Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு முன்னெடுப்புகளை முடக்கியுள்ள அரசியல் கொந்தளிப்பு

Featured Replies

புதிய அரசியலமைப்பு முன்னெடுப்புகளை முடக்கியுள்ள அரசியல் கொந்தளிப்பு

 

புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சி­யத்­தினை நாட்டு மக்கள் உணர்ந்­தி­ருந்­தனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டு தமது பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வு­ பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்றும் இவர்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே இந்த எதிர்­பார்ப்­பா­னது சற்று அதி­க­மா­கவே காணப்­பட்­ட­மையும் தெரிந்த விட­ய­மாகும். சிறு­பான்மை மக்கள் இந்­நாட்டில் இன­வா­தி­க­ளினால் ஓரம் கட்­டப்­பட்ட அல்­லது நெருக்­கீ­டு­க­ளுக்கு உள்­ளான வர­லாறே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

போதாக்­கு­றைக்கு கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்­பு­களும் இந்­நி­லை­மைக்கு மேலும் வலு­ச்சேர்த்­தி­ருப்­ப­த­னையே பெரிதும் அவ­தா­னிக்கக்கூடி­ய­தாக உள்­ளது. இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சி­யத்­தையும் அதன் ஊடான முன்­னேற்­ற­க­ர­மான மாறு­தல்­க­ளையும் எதிர்­பார்த்­தி­ருந்த சிறு­பான்­மை­யி­னரின் கனவு இனியும் சாத்­தி­ய­மா­குமா? என்­கிற கேள்வி இப்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. நாட்டில் நிலவும் அர­சியல் அதி­ருப்தி நிலை­யா­னது, புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த முன்­னெ­டுப்­பு­களில் ஒரு தேக்க நிலையை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. எனவே அர­சியல் ஸ்திரப்­பாட்டின் பின்­னரே புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த அடுத்­த­கட்ட நகர்­வுகள் இடம்­பெ­றக்­கூடும் என்றும் நம்­பப்­ப­டு­கின்­றது.

 

அர­சியல் கொந்­த­ளிப்பு நிலை

ஒரு நாட்டின் அர­சியல் தெளி­வாக இருக்­கும்­போது அது அந்த நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு உந்து சக்­தி­யாக அமையும். பல்­வேறு எழுச்சி நிலை­களும் இதனால் ஏற்­படும். மக்­களின் இயல்பு வாழ்க்­கைக்கும் இது வித்­தி­டு­வ­தாக அமையும். எனினும் அர­சியல் கொந்­த­ளிப்பு நிலை அல்­லது அதி­ருப்­தி­நிலை மேலோங்கி காணப்­ப­டு­மானால் உள்­நாட்டில் மட்­டு­மன்றி சர்­வ­தேச ரீதி­யிலும் நாடு பல்­வேறு சவால்­க­ளுக்கும் சிக்­கல்­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க வேண்­டிய சூழ்­நிலை உரு­வாகும்.

பொரு­ளா­தாரம், வெளி­நாட்டுக் கடன்கள், அபி­வி­ருத்தி, முத­லீடு, இயல்பு வாழ்க்கை என்று பல்­வேறு மட்­டங்­க­ளிலும் அர­சியல் கொந்­த­ளிப்பு நிலை­யா­னது தாக்கம் செலுத்தும் என்­ப­த­னையும் மறுத்­து­வி­ட­ மு­டி­யாது. இது­போன்றே தீவி­ர­வாத முன்­னெ­டுப்­பு­களும், உரிமைப் போராட்­டங்­க­ளும்­கூட அதி­ருப்­தி­யான சூழ்­நி­லை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும். உலக நாடுகள் இது குறித்த பாடங்­களை சற்று அதி­க­மா­கவே கற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலங்­கையில் 2015 இல் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. இந்த அர­சாங்­கத்தின் வருகை தொடர்பில் பெரும்­பா­லான நாட்டு மக்கள் மகிழ்ச்சி தெரி­வித்­தி­ருந்­தனர். நாடு பல்­வேறு மாறு­தல்­க­ளுக்கும் உட்­ப­டப்­போ­கின்­றது என்­பதும் மக்­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திகள் நாட்டு மக்­களை கவர்ந்­தி­ருந்­தன. மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் ஒரு இணக்­கப்­பாட்­டினை ஏற்­ப­டுத்திக்கொண்­டி­ருந்­த­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது.

மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் நல்­லாட்­சியின் உரு­வாக்­கத்­திற்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கும் அதி­க­மான பங்­க­ளிப்­பினை வழங்கியிருந்­தனர். எனவே நல்­லாட்­சியின் மேலோங்­குகை நிலை­யா­னது சிறு­பான்­மை­யி­னரின் மகிழ்ச்­சியை இரட்­டிப்­பாக்கி யிருந்­தது. தேசிய அர­சாங்­கத்தின் ஊடாக ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் நல்­லாட்­சிக்கு வித்­திட்­டி­ருந்த நிலையில் தேசிய அர­சாங்கம் என்­பது எமது நாட்டை பொறுத்­த­வ­ரையில் ஒரு புதிய கலா­சா­ர­மே­யாகும். இக்­க­ல­ாசார முன்­னெ­டுப்­பின்­போது சிற்­சில சறுக்கல் நிலை­மைகள் ஏற்­பட்­டதும், சவால்­களை எதிர்­கொள்­ள­வேண்டி இருந்­ததும் யாவரும் அறிந்த விட­ய­மாகும். எனினும் தேசிய அர­சாங்கம் பல்­வேறு இழு­பறி நிலை­மை­க­ளுக்கு மத்­தி­யிலும் இன்னும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

 

தேசிய அர­சாங்க அதிர்­வ­லைகள்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்­ன­ரான நிலை­மைகள் இலங்­கையின் தேசிய அர­சி­யலில் ஒரு தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தி யிருந்­தது. இந்­நி­லை­மை­யா­னது தேசிய அர­சாங்­கத்தின் இருப்­பினை கேள்விக்குறி­யாக்கி இருந்­தது. தேசிய அர­சாங்கம் எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் வலு­வி­ழக்கக்கூடும். இதே­வேளை நல்­லாட்­சியும் இத­னோடு முற்­றுப்­பெறும் என்றும் பலரும் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். மஹிந்­தவின் கை ஓங்­கிய நிலையில், அவர் பிர­த­ம­ராகப் போகின்றார் என்றும் ஊகங்கள் தெரி­விக்­கப்­பட்­டு­வந்­தன. இதே­வேளை ஐ.தே.க.வும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தனித்து ஆட்­சி­ய­மைக்கும் நட­வ­டிக்­கை­களில் முனைப்­புடன் ஈடு­பாடு காட்­டி­வந்­தன. எனினும் எதுவும் பெரி­தாக நிக­ழாத நிலையில் சிறி­தாக அமைச்­ச­ரவை மாற்றம் இடம் பெற்­றி­ருக்­கின்­றது. இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் பய­ணிக்கும். நாம் பாரா­ளு­மன்­றத்­திற்கு முன்­வைத்த யோச­னையை இரத்­து­செய்­ய­வில்லை. அத்­துடன் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தாக பாரா­ளு­மன்­றத்­திற்கு பிரே­ரணை ஒன்றை மாத்­தி­ரமே முன்­வைத்தோம். அத­னை­ வி­டுத்து நாம் ஒப்­பந்­தங்­களோ அல்­லது ஆவ­ணங்­களோ முன்­வைக்­க­வில்லை என்­கிற ரீதியில் ஐ.தே.க.வின் வெளிப்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன.

