Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்க கமாண்டோ படை விரைகிறது

Featured Replies

காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்க கமாண்டோ படை விரைகிறது

தேனியில் காட்டுத்தீபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

தேனி காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கோவை சூலூரில் இருந்து, பத்து கமாண்டோக்களை அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணி தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மலையில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஏற்கனவே இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.

தேனி காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட 36 நபர்களும் மீட்கப்படுவார்கள் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உறுதியளித்துள்ளார்.

மலைஏறும்(trekking) பயிற்சிக்காக காட்டுக்குள் வந்தவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீ

''இரவு நேரம் என்பதாலும், மலை சரிவு பகுதியாக இருப்பதாலும், மீட்கப்படுவதில் சிரமம் உள்ளது. ஆனால் மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று முதல் உதவி அளித்துவருகின்றனர். மூன்று குழந்தைகள், எட்டு ஆண்கள், 25 பெண்களும் இரண்டு நாட்கள் மலைஏறுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திரும்பும்போதுதான் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இந்த தீ இயற்கையாக ஏற்பட்டது அல்ல'' என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் பாதிக்கப்படுள்ளவர்களை நேரில் வந்து சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்திதரப்படும் என்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தேனியில் காட்டுத்தீபடத்தின் காப்புரிமைTWITTER

குரங்கினி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவந்துள்ள சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி,'' சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நாங்கள் மலை ஏற்றம் சென்றோம். ஒரு சிலர் மாட்டிக்கொண்டனர். எனக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. நாங்கள் பாறைக்குள் குதித்து தப்பித்துவிட்டோம். தப்பிக்கமுடியாத காரணத்தால் சிலர் மாட்டிக்கொண்டனர்,'' என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் போடி பகுதியில் உள்ள பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 12 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ''மலைப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வண்டியை செலுத்த முடியாதால், மருத்துவக்குழுவினர் நடந்துசென்று பாதிக்கப்பட்டவர்களை கொண்டுவந்தனர். தற்போது எட்டு நபர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குரங்கணி மலை மீது மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளனர். இரவு நேரம் என்பதால், அங்குள்ளவர்களுக்கு உடனடி முதல்உதவி கொடுக்கப்பட்டு, பின்னர் கீழே கொண்டுவரப்படுகின்றனர்,'' என தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-43364558

  • தொடங்கியவர்

`குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய 36 பேர்!’ - 7 பேர் சிறிய காயங்களுடன் மீட்பு

 
 
 

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.   

WhatsApp_Image_2018-03-11_at_8.19.50_PM_

 


தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.  முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், 27 பேர் சிக்கியிருக்கக் கூடும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், காட்டுத் தீயில் சிக்கியிருந்த 7 மாணவிகள் மீட்கப்பட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சிறிய அளவிலான காயங்களுடன் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 

WhatsApp_Image_2018-03-11_at_8.19.46_PM_

 

அவர்களிடம் விசாரித்ததில், சென்னை, ஈரோடு, சென்னிமலை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 பேர் குழுவாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் 8 பேர் மாணவிகள் எனவும் தெரியவந்துள்ளது. மலைப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருபவரிடம் நாம் பேசியபோது, 5 பேர் தீக்காயங்களுடன் உயிரிழந்து விட்டதாகவும், மேலும்  பலர் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டரால், இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் தரையிறங்க முடியவில்லை என்று தெரிவித்த அவர், காயமடைந்த மாணவர்களை கயிறு மூலம் கட்டி ஹெலிகாப்டரில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  

 

https://www.vikatan.com/news/tamilnadu/118897-iaf-helicopter-deployed-in-theni-forest-fire-rescue-operation.html

  • தொடங்கியவர்

குரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

குரங்கணி

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் மூன்று பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.

தேனி, குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சிக்கி உள்ளவர்கள் மீட்க தரைவழியாக 16 கமாண்டோ வீரர்கள் சென்றுள்ளனர்.

முன்னதாக, தேனி காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கோவை சூலூரில் இருந்து கமாண்டோக்களை அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.

மீட்புப்பணி தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மலையில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஏற்கனவே இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.

தீ விபத்து

குரங்கணி காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட 36 நபர்களும் மீட்கப்படுவார்கள் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று உறுதி அளித்து இருந்தார்.

