Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குறுதி நிறைவேற்றப்படுமா

Featured Replies

வாக்குறுதி நிறைவேற்றப்படுமா

 

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான நெருக்­க­டிகள் பல்­வேறு வடி­வங்­களில் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. இந்த அழுத்­தங்­களைச் சமா­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு, நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை இந்த அரசு வெற்­றி­கொள்ள முடி­யுமா என்­பது இப்­போது முக்­கிய கேள்­வி­யாக எழுந்­தி­ருக்­கின்­றது.

அர­சியல் ரீதி­யான ஊழல்­க­ளுக்கும், மோச­டி­க­ளுக்கும் முடிவு கட்டி, ஜன­நா­ய­கத்­தையும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்பி, ஐக்­கி­யத்தை உரு­வாக்கி நாட்டை முன்­னேற்றிச் செல்வோம் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் வாக்­கு­று­தி­யாகும். 

ஆயினும் அந்த வாக்­கு­று­திகள் இன்னும் ஏட்­ட­ள­வி­லேயே இருக்­கின்­றன. இன்னும்  நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இதனால் மக்கள் அரசாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­தி­ருக்­கின்­றார்கள். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் சர்­வ­தே­சத்­துக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களும் நிறை­வேற்­றப்­ப­டா­தி­ருக்­கின்­றன. இதனால் சர்­வ­தே­சமும் இந்த நல்­லாட்­சியின் மீது அதி­ருப்­தியும் நம்­பிக்­கை­யீ­னத்­தையும் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது.

ஜன­நா­ய­கத்­தையும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்­கு­வது என்­பது நிலைமா­று­கால நீதியை நிலை­நா­ட­்டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாகும். நிலை­மாறு கால நீதிச் செயற்­பா­டுகள், இந்த நாட்டின் மீதான சாபக்­கே­டா­கிய உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. இந்த பொறுப்பு கூறல் செயற்­பா­டா­னது, தேர்தல் வாக்­கு­று­திக்கு அப்பால், சர்­வ­தேச மட்­டத்­தி­லான பாரிய கடப்­பா­டாகும். அதே­வேளை இந்த நாட்டில் தொடர்ச்­சி­யான அடக்­கு­மு­றை­க­ளுக்கும், அர­சியல் உரிமை மீறல்­களின் முக்­கிய அம்­ச­மா­கிய சிறு­பான்மை தேசிய இன மக்­களின் மீதான வன்­மு­றை­க­ளுக்கும் முடி­வேற்­ப­டுத்­து­கின்ற முக்­கிய கட­மை­யா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது.

முப்­பது வரு­டங்­க­ளாக இந்த நாட்டை அழி­வுக்குட்­ப­டுத்­தி­யி­ருந்த யுத்­தத்தில் சாது­ரி­ய­மாக வெற்­றி­ய­டைந்த மஹிந்த ராஜ­பக் ஷஅர­சாங்கம், யுத்த காலத்து மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­வதை நேர­டி­யாக மறுத்­தி­ருந்­தது. அத்­துடன் யுத்­தத்­திற்கு முடிவு கட்­டிய பின்னர், இனப்­பி­ரச்­சி­னைக்கும் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்கும் தீர்வு கண்டு, நாட்டில் உண்­மை­யான ஐக்­கி­யத்தை உரு­வாக்­கி­யி­ருக்க வேண்டும். பேச்­ச­ளவில் இதற்­கான செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­த­னவே தவிர, அந்த அர­சாங்­கத்தின் உண்­மை­யான நட­வ­டிக்­கைகள் எதிர்­மா­றா­ன­வை­யா­கவே அமைந்­தி­ருந்­தன. 

யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்து, பாதிக்­கப்­பட்ட மக்­களை சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றிய போதிலும், அவர்­களைத் தொடர்ந்தும் ஆயுத ரீதி­யான அடக்­கு­மு­றையின் கீழ் இரா­ணுவ நிர்­வாக மய­மான சூழ­லி­லேயே அந்த அரசு வைத்­தி­ருந்­தது. தொடர்ச்­சி­யான இரா­ணுவ அச்­சு­றுத்தல் கார­ண­மாக அந்த மக்கள் யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் பீதியின் பிடி­யி­லேயே சிக்­கி­யி­ருந்­தனர். அவர்­களின் ஜன­நா­யக உரி­மைகள் மறுக்­கப்­பட்­டி­ருந்­தன. கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம், சமூக ஒன்­று­கூடல் உள்­ளிட்ட அடிப்­படை உரி­மை­களும் அந்த இரா­ணுவ மய­மான சூழலில் திட்­ட­மிட்ட வகையில் மறுக்­கப்­பட்­டி­ருந்­தன.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உரு­வாக்­கத்­திற்கு வழி­வ­குத்­தி­ருந்த 2015 ஆம் ஆண்டு தேர்­தல்கள் இத்­த­கைய அடக்­கு­முறைச் சூழலில் புதிய திருப்­பத்­திற்­கான எதிர்­பார்ப்­பையும், புதிய நம்­பிக்­கை­க­ளையும் உரு­வாக்­கி­யி­ருந்­தன. ஆயினும், நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்று வரு­ட­காலச் செயற்­பா­டுகள் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­வை­யாக அமை­ய­வில்லை. மக்­க­ளு­டைய மனங்­களை வென்­றெ­டுப்­ப­தற்கும் உத­வ­வில்லை. மாறாக பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தாக வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தி­லேயே கழிந்து போயி­னவே தவிர, பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான கால அட்­ட­வ­ணை­யுடன் கூடிய நட­வ­டிக்­கைகள் இந்த காலப்­ப­கு­தியில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதனால், காலத்தைக் கடத்தி பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காண்­பதைப் பின்­போ­டு­வ­தி­லேயே அர­சாங்கம் குறி­யாக இருக்­கின்­றது என்ற எண்ணம் மக்கள் மத்­தியில் மேலோங்­கி­யி­ருந்­தது. இந்த எண்­ணத்தை மக்கள் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மிகத் துல்­லி­ய­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். 

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்­தல்­களில் மக்கள் அளித்­தி­ருந்த ஆத­ரவை எதிர்­பார்த்­தி­ருந்த அர­சாங்­கத்தைப் புறந்­தள்ளி, மூன்று வரு­டங்­களின் முன்னர் புறக்­க­ணிக்­கப்­பட்ட மஹிந்த அணி­யி­ன­ருக்கு உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் மக்கள் ஆத­ரவு வழங்­கி­யதன் மூலம் நல்­லாட்சி அர­சுக்கு அதிர்ச்சி வைத்­தி­யமே பரி­சாகக் கிடைத்­தது. 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள்

உள்­ளூராட்சித் தேர்தல் முடி­வுகள் ஆட்சி மாற்­றத்தை உரு­வாக்­கு­கின்ற வலி­மையை வெளிப்­ப­டை­யாகக் கொண்­டி­ராத போதிலும், அவைகள் அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கையைத் தகர்த்து, நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்­மையை கேள்­விக்குள்­ளாக்­கி­யி­ருந்­தது. அத்­துடன், உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆணி­வே­ரையே அசைத்­தி­ருக்­கின்­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் காலம் வரையில் இரண்டு பெரும்­பான்மை கட்­சி­களும் இணைந்­தி­ருந்த கூட்டு அர­சாங்­க­மாகக் கரு­தப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான அர­சாங்கம் என்ற யதார்த்­த­மான அர­சியல் பரி­மா­ணத்தை வெளிச்­சத்­திற்குக் கொண்டு வந்­தி­ருந்­தது. அது மட்­டு­மல்­லாமல், நல்­லாட்சி அர­சாங்கம் என்ற கூட்டை உடைத்துக்கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியா? அல்­லது ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியா? யார் புதி­தாக ஆட்சி அமைக்கப் போகின்­றார்கள் என்ற சிக்­க­லான ஒரு நிலை­யை­யும்­கூட இந்தத் தேர்தல் முடி­வுகள் உரு­வாக்­கி­யி­ருந்­தன. 

