Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுக்குழு ஈபிடிபியால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தமிழரசு கட்சி விடை தருமா?

Featured Replies

சிறிலங்காவில் பொறுத்த வரையில் 2004 – 2010 வரையிலான காலப்பகுதியில் 44 ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர் என இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறுகிறது.

வட தமிழீழத்தில் அரசாங்கத்தின் அனுசரணையோடு, ஒட்டுக்குழு ஈபிடிபியால் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உயிர் பட்டப்பகலில் பறிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் நீதியை நாடமுடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். 30இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.

வட தமிழீழம் , யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று ஒட்டுக்குழு ஈபிடிபியால் கடத்தப்பட்டு காணாமல்போனார்.

ஒட்டுக்குழு ஈபிடிபியால் இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் அவரது வருகைக்காக அவரது வயதான பெற்றோரும் குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர்.

ஏதேனும் பிரச்சினை மீது அச்சமின்றி எழுதக்கூடிய துணிவுமிக்க ஊடகவியலாளர் ஒருவராக அவரது சகபாடிகளும், குடும்பத்தினரும் அவரை நினைவுகூருகின்றனர். யுத்தத்தின்போது இராணுவத்தினராலும், வேறு சிறிலங்கா அரச ஒட்டுக்குழு ஈபிடிப்பியால் இழைக்கப்படும் துஷ்பிரயோகத்தினதும், உரிமை மீறல்களினதும் மீது அறிக்கையிடுவதைத் தொடர்ந்த வட தமிழீழம் ,யாழ்ப்பாணத்தில் தளத்தைக் கொண்ட ஒரு சில ஊடகவியலாளர்களில் அவரும் ஒருவராவார்.

ஒரு நாள் ராமச்சந்திரன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இன்றுவரை அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். ராமச்சந்திரன் என்றாவது வீட்டுக்கு மீளத்திரும்பி வருவாரா? அவர் காணாமல்போன பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று? இன்று சிறிலங்கா அரச ஒட்டுக்குழு ஈபிடிபியுடன் கரம் கோர்த்திருக்கும் தமிழரசு கட்சி விடை தருமா?

http://www.thaarakam.com/முக்கிய-செய்திகள்/ஒட்டுக்குழு-ஈபிடிபியால்/

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ ஆயிரம் தமிழ் அம்மாமாரின் கண்ணீருக்கு காரணமான ஈபிடிபி உட்பட்ட ஒட்டுக்குழுக்களோடு கூட்டு வைச்சு... சம்சும்மாவை கும்பல் செய்யும் அராஜக அரசியல் என்பது.. தமிழரசுக் கட்சியின் சர்வாதிகார மிச்சமே அன்றி.. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற போர்க்கால அரசியல் கட்சியின் தோற்றமில்லை.

ஈபிடிபி கொலைகாரக் கும்பலின் தலைவன் இப்ப மனித உரிமை கதைக்கிறார்.. எங்களில் சிலர் அவருக்கு பாவமன்னிப்பும் கொடுக்கத் தயாராக இருக்கினம். ஆனால்.. சொந்த பந்தங்களின் உயிர்களை இந்த ஒட்டுக்குழுவின் பணத்தாசை காட்டிக்கொடுப்புக்கு நரபலி இடலுக்கு தாரைவார்த்த மக்களுக்கு நீதி என்பது சாகடிக்கப்பட்டதாகக் கூடாது.

எனவே ஒட்டுக்குழுக்களுக்கு சம்சும் மாவை கும்பல்.. வெள்ளையடிச்சு சனநாயக சாயம் பூசுவதை தமது சுயநலத்தை முன்னிறுத்திச் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த மக்கள் இவர்களை எல்லா வகையிலும் வற்புறுத்த வேண்டும். அதற்கான அழுத்தங்கள் மக்களிடம் இருந்து இவர்களை நோக்கிப் போகவும் வேண்டும்.

ஒரு சில ஒட்டுக்குழு வால்பிடிகள் ஊருக்கு நாலு வாக்குப் போடுவதால்.. ஒட்டுக்குழு சனநாயக வேடம் போட முடியாது.. என்பதற்கு இந்த மக்களின் கண்ணீர் சாட்சி. tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.