Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இயற்கை மருத்துவம்

Featured Replies

இயற்கை மருத்துவம்-மஞ்சள்

தமிழ் உணவிலேயே மிக முக்கியமாக சேர்க்கப்படும் −ம்மஞ்சள், சமையல் பொருளாகவும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது.

நோய் பரவாமல் தடுக்கும் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள் உலகிலே இலங்கையில் மிக அதிகமாக வளர்கிறது

f_1m_f43dc22.jpg

வகைகள்/பயன்கள்

மூன்று வகை

முதல் வகை

முகத்திற்கு போடும் மஞ்சள். −தற்கு முட்டா மஞ்சள் என்று பெயர். உருண்டையாக −ருக்கும்.

பயன்

முகத்திற்கு பூசும் மஞ்சள், முகத்தில் முடி வளர்வதை தடுக்கிறது.

முகத்திற்கு ஒருவித மினுமினுப்பை வசீகரத்தைத் தருகிறது.

மஞ்சளை அரைத்து −ரவில் பூசி காலையில் கழுவ தேவையில்லாத முடி நீங்கும்.

−ரண்டாவது வகை

கஸ்தூரி மஞ்சள் வில்லை, வில்லையாக தட்டையாக −ருக்கும்.

பயன்

வாசனை மிகுந்தது. வாசனை பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் −தைச் சேர்த்து வருகிறார்கள்.

மூன்றாவது வகை

நீட்ட நீட்டமாக −ருக்கும் விரல் மஞ்சள் என்று பெயர்.

பயன்

−துதான் சமையலறையின் முதற்பொருள்.

−ம்மஞ்சளுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியும், மருத்துவ குணமும் அதிகம்.

வாசற்படிகளில், பூசுவதற்கும், வீடு முழுவதும் கரைத்துத் தெளிப்பதற்கும் −ந்த மஞ்சளில் கிருமிநாசினிப் பொருட்கள் −ருப்பதும் காரணம்.

மருத்துவ குணங்கள்

பசி உண்டாக்கி/உடல் வெப்ப அகற்றி/நோய் தணித்தல்/குடல் வாயு அகற்றல்/சரீர தாது அழுகலை தவிர்க்கும்/நாடி நடையை மிகுத்து உடலுக்கு வெப்பம் தரும்/தாது பலம் கொடுக்கும்/வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்/கிருமிகளை அழிக்கும்/உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும்/உடலின் விஷப் பொருளை வெளியேற்றும்.

சில எளிய வைத்தியங்கள்

* அம்மை, புட்டாலம்மை, கொப்புளங்கள், புண்கள்

மஞ்சளையும் வேப்ப −லையையும் அரைத்து உடலுக்கு தேய்த்து தலைக்கு நீராட்ட குணமாகும்.

−ந்நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

மதுமேகம்

நெல்லிக்காய் ஐந்தை நிரிலிட்டு காய்ச்சி பின் காய்ச்சிய நிரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி கலந்து காலை, மாலை சாப்பிட விரைவில் குணமாகும்.

வறட்டு −ருமல்

1 டம்ளர் பாலில் 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து காலை, மாலை அருந்த குணமாகும்.

மஞ்சளை சுட்டு அதன் புகையை முகரத் தலைவலி, நீர்கோவை, மண்டை நீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் தீரும். மேலும் மூச்சு அடைத்து மயங்கி விழுந்தவர்களுக்கு −ப்புகையை மூக்கில் காட்ட தெளிவு ஏற்படும்.

வேனில் கட்டி, விரல் சுற்றி, அடிபட்ட வீக்கம், மஞ்சளை அரைத்து சூடாக்கி பற்றுபோட்டால் குணமாகும்.

நன்றி: மருத்துவம்

Edited by வானவில்

மஞ்சளிள இவ்வளவு விளையாட்டு இருக்கிறதா நன்றி வானவில்

:(

  • தொடங்கியவர்

வல்லாரை

முளைச் சோர்வைப் போக்கி, ஞாபக சக்தியை அதிகரிப்பதில் வல்லாரைக்கு நிகரான வேறு மருந்து கிடையாது.

