Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்

Featured Replies

ரசல் ஆர்னோல்டின் விரிவான சரித்திரம் யாருக்காவது தெரியுமா?

இவர் சிறு வயதிலிருந்தே கொழும்பில் படித்துள்ளாரா அல்லது யாழ்ப்பாணத்திலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுள்ளாரா?

இவர் ஒரு கிறீஸ்தவரா?

இவரது தாய், தந்தையர் இருவரும் தமிழரா?

இவரால் எவ்வாறு சிறீ லங்கா கீரிக்கட்டு அணியில் இடம் பிடிக்க முடிந்தது?

இவரைப் போல் அண்மைக்கால - எதிர்காலத்தில் - Immediate Future - வேறு யாராவது தமிழ் கீரிக்கட்டு ஆட்டக்காரர்கள் சிறீ லங்கா அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

ரசல்ட் பிரேமகுமரன் ஆர்னாட் என்பது இவரது பெயர். பிறந்தது கொழும்பில். யாழ்ப்பாணப் பெற்றோர்களுக்கு பிறந்தவர். இவர் சீன நாட்டுப் பெண்ணை(சீனா என்றால் சீனா, ஜப்பான், வியட்னாம் போன்றவர்களில் ஒருவர்) திருமணம் செய்துள்ளார்(உறுதிப்படுத்த முடியவில்லை). கொழும்பில் என்.சி.சி அணிக்கு சிறப்பாக விளையாடி வருவதினால் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணியின் A அணியில் தலைவராக இருந்து சில போட்டிகளில் இவ்வணி வெற்றி பெற்றது.

தற்பொழுது 33 வயதுடைய மரியோ சுரேஸ் வில்லவராயன்(கொழும்பில் பிறந்தவர்) என்ற வேகப்பந்து வீச்சாளரும் தமிழரே. இவர் முன்பு இலங்கை அணியின் A பிரிவில் சில சர்வதேச நாடுகளுக்கு எதிராக விளையாடி இருந்தார். 98ல் இங்கிலாந்துக்கு சென்ற இலங்கை அணியில்(அப்பொழுது தான் லண்டன் ஒவலில் முரளிதரனின் 16 விக்கெற்றினால் இலங்கை வெற்றி பெற்றது) இவர் இடம் பிடித்தாலும் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. தற்பொழுது இவர் முதல் தர போட்டிகளில் கடைசியாக 2005ம் ஆண்டிலேயே விளையாடி இருந்தார்.

23 வயதுடைய பிரதீப் ஜெயப்பிரகாசச்சந்திரன் ஒரே ஒரு ஒரு நாள் போட்டி இந்தியா அணிக்கு எதிராக 2005ல் விளையாடினார். வேகப்பந்து வீச்சாளரான இவர் சேவாக்கினை ஆட்டமிழக்கச் செய்தவர். தற்பொழுது தமிழ் யூனியன் அணிக்காக விளையாடி வருகிறார்.

இதைவிட இலங்கை அணியின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியிலும், சென் தோமஸ் கல்லூரியிலும் விளையாடிய விதேஸ் பாலசுப்பிரமணியமும் தமிழரே. இவருக்கு இப்பொழுது 20 வயது. தற்பொழுது இவர் என்ன செய்கிறார் என்று தெரியாது.

தகவலுக்கு மிக்க நன்றி! :blink:

வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்டபத்தில் செய்தியாளர்கள் தமிழில் கேள்வி கேட்டதுக்கு தமிழ் தெரியாது என கூறியதை என் காதால் நான் கேட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசல் ஆர்னோல்டின் விரிவான சரித்திரம் யாருக்காவது தெரியுமா?

லக்ஸ்மன் கதிர்காமரின் உறவினர் என்பது காதோரத்தில் கிடைத்த தகவல்..

  • 2 weeks later...

யாவாரியிடம் = வியாபாரியிடம்

லக்ஸ்மன் கதிர்காமரின் உறவினர் என்பது காதோரத்தில் கிடைத்த தகவல்..