மக்­களின் ஆத­ரவை அமோ­க­மாகப் பெற்­றி­ருந்த பொது எதி­ர­ணி­யி­ன­ரா­கிய, பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்­த­வர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பதவி நீக்கம் செய்­வ­தற்­காக அவர் மீது நம்­பிக்கையில்லாப் பிரே­ர­ணையை பாராளு­மன்­றத்தில் கொண்டு வரு­வ­தற்­கான சூழ­லையும் இந்தத் தேர்தல் முடி­வுகள் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. 

இந்த நெருக்­க­டி­களில் இருந்து மீள்­வ­தற்­காக கூட்டு அர­சாங்கத்தின் தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கடு­மை­யான உள்­ளகப் போராட்­டத்தில் ஈடு­பட நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். தங்­க­ளுக்குப் பாத­க­மான அர­சியல் நிலை­மையை உரு­வாக்­கிய உள்­ளூராட்சித் தேர்தல் முடி­வு­களின் பின்­ன­ணியில் நலிந்துபோன நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குப் பதி­லாகப் புதிய அர­சாங்­கத்தை அமைப்­பது குறித்து சிந்­தித்து,  நீயா நானா என்ற அர­சியல் போட்­டியில் சிக்கி இரு­வரும் தள்­ளா­டவும் நேர்ந்­தி­ருந்­தது. 

அர­சாங்­கத்தின் மீது மக்கள் நம்­பிக்கை இழந்­தி­ருந்­ததைச் சுட்­டிக்­காட்டி, அர­சாங்­கத்தைக் கலைத்து பொதுத் தேர்­தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ்ஷ கோரி­யி­ருந்தார். தொடர்ந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பத­வியை உட­ன­டி­யாக இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என்று பொது எதி­ர­ணி­யினர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். இதனால் தேர்தல் முடி­வு­களை அடுத்து, பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்து, பொதுத் தேர்தல் இல்­லா­ம­லேயே பொது எதி­ர­ணி­யி­ன­ரா­கிய ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வி­ன­ரிடம் ஆட்­சியைக் கைய­ளிப்­பதா அல்­லது ஆட்டம் கண்­டி­ருந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குப் பதி­லாக புதிய அர­சாங்­கத்தை ஜனா­தி­ப­தியா அல்­லது பிர­த­ம­ரா தனித்து அமைப்­பது என்ற மும்­முனை சிக்கல் நிலை உரு­வாகியி­ருந்­தது. 

இந்த நிலை­மை­யில்தான் திட்­ட­மிட்ட ரீதியில் சிங்கள மக்­களை மல­டாக்­கு­வ­தற்­கான மருந்தை உணவில் கலந்து அம்­பா­றையில் முஸ்லிம் உண­வகம் ஒன்றில் விற்­பனை செய்கின்றார்கள் என்ற அப்­பட்­ட­மான பொய்யைப் பரப்பி, பௌத்த சிங்கள தீவி­ர­வா­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன, மதம் சார்ந்த வன்­முறைத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தார்கள். அம்­பா­றையைத் தொடர்ந்து கண்டி உட்­பட பல்­வேறு இடங்­க­ளி­லும்­கூட இந்த வன்­முறை தாக்­கு­தல்கள் பர­வ­லாக நடத்­தப்­பட்­டி­ருந்­தன. 

அம்­பா­றையில் எவரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கார­ணத்தை வைத்துத் திட்­ட­மிட்ட வகையில் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு கண்டி திகன மற்றும் தெல்­தெ­னி­யவில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு அங்கு தற்­செ­ய­லாக இடம்­பெற்ற ஒரு வாகன விபத்தும் எதிர்­பா­ராத வகையில் பெரும்­பான்மை இனத்­தைச்­சேர்ந்த வாகன சாரதி ஒரு­வரும், முஸ்­லிம்­களும், சம்­பந்­தப்­பட்ட அந்த வாகன விபத்து அந்த சார­தியின் மர­ணத்தில் போய் முடிந்­தமை பௌத்த சிங்­களத் தீவி­ர­வா­தி­க­ளுக்கு கிடைத்­தற்­க­ரிய வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது. அதுவே நல்­லாட்சி அர­சாங்­கத்தை மேலும் நெருக்­க­டிக்குள் பல­வந்­த­மாகப் பிடித்துத் தள்­ளி­விட்­டது. 