அதனால்தான் சித்தர்கள் வல்லாரையே சரஸ்வதி என்றே பெயரிட்டு அழைத்தார்கள்.

−ந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவின் பல பகுதிகளிலும் வல்லாரை பன்னெடுங் காலமாக உபயோகிக்கப்பட்டு வருகிறது.

சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனி −டம் உண்டு.

வளரும் −டங்கள்

−ந்தியா முழுவதிலும் பெரும்பாலான ஆசிய நாடுகளிலும், சீனா, திபெத், மலேசியா, −ந்தோனேசியா.

வல்லாரையில் −ருவகை

சமவெளி வல்லாரை - வெளிர் பச்சை நிற −லைகளுடையது.

மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை

- கரும்பச்சை −லைகளுடையது. −தில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.

மருந்தாகப் பயன்படும் பகுதிகள்

−லை, வேர், விதைகள், தண்டு என வல்லாரையின் எல்லா பகுதிகளும்.

மருத்துவ குணங்கள்

* −ரத்தத்தை சுத்தி செய்யும்

* நரம்பு தளர்ச்சியை குணமாக்கும்.

* மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.

* நினைவாற்றலை வளர்க்கும்

* அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்

* கண் மங்கலை சரி செய்யும்

* சீத பேதியை நிறுத்தும்.

−து தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.

பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை −லைகளை −டித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.

சில எளிய வைத்தியங்கள்

−ரத்த சோகை (Anaemia)

1/2 தேக்கரண்டி வல்லாரை −லைச்சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.

பார்வை மங்கல், உடற்சோர்வு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு

வல்லாரை −லைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தை தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து அருந்தவும்.

ஆறாத புண்கள், எக்சிமா, சோரியாசிஸ்

வல்லாரை −லையை பசும் நெய்யோடு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் மேலே தடவும்.

தூக்கமின்மை

1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி −ரவில் படுக்கும் முன் குடிக்கவும்.

ஞாபகமறதி

5 வல்லாரை −லைகளை −டித்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்து தினமும் உண்ணவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி நாளைக்கு வல்லாரைச்சம்பல்தான் :P

சரி நாளைக்கு வல்லாரைச்சம்பல்தான் :P

எனக்கும் கொஞ்சம் அனுப்புங்கோ சகிவன் தாத்தா

:P

வானவில் .... அதன்ன இடையிடையே பெட்டி பெட்டியா தெரியுது.... அதை நீக்கிவிட்டுப் போட்டால் வாசிக்க நல்லாயிருக்கும் :lol:

  • தொடங்கியவர்

வானவில் .... அதன்ன இடையிடையே பெட்டி பெட்டியா தெரியுது.... அதை நீக்கிவிட்டுப் போட்டால் வாசிக்க நல்லாயிருக்கும் :lol:

சும்மா சும்மா, சுடும் போது அதுவும் இலவச இணைப்பு போல வருது :P

சும்மா சும்மா, சுடும் போது அதுவும் இலவச இணைப்பு போல வருது :P

இலவச இணைப்பா இருந்தால் அப்ப்டியேவா போடுவது..... வாசிப்பகளுக்கு கஸ்டம் இருக்காதா.... :lol:

  • தொடங்கியவர்

இலவச இணைப்பா இருந்தால் அப்ப்டியேவா போடுவது..... வாசிப்பகளுக்கு கஸ்டம் இருக்காதா.... :lol:

அடுத்தமுறை கவனத்திலெடுக்கின்றேன்

அடுத்தமுறை கவனத்திலெடுக்கின்றேன்

நன்றி , :lol:

தகவலுக்கும் நன்றி :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவ தகவல்களுக்கு நன்றி வானம்.

  • தொடங்கியவர்

மருத்துவ தகவல்களுக்கு நன்றி வானம்.

