்­பட வேண்டும் என கோரிக்கை விடுத்­தனர். அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு இன்னும் இரண்டு வரு­டங்­களே உள்­ளதால் முன்னாள் ஜனா­தி­பதி அர­ச­மைப்­பதில் ஆர்வம் காட்­ட­வில்லை. இரண்டு வரு­டங்­க­ளுக்குள் ஏதா­வது செய்­வது சிர­ம­மாக அமை­யலாம் என்­பதால் அரசைப் பொறுப்­பேற்­க­வில்லை. எனவே இது மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு ராஜபக் ஷவின் உட­னடி நிகழ்ச்சி நிரலில் இடம்­பெ­ற­வில்லை. ராஜபக் ஷ மாற்று வழி­க­ளி­லேயே நாட்டம் காட்­டு­கிறார். ராஜபக் ஷவி­னதும் அவ­ரது கூட்­ட­ணி­யி­ன­ரி­னதும் உட­னடி விருப்பம் பின்­வ­ரு­மாறு (1) பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி (2) பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து உடன் தேர்­தலை நடத்­து­வது (3) ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் பதவி என்­ப­னவே ஆகும். முத­லா­வ­தாக பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கோரிக்கை என்­பது ஒரு­வகை வியூகம் எனலாம். எதிர்க்­கட்சித் தலைவர் என்ற பத­வி­யுடன் அர­சாங்­கத்­திற்கு வலு­வாக நெருக்­கடி கொடுக்­கலாம். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தை பிர­சா­ரத்­திற்­காக பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். எதிர்க்­கட்சித் தலைவர் பதவி 2020 பொதுத்­தேர்­த­லுக்கு கட்­சியை தயார்­ப­டுத்த ஒரு­வ­ழியில் உதவும். 2015 பொதுத் தேர்­த­லுக்குப் பின்னர் சுமார் 50 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என்ற பெயரில் எதிர்க்­கட்சி வரி­சையில் அமர்ந்­தனர். அவர்கள் ராஜபக் ஷவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் இயங்­கினர். தற்­போது தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தாக பிர­தான எதிர்க்­கட்­சி­யாக செயல்­ப­டு­கி­றது. அர­சாங்­கத்தின் நெருங்­கிய அங்­க­மாக இருந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யா­கவும் செயற்­ப­டு­வது என்­பது வேடிக்கை எனலாம்.

தற்­போது உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வு­களின் படி ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் பலர் ராஜபக் ஷவின் கட்­சி­யுடன் இணைய முடியும். இது ராஜபக் ஷ விற்கு எளிதில் எதிர்க்­கட்சிப் பத­வியைத் தேடிக் கொடுக்­கலாம்.

இரண்­டா­வ­தாக ராஜபக் ஷ ஒரு புதிய அரசை அமைக்க ஆர்வம் காட்­ட­வில்லை. அவ்­வாறு அவர் செயற்­பட்டால் அது தோல்­வி­யி­லேயே முடி­வ­டையும். ஏனெனில் ஐக்­கிய தேசியக் கட்சி கொண்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை கார­ண­மாகும். கடந்த பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி 106 ஆச­னங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இது பெரும்­பான்­மை­யைப்­பெற ஏழு ஆச­னங்கள் குறை­வா­ன­தாகும். ராஜபக் ஷவின் மீள் வருகை என்­பது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பிற்கு கொள்கை ரீதி­யாக சவா­லா­ன­தாகும். எனவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அரசு அமைய கூட்­ட­மைப்பு உத­வக்­கூடும். மக்கள் விடு­தலை முன்­னணி நடு­நி­லை­யாகச் செயற்­ப­டலாம்.

இது எதை தெரி­விக்­கி­றது என நோக்கும் போது தற்­போது ராஜபக் ஷவால் பெரும்­பான்மை பலம்­பெற்ற அரசு அமைக்க போதி­ய­ளவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பெற­மு­டி­யாமல் போகலாம். இதுவே ராஜபக் ஷ அரசு தலை­மைத்­து­வத்தை ஏற்க பின்­தங்­கு­வ­தற்­கான கார­ண­மாக அமை­யலாம். உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் எதை தெரி­விக்­கி­றது என்றால் தற்­போது பாரா­ளு­மன்ற தேர்தல் இடம் பெற்றால் ராஜபக் ஷவின் பெர­முன அதி­கப்­ப­டி­யான பெரும்­பான்­மை யைப் பெறும் என்­ப­தாகும்.

பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்­கான பிரே­ரணை ஒன்று கொண்டு வரப்­ப­டலாம் என தோன்­று­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து இதனைத் தடுக்கக்கூடும். எனவே வழமைபோன்று இயல்பாகவே 2020 இல் பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறும் என்ற அனுமானத்திற்கு வர லாம். மூன்றாவதாக அறிக்கைகளின் தரவுப்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் கைப்பற்ற மகிந்த ராஜபக் ஷ முனைவதாகத் தெரிய வருகிறது. இருப்பினும் இது சந்தேகத் திற்கிடமானது. உள்ளூராட்சி தேர்த லின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலுக்கு சிறப்பாக முகம் கொடுக்கும் என கூறலாம்.

 பெரும் இழப்பாளர்

 உள்ளூராட்சித் தேர்தலின்படி பெரும் இழப்பாளராக மைத்திரிபால சிறிசேன காணப்படுகிறார். எந்தவொரு மாவட்டத்திலும் இவரது கட்சி வெற்றி பெறவில்லை. அவரது சொந்த இடமான பொலனறுவையிலும் அவர் தோற்றுள்ளார்.  

டாக்டர் எஸ்.ஐ.கீத­பொன்­கலன்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-24#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.