சமூக வலைத்­த­ளங்­களைக்

கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்டம் 

அம்­பாறை வன்­மு­றை­களை ஒரு­வாறு சமா­ளித்த போதிலும், கண்டிப் பிர­தேச வன்­மு­றை­களை அவ்­வாறு புறந்­தள்­ளவோ அல்­லது இரு தரப்­பி­ன­ருக்குமிடை­யி­லான சாதா­ரண மோதல்கள் என்று அர­சாங்­கத்­தினால் வகைப்­ப­டுத்திப் புறக்­க­ணிக்­கவோ முடி­யாமல் போய்­விட்­டது. காட்டுத் தீயைப் போலப் பர­விய கண்டி வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்­த­ுவ­தற்கு அவ­ச­ர­கால நிலையைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி ஊர­டங்கு உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாய நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது. 

 

வாக்குறுதிகள்...

யுத்தம் கார­ண­மாக பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­வி­டு­வ­தற்­காக 1978 ஆம் ஆண்டு தற்­கா­லி­க­மாகக் கொண்டு வரப்­பட்ட அவ­ச­ர­கால நிலை மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக நிரந்­த­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­ய­தா­யிற்று. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, 2011 ஆம் ஆண்டு நீக்­கப்­பட்ட அவ­ச­ர­கால நிலையை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாய நிலை­மையை கண்டிப் பிர­தேச வன்­மு­றைகள் உரு­வாக்­கி­விட்­டி­ருந்­தன. 

அவ­ச­ர­கால நிலையை மார்ச் மாதம் 6 ஆம் திகதி பிர­க­ட­னப்­ப­டுத்­திய அர­சாங்கம் அது பத்து நாட்­க­ளுக்கு நடை­மு­றையில் இருக்கும் என அறி­வித்­தி­ருந்­தது. வன்­மு­றைகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, ஜப்­பா­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி நாடு திரும்­பி­யதும் அவ­ச­ர­கால நிலை நீக்­கப்­படும் என்று அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அவ­ச­ர­கால நிலையைத் தொட­ர­விடக்கூடாது என்று சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் சர்­வ­தே­சமும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன.

அத்­துடன் வன்­முறைக் கும்­பல்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்கும், வன்­மு­றை­களைத் தூண்­டி­வி­டு­வ­தற்கும் வாய்ப்­ப­ளித்­தி­ருந்த வைபர், வட்ஸ்அப், முகநூல் போன்ற நவீன தொழில்­நுட்ப தொலைத்தொடர்­பு­களும் துண்­டிக்­கப்­பட்டு இப்­போது மீண்டும் செயற்­பட அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இத்­த­கைய சமூக வலைத்­த­ளங்­களைக் கட்­டுப்­ப­டுத்­தி­யமை கருத்துச் சுதந்­தி­ரத்­துக்கு விடுக்­கப்­பட்ட சவால் என்ற விமர்­ச­ன­மும்­கூட முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆயினும் வன்­மு­றை­களைப் பரப்­பு­வ­தற்கும் அவற்றைத் தூண்­டு­வ­தற்கும் இந்த சமூக வலைத்­தள வச­திகள் வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு வச­தி­யாக அமைந்­து­விட்­டன. 

இவ்­வாறு வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு சமூக வலைத்­த­ளங்கள் அளித்­துள்ள வச­தியை இல்­லாமல் செய்து ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான சட்­ட­மூலம் ஒன்றைத் தயா­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­துள்ளார். இதற்­காக பிராந்­திய நாடு­களின் உத­வியைப் பெறு­வ­தற்­கு­ரிய பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.  

வன்­மு­றை­களைத் தூண்­டி­விட்­ட­துடன், வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில், ஊர­டங்கு உத்­த­ரவின் கீழேயும், அவ­ச­ர­காலச் சட்ட விதி­க­ளுக்கு அமை­வா­கவும் பலர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். ஆரம்­பத்தில் இவ்­வாறு வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கத்தில் ஆட்கள் கைது செய்­யப்­பட்­டதைக் கண்­டித்து, அவர்­களை விடு­தலை செய்ய வேண்டும் என்று கோரி பௌத்த மதத் துற­விகள் உள்­ளிட்ட குழு­வினர் திகன பொலிஸ் நிலை­யத்­திற்கு எதிரில் ஆர்ப்­பாட்டம் நடத்­திய சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருந்­தது. 

