Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு!!!

Featured Replies

தூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு!!!

 

 

வவுனியா - கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த வேளையில் தனிமையில் இருந்துள்ளார்.

இன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

4444444444.jpg

இதேவேளை சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர். மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தூக்கில் தொங்கிய சடலத்தை கீழ்  இறக்கி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31577

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் எங்கட ஊரிலையும் கனகாலமாய் கனடாவில் வசித்த ஒரு வயோதிப மாது ஊருக்கு வந்துநிண்டா இப்பொ பிள்ளையள் திரும்பவும் கூட்டிக்கொண்டுபோகப்போகினம் காரணம் அவவைப் பராமரிக்கிறம் எனக்கூறி அரசாங்கத்தில் வாங்கும் காசுக்கொடுப்பனவு காலவதியாக்கப்போகுதாம் இப்ப திரும்பவும் போய் பதியவேண்டுமாம். சில பெற்றோரது பிள்ளைகள் அவர்களது பிணத்தையும் காசாக்கிவிடுவினம் கண்டியளோ. 

கனடாவில மான்சஙள் வாங்கி ஒன்பது அரைவீட்டில் நாஙு கக்கூசு குளியலறையுடன் கணவனும் மனைவியும் ஒரே ஒரு பிள்ளையும் வாழவேண்டுமாகில் இப்படியான வேலைகள் செய்தே தீரவேண்டும் .

அந்தாள் நல்லசீவன் போய்ச்சேர்ந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி சொல்லுரீங்கள் ஐயா, 2 நாட்களுக்கு முன் ஒர் செய்தியில் கனடா நாட்டு டாக்குத்தர்மார்களின் சம்பளம் அரசாங்கத்தால்   கூட்டியுள்ளார்கள். டாக்குத்தர்மார்கள் தாங்களுக்கு சம்பள அதிகரிப்பு வேண்டவே வேண்டாம் என்றே சொல்லுகின்றார்கள்.  தங்கள் சம்பள அதிகரிப்பினால் அரசாங்க வருமானம் வீரயமாக்கப்படுகின்றதாக சொல்லுகின்ரார்கள். 

இப்படியும் உலகத்தில் ந‌ல்ல டாக்குத்தர்மார் இருக்கின்றார்களா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.