மலைஏறும்(trekking) பயிற்சிக்காக காட்டுக்குள் வந்தவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரங்கணி - Kurangani Forest fire

''இரவு நேரம் என்பதாலும், மலை சரிவு பகுதியாக இருப்பதாலும், மீட்கப்படுவதில் சிரமம் உள்ளது. ஆனால் மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று முதல் உதவி அளித்துவருகின்றனர். மூன்று குழந்தைகள், எட்டு ஆண்கள், 25 பெண்களும் இரண்டு நாட்கள் மலைஏறுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திரும்பும்போதுதான் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இந்த தீ இயற்கையாக ஏற்பட்டது அல்ல'' என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் பாதிக்கப்படுள்ளவர்களை நேரில் வந்து சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

குரங்கணி - Kurangani Forest fireபடத்தின் காப்புரிமைTWITTER

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவந்துள்ள சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி,'' சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நாங்கள் மலை ஏற்றம் சென்றோம். ஒரு சிலர் மாட்டிக்கொண்டனர். எனக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. நாங்கள் பாறைக்குள் குதித்து தப்பித்துவிட்டோம். தப்பிக்கமுடியாத காரணத்தால் சிலர் மாட்டிக்கொண்டனர்,'' என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

குரங்கணி காட்டுத் தீ: Kurangani Forest fire

மீட்புப் பணியில் போடி பகுதியில் உள்ள பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குரங்கணி காட்டுத் தீ: மீட்பு பணியில் 4 ஹெலிகாப்டர்கள்

பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 12 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ''மலைப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வண்டியை செலுத்த முடியாதால், மருத்துவக்குழுவினர் நடந்துசென்று பாதிக்கப்பட்டவர்களை கொண்டுவந்தனர். தற்போது எட்டு நபர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குரங்கணி மலை மீது மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளனர். இரவு நேரம் என்பதால், அங்குள்ளவர்களுக்கு உடனடி முதல்உதவி கொடுக்கப்பட்டு, பின்னர் கீழே கொண்டுவரப்படுகின்றனர்,'' என தெரிவித்தார்.

Kurangani Forest fire

25 பேர் மீட்பு

காட்டுத்தீ

இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை விரைந்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

ராதாகிருஷ்ணன்

மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் தயாரக உள்ளன. திருச்சியிலிருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். போதுமான மருந்துகள் உள்ளன என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர், "ஆறு மருத்துவ குழுக்கள் நேரடியாக சிகிச்சை அளிக்க மலை பகுதிகளுக்கு சென்றுள்ளனர்" என்றார்.

அரசு இராசாசி மருத்துவமனை

மூன்று பேர் 90 சதவீத காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார். மேலும் அவர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.முதல் கட்டமாக மீட்கப்பட்ட 8 பேர் நலமாக உள்ளனர் என்கிறார்.

8 பேர் பலி

தேனி குரங்கணி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்டரில் தெரிவித்து இருந்தார்.

பின் இந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

பொன். ராதாகிருஷ்ண

மீட்கப்பட்டவர்களில் பலர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளதாக கூறும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன." என்கிறார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்திலேயே தீக் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

மீட்புப்பணியில் கிராமமக்கள்

மீட்புப்பணியில் கிராமமக்கள் இறங்கி உள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட மக்கள் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.bbc.com/tamil/india-43364558

  • தொடங்கியவர்

`பதற்றத்தில் பள்ளத்தில் விழுந்ததுதான் 9 பேரின் சாவுக்குக் காரணம்!’ - தேனி ஆட்சியர் விளக்கம் #KuranganiForestFire #LiveUpdates

 

தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேசுகையில் ‘குரங்கணி காட்டுத்தீயிலிருந்து இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 10 பேருக்கு எந்தக் காயமும் இல்லை. 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டும் 9 பேரை காப்பாற்ற முடியவில்லை.

 தீ விபத்தை பார்த்து பதற்றப்பட்டு ஓடியதால், 9 பேர் பள்ளத்தில் விழுந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன’ என்றார். 

தேனி ஆட்சியர்
 

 

*ஈரோட்டைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

*சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

*உயிரிழந்தவர்களில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். 

*காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த விபின் என்பவரின் உடல் மலைப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

 

குரங்கணி காட்டுத்தீ

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. உள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி, இரு அணிகளாக மொத்தம் 39 பேர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். இரண்டு பிரிவுகளாகச் சென்ற அவர்களில் சென்னையிலிருந்து 27 பேரும், ஈரோட்டிலிருந்து 12 பேரும், சென்றுள்ளனர். 

குரங்கணி காட்டுத்தீ

இவர்களில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய் அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மூவரும் நள்ளிரவு 3 மணி வரை குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தனர். இதன்பின், சுமார் 3.50 மணியளவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குரங்கணி வந்தார்.  