பேரி­ன­வா­தி­க­ளுக்கு தண்­டனை விலக்­க­ளிக்கும் போக்கு

பௌத்த சிங்­களத் தேசி­ய­வா­தத்தை அழுங்குப் பிடி­யாகக் கொண்­டுள்ள தேசியவாதி­க­ளான தீவி­ர­வா­தி­களைக் கட்­டுப்­ப­டுத்­த­ுவதை பௌத்த துற­விகள் விரும்­ப­வில்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­ப­டு­கின்ற சட்ட நட­வ­டிக்­கைகள் பௌத்த மதத்­திற்கு எதி­ரா­னவை என்ற அடிப்­படை வாதத்தை அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராக ஆட்­சி­யா­ளர்கள் செயற்­பட முற்­ப­டு­வார்­களா என்­பது சந்­தே­க­மாக உள்­ளது. ஏனெனில் இத்­த­கைய இன மற்றும் மத ரீதி­யான வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக இது­வ­ரையில் எந்த அர­சாங்­கமும் சட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்­த­தில்லை என்­பதே வர­லா­றாகும். இன ­ரீ­தி­யா­கவும், மத ரீதி­யா­கவும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­கின்ற பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு தண்­டனை விலக்­க­ளிப்­ப­தென்­பது இந்த நாட்டின் மரபு ரீதி­யான ஆட்சி முறை­யா­கவே கைக்­கொள்­ளப்­பட்டு வந்­துள்­ளது. எனவே, அந்த மரபை நல்­லாட்சி அர­சாங்கம் மீறிச் செயற்­ப­டுமா என்­பது தெரி­ய­வில்லை. அவ்­வாறு செயற்­படத் துணிந்தால், அது அர­சியல் ரீதி­யான தற்­கொ­லைக்குச் சம­மான நட­வ­டிக்­கை­யா­கவே அமையும் என்ற கருத்தும் நில­வு­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஏற்­க­னவே மனித உரிமை மீறல்­க­ளுக்­காகப் பொறுப்புக்கூற வேண்­டிய கட்­டா­யத்­திற்கும் கடப்­பாட்­டிற்கும் உள்­ளா­கி­யி­ருக்­கின்ற அர­சாங்கம் இப்­போது அம்­பாறை மற்றும் கண்டி வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்கு பொறுப்பு கூறவும், அந்த வன்­மு­றை­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கும் ஆளா­கி­யி­ருக்­கின்­றது. 

உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­வ­தற்­காக நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்டும் வகையில் நான்கு பொறி­மு­றை­களை அமைத்துச் செயற்­படப் போவ­தாக அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்­றது. ஆயினும் அதனை அர­சாங்கம் உட­ன­டி­யாக நிறை­வேற்­ற­வில்லை. இதனை நிறை­வேற்­று­வ­தற்­காகக் கடை­சி­யாக இரண்டு வருட கால அவ­கா­சத்­தையும் அர­சாங்கம் கேட்டுப் பெற்­றி­ருந்­தது. 

இந்த கால அவ­கா­சத்தில் ஒரு வருடம் ஓடி மறைந்­து­விட்­டது. ஆனால், காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை உரு­வாக்கும் நட­வ­டிக்­கையும், அதற்கு சட்ட வலுவை வழங்­கு­வ­தற்­கான சட்­டமும் மட்­டுமே நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனைய மூன்று பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் அர­சாங்கம் அக்­க­றை­யற்ற போக்­கி­லேயே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. 