இதற்­கி­டையில் தேசிய அர­சாங்­கத்தில் சுதந்­திரக் கட்சி தொடர்ந்தும் நீடிக்கும் என்­ப­தனை அமைச்சர் மஹிந்த அம­ர­வீ­ரவும் ஆழ­மாக வலி­யு­றுத்தியிருந்தார். எவ்­வா­றெ­னினும் தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் அது­கு­றித்த பிர­தான இரண்டு கட்­சி­க­ளி­னதும் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை சபையில் சமர்ப்­பித்து பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தி­யை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்று கூட்டு எதி­ரணி வலி­யு­றுத்தி வந்­தது. தேசிய அர­சாங்­கத்தின் இணக்­கப்­பாட்டு உடன்­ப­டிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்­லையேல் தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணா­னது என்றும் கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்தி இருந்­தது.

இவற்­றுக்­கெல்லாம் மத்­தியில் தேசிய அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தாக அறி­வித்­துள்­ளன. ஆகையால், தேசிய அர­சாங்­கத்­தை­க்கொண்டு செல்­வதில் எந்­த­வொரு சட்­டச்­சிக்­கலும் இல்லை என்று தனக்கு சட்ட ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தனது நிலைப்­பாட்­டினை கட்­சி­க­ளிடம் எடுத்­துக்­கூறியிருந்தார். இந்த நிலையில், இப்­போது தொடரும் தேசிய அர­சாங்கம் எந்த நிலை­யிலும் உயி­ரி­ழக்­கலாம் என்­பதே அர­சியல் அவ­தா­னி­களின் கருத்­தாக இருக்­கின்­றது.

தேசிய அர­சாங்கம் ஊச­லாடி வரு­கின்ற நிலையில், பிர­தமர் பத­வியும் இப்­போது ஊச­லாடிக் கொண்­டி­ருக்­கின்­றது. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கையில்லாப் பிரே­ர­ணையைக்கொண்டு வரு­வ­தற்கு தீவிர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் இதற்கு முன்­னின்று ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றமை தொடர்பில் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். இந்­நி­லையில் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கையில்­லாப்­ பி­ரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­மி­டத்து ஜே.வி.பி.யும் இதற்கு ஆத­ரவு வழங்கவுள்­ள­தாக தெரி­வித்­தி­ருக்­கின்­றது. மைத்­தி­ரியும் ரணிலும் சில நேரங்­களில் முரண்­பட்டுக்கொண்டும் இன்னும் சில நேரங்­களில் இணைந்து செய­லாற்­றியும் வரு­கின்­றனர்.

இவர்கள் நாட்டின் நலன்­க­ளுக்­காக அக்­கறை செலுத்­தாது தமது தனிப்­பட்ட அதி­கா­ரங்­களை தக்­க­வைக்கும் முயற்­சி­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்த நாட்டில் வேலை­வாய்ப்­பின்மை அதி­க­ரித்து வரு­கின்­றது. நாடு பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றது. ஆனால், இவற்­றினையெல்லாம் கருத்தில் கொள்­ளாது தமது தனிப்­பட்ட அர­சியல் நலன்­களை கருத்தில் கொள்­வதில் மாத்­திரம் இவர்கள் அக்­கறை செலுத்தி வரு­கின்­றனர்.

நல்­லாட்சி அர­சாங்கம் பய­ணிக்­கின்ற பாதை சரி­யா­ன­தல்ல. ஆகவே அர­சாங்­கத்தை வீழ்த்தும் மக்­கள் ­போ­ராட்­டத்­தினை நாம் முன்­னெ­டுப்போம். விவ­சா­யிகள், மாண­வர்கள் மற்றும் பொதுமக்­களை இணைக்­கின்ற வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கவும் தயா­ரா­கவே இருக்­கின்றோம். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்கையில்லாப் பிரே­ர­ணையை கொண்­டு­வரும் முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. உண்­மையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக பாரிய குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஊழல் மோச­டி­களை மறைத்து குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­று­வ­தற்கு எதி­ராக நம்­பிக்கையில்லாப் பிரே­ர­ணையை நாம் ஆத­ரிப்போம். இதே­வேளை, அதி­கா­ரத்தை கைப்­பற்றும் நோக்கில் வேறொரு கைக­ளுக்கு அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுக்கும் சதித்­திட்­டத்தில் நம்­பிக்கையில்லாப் பிரே­ரணை கொண்­டு­வரும் நிலையில், அதனை ஆத­ரிப்­பது குறித்து உரிய நேரத்தில் தீர்­மானம் எடுப்போம் என்று ஜே.வி.பி. தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­பட எடுத்­துக்­கூறியிருக்­கின்­றது.