ஜோவ் கள்ளுக் கொட்டில் அழகாண பெயர வச்சிருக்கன் ஆளளுக்கு பெயரை மாத்துறீங்க :angry: :angry:

ஜோவ் கள்ளுக் கொட்டில் அழகாண பெயர வச்சிருக்கன் ஆளளுக்கு பெயரை மாத்துறீங்க :angry: :angry:

எது அழகான பெயர்

:rolleyes::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோவ் கள்ளுக் கொட்டில் அழகாண பெயர வச்சிருக்கன் ஆளளுக்கு பெயரை மாத்துறீங்க :angry: :angry:

நீர் அப்பப்ப உம்மடை பேரை மாத்தலாம் ஏன் நாங்களும் ஒருக்கால் உம்மடை பேரை மாத்திப்பாப்பமே? :blink:

நீர் அப்பப்ப உம்மடை பேரை மாத்தலாம் ஏன் நாங்களும் ஒருக்கால் உம்மடை பேரை மாத்திப்பாப்பமே? :rolleyes:

ஆகா தாத்தா

;)

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் மகிமை

த.வி. வெங்கடேஸ்வரன்

பண்டைய இந்தியர்கள் முற்கால அரேபியர்கள் முதலியோர் போற்றிப் புகழ்ந்த மசாலா - மஞ்சள். இதன் மேன்மை குணத்தை இன்று நவீன மருத்துவம் உறுதிபடுத்தியுள்ளது.

மஞ்சள் முகமே வருக / மங்கள முகமே வருக - எனக் கவிஞர் கூறியது போலத் தமிழகப் பண்பாட்டில் மஞ்சள் செழுமை, வளமை, மங்கலத்தைக் குறிப்பாகக் கருதப்படுகிறது.

மஞ்சள் தடவிய புத்தாடை, மஞ்சள் பூசிய கயிறு, மஞ்சள் பூச்சுபெற்ற அரிசி, பிடித்து வைத்த மஞ்சள், சுவரில் திறுநீறு போல இடப்படும் மஞ்சள்கீற்று , மஞ்சள் கரைத்த கலசநீர் எனத் தமிழப் பண்பாட்டில் மஞ்சள் இரண்டறக் கலந்துள்ளது.

தெற்காசிய நாடுகளான ஜாவா, இந்தோனேசியா, பாலித்தீவுகள் முதலியவற்றில் தமிழகப் பண்பாட்டுத் தாக்கம் புலப்படுகிறது. சோழர்கள் - ராஜராஜ சோழன் முதலியோர் படையெடுத்துச் சென்றபோது ஏற்பட்ட தாக்கமே இது. இதன் விளைவாக இப்பகுதியிலும் மஞ்சள் மங்களக் குறியாக்க கருதப்படுகிறது என்பது சிறப்புச் செய்தி.

எடுத்துக்காட்டாக, இசுலாமியா தாக்கத்தின் பின்பும் இந்தோனேசியா, பாலித்தீவுகளில் மஞ்சள் கலந்த அரிசி புனிதமாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட சடங்குகளில் நாசி குளிர் என்னும் இந்தக் கலவை வழங்கப்படுகிறது என்பது சிறப்புச் செய்தி.

உணவிலும் இந்தியாவிலும் தெற்காசியாவில் மஞ்சளின் பயன்பாடு மிகுதி. இந்தியாவில் மஞ்சள் உலரவைத்து, இடித்து, பொடித்து மஞ்சள் பொடியாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தெற்காசியாவில் மஞ்சள் கிழங்கு அப்படியே கறி சமைக்கப்படுகிறது. சுமத்திரா இந்தோனேஷியாப் பகுதிகளில் மஞ்சளின் தழை நிறம்-மணம் சேர்க்க உணவில் பயன்படுத்தப் படுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் வெகு பிரபலமான வசனம் எல்லோருக்கும் நினைவிலிருக்கும். வரிகேட்டு வரும் ஆங்கிலேய அதிகாரியிடம் ஆத்திரத்துடன் “நாற்று நாட்டாயா; களைபறித்தாயா” என்பதோடு “எம் பெண்டிருக்கு மஞ்சள் அதைத்துக் கொடுத்தாயா” எனக் கொதித்து முழங்கும் சிவாஜியின் வசனம் நம் காதுகளில் ரீங்காரமிடும். மஞ்சள் பூசுவது என்பது தமிழகம் மட்டுமல்ல உலகின் பல பண்பாடுகளில் உள்ள பழக்கம். மஞ்சள் உடலின் மீது சற்றே படிந்து பளபளப்புத் தரும்.