குரங்கணி காட்டுத்தீ

அவர் நம்மிடம் பேசும் போது, "கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 3 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்படும். அதில் ஒன்று காட்டுத் தீயை அணைக்கவும், மீதமுள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பயன்படுத்தப்படும். மீட்கப்பட்ட 27 பேரும்  காயங்கள் அடிப்படையில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில், 6 பேர் தேனி அரசு மருத்துவமனைக்கும், 3 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளோர் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். 

 

வனத்துறையுடன் இணைந்து ஆயுதப்படையின் பயிற்சி காவலர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மலைகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோவை விமானப்படை தளத்திலிருந்து கருடா 1, கருடா 2 என்ற பெயரிடப்பட்டுள்ள இரண்டு அணிகள் மீட்புப் பணிக்காக குரங்கணி வந்துள்ளன. இவற்றில் ஓர் அணி மீட்புப் பணிக்காகவும், மற்றொரு அணி மருத்துவ உதவிக்காகவும் வந்துள்ளனர். மேலும், ஒரு ஹெலிகாப்டரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/118920-live-updates-on-kurangani-forest-fire.html

  • தொடங்கியவர்

மனதைப் பிழியும் சோகம்: குரங்கணி தீ விபத்து குறித்து கமல் ட்விட்டரில் பதிவு

 

 
kamalhasan

குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். இதில் முதல்கட்டமாக 22 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) காலை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குரங்கணி. விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23045254.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

flowers.png

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

  • தொடங்கியவர்

`குரங்கணி மலையேற்ற பயிற்சியை ஒருங்கிணைத்த சென்னை அமைப்பு!’ - நிர்வாகி தலைமறைவு #KuranganiForestFire

 
Chennai: 

குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோரை `மகளிர் தின சிறப்பு மலையேற்றம்’ என்ற பெயரில் சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற அமைப்பினர் அழைத்துச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. 

kurangani_15529.jpg

 

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள் நேற்று மாலை காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் 90 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள் முறையான அனுமதி பெற்றுச் சென்றனரா என்ற கேள்வியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பியுள்ளனர். 

பீட்டர் வான் கெய்ட்இந்தநிலையில், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற அமைப்பின் மூலம் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களது இணையதளத்திலும் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொலுக்குமலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும், இதற்காகச் சென்னையிலிருந்து மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் புறப்படும் படியாகப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. 

 

ட்ரெக்கிங் பயணத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திவ்யா மற்றும் நிஷா ஆகியோர் 90 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், ஆண் ஒருங்கிணைப்பாளர்களான விபின் மற்றும் அருண் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். இதனால், மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முறையான அனுமதி பெற்றிருந்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் முக்கிய நிர்வாகியான பீட்டர் வான் கெய்ட், விபத்துக்குப் பின்னர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த அமைப்பு குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெல்ஜியத்தைச் சேர்ந்த பீட்டர், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சென்னை ட்ரெக்கிங் கிளப் அமைப்பை நடத்தி வந்துள்ளார். இதனால், அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.  

https://www.vikatan.com/news/tamilnadu/118957-chennai-trekking-club-organised-the-kurangani-trekking.html

  • தொடங்கியவர்

குரங்கணி காட்டுத்தீ விபத்து - மதுரை ஆஸ்பத்திரிகளில் 9 பேர் கவலைக்கிடம்

 
அ-அ+

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயம் அடைந்த 9 பேர் கவலைக்கிடமான நிலையில் மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #TheniForestFire #TheniFire

 
 
 
 
குரங்கணி காட்டுத்தீ விபத்து - மதுரை ஆஸ்பத்திரிகளில் 9 பேர் கவலைக்கிடம்
 
மதுரை:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டது.