இந்த நிலையில், நல்­லாட்­சியும், ரணிலும் எந்த நேரத்­திலும் இக்­கட்­டான சூழ்­நி­லை­க­ளுக்கு முகம் கொடுக்­கலாம் என்­கிற ஒரு நிலையே இருந்து வரு­கின்­றது.

 

மஹிந்­தவின் காட்டில் மழை

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மஹிந்­தவின் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சி கூடு­த­லான வெற்­றியை பெற்­றுக்­கொண்­டது. அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தனது ஆதிக்­கத்­தினை பொது­ஜன பெர­முன நிலை­நி­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. இது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பொறுத்­த­வ­ரையில் ஒரு வர­லாற்று வெற்­றி­யாக கரு­தப்­ப­டு­கின்­றது. சில உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீல.சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைக்க முற்­பட்­டாலும் அது சாத்­தி­யப்­ப­டாத அள­விற்கு மஹிந்­தவின் வெற்றி அமைந்­துள்­ள­தையும் அவ­தா­னிக்கக்கூடி­ய­தா­கவே உள்­ளது. சுருங்­கக்­கூறின் உள்­ளூ­ராட்சி மன்றத்தேர்­தலின் பின்னர் மஹிந்­தவின் காட்டில் இப்­போது மழை­பெய்­தி­ருக்­கின்­றது. இதற்­கி­டையில் தனக்கு பிர­தமர் பதவி தொடர்பில் ஈடு­பாடு இல்­லாத நிலையை காட்­டிக்­கொண்ட மஹிந்த தனது அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு இப்­போது தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்றார்.

இத­ன­டிப்­ப­டையில் பேர­ணி­களும் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. இப்­பே­ர­ணி­களின் மூலம் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்­களை தெளி­வூட்டும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற உள்­ளன. மாவட்ட மட்­டத்தில் எதிர்­கா­லத்தில் பேர­ணிகள் இடம்­பெறவுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது. மத்­திய அரசில் தளம்பல் நிலை உரு­வா­கி­யி­ருக்­கையில், பொதுத் தேர்தல் ஒன்­றினை உட­ன­டி­யாக நடத்­த­வேண்டும் என்று கூட்டு எதி­ரணி எதிர்­பார்த்­துள்­ளது. மேலும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கப்­போ­வ­தில்லை என்றும் கூட்டு எதி­ரணி தெளி­வாக வலி­யு­றுத்தி இருக்­கின்­றது. இத­னி­டையே எதிர்­வரும் மாகாண சபை மற்றும் பொதுத் தேர்­தல்­களில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி உட்­பட சகல அர­சியல் சக்­தி­க­ளு­டனும் இணைந்து தாமரை மொட்டுச் சின்­னத்தில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் போட்­டி­யிடவுள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ மேலும் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். இந்த அர­சாங்கம் குழப்­ப­நிலை கார­ண­மாக மேலும் சிக்­க­லான நிலைக்கு தள்­ளப்­ப­டு­மே­யன்றி சுமு­க­மான ஒரு நிலைமை ஏற்­படப் போவ­தில்லை. இதனால் மக்கள் பெரும் பாதிப்­பினை எதிர்­நோக்­கு­கின்ற இக்­கட்­டான சூழ்­நி­லையே மேலெ­ழும்பும் என்றும் மஹிந்த உறு­தி­பட தெரி­வித்­துள்­ளமை நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது.

