Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஸ்கெலியாவில் ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவானார்.! (படங்கள் இணைப்பு)

Featured Replies

மஸ்கெலியாவில் ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவானார்.! (படங்கள் இணைப்பு)

 

 
 

02.jpg

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆளுனர் யூ.என்.பீ ஹேரத் தலைமையில் இன்று ஆரம்பமானது. 

DSC04699.jpg

இதன்போது, அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகைதராமையின் காரணத்தால் கறுப்பு பட்டி அணிந்து தனது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். இந்நிலையில், அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

DSC04710.jpg

இதனைமையப்படுத்தி ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

DSC04711.jpg

இந்த வாக்கெடுப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உறுப்பினர் செம்பகவள்ளி தலைவராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

DSC04720.jpg

அதனை தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டுள்ளனர்.

DSC04728.jpg

இந்நிலையில் இருசாராருக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின் அது கல்வீச்சாக மாறியுள்ளது. இக்கல்வீச்சில் சிலர் சிறு காயங்களுக்கு உள்ளானதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

DSC04731.jpg

இந்த கல்வீச்சி காரணமாக பொதுபோக்குவரத்து தடைப்பட்டதுடன் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

DSC04741.jpg

இந்த கல்வீச்சு சம்பவங்களுடன் இரு கட்சிகளினதும் அரசியல் பிரதிநிதிகளும் ஈடுபட்டதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

DSC04745.jpg

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான உறுப்பினர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

DSC04748.jpg

இது குறித்து மஸகெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

DSC04779.jpg

DSC04798.jpg

DSC04822.jpg

DSC04824.jpg

DSC04840.jpg

DSC04858.jpg

DSC04831.jpg

DSC04827.jpg

http://www.virakesari.lk/article/32015

  • தொடங்கியவர்

இ.தொ.கா. த.மு.கூட்­டணி ஆத­ர­வா­ள­ரி­டையே மோதல்

01-109fa3e1d7572fa3d51ae0d12334457fd1f0c27c.jpg

 

கல்­வீச்­சுத்­தாக்­குதல், குழப்­பத்­துக்கு மத்­தியில் செண்­ப­க­வள்ளி தலை­வ­ரானார்

(மஸ்­கெ­லியா , அட்டன் நிரு­பர்கள்)

மஸ்­கெ­லியா பிர­தேச சபைக்­கான பதவி நிலை­களை தெரிவு செய்யும் பொருட்டு நேற்று புதன்­கி­ழமை பிர­தேச சபை கூடிய போது இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் தொழி­லாளர் தேசிய சங்கம் ஆகிய இரு ­த­ரப்பு ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கி­டையில் பெரும் கல­வரம் மூண்­ட­துடன் அது கைக­லப்­பா­கவும் மாறி­யது.  

அத்­துடன் இந்த கைக­லப்­பின்­போது கல்­வீச்­சுத்­தாக்­குதல் இடம்­பெற்­றதில் ஒருவர் காய­ம­டைந்­துள்ளார். இரு­ த­ரப்­பி­லி­ருந்தும் கல்­வீச்­சுத்­தாக்­கு­தல் கள் சர­மா­ரி­யாக இடம்­பெற்­றி­ருந்­தன. இதனால் மஸ்­கெ­லியா பிர­தேசம் நேற்று பெரும் அல்­லோ­ல­கல்­லோ­லப்­பட்­டி­ருந்­தது. பிர­தே­சத்தில் போக்­கு­வ­ரத்து முற்­றாக தடைப்­பட்­டி­ருந்த அதே­வேளை கலகம் அடக்கும் பிரி­வி­ன­ருடன் பெருந்­தொ­கை­யான பொலிஸார் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். பிர­தேச சபை வளா­கத்­துக்கு வெ ளியே வீதியில் இந்த கைக­லப்பு ஏற்­பட்­ட­துடன் கல்­வீச்சு தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.  

மஸ்­கெ­லியா பிர­தேச சபை நட­வ­டிக்­கைகள் நேற்று ஆரம்­பிக்­கப்­பட்ட போது ஐக்­கிய தேசிய கட்­சி­யைச்­சேர்ந்த உறுப்­பினர் ஒருவர் சபைக்கு சமூகம் தராத கார­ணத்­தினால் ஏனையோர் குழப்­பத்தில் ஈடு­பட்­டனர். அத்­துடன் சபைக்குள் பெரும் போராட்­டத்­தையும் நடத்­தி­யி­ருந்­தனர். இத­னைத்­தொ­டர்ந்தே ஐக்­கிய தேசிய கட்­சியில் போட்­டி­யிட்டு தெரி­வா­கிய தமிழ் முற்­போக்குக் கூட்­டணி உறுப்­பி­னர்­க­ளுக்கும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் உறுப்­பி­னர்­க­ளுக்­கு­ம­டையில் வாய்த்­தர்க்­கமும் கல­வ­ரமும் மூண்­டி­ருந்­தது.

