Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாம்: அலறும் பிக்குகள்

Featured Replies

சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாம்: அலறும் பிக்குகள்

 

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை அரசாங்கத்தில் இருக்கும் எவருக்கு கொடுத்தாலும், சரத் பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாம் என பிக்குகள் சிலர் ஜனாதிபதியிடம் வலிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் விவகாரங்களில் உதவி வரும் பிக்குகள் சிலர், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்த விடயத்தினை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் கோத்தபாய ராஜபக்சவின் எளிய அமைப்பு மற்றும் விமல் வீரவங்சவின் இராவணா பலய அமைப்பு உட்பட அமைப்புகளின் பிக்குகள் அடங்குவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதிக்கு இடையில் அரசியல் பகை இருந்தாலும் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டால், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றை சேர்ந்த சிலரது குடும்பங்கள் பழிவாங்கப்படலாம் எனவும், இவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கோப்புகள் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் இருப்பதாகவும் பிக்குகள், ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பினரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசியல் எதிரிகளிடம் எப்படி நடந்து கொண்டாலும் அவர்களின் குடும்பங்களை பழிவாங்கவில்லை. எதிர்காலத்திலும் அவரது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்பதற்கு தாம் பொறுப்பு எனவும் பிக்குமார் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களின் பட்டியல் கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவியதையடுத்து, பிக்குகள் சிலர் ஜனாதிபதி தரப்புடன் தொடர்பு கொண்டு இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி, அமைச்சுக்களை ஒதுக்கும் விடயம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவுகளை எடுக்கவில்லை எனவும் சம்பந்தப்பட்ட விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தரப்பு பிக்குமாருக்கு அறிவித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மேற்படி பிக்குகள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.tamilwin.com/politics/01/175200?ref=ls_d_tamilwin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.