உண்­மையில் அர­சியல் ஸ்திரப்­பா­டற்ற ஒரு தடு­மாற்ற நிலையை நாம் இங்கு காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அர­சாங்கம் அர­சியல் ஸ்திரப்­பாடு மற்றும் தேசிய அர­சாங்­கத்தின் நீடித்த தன்மை என்­ப­வற்றை உறுதி செய்யும் நோக்கில் மேற்­கொள்ளும் செயற்­பா­டுகள் தொடர்பில் பெரும்­பா­லான விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­ற­மையும் புதிய விட­ய­மல்ல. உதா­ர­ணத்­திற்கு அண்­மையில் இடம்­பெற்ற மற்றும் விரைவில் இடம்­பெற உள்ள அமைச்­ச­ரவை மாற்­றங்­களை குறிப்­பிட்டுக் கூற­மு­டியும். இது தொடர்பில் நாட்டு மக்கள் மட்­டு­மல்­லாது அரசின் அமைச்­சர்கள் சில­ரும்­கூட திருப்­தி­யற்ற ஒரு தன்­மை­யையே தொடர்ந்தும் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர் என்­பதும் சொல்­லித்­தெ­ரிய வேண்­டிய ஒரு விட­ய­மல்ல.

 

வாக்­கு­று­தி­களின் உறு­திப்­பாடு

வாக்­கு­று­தி­களை யாரும் அள்ளி வழங்­க­மு­டியும். ஆனால் அந்த வாக்­கு­று­திகள் எந்­த­ள­விற்கு உரி­ய­வாறு நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன என்­ப­தி­லேயே உண்­மை­யான வெற்றி தங்கியிருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­நி­லையில் வழங்­கிய வாக்­கு­று­திகள் உங்­க­ளுக்கு நினை­வி­ருக்கும் என்று நினைக்­கிறேன். இந்த வாக்­கு­று­தி­களில் மூன்­று­வ­ருட காலத்தில் எத்­தனை வாக்­கு­று­திகள் செயல்­வ­டிவம் பெற்­றி­ருக்­கின்­றன என்­பது குறித்து நாட்டு மக்கள் ஏற்­க­னவே கேள்வி எழுப்பத் தொடங்கி யிருக்­கின்­றனர்.

ஊழல்­வா­தி­க­ளுக்கு தண்­ட­னை­களை பெற்­றுக்­கொ­டுத்தல், தேசியப் பிரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வு, பொரு­ளா­தார மேம்­பாட்டு நட­வ­டிக்­கைகள் என்­பன பலவும் இதில் உள்­ள­டங்கும். இதற்­கி­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த விட­யத்­தையும் நாம் குறிப்­பிட்டுக் கூறுதல் மிகவும் பொருத்­த­மு­டை­ய­தாக இருக்கும். இவை­களின் சாதக விளை­வுகள் எவ்­வாறு அமைந்­தி­ருந்­தன என்­பது தொடர்பில் நாம் சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. வாக்­கு­று­தி­களின் உறு­திப்­பாடு குறித்து கேள்­விகள் பல வந்­து­போ­கின்­றன.

சம­கால அர­சியல் கொந்­த­ளிப்­பு­களும் ஸ்திர­மற்ற அர­சியல் நிலை­மை­களும் நல்­லாட்சி அர­சாங்கம் நமது வாக்­கு­று­தி­களை உரி­ய­வாறு நிறை­வேற்­று­வ­தற்கு சவா­லாக அமைந்­தி­ருக்­கின்­றன. மூன்­று­வ­ருட ஆட்­சி­க்கா­லத்தில் நல்­லாட்சி வழங்­கிய வாக்­கு­று­தி­களின் நிறை­வேற்­றுகை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்டு வந்­த­நி­லையில் இனியும் வாக்­கு­று­திகள் உரி­ய­வாறு நிறை­வேற்­றப்­ப­டுமா? என்­ப­துவுமே கேள்விக்குறி­யாகி இருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுத்த பல விட­யங்­களில் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த விடயம் நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் ஒற்­று­மைக்கும் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாக கரு­தப்­பட்­டது. இதனை புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்ட பலரும் வர­வேற்றுப் பேசியிருந்­த­தையும் அறி­யக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

 