முகத்திற்குப் பொலிவூட்டமாய் மாறி ஆடைகளுக்கு நிறம் தரும் சாயம் தயாரிக்கவும் மஞ்சள் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரஞ்சு-சிவப்பு நிறம் தயாரிக்க; மஞ்சளுடன் தன்டிகோ சேர்த்து பொலிவான பச்சை நிறம் தயாரிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. பல சாயங்களை ஆடையில் படிந்து பிடித்துக் கொள்ள நிறமேற்றிகள் தேவை. ஆனால் மஞ்சள் நிறச் சாயம் சேர்க்க நிறமேற்றி தேவையில்ல. மஞ்சள் மூலம் ஏற்றப்படும் நிறம் பெருகாலம் தங்கி அமையாது. சூரிய ஒளியில் மஞ்சள் நிறம் தரும் வேதிப்பொருள்கள் சிதைத்து விடுவதால் மஞ்சள் மூலம் நிறமேற்றப்பட்ட ஆடைகள் வெகு விரைவில் அதன் ஆழமான நிறத்தை இழக்கும். ஆகவேதான் தினம் தினமும் மஞ்சள் பூசினாலும் முகம் மஞ்சள் கறை படிவதில்லை.

மஞ்சள் அறிவியல் பெயர் “குர்குமா லோங்கா” என்பதாகும். இதில் 100 இனம் மற்றும் 30 வகை உண்டு. விசிறி போன்ற தழை உடையது மஞ்சள். நீள்வட்ட வடிவில் ஒவ்வொரு தழையும் சுமார் 1-2 அடி நீறமாக சிறக்கும். செடி 3.5 அடி உயரம் வளரும். மண்ணிற்குள் அடித்தண்டாக - கிழங்காக மஞ்சள் இருக்கும்.

2-6 செ.மீ நீளமுடையது கிழங்கு. இச் செடியின் பூவும் மஞ்சள் நிறமுடையது. புனல் போன்ற தோற்றமுள்ளது இம்மலர்.

உலகின் மொத்த மஞ்சள் பயிரில் 80ரூ இந்தியாவில் உற்பத்தியாகிறது. சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. மஞ்சள் என்ற சொல்லே தமிழில் “மஞ்சள் நிறத்தை சுட்டுவதைப்போல “ஹல்கி” என்ற இந்திச்சொல், சில்வொர்டெர் என்ற டச்சுச்சொல் முதலியவும் மஞ்சள் செடி மற்றும் மஞ்சற் நிறம் இரண்டையும் குறிக்கிறது. அதுமட்டு மல்ல, டர்மரிச் என்ற ஆங்கில சொல் லத்தின் சொல்லான டொர்ரா மெனரட் அதாவது மஞ்சள் நிறம் தரும் மண் என்ற பொருள் நம் சொல்லிலிருந்து உருவானது ஆகும்.

மஞ்சளின் நிறத்தில் உள்ள குர்குமின்வகை வேதிப் பொருட்களின் விளைவே ஆகும். அது மட்டுமல்ல மஞ்சளின் காரச் சுவைக்கும் இந்த வேதிப்பொருளே காரணம். டரிமெரோன் வகை வேதிப்பொருட்கள் மற்றும் லிங்காபரின் வேதிப்பொருள் முதலியவை மஞ்சளின் மணத்திற்குக் காரணம்.

ஆர்த்தி கரைசல் மஞ்சளும் வெள்ளைச் சுண்ணாம்பும் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இரண்டும் கலந்ததும் கரைசல் இரத்தச் சிகப்பாக மாறுகிறது அல்லவா? சுண்ணாம்பு, காரப் பொருள் - ஆல்லி. அதுபோல அமிலம்- ஆசிடுனும் மஞ்சள் வினைவுரியும். ஆகவே மஞ்சள் வேதி சுட்டி – Chemical Indicater- ஆக பயன்படுத்தப்படுகிறது. PH 7.4-ல் மஞ்சளாக உள்ளது PH 8.6-க்கு மேல் சிவப்பாக மாறும்.

