Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது

Featured Replies

ரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது

 

Suresh-Premachandran-300x200.jpgநம்பிக்கையில்லா பிரேரணை விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியான ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான பேரத்தில் இறங்கியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, சிறிலங்கா பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமது முடிவு அமைந்திருக்கும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்களால்,  காணிகள் அபகரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளும் இவ்வாறாக அபகரிக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும். சில தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பான சிறிலங்கா பிரதமரின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எவ்வுக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனம் மாத்திரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/04/02/news/30157

ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர்கள் இன்று பிரதமருடன் சந்திப்பு

11-7c24ab88fa2e3235270a5c57bd3dc46d3552a36e.jpg

 

(வவுனியா நிருபர்)

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியைச் சேர்ந்த பிரமுகர் களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சந்திக்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக அரசுக்கு  நெருக்கடிகள் எழுந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பில் இன்று திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தச் சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அரசாங்கத்திற்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கும் இடையில் நடைபெறுகின்ற இந்த முதலாவது சந்திப்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து, ஈ.பி.ஆர்.எல்.எவ். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. 

தமிழரசுக் கட்சிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கும் இடையில் நிலவிய முரண்பாடான நிலைப்பாடுகளையடுத்து, பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற அமர்வுகளில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் தொடர்ச்சியாக மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. 

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.