புதிய அர­சி­ய­ல­மைப்பின் உரு­வாக்கம்

சம­கால அர­சியல் கொந்­த­ளிப்­பு­களும், ஸ்திர­மற்ற அர­சியல் நிலை­மை­களும் நல்­லாட்சி அர­சாங்கம் தமது வாக்­கு­று­தி­களை உரி­ய­வாறு நிறை­வேற்­று­வ­தற்கு சவா­லாக அமைந்­தி­ருக்­கின்­றன. கடந்த மூன்று வருட ஆட்­சிக்­கா­லத்தில் நல்­லாட்சி வழங்­கிய வாக்­கு­று­தி­களின் நிறை­வேற்­றுகை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்டு வரு­கின்ற நிலையில், இனியும் வாக்­கு­று­திகள் உரி­ய­வாறு நிறை­வேற்­றப்­ப­டுமா? என்­பது இப்­போது கேள்­விக்­கு­றி­யாகியிருக்­கின்­றது.

இது குறித்து கருத்து தெரி­வித்­தி­ருந்த புத்­தி­ஜீ­விகள், யதார்த்­தத்தின் அடிப்­ப­டையில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். எமது அர­சியல் யதார்த்­தத்தை, பொரு­ளா­தார யதார்த்­தத்தை, யுத்த ரீதி­யான யதார்த்­தத்தை புரிந்­து­கொண்டு அவற்­றின்­மீது உரிய கவனம் செலுத்தும் அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றையே நாம் உரு­வாக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி இருந்­தனர். புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான சந்­தர்ப்­பத்­தினை தவ­ற­விட்டால் விளை­வுகள் விப­ரீ­த­மாகும் என்றும் இவர்கள் எச்­ச­ரிக்­கை­யினை விடுத்­தி­ருந்­தனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது பல்­வேறு சவால்­களும் சங்­க­டங்­களும் மேலெ­ழுந்­தமை தெரிந்த விட­ய­மாகும். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை மழுங்­க­டிக்கச் செய்­கின்ற நட­வ­டிக்­கை­களில் ஒரு கூட்­டத்­தினர் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும். நாடெங்­கிலும் கூட்­டங்­களை நடத்தி புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக மக்­களை திரட்­டு­வ­தற்கும் முயற்­சிகள் இடம்­பெற்­று­வந்­தன. புதிய அர­சி­ய­ல­மைப்பில் பௌத்­தத்­திற்கு உரிய இடம் வழங்­கப்­ப­டா­துள்­ள­தா­கவும், சமஷ்டி முறையின் மூல­மாக நாடு பின்­ன­டையும் அபாய நிலை மேலெ­ழக்­கூடும் என்றும் பல்­வேறுவித­மாக கருத்துப் பரி­மாற்­றங்­களும் இடம்­பெற்று வந்­தன. புதிய அர­சி­ய­ல­மைப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­மானால் சிறு­பான்மை மக்­களின் கை ஓங்­கி­விடும் என்றும் புர­ளிகள் கிளப்­பி­வி­டப்­பட்­டன.

எனினும், இக்­கூற்­று­களில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை என்­ப­தனை புத்­தி­ஜீ­வி­களும் நாட்டு நலன் குறித்து சிந்­திப்­ப­வர்­களும் தெளி­வு­ப­டுத்தி இருந்­தனர். சமஷ்டி குறித்து பூரண அறிவு இல்­லா­த­வர்கள் சமஷ்டி குறித்து பேசு­வ­தற்கு அரு­க­தை­யில்­லா­த­வர்கள். இவர்­க­ளுக்கு இது­பற்றி என்ன தெரியும்? என்று பலர் தனது விசனப் பார்­வை­யினை செலுத்தியிருந்­தனர்.