அவர் தமிழரே ஆனால் சிங்களத்தை கதைக்கும் தமிழர்கள்.அவர் ஒரு சிங்கள பெண்ணையே மணந்திருகின்றார்.அதுவும் அவர் இலங்கை அணிக்கு வரும் முன்னமே காதலித்து பெண்ணின் தந்தையால் கடுமையாக மிரட்டப்பட்டவர் ஆனால் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் கலியாணம் செய்து கொண்டார்.ஆனல்டின் அண்ணன் கடந்த சுனாமி காலத்தில் இத்தாலியில் இருந்து ஒரு கெண்டைனர் நிவாரண பொருட்களை எடுத்துவந்து முல்லைதீவு பகுதிக்கு எடுத்து சென்றார்.ஆனால் இவர் லக்ஸ்மன் கதிர்காமரின் உறைனர் இல்லை என்பது உறுதியாக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ரசல்ட் அர்னால்ட் சீனப் பெண் ஒருவரை மணந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

முதலில உங்களைத் திருத்துங்கோ உலகம் தானாத்திருந்தும்.

இந்திய தமிழர் ஒருவர் எதிரா கருத்துக் கூறினால் தட்டிக்கேக்கலாம்

அதுக்காக ஆதரவு குரலெலுப்பவில்லை யெண்டு கத்திறது நியாயமல்ல..

ஆனால் ரசல்ட் அர்னால்ட் சீனப் பெண் ஒருவரை மணந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

சிங்களப்பெண்ணையே மனந்துள்ளார்.அப்பெண்ணின் தம்பியார்கூட சிட்னியில் படிகின்றார் நாம் அவர்களின் வீடு இருக்கும் வீதியில் இருகின்ற விளையாட்டு மைதானத்தில்தான் இலங்கையில் விளையாடுவதுண்டு.ஆகவே அவ்ரின் தம்பியாருடன் எமக்கு அறிமுகமுண்டு சேர்ந்து விளையாடுவது என்பதால்

யாரை பற்றி சொல்லுறீங்கள் என்று விளங்குது ஆனால் சரியா தான் சொல்லி இருக்கிறீங்கள்

:unsure:

எனக்கும் தெரியும், குஞ்சியாச்சியிட்டப் போட்டுக்குடுக்க மாட்டன், கவலைப்படாதேங்கொ கந்தப்பு :unsure:

எனக்கும் தெரியும், குஞ்சியாச்சியிட்டப் போட்டுக்குடுக்க மாட்டன், கவலைப்படாதேங்கொ கந்தப்பு :unsure:

உங்களுக்கும் தெறியுமா,கந்தப்பு வரவர மோசம்

:unsure:

  • 2 weeks later...

இங்குள்ள கருத்துக்கள் மிகவும் கீழ்தரமாக உள்ளன. சிங்கள இனவாதிகளை மிஞ்சி விட்டீர்கள். மைக்கல் கோல்டிங் (கிரிக்கெட் வர்ணனையாளர்) மிகவும் அழகாக முத்தையா முரளிதரன் என்று கூறுவார். முரளி 1000விக்கட்டிற்கு மேல் வீழ்த்திவிடார், இவரால் தமிழ் இனத்திற்கு பெருமை. கிரிக்கெட்டில் நாட்டம் இல்லாவிடில், இப்படியா தூற்றுவது, வெட்கம்.

அவர் வடக்குக் கழக்கைச் சேராதவர் என்பது உண்மைதான். ஆனால் சுனாமி அனர்த்தம் நிகழ்வதற்கு முன்பதாகவெ வேளையில் அவர் உலக உணவுத் திட்டத்தினால் வடக்குக் கிழக்குக்கு பொறுப்பான முக்கிய பதவியில் இருந்தார்

ஆனால் அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கக் கிழக்கைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது வெள்நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தைப் பெற்று காலியையும் காலி கிரிக்கெற் மைதானத்தையும் புனரமைத்தக் கொண்டிருந்தது அந்தக் கறிவேப்பிலை.

அந்த நேரத்தில் வெறும் றொட்டியையும் வெறும் தேத்தண்ணியையும் குடித்துப் பசியாறும் தோட்டத் தொழிலாளர்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

இதுக்கு மேல என்ன உதாரணம் வேனும்?

முரளியால் ஈழத் தமிழருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

மாறாக ஒரு தமிழர் சிங்களவருடன் இணைந்து விளயாடுகிறார் என்பதும் தலை சிறந்த ஒரு வீராராக

இருக்கிறார் என்பது பெருமை.

விளையாட்டுடன் வந்து அரசியலை கலப்பதென்பது அடி முட்டாள் தனம்.

;. அவர் தனது திறமையால் உலகிடை போய் சேர்ந்தார் அதற்கு

அடிப்படை காரணம் இலங்கை அணி.