எனவே, நீதியை நிலை­நாட்­டு­வதில் அச­மந்தப் போக்கைக் கொண்­டுள்ள அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களில் நீதி வழு­வாமல் நடந்து கொள்­ளுமா என்­பதும் சந்­தே­கமே. ஏனெனில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்பில் என்ன வகை­யி­லான சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது தொடர்பில் இது­வ­ரையில் அர­சாங்கம் அதி­கா­ர­பூர்­வ­மாக தக­வல்கள் எத­னையும் வெளி­யி­ட­வில்லை. கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றதா அல்­லது வழக்கு தாக்கல் செய்­யப்­ப­டுமா என்­பதும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 

ஆனால், கைது செய்­யப்­பட்ட முக்­கிய நபர்கள் அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் விசா­ரணை செய்­யப்­ப­டு­வ­தாக தெரிவிக்கப்­பட்­டி­ருக்­கின்­றது, இத்­த­கைய விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக முடி­வுக்கு வரு­வ­தில்லை என்­பதும், அந்த விசா­ர­ணை­களின் கீழ் துரி­த­மாக வழக்கு தாக்கல் செய்­யப்­ப­டு­வ­து­மில்லை என்­ப­தும்­கூட இந்த நாட்டில் வர­லாற்று அனு­ப­வ­மாக அமைந்­துள்­ளது. 

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்­டி­ருந்­தார்கள் என்றும், விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­புக்கு உத­வி­னார்கள், அந்த அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட தமிழ் இளைஞர், யுவ­திகள் நீண்ட கால­மாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­மையும், தாம­த­மா­கவே அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­ட­மையும், அந்த வழக்­கு­க­ளும்­கூட நீண்ட காலத்­திற்கு இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தையும் நாடே அறியும். சர்­வ­தே­சமும் அறியும். 

ஆனால், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­வர்கள் பௌத்த சிங்­கள தேசி­ய­வா­தி­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கின்­றனர். இவர்­க­ளுக்­கென அர­சுகள் கடைப்­பி­டித்து வரு­கின்ற தண்டனை விலக்களிக்கும் போக்கில் இந்த அரசாங்கம் மாற்றத்தைக் கடைப்பிடிக்குமா என்பது தெரியவில்லை. பௌத்த சிங்களத் தேசியவாதிகளுக்கான தண்டனை விலக்களிக்கின்ற போக்கானது, ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் இருப்புடன் நேரடியாகத் தொடர்புடைய அரசியல் விவகாரமாக இருப்பதனால், அதில் மாற்றம் ஏற்படும் என்று நம்புவதற்கில்லை.

ஆனால், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பொறுப்பு கூறுதலுக்கான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள அரசாங்கம், பொறுப்பு கூறுகின்ற தனது கடப்பாட்டைச் சரியான முறையில் நிறைவேற்றவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் மாற்று வழிகளைக் கையாள்வதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கருத்து வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. 

பொறுப்பு கூறும் விடயங்களில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுவது குறித்து ஐ.நா.வும் சர்வதேச தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ள பின்புலத்தில், இலங்கை விவகாரம் விவாதிக்கப்படுகின்ற மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுகின்ற தருணத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், வலிதான தூண்டுதல் காரணங்கள் எதுவுமற்ற நிலையில் அம்பாறையிலும், கண்டிப் பிரதேசத்திலும் ஆரம்பமாகி பரவலாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்த வன்முறைகள் இலங்கை மீது சர்வதேசத்தின் பார்வையை ஆழமாகத் திருப்பியிருக்கின்றது. அத்துடன் இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகள், இன மத ஐக்கியத்துக்கான அணுகுமுறைகள், மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துகின்ற நடவடிக்கைகள் என்பனவற்றில் சர்வதேசத்தை முகம் சுழிக்கச் செய்திருக்கின்றது. 

இந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நல்லாட்சி அரசாங்கம் உள்ளூரில் சிறுபான்மையினருடைய அதிருப்தி காரணமான அழுத்தங்களுக்கும் சர்வதேச தரப்புக்களில் இருந்து எழக்கூடிய நெருக்கடிகளுக்கும் இப்போது முகம் கொடுத்திருக்கின்றது. 

இந்த நெருக்கடிகளை சரியான, துரிதமான மாற்று நடவடிக்கைகளின் மூலம் மாத்திரமே வெற்றிகொள்ள முடியும். அத்தகைய நடவடிக்கைகளை உள்ளக அரசியல் முரண்பாடுகளில் சிக்கியுள்ள அரசாங்கம் முன்னெடுக்குமா, எவ்வாறு முன்னெடுக்கப் போகின்றது என்பது தெரியவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.