 

சிறு­பான்மை நெருக்­கீ­டுகள்

இலங்­கையின் வர­லாற்றில் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் பல்­வேறு நெருக்­கீ­டு­க­ளுக்கும் உள்­ளாகி வந்­துள்­ள­மையை ஆதா­ரங்கள் மூல­மாக அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­னரும் பின்­ன­ரும்­கூட இந்­நெ­ருக்­கீ­டுகள் தொடர்ந்­தி­ருக்­கின்­றன. இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிர­சா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் பறித்­தெ­டுத்த நிகழ்வு இந்­நாட்டின் வர­லாற்றில் ஒரு கறை­ப­டிந்த அத்­தி­யா­ய­மே­யாகும். இந்­நாட்டில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களின் போதெல்லாம் இந்­திய வம்­சா­வளி மக்கள் அதி­க­மா­கவே பாதிப்­பிற்கு உள்­ளாகி வந்­தி­ருக்­கின்­றனர். இந்­திய வம்­சா­வ­ளி­யி­னர்­ மீது வன்­செ­யல்கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட சோக வர­லா­று­க­ளுக்கும் பஞ்­ச­மில்லை. இதன் கார­ண­மாக இந்­திய வம்­சா­வ­ளி­யினர் பலர் இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளுக்கும் ஏன் இந்­தி­யா­விற்­கும்­கூட இடம்­பெ­யர்­கின்ற ஒரு நிலைமை ஏற்­பட்­டது. இந்­திய வம்­சா­வளி மக்­களின் செறி­வினை குறைக்­கின்ற ஒரு நட­வ­டிக்­கையை முன்­னி­றுத்தி இன­வாத சிந்­த­னை­யா­ளர்கள் பல்­வேறு காய்­ந­கர்த்­தல்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர். பெருந்­தோட்ட நிலங்கள் அபி­வி­ருத்தி என்­கிற போர்­வையில் சுவீ­க­ரிக்­கப்­பட்­டமை இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை ஒடுக்குகின்­ற நட­வ­டிக்­கையின் ஒரு கட்­ட­மே­யாகும் என்னும் வெளிப்­பா­டுகள் இருந்து வரு­கின்­ற­மை­யையும் பெரும்­பா­லா­ன­வர்கள் அறிந்து கொண்­டி­ருப்பர்.

சிறு­பான்­மை­யினர் என்­கிற இலங்கை தமி­ழர்­களும் இனியும் இல்லை என்ற அள­விற்கு துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்­தி­ருக்­கின்­றனர். வார்த்­தை­க­ளினால் விப­ரிக்க முடி­யாத அள­விற்கு சோகங்­களை இம்­மக்கள் அனு­ப­வித்­தி­ருக்­கின்­றனர். இதே­வேளை முஸ்­லிம்­களும் இந்­நாட்டில் பல­வி­த­மான நெருக்­கீ­டு­க­ளுக்கும் முகம் கொடுத்து வந்­தி­ருக்­கின்­றனர். இன­வாதம் இவர்­க­ளையும் விட்டு வைக்­க­வில்லை. முஸ்லிம் சகோ­த­ரர்­களின் இருப்­பினை சித­ற­டிக்கும் முயற்­சிகள் இங்கு அதி­க­மா­கவே இடம்­பெற்­றுள்­ளன. இன்னும் இடம்­பெற்றும் வரு­கின்­றன. அண்­மையில் இடம்­பெற்ற அம்­பாறை சம்­ப­வமும் இதற்­கொரு நல்ல உதா­ர­ண­மாகி இருக்­கின்­றது. இலங்கை முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு பாது­காப்பு இல்­லாத நாடு என்ற அறிக்­கையை அம்­பாறை சம்­பவம் உறு­திப்­ப­டுத்தி இருப்­ப­தாக சுகா­தார பிர­தி­ய­மைச்சர் பைசால் காசிம் கண்­டன அறிக்கை ஒன்­றினை விடுத்­துள்­ள­மையும் இங்கு நோக்­கத்­தக்­க­தா­கவே உள்­ளது. முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் மீது இவ்­வா­றான இழி செயல்கள் புரி­வது ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாத ஒரு விட­ய­மாகும் என்றும் பிர­தி­ய­மைச்சர் மேலும் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­ற­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது. சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை மழுங்­க­டிப்பு செய்­வதில் கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்­புகள் ஆதிக்கம் செலுத்­திய நிலையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முயற்­சி­யா­னது பாராட்­டத்­தக்க ஒரு விட­ய­மா­கவே இருந்­தது.