அந்த அணியை வைத்து தனது திறமையால் எரவாலும் அசைக்க முடியாத ஒரு இடத்தில்

இருக்கிறார். அவருக்கென பல்லாயிரம் ரசிகர்களையும் இணைத்து வைத்தள்ளார்.

எத்தனையோ தமிழ் இளைஞர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கள்ளும் பாடசாலை hPதியாகவும்

சிறந்த துடுப்பாட்ட காறர்களாக உள்ளார்கள் .

ஏன் அவர்களை இந்த சமுகமும் இங்கே கருத்து எழுதுபவர்களும் காணவில்லை...??

தெரிவு செய்யவில்லை....???

வளர்ந்து வரும் ஒருவரை மழுங்கடிக்கின்ற இந்த சமுகத்தில் எவ்வாறு

இவ்வாறான இளைஞர்களை இனம் கண்டு அவர்களின் திறமைகளிற்கு முன்னுரிமை கொடுத்து

தமிழன் என்ற உணர்வோடு வளர்க்க முடியும்...??

எந்த துறையை எடுத்தாலும் அணைத்து துறையிலும் இளையோர்கள் திட்டமிட்டு நசுக்கப் படுகிறார்கள்

இவ்வாறான முற்போக்கு சிந்தனைகளை விழிப்பணர்வுகளை தட்டியெழுப்புங்கள்.

யாவரும் தமிழர் யாருக்கு திறமை உள்ளதோ அவர்களை உச்சமேற்றுங்கள்

அதை விடுத்து இவ்வாறான திட்டமிட்ட ஒரு தனி நபர் தாக்குதலை நிறுத்துங்கள்...

காலம் உங்களை கையெடுத்து வணங்கும்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி உள்ளத்தில் தலைவரைக் குறித்து பெருத்த மதிப்பு உண்டு...

முரளி ஒரு உண்மையான தமிழன்...

பார்ப்பதற்கு அவர் சிங்களவருக்கு ஆதரவு செய்தாலும்...

உண்மையிலேயே விடுதலைப்போராட்டத்தில் அவர் அவரது "பங்கை" மிக நன்றாகவே செய்திருக்கிறார் என்பது அனக்கு தெரிந்த உண்மை....

முரளி குடும்பமும் எனது குடும்பமும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதனால் சொல்லுகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி உள்ளத்தில் தலைவரைக் குறித்து பெருத்த மதிப்பு உண்டு...

முரளி ஒரு உண்மையான தமிழன்...-------------மகிழ்ச்சிதான்

"**********BRIDGETOWN, Barbados–Muttiah Muralitharan hopes that a Sri Lankan victory in tomorrow's World Cup cricket final against the defending-champion Australians can help heal the war wounds of his strife-torn country.

The star off-spinner, one of three survivors from the team that beat Australia in the 1996 final, said a victory would be a timely boost as violence on the island escalates between government troops and Tamil Tiger rebels.

Muralitharan, who has taken 23 wickets at this tournament compared to his seven in 1996, said: ``It helps all the country rather than anything else. We have all nationalities in our team and peace as well because we get together and play.

``We are going through a bad situation in our country but this could achieve something different.'' ********"

"***********http://www.thestar.com/article/207843**********"

Edited by raja.m

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெயது ************************

"pathivu.com"

நிலவரம்

உலகக் கிண்ணத்தில் நிரம்பி வழிந்த அரசியல் "06-05-2007"************** காணுங்கள்

Edited by raja.m

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது திட்டுஙகப்பா ________________

  • 2 weeks later...

யாரு முத்தையா முறலிதரனா!!! ஈழத்தமிழர்கள் அனைவருமே சுயனலவாதிகள்தானே அதில் என்ன முரலி மட்டும் சுயனலவாதிங்கிறது.

யாரு முத்தையா முறலிதரனா!!! ஈழத்தமிழர்கள் அனைவருமே சுயனலவாதிகள்தானே அதில் என்ன முரலி மட்டும் சுயனலவாதிங்கிறது.

உங்கள் கருத்து எம்மைச் சீண்டுவதற்காக என்பது தெரியும்.

நீங்கள் உண்மையிலேயே கருத்தாட ஆர்வத்துடன் இங்கு வருபவரானால் மேற்சொன்ன கருத்தை விளக்கமாகக் கூறுங்கள்.

வந்துடாங்கப்பா

வந்துடாங்கப்பா

எஸ்கேப் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.