Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவசகாயம் தலைமையிலான ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயச் செயற்பாடு மீது UK Charity Commission சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவசகாயம் தலைமையிலான ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயச் செயற்பாடு மீது UK Charity Commission சந்தேகம்

எஸ் கருணலிங்கம் தலைமையிலான செயற்குழுவை கலைப்பதற்கு ஆலயத்தின் அறக்கட்டளையினருக்கு அந்த அதிகாரம் இருப்பது பற்றி தமக்கு தொடர்ந்தும் சந்தேகம் இருப்பதாக Charity Commission,UK தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக Charity Commission,UK கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளைக்கு மார்ச் 13ல் எழுதியுள்ள கடிதத்தில் செயற்குழுவை கலைப்பதற்கான தகுந்த காரணங்கள் எதனையும் அறக்கட்டளையினர் வழங்கவில்லை என அம்மடலில் தெரிவித்து உள்ளது.

லண்டனில் உள்ள கூடிய வருமானம் உடைய ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயகத்தில் பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டு வந்தது. மாணவர்களுக்கு இலவச கணணி வகுப்புக்களை தமிழ் மாவட்டங்களில் எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தது. தொழில்பயிற்சி நிலையங்கள் ஆலயத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பல சிறுவர் இல்லங்களையும் ஈலிங் ஆலயம் பராமரித்து வந்தது.

மேலும் ஆலய மண்டபம் கலை, இலக்கிய நிகழ்வுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு லண்டன் தமிழர்களுக்கும் ஆலயம் தனது கரங்களை நீட்டியது. தேவசகாயத்தின் தலைமையிலான ஆலய அறக்கட்டளையினருக்கும் கருணலிங்கத்தின் தலைமையிலான செயற்குழுவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு தேவசகாயம் தலைமையிலான அறக்கட்டளை அடியார்களால் தெரிவு செய்யப்பட்ட கருணலிங்கம் தலைமையிலான செயற்குழுவை கலைத்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம், மத்தியஸ்தம் என ஆலய நிர்வாகம் இழுபறிப்பட்டது.

இந்நிலையில் தேவசகாயம் தலைமையிலான அறக்கட்டளை, தாயகத்தில் ஆலயத்தின் ஆதரவில் இயங்கிய சில கணணிப் பயிற்சி நிலையங்கள், தொழில் பயிற்சி நிலையங்கள், சிறுவர் இல்லங்களுக்கான நிதியை நிறுத்தினர். அதிகார இழுபறியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாரி வழங்கிய நிதி ஆலயத்தின் வங்கிக் கணக்கில் முடங்கிக் கிடந்தது. ஆலயத்தின் ஆதரவில் பராமரிக்கப்பட்ட சிறுவர்கள் கைவிடப்பட்டனர். இப்போது அறக்கட்டளை நடந்து கொண்ட விதம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக Charity Commission,UK அறிவித்து உள்ளது. மேலும் ஏப்ரலில் Anual General Meeting - AGM யை கூட்டி செயற்குழுவிற்கான விண்ணப்பங்களைக் கோருமாறு Charity Comission,UK அறக்கட்டளையினருக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஆலய உறுப்பினர்களின் உறுப்புரிமை இன்னமும் பிரச்சினையாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள செயரிற்றி கொமிசன் சம்மந்தப்பட்ட சகல தரப்பினரும் இதில் ஈடுபட்டு சுமூகமாக அதனை Electoral Reform Srevices இன் உதவியுடன் தீர்க்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

இக்கடிதத்துடன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய இழபறி தீர்ந்துவிடும் என்று சம்பந்தப்பட்ட யாரும் நம்பவில்லை. இதில் சட்டத்தரணிகள், சட்ட ஆலோசனை, நீதிமன்றம் என்று பல்லாயிரம் பவுண்கள் ஏற்கனவே விரயமாகி உள்ளது. இந்த இழுபறியின் தொடர்ச்சி சட்டத்தரணிகளின் வங்கிக் கணக்குகளை நிரப்புமே அன்றி கைவிடப்பட்ட குழந்தைகளின் வயிற்றை நிரப்பாது என அம்பாள் அடியவர் கனகசுந்தரம் சலித்துக் கொண்டார்.

http://www.sooriyan.com/index.php?option=c...115&Itemid=

கோயில் என்றால் கள்ளர் எல்லாம் வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு வந்திடுவினம் நோர்வே ஒஸ்லோவில் உள்ள கோயிலிலும் ஒரு கள்ளன் தேர்தல் நடந்து தோற்றாப்பிறகு பதவியை விட்டுக்கொடுத்து போகமாட்டன் என்று எங்கோயோ எல்லாம் கடிதம் எழுதி கோயிலை நாற்றி அடித்துக்கொண்டு திரிகிறான்.......

இவ்வளாத்துக்கும் அவர் வேலை செய்வது இல்லை அனா எத்தனையோ மில்லியன் குரோனர்கள் பெறுமதியான தனிவீடு வைத்திருக்கிறார்.

