Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி சம்பவம் : பதற்றம் தொடர்கிறது.!

Featured Replies

கண்டி சம்பவம் : பதற்றம் தொடர்கிறது.! (முழு விபரமும் உள்ளே...)

 

 

கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளை யில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Image result for பல்­லே­கல virakesari

இரா­ணு­வத்­தினர் உட்­பட முப்­ப­டை­யினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யிலும் பதற்ற நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது.  இதே­வேளை தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவின் திகன- ராஜ­வல பகு­தியில் இன­வா­தி­களால் தீ மூட்­டப்­பட்டு எரிக்­கப்­பட்ட வீட்­டுக்குள் இருந்து முஸ்லிம் இளைஞர் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. 21 வய­து­டைய அப்துல் பாஸித் எனும் இளை­ஞரின் சட­லமே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது ஜனாஸா நேற்று மாலை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

 இந் நிலையில் நேற்று முன் தினம் கண்டி மாவட்டம் முழு­வதும் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று காலை அது தளர்த்­தப்­பட்­ட­துடன் மீண்டும் தெல்­தெ­னிய மற்றும் பல்­லே­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு மட்டும் மறு அறி­வித்தல் வரை ஊரங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அத்­துடன் தெல்­தெ­னிய - திகன பகு­தியை மையப்­ப­டுத்தி இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் சந்­தேக நபர்­க­ளையும் அதன் பின்­ன­ணியில் செயற்­பட்­டோ­ரையும் கைது செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன்­படி குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறப்புக் குழு­வொன்று நேற்று தெல்­தெ­னிய நோக்கி சென்­ற­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 நேற்­றைய தினம் வன்­மு­றைகள் எதுவும் குறித்த பகு­தியில் பதி­வா­காத போதும், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை மற்றும் இரா­ணுவ பாது­காப்பு தொடர்ந்தும் அமுலில் இருப்­ப­தாக பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் ஏற்­க­னவே முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ வைத்­தமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 24 சந்­தேக நபர்­க­ளையும் நேற்று காலை தெல்­தெ­னிய நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­த­தா­கவும் அதன்­போது அவர்­களை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ருவன் கூறினார்.

இத­னி­டையே இரா­ணுவ பாது­காப்­பா­னது கண்டி நக­ருக்கும், தெல்­தெ­னிய , திகன மற்றும் கட்­டு­கஸ்­தோட்டை உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கும் தொடர்ந்தும் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேல­திக படை­ய­ணி­யொன்றும் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் சுமித் அத்­த­பத்து கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 எவ்­வா­றா­யினும் நேற்று முன் தினம் கண்டி முழு­வ­தற்கும் ஊர­டங்கு அமுல் செய்­யப்­பட்ட நிலையில், வன்­மு­றை­யா­ளர்கள் அந்த நேரத்­திலும் தாக்­கு­தல்­களை நடாத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக  திகன முதல் கெங்­கல்ல, பல­கொல்ல வரை­யி­லான பகு­தி­களில் உள்ள அனைத்து முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் இடையில் இருந்த தமி­ழர்­களின் கடை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 நேற்று முன் தினம் திரண்ட  ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட  பெரும்­பான்­மை­யி­னக்­கு­ழு­வினர் தமது வெளி­மா­வட்ட வசிப்­பிடம் நோக்கி செல்லும் வழியில் திக­னவில் மட்­டு­மன்றி கட்­டு­கஸ்­தோட்டை வரை­யுள்ள பல முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மற்றும் குடி­யி­ருப்­புக்கள் மீது தாக்­குதல் நடாத்­தி­யுள்­ளனர்.

 இதனால் பல்­லே­கல பொலிஸ் பிரி­விலும் தெல்­தெ­னிய பொலிஸ் பிரி­விலும் கடும் சேதங்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் பிரி­விலும் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 திக­னவில் மட்டும் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்தமான 15 கடைகள் வரை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. மொத்தமாக கட்டுகஸ்தோட்டை, தெல்தெனிய மற்றும் பல்லேகலை பொலிஸ் பிரிவுகளில் 10 பள்ளிவாசல்கள், 50 வரையிலான வர்த்தக நிலையங்கள் 30 வரையிலான வீடுகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பள்ளிவாசல் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் எனையவை பகுதியளவிலும் சிறு அளவிலும் சேதங்களுக்கு உள்ளகையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த அசாதாரண சூழ்நிலையினால், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சுமார் 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொலிஸ் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். 

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31347

  • தொடங்கியவர்
கண்டியில் அலைபேசியுடனான இணையப் பாவனை இடைநிறுத்தம்
 
 

கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கண்டியில்-அலைபேசியுடனான-இணையப்-பாவனை-இடைநிறுத்தம்/175-212383

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்
 

கண்டி நிர்வாக மாவட்டத்துக்குட்பட்ட பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரும் வரை  இன்று காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மறு-அறிவித்தல்-வரும்-வரை-ஊரடங்கு-சட்டம்-அமுல்/175-212381

  • தொடங்கியவர்

முடங்கியது பேஸ்புக், வட்ஸ்ஆப் : முடக்கியது கண்டி கலவரம்

 

 

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் முற்றாக பேஸ்புக் ஐ அரசாங்கம் தடைசெய்துள்ளது.

நாட்டின் கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி பிரதேசத்திற்கு அனுப்பட்டுள்ளன.

இந்த குழுக்களில் தலா மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களும், தலா மூன்று பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/31361

முஸ்லீம் பயங்கரவாதத்துக்கு எதிரான சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் நடவடிக்கைகள் வெளியே தெரியாமல் இருக்க சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.