இந்த கல­வ­ரங்­க­ளுக்கு மத்­தியில் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் உறுப்­பினர் ஜி.செண்­ப­க­வள்ளி மஸ்­கெ­லியா பிர­தேச சபையின் தலை­வ­ரா­கவும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யைச்­சேர்ந்த பெரி­ய­சாமி பிர­தீபன் உப­த­லை­வ­ரா­கவும் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட்ட தமிழ் முற­போக்­குக்­கூட்­டணி பங்­கேற்­காத அமர்­வி­லேயே இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பங்­கேற்­புடன் தலைவர் மற்றும் உப­த­லைவர் பதவி நிலை­க­ளுக்கு உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர்.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள மஸ்­கெ­லியா பிர­தேச சபையின் முத­லா­வது கூட்­டமே நேற்று காலை 10.30 மணிக்கு மத்­திய மாகாண உள்­ளூ­ராட்சி விஷேட ஆணை­யாளர் யூ.எம்.பி. ஹேரத் தலை­மையில் ஆரம்­ப­மாக இருந்­தது. எனினும், ஐ.தே.க. வின் பட்­டியல் உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கே.எல்.ஏ. ரஞ்­சனி சபைக்கு சமூகம் தர­வில்லை. அவர் சபைக்கு சமூ­க­ம­ளிக்­கா­ததால் அவரை நேற்று முன்­தினம் யாரா­வது கடத்திச் சென்று விட்­டார்­களா அல்­லது அவர் தலை­ம­றை­வாகி விட்­டாரா என்று அவர் சார்ந்த உறுப்­பி­னர்கள் கூச்­ச­லிட்­டனர்.

அத்­தோடு நேற்று பிர­தேச சபையின் கூட்டம் நடத்­தப்­பட்ட தனியார் கட்­டி­ட­மான அம்பாள் மண்­ட­பத்தின் அருகே பொது மக்கள் கூடி­நின்று அவரை கண்டு பிடித்துத் தர வேண்டும் என்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். இதனால் பாது­காப்­புக்­காக மண்­டப வளா­கத்தைச் சுற்றி பெரு­ம­ளவு பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தார்கள். இது தொடர்பில் மஸ்­கெ­லியா பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடும் செய்­யப்­ப­ட­டி­ருந்­தது.

அது மட்­டு­மன்றி ஐ.தே.க. வில் தெரி­வான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியைச் சேர்ந்த 7 உறுப்­பி­னர்­களும் கறுப்புப் பட்டி அணிந்து சபை நட­வ­டிக்­கைக்­காக வந்­த­துடன் காணாமல் போன தமது உறுப்­பி­னரை கண்­டு­பி­டித்துத் தரு­மாறு ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

இதே­வேளை காணாமல் போன­தாக அல்­லது கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்ற உறுப்­பினர் தொடர்பில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யு­மாறும், முறைப்­பாட்டு கடிதம் ஒன்றை எழுதித் தரு­மாறும் ஆணை­யாளர் கேட்டுக் கொண்டார்.

இருந்­த­போ­திலும் ஆணை­யா­ளரின் கருத்­தினை உள்­வாங்­காது தாங்கள் சபை நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொள்ள போவ­தில்லை என்று தமிழ் முற்­போக்கு கூட்­டணி உறுப்­பி­னர்கள் கூச்­ச­லிட்டு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டார்கள்.

மேசை மீது ஏறி­நின்று கூச்சல் இதே­வேளை சபைக்குள் ஆர்ப்­பாட்டம் நடத்­திய தரப்­பினர் மேசைக்கு மேல் ஏறி­நின்று கூச்­ச­லிட்டு குழப்பம் விளை­வித்த அதே­வேளை ஆணை­யா­ள­ருடன் தர்க்­கத்­திலும் ஈடு­பட்­டி­ருந்­தனர். இதனால் நிலைமை வெகு­வாக மோச­ம­டைந்­தி­ருந்­தது.  