அவர் பெயர் ****** வில் இருக்கிறார். கோயிலில் தேர்தலுக்கு முன்பு செயலாளராக இருந்தவராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உழைக்காமல் சம்பாதிக்க நல்ல வழி கோயில், உவன் உண்டியள் கள்ளன் ஜெயதேவனும் உதுக்குதானே மாட்டுப்பட்டவன். :angry: :angry:

உழைக்காமல் சம்பாதிக்க நல்ல வழி கோயில், உவன் உண்டியள் கள்ளன் ஜெயதேவனும் உதுக்குதானே மாட்டுப்பட்டவன். :angry: :angry:

அப்ப நாங்களும் டைகர் பமிலி சார்பாக ஒரு கோயில் கட்டுவோமா பட் என்ன கோயில் கட்டுறது

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

காசைக் கண்டாலே மனம் பேயாய் அலைகிறது.

பக்தர்களும் கடவுளுக்கு நேந்து வைத்து பணத்தை அள்ளி அள்ளி தெளிக்கிறார்கள்.

இந்த பணத்தை எல்லாம் பங்களிப்புக்கு கொடுக்கலாம் எண்டால் மாட்டாங்களாம்.

நான் மட்டும் வாழ அர்ச்சனைகள் ஆராதனைகள்.

உந்தக் கனக துர்க்கை அம்மன் ஆலய தர்போதைய அறங்காவலர் குழு என்ற கள்ளர் கூட்டத்தில், உண்டியலானுக்கு சில தொடர்புகள் இருக்கின்றனவாம்! மிஸ்ஸோ மிஸ்ஸிஸ் இரா**** எனும் ஒரு சொலிஸிட்டர் என்பவ ஒரு பக்கத்தாலை சிலோன் எம்மஸியோடு சேர்ந்து விளையாட்டாம்!!

முன்பு ஈழத்தில் பல சிறுவர் இல்லங்களுக்கு, வயோதிபர் இல்லங்களுக்கு, இலவச கணனி பயிற்சி நிலையங்களுக்கு என்று மாதாந்தம் பல ஆயிரக்கணக்கான பவுன்ஸுகளை அனுப்பி வந்த ஆலயம், இன்று பலதை, மர்மப் பேர்வழிகளின் ஊடுருவலால் நிறுத்தியுள்ளது! குறிப்பாக மட்டு, அம்மாறை மாவட்டங்களிலேயே முன்னைய சமூகப் பணிகள் பெருமளவு நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது!!

ஜெயதேவன் மாட்டுப்பட்டான் அவனுக்கு எங்கேயோ ஒரு கடிவாளம் இருந்தது அனா மற்ற கோயில் உண்டியல் காரரை என்ன செய்வது. யார் தட்டி கேட்பது.

தங்கடை பைக்குள்ள போட்டுக் கொண்டு போக பாக்கினம். இதை கேட்க போனா புலி பூனை எண்டு ஊளை இடுகிறார்கள்.

இனி பொறுக்கேலாது ஊளை இடட்டும் எல்லா கோயில்களையும் கண்காணிக்க வேண்டும்

பிரான்ஸிலுள்ள பக்த கேடிகள் மட்டும் சளைத்தவர்களா என்ன. இங்குள்ள பல கோயில்கள் வருமானத்திற்காக தனிப்பட்டவர்களினால் நடத்தப்படுகிறது. யாரும் கேள்வி கேட்ட முடியாது.

அப்ப நாங்களும் டைகர் பமிலி சார்பாக ஒரு கோயில் கட்டுவோமா பட் என்ன கோயில் கட்டுறது

:lol:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

ஏன் இப்படி கோபம் அப்ப தான் நாளைக்கு எங்கன்ட பெயரும் டீவீயில வரும்

;)

இந்த நிலமைக்கு புலத்தின் வாழும் தமிழ் மக்கள் தானே காரணம்.

ஒரு சமூகம் சார்ந்த ஏதாவது விடயத்துக்குப் பணம் செர்க்கப் பொனால் சில்லறைகளைத் தருவதற்குச் சிந்திப்பவர்கள் கோயில் என்றதும் வாரி வழங்ககின்றனர். கடவுள் மீதான 'பயம்' தான் இதற்குக் காரணம்.

எல்லாப் பணத்தையும் சுவாமிக்குக் கொடுத்து விட்டதாக மனநிறைவு அடைகின்றனர்.

அந்தப் பணம் யார் யாரால் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்று சிந்திப்பது இல்லை.

மக்களெல்லாம் அஞ்சி நடங்குகின்ற அளவிற்குக் கடவுள் ஒன்றும் கெட்டவர் அல்ல. அவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

சேர வேண்டிய இடங்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யுங்கள். அதை விட்டு விட்டு கொயிலுக்கு நான வந்திருக்கிறேன். என்பதை மூன்றாவது மனுசனை வைத்து காசு கொடுத்துச் சொல்லுவிக்கத் தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.