 

மலை­யக மக்­களின் வலி­யு­றுத்­தல்கள் 

புதிய அர­சி­ய­ல­மைப்பு முன்­வைக்­கப்­ப­டு­மி­டத்து இதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டிய பல்­வேறு விட­யங்­களை புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் மலை­ய­கத்­த­வர்கள் வலி­யு­றுத்தி இருந்­தனர். மலை­யக மக்­களை தனித்­தே­சிய இன­மாக அங்­கீ­க­ரிக்­க­வேண்டும். காணி­யு­ரிமை மற்றும் வீட்­டு­ரிமை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். கல்வி, சுகா­தாரம், வேலை­வாய்ப்பில் சம­உ­ரிமை வேண்டும், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பயன்­களை மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு பெற்றுக்கொடுக்­க­வேண்டும், தனி­யான ஒரு அதிகார அலகு ஏற்படுத்தப்பட வேண்டும், சிறுபான்மையினரின் நலன்கருதி உப ஜனாதிபதிகள் நியமிக்கப்படவேண்டும். செனட்சபை, பிரதிநிதிகள் சபை என்றவாறு இரண்டு சபைகள் ஏற்படுத்தப்படல் வேண்டும், மலையக சமூகத்தினரின் பின்னடைவான நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர் களுக்கென்று விசேட உதவிகள் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்படுதலும் வேண்டும் என்று பல முன்வைப்புகள் இடம்பெற்றிருந்தன.

மலையக தன்னாட்சி பிராந்தியத்தினை ஏற்படுத்துவது தொடர்பிலும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றிருந்தன. வடமாகாண சபையானது அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு திட்டம் ஒன்றினை ஏற் கனவே தயாரித்திருந்தது. இதில் பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. இத்திட்டத்தில் வடகிழக்கில் மாநில பாராளு மன்றம்,

அரசகரும மொழி, இனமொழியில் தேசிய கீதம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. மேலும் மலையக மக்கள் குறித்தும் வரைபு தனது விசாலமான பார்வையினை செலுத்தி இருந்தது. இதனடிப்படையில் மலையக தன்னாட்சி பிராந்தியம் குறித்த வலியுறுத்தல்கள் இடம்பெற்றமை குறிப் பிடத்தக்க, சிறப்புமிக்க ஒரு விடயமாக கருதப்படுகின்றது. இதுபோன்றே ஏனைய சிறுபான்மையினரும் பல்வேறு கோரிக் கைகளை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க் குமாறு முன்வைத்திருந்தனர்.

இழுபறிகள்

அரசியல் கொந்தளிப்பு நிலைமைகள், புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல முயற்சிகளையும் இப்போது கேள்விக்குறியாக்கி இருக்கின்றன. இனவாத சிந்தனையாளர்களின் எதிர்ப்பு களையும் கோஷங்களையும் மீறி புதிய அரசியலமைப்பினை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. குறித்த நம்பிக்கை சாத்தியப்படுமா? என்று சிந்தனைகள் இப்போது மேலெழுந்து வருகின்றன. புதிய அரசியலமைப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் மக்களிடம் இருந்து மெதுமெதுவாக விலகிச் செல்கின்ற ஒரு நிலையையும் அவதா னிக்கக் கூடியதாக உள்ளது. இதேவேளை அரசாங்கத்தின் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஒன்றினை உடனடியாக முன்னெடுக்கவேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியற்கூட்டணி மீண்டும் கைகோர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாட இது பொருத்தமான நேரமில்லை என்பதனையும் சுட்டிக்காட்டி இ-ருக்கின்றார். ஏனைய பல கட்சிகளும் இதனை கோடிட்டு காட்டி இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இப்படிப் பார்க்கும் போது புதிய அரசியலமைப்பு ஒன்றினை சாத்தியப்படுத்துவதற்கு இன் னும் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிவரும் என்பது மட் டும் புலனாகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-03#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.