உயிருக்கு போராடிய 27 பேர் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ. ஏர்ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் மதுரை ஆஸ்பத்திரிகளில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஈரோடு மாவட்டம் அய்யங்கோட்டையை சேர்ந்த திவ்யா (25) 95 சதவீத தீக்காயத்துடனும், சென்னையை சேர்ந்த அனுவித்யா (25) 90 சதவீத தீக்காயத்துடனும், சேலம் வேட்டுவபட்டியைச் சேர்ந்த தேவி (29) 75 சதவீத தீக்காயத்துடனும், ஈரோடு கவுண்டன்பாடியைச் சேர்ந்த கண்ணன் (26) 70 சதவீத தீக்காயத்துடனும், சாய்வசுமதி 65 சதவீத தீக்காயத்துடனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் உடுமலை சிவசங்கரி (26) 50 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள கென்னட் ஆஸ்பத்திரியில் திருப்பூர் தேக்கம்பாளையத்தைச் சேர்ந்த சக்திகலா (40) 90 சதவீத தீக்காயத்துடனும், ஈரோடு சித்தோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) 60 சதவீத தீக்காயத்துடனும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சென்னையை சேர்ந்த நிவ்யா பிரகதி (25) 40 சதவீத தீக்காயத்துடனும், கேரளாவை சேர்ந்த மீனா ஜார்ஜ் (32) 35 சதவீத தீக்காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி மி‌ஷன் ஆஸ்பத்திரியில் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சுவேதா (28) 66 சதவீத தீக்காயத்துடனும், சென்னையைச் சேர்ந்த பார்கவி (23) 73 சதவீத தீக்காயத்துடனும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களை காப்பாற்ற மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

201803131026119373_1_cm._L_styvpf.jpg

தீக்காயம் அடைந்து மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நேரில் பார்த்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அவர்களது உறவினர்களிடமும் ஆறுதல் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியனிடம் செல்போனில் பேசினார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் படி கூறினார்.

மேலும் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் உறவினர்களிடமும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அழகர், மணி ஆகியோரிடமும் பேசிய கமல்ஹாசன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படியும் கூறினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேர் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது.

201803131026119373_2_theni1._L_styvpf.jpg

இதனால் அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகங்களில் கண்ணீருடன் சோகமே உருவான நிலையில் அமர்ந்துள்ளனர். அவ்வப்போது மருத்துவக் குழுவினரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தப்படி கண்கலங்கி அமர்ந்திருக்கும் காட்சி பரிதாபமாக உள்ளது. #TheniForestFire #TheniFire #tamilnews
 
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/13102153/1150593/Theni-forest-fire-9-critical-condition-in-Madurai.vpf

  • தொடங்கியவர்

குரங்கணி வனப்பகுதி காட்டுத்தீயில் உயிர் இழந்தோ ர் 12 ஆக உயர்வு

kurangani.jpg?resize=800%2C533
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் மரணமடைந்துவிட்டதால், இறப்பு எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட சமயத்தில் 99சதவீத தீக்காயங்களுடன் இருந்த திவ்யா என்பவருக்கு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனளிக்காபமல் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

தீவிர சிகிச்சை வழங்கப்பட்டாலும் தீக்காயமடைந்த நிலையில் மீட்கப்படும் போதே அவர் பலத்த காயத்துடன் இருந்ததாகவும் மருத்துவ ரீதியாக 99 சதவீத தீக்காயம் மிகவும் ஆபத்தான மூன்றாம் நிலை தீக்காயம் என்பதால் இவர் மரணம் அடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில், குரங்கணி மலையில் நடந்த தீவிபத்து குறித்து விரிவான அறிக்கையை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/70866/

  • தொடங்கியவர்

குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்11) நடந்த தீவிபத்தில் சிக்கி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நான்கு நாட்களாக சிகிச்சை எடுத்துவந்த அனுவித்யா மற்றும் கண்ணன் ஆகியோர் இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனுவித்யாபடத்தின் காப்புரிமைANU VIDYA / FACEBOOK Image captionஅனுவித்யா (மத்தியில்)

கண்ணன் மற்றும் அனுவித்யா ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்த நிலையில் இருவரும் வியாழக்கிழமை மரணம் அடைந்துவிட்டதாக மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

70 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணனின் உடலில் பலத்த காயங்களும், உள்உறுப்புகளில் தீயின் புகை மோசமான பாதிப்புகளும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

90 சதவீத தீக்காயங்களுடன் நான்கு நாட்களும் தன்னம்பிக்கையுடன் இருந்த அனுவித்யாவின் இழப்பு பலருக்கும் வருத்தத்தை அளிப்பதாக அமைந்துவிட்டது.

சந்திக்க வந்த நண்பர்களிடம் தான் மீண்டும் வந்துவிடுவேன் என்று உறுதியாக கூறிவந்த அனுவித்யாவுக்கு இரண்டு நாட்களாக சிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குரங்கணியில் மலைஏற்றம் பயிற்சியில் ஈடுபட்ட 36 நபர்களில் எட்டு நபர்கள் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர்தப்பினர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒன்பது நபர்கள் இரண்டாவது நாளே இறந்துவிட்டதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/india-43420024

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.