மேலும் குர்குமினாய்ட் வகை வேதிப்பொருட்கள் நுண்ணுயிர் கொல்லியாகவும் சீழ் எதிர்ப்பியாகவும் செயல் படுகிறது என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் வெட்டுப் புண்ணுக்கு மஞ்சள் பத்துபோடுவது. அம்மை தழும்பு ஏற்படாமல் தடுக்கப் பூசுவது போன்றவற்றில் மருத்துவ காரணி குர்குமினாய்டு வேதிப்பொருள்தான். மேலும் பாலுடன் மஞ்சள் சேர்த்து குடிப்பதன் வழி தொண்டைப் புண் ஆற்றுவது முதலிய பழக்கங்களையும் நவீன அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது என்பது சிறப்பு.

“மஞ்சள் முகமே வருக / மங்கள முகமே வருக” எனக் கவிஞர் கூறுவது வெறும் வார்த்தைப் பந்தல் அன்று.

http://keetru.com/ungal_noolagam/jul06/venkateshwaran.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்:

மஞ்சள் பூசினால் முகம் மினுமினுப்பு அடையும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையா என்பது தெரியாது ஆனால் மஞ்சள் பூசினால் எந்த வெப்பமும் முகத்தைத் தாக்கக் கூடாது. சூரியஒளி/மின்விளக்கின் வெப்பம் இரண்டுமே மஞ்சள் கலந்த முகத்தினைச்சுட்டுவிடும்.இதன

ம்ம் தமிழ்தங்கா..நீங்கள் சொல்வது சரியே!

மஞ்சள் முகத்தை கறுக்க செய்து விடும். சிலர் முகத்தில் முடி வளருது எண்டு இருக்கி பிடிச்சு

பூசிட்டு நிப்பாங்க..அது கறுத்து விடும்.

ஆனால்..மஞ்சளோடு தயிர் கலந்து பூசினால் கொஞ்சம் குளிர்மையாக இருக்கும்... :lol: கோடை கால

வெயிலுக்கு ரொம்ப இதமா இருக்கும்..முகமும் ஒளிப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தில முடி வளர்வதை தடுப்பது எப்படி?

வெற்றி கண்டவர் மட்டும் பதில் தரவும்....

நான் வெற்றி காணல..அவசியமும் இருக்கல இதயவாணி!

ஆனால் அறிந்ததை வைத்து சொல்வதென்றால்..

முகத்தில் முடி வளர்வதை தடுக்க ஏலாது என்று நினைக்கிறேன்.

ஆனால் முடியை அகற்றலாம்.

இப்போ தானே பல வழி இருக்கு. நூல் போலொன்று வைத்து அகற்றுகிறார்கள்.

கூட பியூட்டி பார்லரில் கேட்டால் உதவுவார்கள்.

எல்லாவற்றையும் விட சேவ் பண்ணாம இருக்கணும். சிலர் சேவ் பண்ணி விட்டு அது முடி..

இன்னும் வளர அழுதுகிட்டு நிற்பார்கள்.

அதனால் சேவ் பண்ணுவதை தவிர்ப்பது நல்லது!

  • தொடங்கியவர்

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,

எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

நன்றி Kumutham Health 15.9.2006

  • தொடங்கியவர்

அதிமதுரத்தின் சக்தி

ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

Kumutham health-july2006

  • தொடங்கியவர்

முருங்கை இலை

ஈரபதம்-75.9%

புரதம்-6.7%

கொழுப்பு-1.7%

தாதுக்கள்-2.3%

இழைப்பண்டம்-0.9%

கார்போஹைட்ரேட்கள்-12.5%

தாதுக்கள்,வைட்டமின்கள்,

கால்சியம்-440 மி,கி

பாஸ்பரஸ்- 70மி.கி

அயம்- 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

100கிராமில் 92 கலோரி உள்ளது.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும ் வலுப்படுத்தும்.

இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்

ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது.

முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும்.

முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும்.

முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும்.

விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம்

முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவ஠?ி குணப்படும்.

நன்றி முத்தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.