Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. ஆணை­யா­ளரின் அழுத்­தமும் அர­சாங்­கத்தின் அக்­க­றை­யின்­மையும்

Featured Replies

ஐ.நா. ஆணை­யா­ளரின் அழுத்­தமும் அர­சாங்­கத்தின் அக்­க­றை­யின்­மையும்

 

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று சர்­வ­தேசம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும் அதற்­கான உரிய நட­வ­டிக்­கைகள் இன்­னமும் இடம்­பெ­ற­வில்லை. இதனால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதி வழங்­கப்­ப­டாத நிலையில் நிர்க்­கதி நிலை­யினை அடைந்­துள்­ளனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களின் உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு மத்­தியில் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­திலும் யுத்­தத்தில் பேர­ழி­வு­களை சந்­தித்த மக்­க­ளுக்கு இன்­னமும் நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கவே உள்­ளது.

யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. ஆனால் அந்தத் தீர்­மா­னங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்த அன்று பத­வி­யி­லி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை. இதனால் சர்­வ­தேச சமூ­கத்தின் கோரிக்­கை­யா­னது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் வகை­யி­லான விசா­ர­ணைகள் நடை­பெறும் என்று சர்­வ­தேசம் நம்­பிக்கை கொண்­டி­ருந்தது.

இதற்­கி­ணங்க புதிய அர­சாங்­கத்­திற்கு ஆறு­மா­த­கால அவ­காசம் வழங்­கப்­பட்­ட­துடன் 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்­திற்கு அர­சாங்­க­மா­னது இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அர­சாங்­க­மா­னது இணை அனு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம் நீதி­யான விசா­ர­ணையை நடத்தும் என்றும் சர்­வ­தேச தரப்பு எதிர்­பார்த்­தது. ஆனால் நல்­லாட்சி அர­சாங்­கமும் இந்த விட­யத்தில் உரிய அக்­கறை காண்­பிக்­க­வில்லை. இருந்­த­போ­திலும் கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் அர­சாங்­கத்­திற்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

இந்த கால அவ­கா­சத்­திற்குள் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளகப் பொறி­முறை விசா­ரணை நடை­பெறும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே இரு வரு­டங்­க­ளுக்­கான கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த அவ­கா­சத்தை வழங்­கு­வ­தற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் அதி­கூ­டிய ஆத­ர­வினைப் பெற்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது.

இந்த கால அவ­காசம் வழங்­கப்­பட்டு தற்­போது ஒரு வரு­டம் பூர்த்­தி­யாகும் நிலையில் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் எந்­த­வித முன்­னேற்­றத்­தையும் அர­சாங்கம் காண்­பிக்­க­வில்லை. விசா­ர­ணையின் போது சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்க முடி­யாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட அர­சாங்க முக்­கி­யஸ்­தர்கள் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யதன் கார­ண­மா­கவே அவ­ரது பதவி மாற்றம் செய்­யப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் அர­சாங்­க­மா­னது உள்­ளக விசா­ர­ணை­க­ளா­வது உரிய வகையில் நடத்­துமா என்ற சந்­தேகம் தற்­போது மேலெ­ழுந்­துள்­ளது. காணாமல் போனோர் தொடர்பில் செய­லகம் ஒன்றை அமைப்­ப­தற்­கான பிரே­ரணை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. அந்தப் பிரே­ரணை 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே சபையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்ட போதிலும் இது­வரை அந்த செய­லகம் அமைக்­கப்­ப­டவே இல்லை. கடந்த மார்ச் மாதம் அர­சாங்­கத்­திற்கு இரு­ வ­ரு­ட­கால அவ­காசம் வழங்­கிய போதும் எந்­த­வித முன்­னேற்­றமும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் காணப்­ப­ட­வில்லை. அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அக்­க­றை­யற்ற தன்­மை­யையே தொடர்ச்­சி­யாக வெளிக்­காட்டி வரு­கின்­றது.