இதனால், கூட்­டத்தை நடத்த முடி­யாமல் ஆணை­யாளர் சிர­மத்தை எதிர்­நோக்­கி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்தே குழப்­பத்தைக் கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

அதே­நேரம், ஐ.தே.க..உறுப்­பி­னர்­களை ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு ஆணை­யாளர் கேட்டுக் கொண்டார். அவர்கள் அதற்கு இணங்­காத கார­ணத்தால் தெரிவு செய்­யப்­பட்ட 16 உறு­பி­னர்­களில் இ.தொ.கா. சார்பில் 8 உறுப்­பி­னர்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வதால் தலைவர், உப­த­லைவர் தெரிவு நடத்த முடியும் என்­பதால் தாம் தொடர்ந்து கூட்­டத்தை நடத்தப் போவ­தா­கவும் ஆணை­யாளர் கூறினார்.

 அதற்­க­மைய இ.தொ.கா. உறுப்­பி­னர்கள் 7 பேர் மற்றும் அவர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கிய ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன உறுப்­பினர் எஸ்.ஏ. திஸா­நா­யக்க ஆகிய 8 உறுப்­பி­னர்­க­ளோடு கூட்­டத்தை நடத்­திய போது, இ.தொ.கா. வைச் சேர்ந்த ஜீ. செண்­ப­க­வள்ளி தலை­வ­ரா­கவும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த பெரி­ய­சாமி பிர­தீபன் உப­த­லை­வ­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்­ட­துடன் கூட்டம் முடி­வ­டைந்­தது.

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் மஸ்­கெ­லியா பிர­தேச சபையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐ.தே.க.வோடு சேர்ந்து போட்­டி­யிட்­டது. இதில் 6 உறுப்­பி­னர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­பட்­டார்கள். பட்­டியல் உறுப்­பி­ன­ராக மேலே குறிப்­பி­டப்­பட்ட ரஞ்­சனி என்ற பெண்­மணி தெரி­வா­கி­யி­ருந்தார். ஐ.தே.க. வுக்கு ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்­பினர் கந்­தையா யோகேந்­திரன் ஆத­ரவு வழங்­கி­யதால் அதன் பலம் 8 ஆகக் காணப்­பட்­டது.

அதேபோல்,இ.தொ.கா. வும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் சேர்ந்து போட்­டி­யிட்டு 4 உறுப்­பி­னர்­களைப் பெற்­றி­ருந்­தன. பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளாக 3 பேர் தெரி­வா­கி­யி­ருந்­தார்கள். மொத்­த­மாக 7 உறுப்­பி­னர்­களைப் பெற்­றி­ருந்த இ.தொ.கா. வுக்கு பொது­ஜன பெர­முன உறுப்­பினர் திசா­நா­யக்க ஆத­ரவு கொடுத்­ததால் அதன் பலமும் 8 ஆக இருந்­தது. சம­மான உறுப்­பி­னர்கள் பலம் இருந்த கார­ணத்தால் குலுக்கல் முறையில் தலைவர், உப­த­லைவர் தெரிவு இடம் பெறலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும், ஐ.தே.க. உறுப்­பினர் ரஞ்­சனி சமூ­க­ம­ளிக்­காத கார­ணத்தால், ஐ.தே.க. உறுப்­பி­னர்­களின் பங்கு பற்றல் இல்­லாத நிலையில் தலைவர், உப­த­லைவர் தெரிவு இடம்­பெற்­றுள்­ளது.

கைக­லப்பும் கல­வ­ரமும்

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் வசம் சபையின் தலை­மைப்­பொ­றுப்பு வந்­த­தை­ய­டுத்து அதன் ஆத­ர­வா­ளர்கள் தமது வெற்றியைக்கொண்டாடுவதற்கு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். இதன்போது அங்கு மீது கல்வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனாலேயே அங்கு பெரும் கலவரம் மூண்டுள்ளது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தரப்பினரும் தமிழ் முற்போக்குக்கூட்டணி தரப்பினரும் கைகலப்பு, அடிதடியில் ஈடுபட்டனர்.

இதனால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் உடனடியாக ஸ்தலத்துக்க வரகைத்தந்த விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் கலகம் அடக்கும் பிரிவினரும் குழப்ப நிலையை சுமுகமாக்குவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகையயடுத்து குழப்பநிலை முடிவுக்கு வந்தது. எனினும் நேற்று மாலை வரை பதற்ற நிலை தணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.