இந்த நிலை­யில்தான் இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்த தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது தற்­போது அர­சாங்­கத்தின் அக்­க­றை­யற்ற போக்கு குறித்து விமர்­சனம் செய்து வரு­கின்­றது. சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நிதி­களை சந்­தித்துப் பேசும் போது பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காண்­பிக்­காமை குறித்து எடுத்­துக்­கூறி வரு­கின்­றது.

 இலங்­கைக்கு வருகை தந்­துள்ள அமெ­ரிக்க காங்­கிரஸ் உறுப்­பினர் ஜேம்ஸ் சென்­சென்ப்­ரெக்­னெரை நேற்று முன்­தினம் சந்­தித்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் உண்­மை­களைக் கண்­ட­றியும் பொறி­மு­றை­யினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கும் இலங்கை மக்­க­ளுக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. எனவே இந்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தினை சர்­வ­தேச சமூகம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா தலை­யீ­டு­களை மேற்­கொள்­ள­வேண்டும். ஒரு சில விட­யங்­களில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள போதிலும் தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் எந்­த­வொரு மாற்­றமும் இடம்­பெ­ற­வில்லை. ஆகவே இலங்கை அர­சாங்கம் முன்­வந்து முன்­வைத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டு­மானால் அதற்கு சர்­வ­தேச சக்­தி­களின் அழுத்தம் அவ­சி­ய­மா­கின்­றது. அதற்­கான அழுத்­தங்­களை அமெ­ரிக்கா வழங்­க­வேண்டும் என்றும் சம்­பந்தன் இந்த சந்­திப்­பின்­போது எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இதே­போன்றே எதிர்­வரும் 26ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்த நிலையில் கடந்­த­வாரம் ஜெனி­வா­விற்கு சென்­றி­ருந்த கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், எம்.பி.யுமான எம்.ஏ. சுமந்­திரன் ஆணைக்­குழுவில் அங்கம் வகிக்கும் நாடு­களின் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இதன்­போதும் இலங்கை அர­சாங்கம் அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு அழுத்தம் கொடுக்­க­வேண்­டிய அவ­சியம் குறித்து தான் வலி­யு­றுத்­தி­ய­தாக சுமந்­திரன் எம்.பி. தெரி­வித்­தி­ருந்தார். இவ்­வாறு கூட்­ட­மைப்­பினர் அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கிய பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென கோரி­வ­ரு­கின்­றனர்.

ஆனால் அர­சாங்­கமோ இந்த விட­யத்தில் உரிய அக்­கறை காண்­பிப்­ப­தாக தெரி­ய­வில்லை. இந்த அமர்வின் போது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்­பான இடைக்­கால அறிக்­கை­யி­னையும் சமர்ப்­பிக்­க­வுள்ளார். இந்த அறிக்கை தற்­போது ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இணை­ய­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. தனது அறிக்­கையில் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காண்­பிக்­காமை குறித்து அல் ஹுசைன் கடும் அதி­ருப்தி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கடந்த ஒரு வரு­ட­கா­ல­மாக எத்­த­கைய முன்­னேற்­றங்­களும் காணப்­ப­ட­வில்லை என்றும் அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு சர்­வ­தேச நாடுகள் அழுத்­தத்தைக் கொடுக்கும் வகையில் பொறி­முறை ஒன்றினை தயாரிக்க வேண்டுமெனவும் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆணையாளரின் நிலைப்பாட்டிலேயே தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளும் உள்ளன. அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்தில் ஓரளவிற்காவது முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும். இதனை விடுத்து ஆணைக்குழுவில் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதும் பின்னர் நடைமுறையில் எதிர்மறையாக செயற்படுவதும் இனியும் தொடர முடியாது. நல்லாட்சி அரசாங்கம் என்பதற்காக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதற்கு சர்வதேச சமூகமும் அனுமதிக்க முடியாது.

எனவே இனியாவது பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்க­மானது சாக்குப்போக்குகளைக் கூறாது இதயசுத்தியுடன் நடவடிக்கை­களை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் அழுத்தங்கள் அதிகரிப்பதுடன் நல்லாட்சி மீதான நம்பிக்கையும் அற்றுப்போகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-24#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.